Tamil News Highlights : விவசாயிகளின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. ஆனாலும், குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்பின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப்பெற்றால், வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற மத்திய அரசின் நிபந்தனை குறித்தும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது குறித்த குழு குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் டிசம்பர் 20 முதல் குளிக்க அனுமதி
கொரோனா பெருந்தொற்றால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பொது முடக்கம் தளர்த்தப்பட்டு, சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோதிலும், குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீடித்தது. இந்தச்சூழலில், வரும் 20-ம் தேதியிலிருந்து அருவியில் மக்கள் குளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்கள் விற்பனையை ஒழிக்கக் காவல் துறைக்கு டிஜிபி சுற்றறிக்கை
பள்ளி, கல்லூரிகள் அருகில் கஞ்சா, குட்கா விற்பனையை ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, அனைத்து மண்டல போலீஸ் ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், ரயில்வே போலீஸ் டிஜிபி, அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் ஆகியோருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். தமிழகத்தில் டிசம்பர் 6 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வரை ஒரு மாத காலம் ‘கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை’ நடத்த வேண்டும் என்றும் கஞ்சா, குட்கா லாட்டரி விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு
ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 11 நாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் துரித பரிசோதனைக்கு 3,400 ரூபாயும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு 700 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்த நிலையில், துரித பரிசோதனை கட்டணம் 2,900 ரூபாயாகவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் 600 ரூபாயாகக் குறைத்து தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:08 (IST) 08 Dec 2021டி20, ஒருநாள் போட்டிகளின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமனம்
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்கிறார்
- 16:56 (IST) 08 Dec 2021அதிமுகவின் மாநிலம் தழுவிய போராட்டம் டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ஆளும் திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் வியாழன் அன்று நடத்த அதிமுகவினர் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த ஆர்ப்பாட்டம் வருகிற டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
aiadmk postpones its state-wide agitation to December 11. The party was planning to stage a protest condemning the ruling DMK on Thursday. pic.twitter.com/0ag3pQSkon
— Janardhan Koushik (@koushiktweets) December 8, 2021 - 16:20 (IST) 08 Dec 2021பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும் - திமுக எம்.பி. டி.ஆர். பாலு!
தமிழக முதலமைச்சர் வலியுறுத்திய மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, "தமிழகத்திற்கு வருவாய் தரும் முக்கிய துறைகளில் ஜவுளித்துறையும் ஒன்று. வரி உயர்வு காரணமாக ஜவுளித்துறை நெருக்கடியான சூழலில் உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பருத்தி உற்பத்தியாளர்கள், ஜவுளித்துறை சார்ந்தவர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு பருத்திக்கான அதிகபட்ச விலையை விவசாயிகள் பெற்று வருகின்றனர். எனவே பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்" என்று கூறினர்.
- 16:01 (IST) 08 Dec 2021டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? - அரசு பதில் தர சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
டாஸ்மாக்கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, 12 மணிமுதல் இரவு 10 வரை மாற்றியதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்றைய தினம் தாக்கல் செய்த மனுவில், "தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 உட்பிரிவு ஏ ன் கீழ், தொழிற்சங்க சட்டத்தின்படி, வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளது. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதம் எனவே, இந்த அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும்.. இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம். பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது' என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.. இந்த மனுவானது நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு விரைவில் வரஉள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3வது வாரத்திற்கு நீதிபதி பார்த்திபன் ஒத்தி வைத்தார்.
- 15:12 (IST) 08 Dec 2021விமான விபத்து- தலைமை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை !
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த விமானம் நீலகிரி அருகே கீழே விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 14 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆலோசனையில் பேசப்பட்ட முழுமையான தகவல்கள் இன்னும் செய்திகள் வெளியாகவில்லை.
- 14:51 (IST) 08 Dec 2021முப்படை தளபதி பயணித்த விமானம் விபத்து: அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியிடம் விளக்கம்!
ராணுவ ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ராணுவ விமானம், நீலகிரி அருகே, காட்டேரி மலைப்பாதையில் கீழே விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடியிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார். விபத்துக்குள்ளான விமானம் Mi 17 V5 வகையைச் சேர்ந்தது. இது உலக அளவில் பயணத்திற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. 13 ஆயிரம் கிலோ எடையை தாங்கிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 14:41 (IST) 08 Dec 2021ராணுவ ஜெனரல் பயணித்த விமானம் விபத்து: விசாரணைக்கு உத்தரவு!
நீலகிரி அருகே, காட்டேரி மலைப்பாதையில், ராணுவ ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பிபின் ராவத் மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர். கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிபின் ராவத் நிலை இதுவரை தெரியவில்லை. இதனிடையே இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் Mi 17 V5 வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- 14:38 (IST) 08 Dec 2021ராணுவ ஜெனரல் பயணித்த விமானம் விபத்து: விசாரணைக்கு உத்தரவு!
நீலகிரி அருகே, காட்டேரி மலைப்பாதையில், ராணுவ ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பிபின் ராவத் மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர். கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிபின் ராவத் நிலை இதுவரை தெரியவில்லை. இதனிடையே இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் Mi 17 V5 வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- 14:27 (IST) 08 Dec 2021நீலகிரியில் ராணுவ ஜெனரல் பயணித்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில், ராணுவ ஹெலிஹாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விமானத்தில் பய உயர் ராணுவ அதிகாரிகள் உடன், ராணுவ ஜெனரல் பிபின் ராவத் பயணித்தது உறுதியாகியுள்ளது. ஆனால் அவரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
watchpic.twitter.com/YkBVlzsk1J
— ANI (@ANI) December 8, 2021
- 14:26 (IST) 08 Dec 2021நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்து- 7 வீரர்கள் மரணம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில், ராணுவ ஹெலிஹாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விமானத்தில் பய உயர் ராணுவ அதிகாரிகள் உடன், ராணுவ ஜெனரல் பிபின் ராவத் பயணித்தது உறுதியாகியுள்ளது. ஆனால் அவரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
watch | Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Gen Bipin Rawat, his staff and some family members were in the chopper.
(Video Source: Locals involved in search and rescue operation) pic.twitter.com/YkBVlzsk1J
— ANI (@ANI) December 8, 2021
- 14:10 (IST) 08 Dec 2021நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்து- 7 வீரர்கள் மரணம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில், ராணுவ ஹெலிஹாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில், ராணுவ ஹெலிஹாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விமானத்தில் பல உயர் ராணுவ அதிகாரிகள் உடன், ராணுவ ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியும் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
watch | Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Gen Bipin Rawat, his staff and some family members were in the chopper.
(Video Source: Locals involved in search and rescue operation) pic.twitter.com/YkBVlzsk1J
— ANI (@ANI) December 8, 2021
- 13:24 (IST) 08 Dec 2021இந்தியா - தென் கொரியா இடையேயான ஆக்கி போட்டி ரத்து
இந்திய அணி வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா - தென் கொரியா இடையே இன்று நடைபெறவிருந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி போட்டி ரத்து செய்யப்படுவதாக ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
- 13:17 (IST) 08 Dec 2021கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்க தலைவர்
எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கத்தலைவர் குருநாம் சிங் கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசு காலம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- 13:16 (IST) 08 Dec 2021கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்க தலைவர்
எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கத்தலைவர் குருநாம் சிங் கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசு காலம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- 12:49 (IST) 08 Dec 2021பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மின்சார திருத்த சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும். சட்ட திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது என்று - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 12:45 (IST) 08 Dec 2021பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மின்சார திருத்த சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும். சட்ட திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது என்று - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 12:44 (IST) 08 Dec 2021மழையால் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்த முதல்வர்
சென்னை, பாடிகுப்பம் பகுதியில் கனமழை காரணமாக சேதமடைந்துள்ள தரை பாலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
- 12:43 (IST) 08 Dec 2021தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல்
நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
- 12:42 (IST) 08 Dec 2021சுஷில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி விசாரணை
சென்னை, கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் உள்ள பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 12:13 (IST) 08 Dec 2021சென்னையில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
- 12:12 (IST) 08 Dec 2021சென்னையில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், * உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
- 12:11 (IST) 08 Dec 2021சென்னையில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
- 12:11 (IST) 08 Dec 2021தனித்தேர்வர்களுக்கு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
- 12:08 (IST) 08 Dec 2021ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவை விட தீவிரமானது அல்ல
ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனாவை விட தீவிரமானது அல்ல என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம் தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரான் பாதிப்புக்கு எதிராக செயல்படாது எனக்கூற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
- 11:26 (IST) 08 Dec 2021மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை
டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பு
- 11:25 (IST) 08 Dec 2021டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- 10:36 (IST) 08 Dec 20218,439 பேருக்கு புதிதாக கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,439 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 9,525 பேர் குணமடைந்தனர் மற்றும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது 93,733 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- 10:34 (IST) 08 Dec 2021பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பால் வந்த பின்விளைவு
ரெபோ, ரிசர்வ் ரெபோ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்றும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது என்றும் புதிய நிதிக் கொள்கைகளை வெளியிட்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் உரையாற்றியுள்ளார்.
- 10:33 (IST) 08 Dec 2021ஆன்லைன் மூலம் கொரோனா இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் தமிழக அரசால் நிதியுதவி வழங்கப்படும் என்ற அரசாணை வெளியானது. இந்த இழப்பீட்டை குடும்பத்தினர் மட்டும் வாரிசுதாரர், www.tngov.in என்ற அரசின் இணையத்தில் what's new என்ற பகுதியில் Ex-gratia for COVID 19 என்ற இணைப்பை தேர்வு செய்தால், ஆன்லைன் மூலம் இழப்பீட்டுக்கான விண்ணப்பத்தை சம்ர்ப்பிக்கலாம்.
- 10:27 (IST) 08 Dec 2021தங்கம் விலை அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.36,176-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம்ரூ.4,522-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:26 (IST) 08 Dec 2021பேருந்து நிலையங்கள் இன்று திறப்பு
மதுரை, நெல்லை மற்றும் தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
- 09:30 (IST) 08 Dec 2021படிக்கட்டில் பயணம் : ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணித்தால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கூடுதல் பேருந்துகளை இயக்க உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.