தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று இரண்டாவது வாரமாக முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதையடுத்து இன்று காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள், ஜவுளி-நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் முற்றிலும் இயங்காது. உணவகங்களில் பார்சல் சேவை செயல்படும். குறைந்த எண்ணிக்கையிலான மின்சார ரயில்கள் மட்டும் ஓடும்.
அமெரிக்காவில் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் 3.24 லட்சம், இந்தியாவில் 2.68 லட்சம், இத்தாலியில் 1.80 லட்சம், ஸ்பெயினில் 1.79 லட்சம் மற்றும் அர்ஜென்டினாவில் 96 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலகளவில் மேலும் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 32.66 கோடி ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 26.63 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 55.53 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் 73-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:11 (IST) 16 Jan 2022திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த துரை சந்திரசேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 19:28 (IST) 16 Jan 2022சென்னையில் ஒரே நாளில் 8,987 பேருக்கு கொரோனா தொற்று - 10 பேர் உயிரிழப்பு
சென்னையில் ஒரே நாளில் 8,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 10 பேர் உயிரிழந்தனர். நேற்று 8,978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 8,987 ஆக உயர்ந்துள்ளது.
- 17:44 (IST) 16 Jan 2022கிண்டி சிறுவர் பூங்கா மூடல்
கொரோனா பரவல் அதிகரிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா ஜனவரி 17ம் தேதி முதல் மூடப்படுகிறது.
- 16:21 (IST) 16 Jan 2022தடுப்பூசி திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு; தபால் தலை வெளியீடு
தடுப்பூசி திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து இந்த சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது
आज #1YearOfVaccineDrive के अवसर पर PM @NarendraModi जी के 'आत्मनिर्भर भारत' के सपने को साकार करते हुए, ICMR और भारत बायोटेक ने मिलकर जो स्वदेशी कोवैक्सीन विकसित की है, उस पर डाक टिकट जारी किया गया है।
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 16, 2022
मैं सभी वैज्ञानिकों को इस अवसर पर हार्दिक बधाई व धन्यवाद देता हूं। pic.twitter.com/3SKE2wvUqE - 16:19 (IST) 16 Jan 2022தடுப்பூசி திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு; தபால் தலை வெளியீடு
தடுப்பூசி திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து இந்த சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது
आज #1YearOfVaccineDrive के अवसर पर PM @NarendraModi जी के 'आत्मनिर्भर भारत' के सपने को साकार करते हुए, ICMR और भारत बायोटेक ने मिलकर जो स्वदेशी कोवैक्सीन विकसित की है, उस पर डाक टिकट जारी किया गया है।
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 16, 2022
मैं सभी वैज्ञानिकों को इस अवसर पर हार्दिक बधाई व धन्यवाद देता हूं। pic.twitter.com/3SKE2wvUqE - 14:43 (IST) 16 Jan 2022நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மம்முட்டி நடிப்பில் உருவாகிவரும் 'சிபிஐ 5' படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
- 14:13 (IST) 16 Jan 2022ஜனவரி 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 22ஆம் தேதி 19வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
- 13:43 (IST) 16 Jan 2022சென்னையில் 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் - மாநகராட்சி
சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 7 மண்டலங்களில் 535 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
- 13:40 (IST) 16 Jan 202210,11,12ம் மாணவர்களுக்கு ஜனவரி 31., வரை விடுமுறை
கொரோனா பரவல் காரணமாக 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12:10 (IST) 16 Jan 2022முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ3.44 கோடி அபராதம் வசூல்
தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து ரூ3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்ற 1.64 லட்சம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
- 11:55 (IST) 16 Jan 2022ஜன.19., முதல் 10-12க்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள்
ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
- 11:43 (IST) 16 Jan 2022ஓரே ஆண்டில் 156 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை!
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதுவரை 156 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
- 11:25 (IST) 16 Jan 2022புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா... 1,160 பேர் பாதிப்பு
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- 10:58 (IST) 16 Jan 2022எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளது!
- 10:11 (IST) 16 Jan 2022கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு 314 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.