Advertisment

10, 11ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை சமர்ப்பிக்க உத்தரவு

புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
12th exam

Tamil News Today Live tamilnadu : ஜூலை முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது எனவும் இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ரூ.13.38 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,57,399 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,78,714 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிமுறை மீறல் அடிப்படையில் இதுவரை 6,08,791 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,626 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமில்லாத உறுப்பினராக தேர்வாக ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை லாக்டவுன் விதிமுறைகளில் அரசு அறிவித்த தளர்வுகள் என்னென்ன? - முழு விவரம்

விழுப்புரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 478ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த 35 வயது நபர் இன்று உயிரிழந்தார்.

Live Blog

Tamil News Today Live tamilnadu : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:40 (IST)18 Jun 2020

    10, 11ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை சமர்ப்பிக்க உத்தரவு

    இரத்து செய்யப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதாத மாணவர்களது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகளை ஜூன் 22 முதல் 27 வரையிலான நாள்களுக்குள், அனைத்து தலைமை ஆசரியர்களும் சமந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அறிவிக்கும் பள்ளியில் ஒப்படைக்க வேண்டும் எனஅரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.   

    22:21 (IST)18 Jun 2020

    பழைய இ - பாஸ் நாளை முதல் செல்லுபடியாகாது - சென்னை காவல்துறை

    நாளை முதல் தொடங்கும் ஊரடங்கின் போது பழைய இ - பாஸ் செல்லுபடியாகாது என்று சென்னை காவல்துறை அறிவித்தது . அத்தியாவசிய / தொடர் உற்பத்தி / அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட பிரிவினர் புதிதாக விண்ணப்பித்து பாஸ் வாங்க வேண்டும் என்றும் தெரிவித்தது,    

    21:45 (IST)18 Jun 2020

    தமிழில் ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு குறித்த அரசாணை திரும்ப பெறப்படும் - க. பாண்டியராஜன்

    We are working on alignment of views by experts on Transliteration standards from Tamil to English. Hopefully, we should get this released in 2/3 days. The GO on the change of English names for Tamil names for places has been withdrawn. Will absorb all feedback & reissue shortly. https://t.co/ol4JOWgCHj— Pandiarajan K (@mafoikprajan) June 18, 2020தமிழில் ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்ப பெறப்படும் என்றும், அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு புதிய அரசாணை 2 அல்ல 3 நாட்களில் வெளியிடப்படும் என்று க.பாண்டியராஜன் தெரிவித்தார்.    

    21:31 (IST)18 Jun 2020

    1,60,384 நோயாளிகள் கொரோனா மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்

    கடந்த 24 மணி நேரத்தில், 7390 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,94,324 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 52.96 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது 1,60,384 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

    கடந்த 24 மணி நேரத்தில், 1,65,412 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 62,49,668 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

    20:58 (IST)18 Jun 2020

    அனைத்து இறைச்சிக் கடைகளும் 30ம் தேதி வரை மூடப்படும் - சென்னை மாநகராட்சி

    சென்னை மகராட்சி உட்பட பகுதிகளில் நாளை முதல் ஜூன் 30 வரை மீன்,ஆடு,கோழி என அனைத்து இறைச்சிக் கூடங்களும் இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது.

    20:22 (IST)18 Jun 2020

    கொரோனா தொற்று தொடர்பான நமது கேள்விகளுக்கு சென்னை மாநகராட்சி பதிலளிக்கிறது

    19:39 (IST)18 Jun 2020

    மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனை விவரங்கள் எங்கே? ஸ்டாலின் கேள்வி

    தமிழகத்தில் இதுவரை மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா மருத்துவ சோதனை குறித்த முழுமையான விவரங்களை அதிமுக அரசு பொதுக் களத்தில் முன்வைக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதற்கு மேலும் தவறுகள் இழைப்பதும், அலட்சியம் காட்டுவதும், பொதுமக்களால் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.  

    19:31 (IST)18 Jun 2020

    உயிரிழந்த ஆய்வாளர் பாலமுரளிக்கு மௌன அஞ்சலி

    விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா பெருந்தோற்றால் உயிரிழந்த பாலமுரளி ஆய்வாளருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். 

    19:28 (IST)18 Jun 2020

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1,373 பேர் கொரோனா தொற்று

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1,373 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 50 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    19:24 (IST)18 Jun 2020

    மாவட்ட வாரியாக கோவிட்-19 தொற்றால் பாதித்தவர்களின் விவரம்

    19:22 (IST)18 Jun 2020

    ஏழைகள் நலனுக்கான வேலைவாய்ப்பு திட்டம் - ஜூன் 20 அன்று பிரதமர் தொடங்கிவைக்கிறார்.

    நாட்டின் கிராமப்புற மக்களுக்கும் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்கி அவர்கள் நிலையை மேம்படுத்துவதற்கான மாபெரும் கிராமப்புற பொதுப்பணி திட்டமான ‘கரீப் கல்யான் ரோஜ்கார் அபியான் எனப்படும் ஏழைகள் நலனுக்கான வேலைவாய்ப்பு இயக்கத்தை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை, பிரதமர் திரு.நரேந்திரமோடி, 20 ஜுன், 2020 அன்று பகல் 11 மணியளவில், பிகார் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில், காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைக்க உள்ளார்

    19:11 (IST)18 Jun 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று; 49 பேர் பலி

    தமிழகத்தில் இன்று புதிதாக 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 49 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    19:04 (IST)18 Jun 2020

    தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை போதிய அளவில் மேற்கொள்ளாதது ஏன் - மு.க.ஸ்டாலின் கேள்வி

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இன்றளவிலும் கொரோனா பரிசோதனையை போதிய அளவில் மேற்கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கொரோனா பரிசோதனை விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும். தமிழக அவசர் உணர்வுடன் செயல்பட வேண்டிய அரிதான தருணம் இது” என்று தெரிவித்துள்ளார்.

    18:16 (IST)18 Jun 2020

    அண்ணா பல்கலை. மாணவர் விடுதியில் தனிமைப்படுத்த முகாம் அமைக்க திட்டம் - சென்னை மாநகராட்சி

    அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்திக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்துள்ள கடிதத்தில், மாணவர் விடுதிகளில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட உள்ளதால் மாணவர் விடுதிகளை காலி செய்து 20-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    17:39 (IST)18 Jun 2020

    சென்னையின் முக்கிய பிரதான சாலைகள் மூடப்படும் - சென்னை போலீஸ் கமிஷனர்

    செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், “பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சென்னையின் முக்கிய சாலைகள் மூடப்படும். ஊரடங்கை கண்காணிக்க சென்னை முழுவதும் ட்ரோன்கள் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. உரிய அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” என்று கூறினார்.

    17:22 (IST)18 Jun 2020

    முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

    கொரோனா தொற்றால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னையில் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்துப் பேசினார். “காய்கறி மளிகைக் கடைகளில் நேரக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கடந்த ஊரடங்கின்போது பெறப்பட்ட இ பாஸ் செல்லாது. முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க பைக், கார்களில் செல்லக் கூடாது. அருகிலுள்ள கடைகளிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும். சென்னை அண்ணா சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.” என்று கூறினார்.

    17:10 (IST)18 Jun 2020

    கொரோனாவால் இறந்த காவல் ஆய்வாளருக்கு காவலர்கள் மௌன அஞ்சலி

    கொரோனாவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு அனைத்து காவலர்களும் மாலை 5 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

    17:07 (IST)18 Jun 2020

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை ஆனி திருமஞ்சன விழா பொதுமக்களுக்கு அனுமதியில்லை

    நாளை திருமஞ்சன விழா நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை என ஆட்சியர் கூறியுள்ளார். கோயிலின் மேற்கு, வடக்கு, தெற்கு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, கிழக்குக் கோபுர வாயில் வழியாக மட்டுமே தீட்சிதர்கள் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். தீட்சிதர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதுடன் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

    16:41 (IST)18 Jun 2020

    ஆயுதங்களை பயன்படுத்தவில்லை

    லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன

    1996,2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை

    - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

    16:41 (IST)18 Jun 2020

    அவகாசம் ஜூன் 15க்கு மேல் நீட்டிக்கப்படாது

    சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 15க்கு மேல் நீட்டிக்கப்படாது

    * சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மின்வாரியம் திட்டவட்டம்

    ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுமா?

    * மின் கட்டண வசூல் நடவடிக்கைகளை தள்ளி வைக்க கோரிய வழக்கில் திங்கள் கிழமை உத்தரவு

    16:40 (IST)18 Jun 2020

    ரூ.50 ஆயிரம் கோடி

    புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை

    *புலம் பெயர் தொழிலாளர்கள், பல்வேறு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது

    * புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் வகுக்கப்படும்

    16:22 (IST)18 Jun 2020

    மத்திய - மாநில‌ அரசுகள் இணைந்து நடவடிக்கை

    பொருளாதார இழப்பை சீர்செய்ய மத்திய - மாநில‌ அரசுகள் இணைந்து நடவடிக்கை

    * புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட்டன

    * 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெற்றனர்

    15:54 (IST)18 Jun 2020

    4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

    சென்னையில் முழு ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் விளக்கம்

    * சென்னை வேப்பேரி அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

    15:46 (IST)18 Jun 2020

    சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம்

    ‘பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம்’

    செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

    * 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் எஸ்.பி கண்ணன் உத்தரவு

    15:45 (IST)18 Jun 2020

    சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும்

    கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    * சித்த மருந்துகளை பயன்படுத்திய கொரோனா நோயாளிகள் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர் - அன்புமணி ராமதாஸ்

    15:24 (IST)18 Jun 2020

    2 நிமிட மவுன அஞ்சலி

    இன்று மாலை 5 மணிக்கு கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு காவல் துறையினர் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி உத்தரவு.

    15:13 (IST)18 Jun 2020

    பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

    புதுச்சேரி காவல்துறை, பிற துறைகளில் 9 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

    புதுச்சேரியில் கொரோனா தொற்று குறையும் வரை சண்டே மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க முடியாது

    - முதல்வர் நாராயணசாமி

    15:13 (IST)18 Jun 2020

    திருவள்ளூரில் மேலும் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,168 ஆக உயர்வு.

    15:11 (IST)18 Jun 2020

    4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்

    * பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தில் எடுக்கப்பட உள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க வாய்ப்பு

    14:46 (IST)18 Jun 2020

    நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    * காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்

    * ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்

    சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது தெரிந்தது

    மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    14:45 (IST)18 Jun 2020

    பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

    ஆன்-லைன் வகுப்புகள் நடத்துவதற்கான விதிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

    * முதலமைச்சரின் ஒப்புதலுக்கு விதிமுறைகள் அனுப்பி வைப்பு

    * ஆன்-லைன் வகுப்புக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது

    14:44 (IST)18 Jun 2020

    பாட திட்டங்களை குறைக்க முதலமைச்சர் ஒப்புதல்

    பாட திட்டங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் ஒப்புதல்

    * பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

    * 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்

    * நிலைமை சரியான பின்பு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்

    14:44 (IST)18 Jun 2020

    தொழிற்சாலை ஊழியர்கள் பணிக்கு செல்ல இ-பாஸ்

    முழுமுடக்கம் அமலாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட தொழிற்சாலை ஊழியர்கள் பணிக்கு செல்ல இணையதளத்தில் இ-பாஸ் பெறலாம்

    tnepass.tnega.org என்ற இணையதளத்தில் ஆலை ஊழியர்களுக்கான வசதி தொடக்கம்

    14:15 (IST)18 Jun 2020

    இந்தியாவில் 3.66 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 334 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    13:59 (IST)18 Jun 2020

    கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

    தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம்

    செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் நியமனம்

    திருவள்ளூர் - பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்.காஞ்சிபுரம் - சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் நியமனம்

    கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் நியமனம்

    13:55 (IST)18 Jun 2020

    அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு!

    சென்னை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நாளை முதல் 30ம் தேதி வரை உணவு விநியோகப்படும் என்றும் சமுதாய சமூக கூடங்களை மேலும் வலுப்படுத்த  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 

    13:52 (IST)18 Jun 2020

    மோடி உரை!

    நாட்டில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதனையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசு எடுத்து வந்த பல்வேறு நடவடிக்கைகளால் நிலக்கரித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார். நாம் இறக்குமதி செய்யும் பொருட்களை நாமே தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    13:50 (IST)18 Jun 2020

    கடலூரில் கடைகள் திறப்பு நேரம்!

    கடலூர் மாவட்டம் முழுவதும் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்து அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    13:30 (IST)18 Jun 2020

    10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும்,  அதே போல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:13 (IST)18 Jun 2020

    பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை!

    உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த வருடாந்திர ரத யாத்திரையை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேரோட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    12:58 (IST)18 Jun 2020

    பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!

    முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை அனைவருக்கும் பரிசோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் அலுவலக தனி செயலாளர் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து அனைவருக்கும்  கொரோனா சோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    12:10 (IST)18 Jun 2020

    சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட்!

    முழு பொதுமுடக்கம் காரணமாக சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை (19.6.19) முதல் 30ஆம் தேதிவரை மூடப்படுகிறது. இதனால் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    11:51 (IST)18 Jun 2020

    டெக்சாமெத்தாசோன் மருந்து,!

    கொரோனாவுக்கு, டெக்சாமெத்தாசோன் மருந்து, பலனளிப்பதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார மையம், இது ஆரம்ப நிலைக்கான தகவல் மட்டுமே என்றும், மருத்துவர்கள் உடனடியாக தங்களது சிகிச்சையில் முறையில் திடீர் மாற்றம் கொண்டு வர வேண்டாம் என கூறியுள்ளது. 

    11:16 (IST)18 Jun 2020

    காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு அஞ்சலி!

    கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உருவப்படத்திற்கு டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கொரோனா தொற்றால் உயிரிழந்த முதல் காவல் ஆய்வாளர் பாலமுரளியின் இறப்பு காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    Tamil News Today Live: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 334 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.வட்டாட்சியருக்கு தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை; குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிக மூடப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு பணிக்காக தனியார் நிறுவனம் சார்பிலான சுகாதாரத்துறை ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று நடந்தவை

    லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.சுனாமி, காஜா புயலை எதிர்கொண்டதை போல கொரோனாவையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதற்கும் தற்கொலை தீர்வாகாது எனவும் கூறியுள்ளார்.

    சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர் என 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    “அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

    Chennai Tamilnadu Corona Coronavirus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment