Tamil Nadu: Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், போக்குவரத்துத் துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் வழக்கமான அளவில் இயக்கப்படவில்லை. இந்த வேலைநிறுத்தத்தால், வெளியூர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதால், பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் என்ற அச்சம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
-
Jan 10, 2024 05:05 ISTசிவில் பிரச்சனையில் போலீசார் தலையிடக்கூடாது - ஏ.டி.ஜி.பி அருண் சுற்றறிக்கை
சிவில் பிரச்சனைகளில் போலீசார் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்று ஏ.டி.ஜி.பி அருண் காவல்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
எஃப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்தவொரு மனுக்கள் மீதும் காவல்துறை எந்த விசாரணையும் நடத்தக்கூடாது. பணத்தகராறு, சொத்துத்தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
-
Jan 09, 2024 21:55 ISTவேலை நிறுத்தம்: மின்வாரிய தொழிலாளர்கள் ஆதரவு
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு மின்வாரிய தொழிலாளர்கள் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை அண்ணா சாலையில் நாளை (10.01.2024) மாலை 5 மணிக்கு மின் வாரிய தொழிலாளர்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
-
Jan 09, 2024 21:52 ISTபொங்கல் பரிசுத்தொகை: ரூ. 2436 கோடி நிதி ஒதுக்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு
அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை அறிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2,436 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
Jan 09, 2024 21:18 IST12-ம் வகுப்பு தேர்வுக் கட்டணம் கால அவகாசம்
தனியார் மற்றும் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி மாணவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்த ஜனவரி 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
-
Jan 09, 2024 21:02 ISTபில்கிஷ் பானு வன்புணர்வு வழக்கு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடப்பாடி வரவேற்பு
பில்கிஷ் பானு வன்புணர்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர், “2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து, பாதிக்கப்பட்ட சகோதரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார். -
Jan 09, 2024 19:51 ISTராஷ்மிகா மந்தனா உடன் கிரிக்கெட் ஆடிய விஜய்
நடிகை ராஷ்மிகா மந்தனா உடன் நடிகர் விஜய் கிரிக்கெட் ஆடிய வீடியோவை பாடலாசிரியர் விவேக் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் நடிகர் யோகி பாபுவும் உள்ளார். வீடியோ வாரிசு படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்டுள்ளது.
-
Jan 09, 2024 19:45 ISTராமர் கோவில் மாதிரிகள் வைக்க மேயர் அறிவுறுத்தல்
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் மாநகரில் உள்ள மால்கள், கடைகளில் ராமர் கோயிலின் மாதிரியை வைக்க வேண்டும் என அம்மாவட்ட மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Jan 09, 2024 19:44 ISTசமூக நீதி பாடல்: உதயநிதி கோரிக்கை
அரசு பள்ளிகளில் சமூக நீதி பாடல் வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறை வணக்கத்தை தொடர்ந்து இந்தப் பாடல் பாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். -
Jan 09, 2024 19:43 ISTகிருஷ்ணகிரி: கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் கணவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பேகப்பள்ளி கிராமத்தில் கடந்த 5ம் தேதி மளிகைக்கடை நடத்தி வந்த திம்மராஜ் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில், அதிமுக மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் நாகரத்தினமாவின் கணவர் முனிராஜ் மற்றும் 3 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்துள்ளனர். -
Jan 09, 2024 19:40 ISTராமர் கோவில் திறப்பு விழா; உ.பி.யில் ஜன.22 கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 22-ஆம் தேதி விடுமுறை அளிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். -
Jan 09, 2024 19:04 ISTஇந்தியா வந்த அமீரக அதிபர்; மோடி உற்சாக வரவேற்பு
இந்தியா வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகம்மது பின் ஸாயித்க்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வரவேற்பு அளித்தார்.
Welcome to India my brother, HH @MohamedBinZayed. It’s an honour to have you visit us. pic.twitter.com/Oj7zslR5oq
— Narendra Modi (@narendramodi) January 9, 2024 -
Jan 09, 2024 18:55 ISTதொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்; ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மற்றும் பொங்கல் பண்டிகை எதிரொலியாக வரும் வெள்ளிக்கிழமைக்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் ரூ. 500 முதல் ரூ. 700 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ரூ. 2000 ஆயிரம் முதல் ரூ. 4000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
-
Jan 09, 2024 18:32 ISTநாடாளுமன்ற தேர்தல்; மாவட்ட செயலாளர்களுடன் இ.பி.எஸ் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், காஞ்சிபுரம், குமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது
-
Jan 09, 2024 18:12 ISTகிரிக்கெட் தொடர்களுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம்
2026 வரை இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களுக்கு ரிலையன்ஸ் குழுமத்தின் CAMPA மற்றும் ATOMBERG நிறுவனங்கள் ஸ்பான்சர்களாக ஒப்பந்தமாகியுள்ளன
-
Jan 09, 2024 17:48 ISTபழனி கோவில் வீதிகள் வர்த்தக பயன்பாட்டிற்கு இல்லை; ஐகோர்ட் உத்தரவு
பழனி கோவிலை சுற்றி உள்ள வீதிகளை, வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகிக்கக் கூடாது. கோவிலை சுற்றியுள்ள இடங்களில் ஆக்கிரமிப்புகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிவலப் பாதையில் வாகனங்கள் வராமல் இருக்க, பிரதான சாலை இணைப்பில் தடுப்பு அமைக்க வேண்டும் என பழனி கோவில் கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
-
Jan 09, 2024 17:41 ISTலால் சலாம் பிப்.9 வெளியீடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் பிப். 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 09, 2024 17:24 ISTகுன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை ரத்து
கனமழை எச்சரிக்கை மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் வரும் 11ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யபடுவதாக சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
-
Jan 09, 2024 17:11 ISTகொளத்தூர் தொகுதி; தனிக்குழு அமைத்து இ.பி.எஸ் உத்தரவு
கொளத்தூர் தொகுதியில் பூத் கமிட்டியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள அ.தி.மு.க சார்பில் தனிக்குழு அமைத்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி திருப்திகரமாக இல்லாததால், அதனை ஒருங்கிணைத்து அமைக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
-
Jan 09, 2024 16:30 ISTசூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை அடுத்த இரண்டு தொடர்களில் பங்கேற்பது சந்தேகம்
-
Jan 09, 2024 16:30 ISTகேப்டன் மில்லர் - இணையதளங்களில் வெளியிட தடை
கேப்டன் மில்லர் திரைப்படத்தை 1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான "கேப்டன் மில்லர்" ஜன.11ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் உத்தரவு
-
Jan 09, 2024 15:44 ISTமுதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு
மார்ச் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 7-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 09, 2024 15:43 ISTகார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ்
பிரதமர் மோடியுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவருக்கு நிகரானவர் இல்லை என்று கார்த்திக் சிதம்பரம் பேசியது குறித்து, அவருக்கு தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
Jan 09, 2024 15:37 ISTமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை : தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் வெள்ளத்தின் போது சேதமாகி சீரமைக்கப்பட்ட ஏரல் தரைப்பாலத்தை ஒட்டியபடி தற்போது ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது ஆற்றில் நீர் மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
-
Jan 09, 2024 15:13 ISTஅரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் புதிய திட்டம் குறித்து பரிசீலனை
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ‘புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்’ ஆகியவற்றை விரிவாக்கம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Jan 09, 2024 15:11 ISTவிவாகரத்தான கணவர் பார்க்க எதிர்ப்பு : மகனை கொன்ற பெண் கைது
விவாகரத்தான கணவர் சந்திக்க கூடாது என்பதற்காக 4 வயது மகனை கொன்று காரில் எடுத்துச் சென்ற பெண் தலைமை செயல் அதிகாரி கேரளா தப்ப முயன்றபோது பெங்களூரு போலீசார் சாதுர்யமாக மடக்கிப் பிடித்தனர்.
-
Jan 09, 2024 14:59 ISTஜப்பானில் நில நடுக்கம்
ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது
-
Jan 09, 2024 14:47 ISTமுதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு
மார்ச் 3ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 09, 2024 14:43 ISTதமிழ்நாடு முழுவதும் 95.53% பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு முழுவதும் நண்பகல் 12 மணி நிலவரப்படி 95.53% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 16,539 பேருந்துகளில் 15,800 பேருந்துகள் இயங்கி வருகின்றன என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டலத்தில் 96.78% பேருந்துகள் இயக்கம். 3,233 பேருந்துகளில் 3,129 பேருந்துகள் இயக்கம். விழுப்புரம் மண்டலத்தில் 90.8% பேருந்துகள் இயக்கம். மொத்தமுள்ள 2,550 பேருந்துகளில் 2,297 பேருந்துகள் இயக்கம். சேலம் மண்டலத்தில் 98.07% பேருந்துகள் இயக்கம். 1,349 பேருந்துகளில் 1323 பேருந்துகள் இயக்கம்.
மதுரை மண்டலத்தில் 98.43% பேருந்துகள் இயக்கம். 2,166 பேருந்துகளில் 34 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை. கோவை மண்டலத்தில் 94.56% பேருந்துகள் இயக்கம். 2,296 பேருந்துகளில் 2,171 பேருந்துகளு இயக்கம்.
நெல்லை மண்டலத்தில் 99.57% பேருந்துகள் இயக்கம். 1636 பேருந்துகளில் 7 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவில்லை. கும்பகோணம் மண்டலத்தில் 94.02% பேருந்துகள் இயக்கம். 3,178 பேருந்துகளில் 2,988 பேருந்துகள் இயக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 09, 2024 14:03 ISTடெபாசிட் தொகையை உயர்த்த மனு: ஐகோர்ட் தள்ளுபடி
மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு மீது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
-
Jan 09, 2024 14:02 ISTகிறிஸ்தவ தேவாலய போதகர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் போதகர்களுடன் சிறுபான்மையினர் நலன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அன்பில் மகேஷ், கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்னர்.
-
Jan 09, 2024 13:35 ISTநாடாளுமன்ற தேர்தல்: பணிகளை தொடங்கிய அ.தி.மு.க
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க கட்சி அதன் பணிகளை தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிரியாது.
எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை முதல் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் தனித்தனியாக ஆலோசனை நடைபெற உள்ளது.
-
Jan 09, 2024 13:34 IST'விஜயகாந்த் நல்ல மனதுடைய மனிதர், நல்ல அரசியல்வாதி' - நடிகர் விஷால்
"விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே பலர் அவரை சாமி என்று அழைத்துள்ளனர். விஜயகாந்தை முன்னுதாரணமாக வைத்து தான், நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம்"
விஜயகாந்தின் அலுவலகத்தில், எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். அனைவரையும் சரிசமமாக பார்த்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான்" என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
-
Jan 09, 2024 13:33 ISTஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 பொங்கல் பரிசு
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Jan 09, 2024 12:58 IST4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை. தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை
-
Jan 09, 2024 12:55 ISTமாநகர பேருந்துகள் 95% இயக்கம்
மாநகர பேருந்துகள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அச்சமின்றி பயணிக்கலாம் - அமைச்சர் சிவசங்கர்
-
Jan 09, 2024 12:54 ISTஅவர்கள் இடத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்த தயார்
தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தால், அவர்கள் இடத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்த தயார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பின், அமைச்சர் சிவசங்கர் பேட்டி
-
Jan 09, 2024 12:36 ISTதமிழக செஸ் பயிற்சியாருக்கு துரோணாச்சாரியார் விருது
தமிழக செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ்-க்கு துரோணாச்சாரியார் விருது வழங்கி கவுரவம்.
-
Jan 09, 2024 12:20 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் விஷால், ஆர்யா அஞ்சலி
சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா அஞ்சலி.
-
Jan 09, 2024 12:18 ISTஅர்ஜூனா விருது பெற்றார் வைஷாலி
தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அர்ஜூனா விருதை பெற்றார் வைஷாலி
-
Jan 09, 2024 12:14 ISTநடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் பரிசீலனை - விஷால்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து பரிசீலனை. நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும். விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடந்திருக்க வேண்டும்.
விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 19-ம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறும்- நடிகர் விஷால்
-
Jan 09, 2024 12:14 ISTநடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் பரிசீலனை - விஷால்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து பரிசீலனை. நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும். விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடந்திருக்க வேண்டும்.
விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 19-ம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறும்- நடிகர் விஷால்
-
Jan 09, 2024 12:14 ISTநடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் பரிசீலனை - விஷால்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து பரிசீலனை. நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும். விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடந்திருக்க வேண்டும்.
விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 19-ம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறும்- நடிகர் விஷால்
-
Jan 09, 2024 12:05 IST94% அரசுப் பேருந்துகள் இயக்கம்: பணீந்திர ரெட்டி
தமிழ்நாடு முழுவதும் 94 சதவிகித அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன
நாளடைவில் பேருந்துகள் இயக்கப்படுவது மேலும் மேம்படும்- போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்
போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 94% பேருந்துகள் இயக்கம்
-
Jan 09, 2024 11:56 ISTமாவட்ட செயலாளர்கள் உடன் இ.பி.எஸ் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஈபிஎஸ் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தான வியூகம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல். நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசனை எனத் தகவல்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக ஏற்கெனவே அறிவிப்பு
-
Jan 09, 2024 11:24 ISTபொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை
10 மற்றும 12 வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பாக பொதுத் தேர்வு தேதி பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் ஆணைய வாக்குப் பதிவு தேதிகளை அறிவிக்கும்- அமைச்சர் அன்பில் மகேஸ்
-
Jan 09, 2024 11:22 IST21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை
திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் = மிதமான மழை பெய்யக்கூடும்
-
Jan 09, 2024 11:22 ISTசிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு மனு: உயர் நீதிமன்றம் மறுப்பு
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு வழக்கு
விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
-
Jan 09, 2024 11:20 ISTமாணவர்களுக்கான ஊக்கத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் அன்பில் மகேஷ்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஊக்கத் தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்
-
Jan 09, 2024 11:00 ISTநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது- மு.க.ஸ்டாலின்
சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) January 9, 2024
குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று… -
Jan 09, 2024 10:44 ISTதற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கம்
மதுரை மேலூர் பணிமனையில் இருந்து 100% பேருந்துகள் இயக்கம்;
132 பணியாளர்களில் 112 பேர் பணிக்கு வருகை தந்துள்ளனர்
தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.