Tamil News Highlights: நேற்றிரவு தீவிர காற்றழுத்தமாக வலுவிழந்த புயல், ஒடிசா கடற்கரை அருகே நகர்ந்து வருவதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் அது வலுவிழக்கவுள்ளதால் பாதிப்பு அவ்வளவாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் தெற்கு மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாகவே இருப்பார்கள். புயல் வலுவிழந்ததால் கடலோரப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியின் வேகத்தை ஒடிசா அரசு குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் - சசிகலா
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட சலசலப்பில் ராஜேஷ் எனும் தொண்டர் தாக்கப்பட்டது தனக்கு வேதனையளிப்பதாகக் கூறியுள்ள சசிகலா, தொண்டர்களின் நலனின் அக்கறை செலுத்தும்போதுதான், அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும் என்று குறிப்பிட்டார். ஒரு இயக்கத்துக்குக் கொடி பிடிக்கும் தொண்டர்கள்தான் தேவையே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல என்றும் கூறினார் சசிகலா. மேலும், ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம்
புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 54-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீ ராமுலு தெரிவித்துள்ளார். மறுப்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:59 (IST) 05 Dec 2021உலக டூர் பைனல் தொடரின் இறுதிப் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து
உலக டூர் பைனல் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்
- 21:59 (IST) 05 Dec 2021உலக டூர் பைனல் தொடரின் இறுதிப் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து
உலக டூர் பைனல் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்
- 21:56 (IST) 05 Dec 2021அமளி, ஒத்திவைப்பு காரணமாக மாநிலங்களவையில் 52.30% நேரம் இழப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் அமளி, ஒத்திவைப்பு நடவடிக்கை காரணமாக மாநிலங்களவையில் 52.30% நேரம் இழப்பு என மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது
- 20:27 (IST) 05 Dec 2021ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- 19:26 (IST) 05 Dec 2021தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 724 பேருக்கு கொரோனா; 10 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 724 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவால் உயிரிந்துள்ளனர். இந்தநிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,30,516 ஆக உயர்ந்துள்ள நிலையில் 743 பேர் குணமடைந்துள்ளனர்
- 19:08 (IST) 05 Dec 2021'வலிமை' படத்தின் "மதர் சாங்" என்ற 2 ஆவது பாடல் வெளியீடு
அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின் "மதர் சாங்" என்ற 2 ஆவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது
- 19:02 (IST) 05 Dec 2021மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி
மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 12 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 18:40 (IST) 05 Dec 2021நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலை- கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா
நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களவையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க் கட்சியாகவே இருக்கும் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்
- 18:23 (IST) 05 Dec 2021நீதிமன்றம் வாயிலாக நிரூபிப்போம் - விஜய் சேதுபதி தரப்பு தகவல்
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உண்மையில் என்ன நடந்தது என்பதை நீதிமன்றம் வாயிலாக நிரூபிப்போம் என விஜய் சேதுபதி தரப்பு மக்கள் தொடர்பாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார்
- 17:55 (IST) 05 Dec 2021நாகாலாந்தில் இணையதள சேவைகள் முடக்கம்
நாகலாந்தில் 13 சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது
- 17:04 (IST) 05 Dec 2021தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சேலம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், சேலம் பயணர் ரத்து செய்யப்பட்டு, டெல்லிக்கு திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார்.
- 16:30 (IST) 05 Dec 2021மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை வலியுறுத்திய இ.பி.எஸ்
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாஜலம் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்; அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதை கைவிடுமாறு தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.
- 16:30 (IST) 05 Dec 2021மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை வலியுறுத்திய இ.பி.எஸ்
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாஜலம் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்; அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதை கைவிடுமாறு தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.
- 15:50 (IST) 05 Dec 2021மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை வலியுறுத்திய இ.பி.எஸ்
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாஜலம் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்; அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதை கைவிடுமாறு தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.
- 15:05 (IST) 05 Dec 2021விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு
நடிகர் விஜய்சேதுபதியின் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யக்கோரி செனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தி மனு தாக்கல் செய்துள்ளார். பாராட்டி வாழ்த்து தெரிவித்ததை ஏற்க மறுத்து சாதியைப் பற்றி தவறாகப் பேசியதாக புகார் தெரிவித்துள்ளார்.
- 14:47 (IST) 05 Dec 2021“இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை” - நாகாலாந்து துப்பாக்கிச்சூடுக்கு ராகுல்காந்தி கண்டனம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: “நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானது இதயத்தை நெருடுகிறது; இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை; பாதுகாப்புப் படையும் பாதுகாப்பாக இல்லை; உள்துறை என்னதான் செய்கிறது? பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டடற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- 14:06 (IST) 05 Dec 2021சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு கொரோனா
சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பாதித்தவரின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
- 14:05 (IST) 05 Dec 2021விஜய்சேதுபதிக்கு எதிராக மனுத்தாக்கல்
பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தி பேசியதாக மகா காந்தி என்பவர் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார்.
- 14:02 (IST) 05 Dec 2021போட்டியின்றி தேர்வாகும் ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரையும் முன்மொழிந்து 154 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருக்கிறது.
- 13:08 (IST) 05 Dec 2021பெண் தொழிலாளி மீது தாக்குதல் - கைது
கோவை சரவணம்பட்டி நூற்பாலையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளியை தாக்கிய காரணத்தினால் நூற்பாலை மேலாளர் உள்பட இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 11:43 (IST) 05 Dec 2021டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி... பாதிப்பு 5 ஆக உயர்வு
கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
- 10:17 (IST) 05 Dec 2021ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
- 10:15 (IST) 05 Dec 2021கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,796 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,796 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதே போல், 6,918 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பீகாரில் 2,426 பேர் உயிரிழந்துள்ளதாக டேட்டாவில் திருத்தம் மேற்கொண்டுள்ளனர். அதே போல், கேரளாவிலும் சுமார் 263 பேர் உயிரிழந்துள்ளதாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 09:39 (IST) 05 Dec 2021கனமழை - மலை ரயில் போக்குவரத்து ரத்து
கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண்சரிவுகள் ஏற்படுவதால் வரும் 14ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.