News Highlights: தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது? இன்று ஆலோசனை

அடுத்த இரண்டு நாள்களுக்கு, தமிழகம், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Theatre Opening, Tamil News Today
திரையரங்கம் திறப்பு

News In Tamil : தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த ஆலோசனை சென்னையில் இன்று நடக்கிறது. தியேட்டர் அதிபர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேச உள்ளனர். அப்போது தியேட்டர்கள் திறப்பு தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்ட உள்ளதாக தமிழக தியேட்டர் அதிபர்கள் சங்கம் சார்பில் தெரிவித்தனர். புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மத்திய வங்கக்கடலில் உருவாக இருப்பதனால், அடுத்த இரண்டு நாள்களுக்கு, தமிழகம், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி நீடித்து இருக்கவேண்டும் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், இந்த நிலை இன்னும் ஆறு மாதங்கள் வரைதான். அதன்பிறகு காட்சி மாறும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சியும் மாறும். திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ ஏன் தொட்டுபார்க்கவோ முடியாது’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேண்டமிக் காலகட்டத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகள், கடந்த மாதம் ஆன்லைனில் நடைபெற்றது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ‘சாஃப்ட்வேர்’ பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தொழில்நுட்ப கோளாறால் சரியாக தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பினையும் அளித்தது பல்கலைக்கழகம்.

விடைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது ஆன்லைனில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. http://www.annauniv.edu என்ற தளத்தில் சென்று முடிவுகளைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகளில், அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

22-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த பல்வேறு துறை அதிகாரிகளோடு முதல்வர் ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு நிலவுவதால், கடந்த ஒன்றரை மாதத்தில் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. இதற்கு முன் செப்டம்பர் 1 அன்று தான் சிகிச்சை பெறுபவர்களின்  எண்ணிக்கை 8 லட்சத்திற்கு குறைவாக (7,85,996) இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 62,212 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Live Blog

News In Tamil : அரசியல், சமூகம், காலநிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இந்தத் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.


20:35 (IST)18 Oct 2020

நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது. இந்திய ஜனநாயகம் மிகவும் நெருக்கடி மிக்க தருணத்தில் சிக்கியுள்ளது. பொருளாதார மந்தநிலை பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான வன்முறை நிலவுகிறது. கொரோனா காலத்தை பயன்படுத்தி வேளாண் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

20:04 (IST)18 Oct 2020

போராட்டங்களுக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – தேனி மாவட்ட காவல்துறை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை டிராக்டர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில், போராட்டங்களுக்கு டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

18:07 (IST)18 Oct 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்கு கொரோனா; 56 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில், இன்று கொரோனா பாதிப்பால் 56 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

18:05 (IST)18 Oct 2020

திரையரங்குகளை திறப்பது குறித்து நாளை முதல்வரை சந்திக்கிறேன் – அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜூ: திரையரங்குகளை திறப்பது குறித்து நாளை முதல்வரை சந்திக்கிறேன். அதையடுத்து, திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி 2 நாட்களில் ஆலோசனை செய்வார் என்று கூறினார்.

15:51 (IST)18 Oct 2020

ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறித்தினார்.  

15:25 (IST)18 Oct 2020

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – மு. க ஸ்டாலின் கருத்து

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தங்களது பதவி சுகத்திற்காக முதல்வர் எடாப்படி பழனிசாமியும், ஒ. பன்னீர்செல்வமும் முடக்கி வைத்திருப்பதை நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் குற்றச்சாட்டு அம்பலப்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க  ஸ்டாலின் தெரிவித்தார்.  

14:47 (IST)18 Oct 2020

மத்திய உள்துறை செயலாளர்  அஜய் குமார் பல்லாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

மத்திய உள்துறை செயலாளர்  அஜய் குமார் பல்லாவின் பதவி அடுத்த மாதம் நிறைவடைய இருந்த நிலையில், அவரின் பதவிக்காலத்தை  அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   

14:45 (IST)18 Oct 2020

இது இருண்ட ஆட்சியா? மு.க.ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ பதில்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசுகளின் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டதினால், தேர்ச்சி விகிதம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது” என்று தெரிவித்தார்.   

தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி நீடித்து இருக்கவேண்டும் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், இந்த நிலை இன்னும் ஆறு மாதங்கள் வரைதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு  பதிலளித்த அவர், ” கடந்த திமுக ஆட்சியில் தான் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்தது” என்று தெரிவித்தார்.       

13:56 (IST)18 Oct 2020

நியூசிலாந்து தேர்தலில், பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி

நியூசிலாந்து தேர்தலில், பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி தொடர்ந்து 2ஆம் முறையாக வெற்றி பெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 49 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அக்கட்சி பெற்றது.
எதிர்கட்சியான தேசிய கட்சிக்கு 27 சதவீத வாக்குகள் கிடைத்தது. நியூசிலாந்து நாட்டில் கோவிட் – 19 தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதை அங்கிகரிக்கும் வகையில், பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.

13:04 (IST)18 Oct 2020

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் கன மழை வாய்ப்பு

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மத்திய வங்கக்கடலில் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் அடுத்த இரண்டு நாள்களுக்கு, தமிழகம், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

11:56 (IST)18 Oct 2020

கொரோனா தடுப்பு மருந்து விரைவாகக் கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் – மோடி

கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் உள்ளிட்டவைக் குறித்த ஆய்வுக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட ஏராளமான துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து விரைவாகக் கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்றும் நமக்கு மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் மோடி.

11:51 (IST)18 Oct 2020

தஞ்சையில் மழை காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

தொடர்ச்சியாகத் தஞ்சை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இன்று விடுமுறை என்பதால் நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர்.

11:03 (IST)18 Oct 2020

காட்சி மாறும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சியும் மாறும் – ஸ்டாலின்

‘தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி நீடித்து இருக்கவேண்டும் என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், இந்த நிலை இன்னும் ஆறு மாதங்கள் வரைதான். அதன்பிறகு காட்சி மாறும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சியும் மாறும். திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ ஏன் தொட்டு பார்க்கவோ முடியாது’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

09:59 (IST)18 Oct 2020

நடிகை கங்கனா மீது தேசத் துரோக வழக்குப் பதிவு

‘தாம் தூம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். நடிகர் சுஷாந்த் மரணம் குறித்துப் பல தகவல்களைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார். தற்போது, கங்கனா மற்றும் அவருடைய தங்கை ரங்கோலி சாண்டல் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஜாதி பிரிவு உண்டாகும் படியான கருத்துக்களைப் பதிவு செய்து வருவதாகக்கூறி, பாந்திரா நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மும்பை போலீசார், 124 A பிரிவின் கீழ், தேசத் துரோகம் செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

09:45 (IST)18 Oct 2020

மாற்றுத்திறனாளி மாணவி நீட் தேர்வில் வெற்றி

கடலூர் மாவட்ட அரசுப் பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவி பானுப்ரியா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தான் படித்த பள்ளியில், தமிழக அரசு இலவச நீட் பயிற்சி மேற்கொண்டு, தன் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஆதரவால் வெற்றிபெற்றுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார் பானுப்ரியா.

08:58 (IST)18 Oct 2020

பூர்வ குடியின பட்டியலில் படுகர் மக்கள்

உலக பூர்வ குடியினருக்கான பட்டியலில் நீலகிரிப் பகுதியில் வாழும் படுகர் இன மக்கள் சேர்க்கப்பட்டனர். ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு இந்த முடிவை வெளியிட்டது.

Tamil News : ஈரோடு மாவட்டம், செல்லாத்தாபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சுந்தர நாராயணன், அக்டோபர் 9ம் தேதி மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன், செல்லாத்தாபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில்,  மாணவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்த ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியை 2 பேர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் இந்த புகார் மனுவை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பினார். மாவட்ட கல்வி அலுவலரின் விசாரணையின் போது, டி.இ.ஓ ஆசிரியர்களின் அலுவலகங்களில் இருந்து, கிறிஸ்தவம் தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் குறுந்தகடுகளை பறிமுதல் செய்தார். மேலும், டி.இ.ஓவும் அந்த அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிட்டார்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live tamilnadu corona weather chennai

Next Story
வடக்கு, மேற்கு மாவட்டங்களில் குறையாத கொரோனா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express