Tamilnadu news update:
நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை விடுதலையானார்.
உக்ரைனில் மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் குழு இன்று சென்னை வருகை!
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் குழு இன்று சென்னை வர உள்ளனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று வரவேற்கிறார்.
இந்தாேனிஷியா, செஷல்ஸ் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க காரி வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
India news update:
5 மாநில தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியாகின. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், காேவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது.
World news update:
ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தியது அமேசான்</strong>
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் அனைத்து வணிகங்களையும் அமேசான் நிறுவனம் நிறுத்தியது.
வணிக செயல்பாடுகளை நிறுத்திய அமெரிக்க வங்கிகள்
ரஷ்யாவில் வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க வங்கிகளான கோல்டன் சாச்ஸ் குரூப் மற்றும் ஜேபிமோர்கன் சேஸ் ஆகியவை ரஷ்யாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
1 லட்சம் பேர் வெளியேற்றம்
கடந்த 2 நாட்களில் 1 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செ்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிராம சுயாட்சியின் கனவை நிறைவேற்ற பஞ்சாயத்துராஜ் அமைப்பு முக்கியமானது 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் 75 மரங்களை நட பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை பாகிஸ்தானில், தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு 1,461 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்க தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளில் தலையிடக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற கருத்தை சுட்டிக்காட்டி மனு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை, புழல் சிறையில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை இல்லை என சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சிறைத்துறை விதிகளின்படி மாலை 6 மணிக்கு மேல் ஜாமின் கோரி வரும் விண்ணப்பம் ஏற்கப்படுவதில்லை என்பதால் இவ்வாறு செய்துள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் கூறியுள்ளது.
பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாறுதல், சான்றிதழ் வழங்குதல், ஆக்கிரமிப்பு அகற்றுதலில் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2வது சுரங்கத்தில் மணல் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரம் தீப்பிடித்ததாக தகவல் வெலியாகி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பகவந்த் மான் மார்ச் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்கிறார். காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைப் பறித்த மாநிலத்தில் வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்தது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: “காங்கிரஸ் விரும்பினால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணையலாம். 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024ல் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை” என்று கூறியுள்ளார்.
சீனாவில் உள்ள சாங்சுன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாகணக்கத்தின் வடகிழக்கு தொழில்துறை மையத்தில் 9 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு சீனா அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சென்ற நிலையில், குரேஸ் செக்டார் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விலகிச்சென்று விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் வான்வழியில், இந்தியாவின் சூப்பர்சோனிக் பறக்கும் பொருள் ஒன்று அத்துமீறி பறந்துள்ளது என்று கூறி இந்தியாவுக்கு அந்நாடு சம்மன் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் சூரத்காட் பகுதியில் இருந்து கடந்த 9ந்தேதி மாலை 6.43 மணியளவில் முன்னறிவிப்பின்றி, பாகிஸ்தானின் வான்பரப்பில் இந்தியாவை சேர்ந்த சூப்பர்சோனிக் பறக்கும் பொருள் ஒன்று அத்துமீறி பறந்துள்ளது.
இது பின்னர் அதே நாளில், விபத்தில் சிக்கி பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள மியான் சன்னு நகரில் வீழ்ந்தது. இதனால், குடிமக்களின் பொருட்கள் சேதமடைந்ததுடன், பொதுமக்களின் வாழ்வுக்கும் ஆபத்து ஏற்படுத்தியுள்ளது. பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் விமான பாதையில் அத்துமீறி சென்று விமான விபத்தும் ஏற்படுத்தி, மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளது.
எனினும், இதற்கு இந்திய தரப்பில் இருந்து எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலங்களில் கூட ஆட்சியை கைப்பற்றாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சரியான மாற்று (alternative) என்ன என்பதினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை மாற்றம் வராது என்று உணருங்கள்!.
நானா?எனது கட்சியா? என்றால் எனது கட்சி! எனது கட்சியா? நாடா? என்றால் எனது நாடு! நாட்டை காப்பாற்ற கட்சி தியாகம் செய்யவேண்டிய நேரமிது! காலம் வழங்கியிருக்கும் கடைசி வாய்ப்பு! 2024!” பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் போர்ச் சூழலில் உலக அளவிலான பொருளாதாரத்தின் தாக்கம் குறித்துப் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நிதியத்தின் துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத், இந்தியா எரியாற்றல் தேவைக்குப் பெரிதும் இறக்குமதியைச் சார்ந்துள்ளதாகவும், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்தார்.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து 213 இந்திய மாணவர்கள் உத்தர பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் வந்தடைந்தனர்
“பஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன்; புதிய அரசு தொடங்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்க ஆளுநர் அறிவுறுத்தல்.” என்று அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நல பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல் கூறினார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலை நடத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைத்தால் ஜனநாயகம் வலுவிழக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த பிப். 27ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 8 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த வழக்கில், மீனவர்களை வரும் 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், வீரபாண்டி தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில்’ சசிகலா உறவினரான இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கு வரும் 26ம் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி சிறப்புகூறு துணைத் திட்ட நிதியை முழுமையாக செலவிடவில்லை என குற்றம்சாட்டி, தலித் அமைப்பினர் புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டனர்.
உக்ரைன் நாட்டின் வோல்னோவாக நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு,
ரஷ்யாவில் திரைப்பட வெளியீட்டையும், வணிகங்களையும் நிறுத்திக் கொள்வதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
தங்கள் முதலமைச்சர், அமைச்சர்கள், MLAக்களின் பேச்சானது கருத்தோடும், கண்ணியத்தோடும் இருக்கும் என்று திமுகவிற்கு நம்பிக்கை இருக்குமானால் தனியார் தொலைக்காட்சிகளை’ சட்டமன்றத்தில் அனுமதித்து ஒளிபரப்பு செய்யச் சொல்லலாமே? எந்தச் செலவுமின்றி முழுநேரடி ஒளிபரப்பு சாத்தியமாகும். திமுக தயாரா? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு மத்திய சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்ஜாமின் கோரி சசிகலா மற்றும் இளவரசி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மாதம் ஒருமுறை ‘வரும் முன் காப்போம்' முகாம் நடைபெறும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவிப்பு!
கர்நாடகா, பெங்களூரு சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, சொகுசு வசதிகள் பெற்ற வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் மீது’ ஊழல் தடுப்பு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணை தொடங்கியது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சகிகலா ஆஜர்.
தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
தமிழ்நாட்டில் முதன்மை பல்கலைக்கழமாக பாரதியார் பல்கலைக்கிழகம் விளங்குகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி முதன்மையானது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
உ.பி தேர்தல் முடிவுகள் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இருந்தாலும் தொண்டர்கள் மனம் தளராமல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201.23 புள்ளிகள் உயர்ந்து. 55,665.62 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41.95 புள்ளிகள் அதிகரித்து 16,636.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
மாவட்டங்கள் தோறும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிகிறார். மாநாடு இறுதியில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்க உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு தொடங்கியது. காலை 10 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 25 பேரை செஷல்ஸ் கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்தனர்.! ஏற்கனவே குமரி மாவட்ட மீனவர்கள் 33 பேரை செஷல்ஸ் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இந்தியாவில் மேலும் 4,194 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது பாஜக. இதையடுத்து, அந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராகிறார்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை ரஷ்ய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகே 64 கி.மீ. நீளம் ரஷ்ய படைகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் போலந்தில் இருந்து 242 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். உக்ரைனில் இருந்து போலந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இவர்கள் தாய்நாடு திரும்பினர்.