Tamil News : லக்கிம்பூர் வன்முறை : உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. லக்கிம்பூர் வன்முறையில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்தும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டு பேர் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹியா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 16-வது வழக்காக இன்றைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி முதற்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.36 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருப்பத்தூரில் 78 சதவீதமும், தென்காசி மாவட்டத்தில் 74 சதவீதமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 சதவீதம் நெல்லை மாவட்டத்தில் 69 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் தோராயமாக 74.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 20 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு காரணமாக, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவுடன் அமெரிக்கா போர் நடத்த வாய்ப்பு - டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், தற்போதைய அதிபர் பைடனை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பைடன் அரசு மிகவும் பலவீனமாகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகவும் இதனை சீனா கொஞ்சமும் மதிப்பதில்லை என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இறுதியாக சீனாவுடன் போர் தொடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா வரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:02 (IST) 07 Oct 2021சோனியா, ராகுல் பற்றி அவதூறு பேச்சு; சீமான் மீது காங்கிரஸ் கட்சி புகார்
சோனியா காந்தி, ராகுல் காந்தி பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் எம்.பி ஜெயகுமார் தலைமையில் போபண்ணா உள்ளிட்டோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
- 20:11 (IST) 07 Oct 2021தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா; 27 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று; 1,487 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1.45 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; தற்போது 16,513 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
- 19:01 (IST) 07 Oct 2021குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க ஐகோர்ட் உத்தரவு
குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவிருந்தவல்லி அருகே பாப்பான்சத்திரத்தில் 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறைக்கு ரூ.1.08 கோடியும் கோயிலுக்கு ரூ.9.5 கோடியும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
- 18:56 (IST) 07 Oct 2021அக்டோபர் 15 முதல் வெளிநாடுட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா
அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்கப்படும்; சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவ.15 முதல் சுற்றுலா விசா வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- 18:55 (IST) 07 Oct 2021அக்டோபர் 15 முதல் வெளிநாடுட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா
அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுற்றுலா விசா வழங்கப்படும்; சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவ.15 முதல் சுற்றுலா விசா வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- 18:07 (IST) 07 Oct 2021சோனியா, ராகுல் பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது காங்கிரஸ் கட்சி புகார்
சோனியா காந்தி, ராகுல் காந்தி பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் எம்.பி ஜெயகுமார் தலைமையில் போபண்ணா உள்ளிட்டோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
- 16:57 (IST) 07 Oct 2021பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்கு பிடிவாரண்ட்
அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி நடந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
- 16:46 (IST) 07 Oct 2021நாவலாசிரியர் அப்துல்ராக் குர்னாவுக்கு நோபல் பரிசு அறிவிப்பு
அப்துல்ரசாக் குர்னா ஒரு தான்சானியா நாவலாசிரியர். இங்கிலாந்தில் வசிக்கும் இவர் ஆங்கிலத்தில் எழுதுகிறார் இவரது நாவல்களில் மிகவும் புகழ்பெற்றவை பாரடைஸ் (1994), இந்த நவல் புக்கர் மற்றும் விட் பிரெட் பரிசு, டெசெர்ஷன் (2005) மற்றும் பை தி சீ (2001) ஆகிய இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு 2021ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது "காலனித்துவத்தின் விளைவுகள் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களுக்கிடையேயான வளைகுடாவில் உள்ள அகதிகளின் தலைவிதி ஆகியவற்றின் சமரசமற்ற மற்றும் இரக்கமற்ற ஊடுருவல் ஆகியவற்றை தனது படைப்புகளில் வெளிப்படுத்தியமைக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 16:36 (IST) 07 Oct 2021இலக்கியத்துகான நோபல் பரிசு நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவிற்கு அறிவிப்பு
2021ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவிற்கு அறிவிகப்பட்டுள்ளது. இவர் காலனித்துவத்தின் விளைவுகள் மற்றும் கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான வளைகுடாவில் அகதியின் தலைவிதியின் சமரசமற்ற படைப்புகளுக்காக வழங்கப்படுகிறது நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று நோபல் பரிசு வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அகாடெமி அறிவித்துள்ளது.
- 16:18 (IST) 07 Oct 2021EWS பிரிவுக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பை நிர்ணயம் செய்தது எப்படி? சுப்ரீம் கோர்ட் கேள்வி
வருமானம் என்பது ஒவ்வொரு நகரத்துக்கும் மாறுபடும்; அப்படி இருக்க எவ்வாறு ரூ.8 லட்சம் வருமானம் என்ற வரம்பை EWS பிரிவுக்கு நிர்ணயம் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- 15:50 (IST) 07 Oct 2021பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் நீக்கம்
லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை வேண்டும் என வருண் காந்தி ட்வீட் செய்த நிலையில் பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து எம்.பி.க்கள் மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
- 15:47 (IST) 07 Oct 2021மம்தா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் மேற்கு வங்க ஆளுநர்
மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் வென்ற மம்தா பானர்ஜி உள்பட 3 திரினாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
- 15:44 (IST) 07 Oct 2021பாஜக வழக்கு
கோவில் நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றும் இந்து அறநிலையத்துறையின் முடிவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு பதிவு செய்துள்ளது.
- 15:00 (IST) 07 Oct 2021கழிவறைகளை சுத்தம் செய்த தமிழக பாஜக தலைவர்
தன்னார்வ குழுவுடன் இணைந்து கழிவறையை சுத்தம் செய்தார் பாஜக தலைவர் அண்ணாமலை
- 14:38 (IST) 07 Oct 2021பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பு ஆகியோருக்கு பாஜகவில் புதிய பதவிகள்
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செயற்குழுவுக்கான சிறப்பு அழைப்பாளர்களாக குஷ்பு, H. ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 14:22 (IST) 07 Oct 2021சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - கே.எஸ். அழகிரி
ராஜீவ் காந்தி, சோனியாவை இழிவுப்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர் குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் சீமான் பேசுகிறார் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கே.எஸ். அழகிரி பேச்சு
- 14:08 (IST) 07 Oct 2021அடுத்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் முழுமையாக தடை
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்படும். அரசு விதிமுறைகளை மீறி இதுவரை பிளாஸ்டிக் தயாரித்த 3 ஆயிரம் தொழிற்சாலைகளை மூடப்பட்டுள்ளன என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
- 13:38 (IST) 07 Oct 2021பொன் ராதாகிருஷ்ணன் நியமனம்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 13:36 (IST) 07 Oct 2021பொன் ராதாகிருஷ்ணன் நியமனம்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 13:17 (IST) 07 Oct 2021தலைவர்கள் சிலையை 3 மாதத்தில் அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலைகள், பொது இடங்களில் இருக்கும் சிலைகளை பாரமரிக்க தலைவர்கள் பூங்கா உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
- 12:44 (IST) 07 Oct 2021லக்கிம்பூர் வன்முறை: அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உத்தரவு
லக்கிம்பூர் விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன? யார் யாரெல்லாம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ? போன்ற முழு விவரம் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12:21 (IST) 07 Oct 2021மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 2 கோடிக்கான காசோலையை வழங்கிய முதலமைச்சர்
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கினார். அந்த வகையில், பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூபாய் 2 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
- 12:19 (IST) 07 Oct 2021மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 2 கோடிக்கான காசோலையை வழங்கிய முதலமைச்சர்
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 15 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கினார். அந்த வகையில், பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூபாய் 2 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
- 11:57 (IST) 07 Oct 2021கோயில்களுக்கு அனுமதி - தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
கோயில்களுக்கு செல்ல வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, பாரிமுனையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- 11:57 (IST) 07 Oct 2021கோயில்களுக்கு அனுமதி - தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
கோயில்களுக்கு செல்ல வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, பாரிமுனையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- 11:45 (IST) 07 Oct 2021ஆயுதபூஜை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வரும் அக்டோபர் 12,13 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
- 11:34 (IST) 07 Oct 2021சென்னையில் 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நடைபெறும். அதனால் சென்னையில் வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 பகுதிகளில் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11:16 (IST) 07 Oct 2021டிஜிட்டல் முறையில் எக்ஸ்ரே முடிவுகள்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகள் டிஜிட்டல் முறையில் தான் வழங்கப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
- 10:47 (IST) 07 Oct 2021வரும் 16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் 16-ம் தேதி சென்று அவருடைய உடன்பிறவா சகோதரியான சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார்.
- 10:46 (IST) 07 Oct 2021தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை
தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.
- 10:26 (IST) 07 Oct 2021தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் ,இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், வரும் 10-ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 10:06 (IST) 07 Oct 2021கங்காதரேசுவரர் கோயிலில் அமைச்சர் ஆய்வு
சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- 10:05 (IST) 07 Oct 2021பாஜக எம்.பி வருண் காந்தி வலியுறுத்தல்
“போராட்டக்காரர்களை கொலை செய்வதன் மூலம் அமைதிப்படுத்திவிட முடியாது. சிந்தப்பட்ட அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு நியாயமும் நீதியும் வழங்கப்பட வேண்டும்" என்று பாஜக எம்.பி வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
- 10:04 (IST) 07 Oct 2021கூடங்குளம் அணுக்கழிவுகள்: பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்
அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அணுக்கழிவுகள் ரஷ்யா அனுப்பப்படும் என்று எடுக்கப்பட்ட முடிவை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- 09:57 (IST) 07 Oct 2021நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த யோகா மாஸ்டர்
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் யோகராஜ் என்கின்ற பூவேந்திரன் யோகா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் பயின்ற நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களிடம் 'பாட்னர் யோகா' என்ற பெயரில் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் யோகா மாஸ்டர் யோகராஜை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 08:49 (IST) 07 Oct 202113-வது நாளாக புலி தேடும் பணி
மசினகுடியில் T23 புலியை தேடும் பணி 13-வது நாளாக இன்று தொடர்கிறது. நான்கு இடங்களில் பரன்கள் அமைத்து புலியை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புலி வேறு பகுதிக்கு சென்றுள்ளதா என கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.