Advertisment

Tamil News Updates: தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil News Updates- 21 September 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Rains today

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 188வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

இலங்கை அதிபர் தேர்தல்

இலங்கை அதிபர் தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் தமிழகர்கள் 40 லட்சம் பேர் உள்பட 1.70 கோடி பேர் வாக்களிப்பு. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று இரவு எண்ணப்படுகின்றன.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • Sep 21, 2024 20:49 IST
    திருப்பதி லட்டு தயாரிக்க கர்நாடக நந்தினி நெய்

    கர்நாடக அரசு பால் நிறுவனமான நந்தினியில் இருந்து நெய் வரவழைத்து லட்டு தயாரிப்பை துவங்கியதுதிருப்பதி தேவஸ்தானம்.லட்டு தயாரிக்க சுத்தமான மூலப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும்பிரசாதத்தின் புனித தன்மையை மீட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது,



  • Sep 21, 2024 20:45 IST
    இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

    இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின் படி நீக்கப்பட்டவர்கள்நீக்கப்பட்டவர்கள் தான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.



  • Sep 21, 2024 19:52 IST
    கஞ்சாவால் குற்ற சம்பவம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது: இபிஎஸ்

    தமிழகத்தில் கஞ்சாவால் குற்ற சம்பவம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது கடந்த 20 நாட்களில் மட்டும் 6 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.



  • Sep 21, 2024 19:50 IST
    6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

    ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 



  • Sep 21, 2024 19:49 IST
    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமனம்

    உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.



  • Sep 21, 2024 19:48 IST
    ஆம்ஸ்ராங் கொலை வழக்கு: மேலும் ஒருவர் டெல்லியில் கைது

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ராங் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த புதூர் அப்பு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.



  • Sep 21, 2024 18:47 IST
    புதுச்சேரியில் பழைய‌ சாராய ஆலை‌ வளாக கட்டிடம் கவர்னர் மாளிகையாக மாற்றம்

    புதுச்சேரியில் சுமார் 250 ஆண்டுகள் பழமையான கவர்னர் மாளிகை சேதமடைந்த நிலையில், பழைய‌ சாராய ஆலை‌ வளாக கட்டிடத்தை கவர்னர் மாளிகையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தை முதலமைச்சர் ரங்கசாமி, டென்னிஸ் விளையாடி முடித்த கையோடு, அதே உடையில் வந்து பார்வையிட்டார் 



  • Sep 21, 2024 18:44 IST
    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 38 பேர் கைது

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழ்நாடு நாகை மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை, 3 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 



  • Sep 21, 2024 17:52 IST
    தொல்லியல் துறை தனி ஒரு நபர் செய்கின்ற வேலை இல்லை - அமர்நாத் ராமகிருஷ்ணா

    தொல்லியல் துறை தனி ஒரு நபர் செய்கின்ற வேலை இல்லை, அனைவரும் ஆர்வத்துடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய துறை. வைகை ஒரு சிறிய நதி என்பதால் எளிதாக கள ஆய்வு செய்து விட்டோம்; காவிரியை கர்நாடகாவில் இருந்து முழுமையாக கள ஆய்வு செய்ய வேண்டும்; சமணர் படுகைகளை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று மதுரை, பசுமலையில் இந்திய தொல்லியல் துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேட்டி அளித்துள்ளார்



  • Sep 21, 2024 17:23 IST
    டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்



  • Sep 21, 2024 16:59 IST
    அமெரிக்காவில் நான் பேசிய கருத்து குறித்து பா.ஜ.க பொய்களை பரப்பி வருகிறது - ராகுல் காந்தி

    அமெரிக்காவில் நான் பேசிய கருத்து குறித்து பா.ஜ.க பொய்களை பரப்பி வருகிறது. நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?, இந்தியா, வெளிநாட்டில் உள்ள சீக்கிய சகோதரர்களை பார்த்து நான் கேட்க விரும்புகிறேன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்



  • Sep 21, 2024 16:52 IST
    இலங்கை அதிபர் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 4 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தலுக்கான முடிவுகள், இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது 



  • Sep 21, 2024 16:23 IST
    சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் மரணம்

    சிவகங்கையில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவருக்கும் விஷவாயு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



  • Sep 21, 2024 16:08 IST
    இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி; 3ம் நாள் ஆட்டத்தைக் காண 17,295 பார்வையாளர்கள் வருகை

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தைக் காண 17,295 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்



  • Sep 21, 2024 15:45 IST
    கொடைக்கானல் வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு

    கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவுற்று இருந்தது தெரிய வந்துள்ளது. 



  • Sep 21, 2024 15:34 IST
    சம்ரோஷணம்: திருப்பதி கோயிலை சுத்தம் செய்ய முடிவு

    திருப்பதி கோயிலை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில், சம்ரோஷணம் என்ற குடமுழுக்கு செய்து தோஷத்தை போக்க நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது 



  • Sep 21, 2024 15:18 IST
    சென்னையில் மழை!

    சென்னையில் பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்துவருகிறது.



  • Sep 21, 2024 14:52 IST
    தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அவசியம் ஏன்? ஜம்முவில் விளக்கிய மல்லிகார்ஜூன கார்கே 

    ஜம்முவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், “பா.ஜ.க-வை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் தேசிய மாநாட்டுக் கட்சி உடனான கூட்டணி அவசியமானது. 

    ஜம்மு மற்றும்  காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்  ரூ.3,000 வழங்கப்படும். 

    பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சாசனதம் வழங்கியுள்ள உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப்படும். 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று அவர் கூறினார். 



  • Sep 21, 2024 14:49 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது - கமல்ஹாசன் 

    ம.நீ.ம பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது. அது தவறு என உலக அரசியலுக்கு தெரியும். நான் அரசியலுக்கு வந்தது எனக்காக அல்ல, நமக்காக அல்ல, நாளைக்காக தான். தோற்ற அரசியல்வாதியைக் கூட மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். தோற்ற அரசியல்வாதி என என்னைதான் சொல்கிறேன்" என்று கூறினார். 



  • Sep 21, 2024 14:45 IST
    3 மாவட்டங்களில் இன்று கனமழை

    காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 

     



  • Sep 21, 2024 14:45 IST
    இலங்கை தேர்தல் 

    12 மணி நிலவரப்படி  அதிகபட்சமாக 51,7% வாக்குகள் பதிவாகியுள்ளது. கொழும்புவில் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றினார் அதிபர் ரணில் விக்ரமசிங்கே. இதேபோல், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்புவில் உள்ள பாடசாலையில் வாக்களித்தார். 



  • Sep 21, 2024 14:43 IST
    லட்டு விவகாரம்: பாஜக - நாயுடு கூட்டணியில் உரசலா?

    திருப்பதி லட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி போராட்டத்தை தொடங்கியது. 

    "ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்மத்தித்தால் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர தயார்"  என பா.ஜ.க. மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். 



  • Sep 21, 2024 13:40 IST
    ம.நீ.ம பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

    ம.நீ.ம பொதுக்குழு கூட்டத்தில், "சாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு உரிய நிதி பகிர்வை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முயற்சி கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மக்களவைத் தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வது, தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி." உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 



  • Sep 21, 2024 13:38 IST
    வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு!

    இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி 2ம் இன்னிங்ஸில் 64 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்திய அணியில் பண்ட் மற்றும் கில் சதம் விளாசினர்



  • Sep 21, 2024 13:37 IST
    அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 29ம் நடைபெறவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பட்டம் பெறத் தகுதியான மாணவர்கள் செப்டம்பர் 27ம் தேதி அல்லது அதற்கு முன்பு ‘http://tndalu.ac.in’ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Sep 21, 2024 13:36 IST
    சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்க உத்தரவு 

    சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும். தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 



  • Sep 21, 2024 13:20 IST
    தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட் 

    வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 6வது சதத்தை எட்டி தோனியின் சாதனையை சமன் செய்தார் ரிஷப் பண்ட்



  • Sep 21, 2024 13:05 IST
    அரசு பேருந்தின் மேற்கூரை மீது ஏறி, பள்ளி மாணவர்கள் அலப்பறை

    பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் செல்லும் அரசுப்பேருந்து மீது ஏறி பள்ளி மாணவர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள்அலப்பறை செய்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் ரீல்ஸாக பதிவேற்றியுள்ளனர். மாணவர்களின் அட்டகாசத்தை போலீசார் கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. 

     



  • Sep 21, 2024 13:01 IST
    ரயிலை கவிழ்க்க சதியா?

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அதிகாலை 2 மணி நேரம் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. 

    4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. வடமாநிலங்களை இணைக்கும் சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா? என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Sep 21, 2024 12:58 IST
    பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமின்

    சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் இரு மகன்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது. 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 



  • Sep 21, 2024 12:57 IST
    சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை நாளை ரத்து

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து செய்யயப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாகவும், சென்னை கடற்கரை - பல்லாவரம் வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டு, தெற்கு ரயில்வே புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

     



  • Sep 21, 2024 12:55 IST
    பாடகியுடன் தொடர்பா?- ஜெயம் ரவி விளக்கம்

    "நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள்.

    இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார்.

    அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததை தகர்ப்பதற்காக இப்படி பேசுகின்றனரா என்று தெரியவில்லை. அப்படி பேசுவது மிகவும் தவறு. நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும்" என்று ஜெயம் ரவி விளக்கம். கொடுத்துள்ளார். 



  • Sep 21, 2024 12:34 IST
     ம.நீ.ம பொதுக்குழு கூட்டம் - மீண்டும் தலைவராக கமல்  தேர்வு 

    மநீம கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம், கமல்ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், 1414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2570 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் மநீம கட்சியின் தலைவராக மீண்டும் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில், தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை குறைக்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 



  • Sep 21, 2024 11:29 IST
    மநீம கட்சியின் பொதுக்குழு கூட்டம்

    மநீம கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம், கமல்ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், 1414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2570 பேர் கலந்து கொண்டுள்ளனர்.



  • Sep 21, 2024 11:29 IST
    கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதம் ஏற்பு

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, புதிய முதலமைச்சர் அதிஷி சிங் பதவி ஏற்கும் வரை அரவிந்த் கெஜ்ரிவால் அதே பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.



  • Sep 21, 2024 10:53 IST
    பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமின்

    பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமின். மது போதையில் மாணவர்கள் உள்ளிட்ட மற்றொரு தரப்பை தாக்கியதாக மனோவின் 2 மகன்கள் மீதும் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு. 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு பூந்தமல்லி நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது.



  • Sep 21, 2024 10:40 IST
    திண்டுக்கல் நிறுவனத்தில் ஆய்வு

    லட்டு விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்தில் ஆய்வு

    திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.பால் பொருட்கள் நிறுவனத்தில் ஆய்வு.   நிறுவனத்தில் பால், நெய் மாதிரிகளை சேரிக்கும் உணவு பாதுகாப்பு றை அதிகாரிகள். கடந்த ஜூலை மாதம் வரை திருப்பதி லட்டுக்கான நெய்யை  ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் தான் சப்ளை செய்து வந்துள்ளது. விலக்கு கொழுப்பை கலந்து சப்ளை செய்ததால்   ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் தடை செய்தது. 



  • Sep 21, 2024 10:22 IST
    தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு

    தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது ஒரு சவரன் தங்கம் 55 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை, 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



  • Sep 21, 2024 10:21 IST
    இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு

    சகுனிகள் அதிகமாக இருக்கும் சமூகத்தில் யோக்கியவானாக இருப்பது கடினம். சாணக்கிய தன்மையும், சாமர்த்தியமும் வேண்டும்- வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் 



  • Sep 21, 2024 09:52 IST
    து.முதல்வர் பதவி- உதயநிதியின் எதிர்பார்ப்புகள்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்களிடையேயும், மூத்த அமைச்சர்களிடையேயும் நிலவி வருகிறது.

    எந்நேரமும் துணை முதல்வராகலாம் என்று தினம் தினம் செய்திகள் பரவி வரும் நிலையில் உதயநிதிக்கும் சில எதிர்பார்ப்புகள் இருப்பதாக தகவல், அமைச்சரவையிலும், ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பது உதயநிதியின் திட்டம் என தகவல் கூறப்படுகிறது. 



  • Sep 21, 2024 09:11 IST
    வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

    அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு. சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.28 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment