Tamil News Highlights: மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

Tamil News Live Updates- 26 March 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Live Updates- 26 March 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாநிலங்களவை தேர்தல் திடீர் ரத்து ஏன்?

Tamil News Live

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஐ.பி.எல் இன்றைய போட்டி 

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில், இன்று சென்னை- குஜராத் அணிகள் பலப்பரீட்சை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Mar 27, 2024 00:00 IST

    "ராதிகாவிற்கு மட்டுமல்ல விருதுநகர் மக்கள் எல்லோருக்கும் நான் மகன்தான்" : விஜய பிரபாகரன்

    நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் விருநகர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தன்னை எதிர்த்து போட்டியிடம் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் எனக்கு மகன் மாதிரி என்று கூறியிருந்த நிலையில், "ராதிகாவிற்கு மட்டுமல்ல விருதுநகர் மக்கள் எல்லோருக்கும் நான் மகன்தான்" விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.



  • Mar 26, 2024 21:46 IST

    மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

    மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.



  • Mar 26, 2024 21:46 IST

    மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

    மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.



  • Mar 26, 2024 21:37 IST

    நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் உறுதி

    நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தங்களுக்கு படகு அல்லது தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த நிலையில், தற்போது அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சிக்கு மைக் சின்னம் உறுதியாகியுள்ளது.



  • Mar 26, 2024 21:01 IST

    தூத்துக்குடி மக்கள் அவமதிப்பு; மு.க. ஸ்டாலின்

    தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது நீங்கள் கனிமொழியை அல்ல; தூத்துக்குடி மக்களை அவமதித்துள்ளீர்கள் என மு.க. ஸ்டாலின் கூறினார்.



  • Mar 26, 2024 20:59 IST

    பக்கெட் சின்னம் கோரும் ஓ.பி.எஸ்; இரட்டை இலையை முடக்க கோரிக்கை

    இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்; எனக்கு பக்கெட் சின்னம் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • Mar 26, 2024 20:01 IST

    மோடியை விமர்சிக்காத பழனிசாமி: மு.க. ஸ்டாலின்


    “மோடியை பற்றி பாசாங்குக்கு கூட 10 சொற்கள் பேசாத பழனிசாமிதான், தமிழ்நாட்டைக் காப்பாற்றப் போறாராம்” என மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.



  • Mar 26, 2024 18:46 IST

    ஜாபர் சாதிக் குறித்த கேள்விகளுக்கு தற்போது வரை ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை - இ.பி.எஸ் விமர்சனம்

    தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “தேர்தல் பத்திர மூலமாகவே ரூ. 654 கோடி என்றால் ஊழல் மூலம் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள். ஊழல் செய்த பணத்தை முதலீடு செய்ய வெளிநாடு செல்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். ஜாபர் சாதிக் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கு தற்போது வரை ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை. மூன்று வருடங்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க 654 கோடி நீதி பெற்றுள்ளது. பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறுகிறார் ஸ்டாலின். ஆனால், உண்மையில் தி.மு.க-தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது” என்று கடுமையாகச் சாடினார்.



  • Mar 26, 2024 18:33 IST

    தி.மு.க-தான் பா.ஜ.க-வுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறது - இ.பி.எஸ் காட்டம்

    அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி, மோடியும் ஸ்டாலினும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைக் காட்டி “தி.மு.க-தான் பா.ஜ.க-வுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறது” என்று கூறினார்.



  • Mar 26, 2024 17:52 IST

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்று 17,633 பேர் தேர்வெழுத வரவில்லை

    தமிழ்நாட்டில் இன்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 17,633 பேர் தேர்வு எழுதவரவில்லை.



  • Mar 26, 2024 17:47 IST

    இரட்டை இலை சின்னத்தை முடக்கி, எனக்கு பக்கெட் சின்னம் கொடுங்கள் - ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் மனு

    முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அப்படி முடக்கும் பட்சத்தில், ராமநாதபுரத்தில் தனக்கு பக்கெட் சின்னம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



  • Mar 26, 2024 17:31 IST

    அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் - அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வலியுறுத்தல்

    அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்: “எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது; தவறான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும்; 39 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றால் நான் உட்பட என்னுடன் இருக்கும் 10 பேர் அரசியலை விட்டு விலகுவோம்” என்று தெரிவித்துள்ளார்.



  • Mar 26, 2024 16:42 IST

    வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு: வேட்புமனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் வேட்பாளர் 

    தஞ்சாவூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்



  • Mar 26, 2024 16:39 IST

    நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்

    நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார் 



  • Mar 26, 2024 16:14 IST

    ம.தி.மு.க பம்பரம் சின்னம் வழக்கு - தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கெடு 

    ம.தி.மு.க -வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 



  • Mar 26, 2024 16:01 IST

    மாண்டியா தொகுதியில் குமாரசாமி போட்டி

    கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். 



  • Mar 26, 2024 15:51 IST

    புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு வரும் 28 அன்று 505 பேருந்துகளும், 29 அன்று 300 பேருந்துகளும், 30 அன்று 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. 

    கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Mar 26, 2024 15:39 IST

    ஒரே கட்டிடத்தில்  வரையப்பட்ட அனைத்து கட்சியின் சின்னங்கள் 

    ஆம்பூர் அருகேயுள்ள  கரும்பூரில் அனைத்து கட்சியினருக்கும் சாதகமாக கட்சியின் சின்னங்களை ஒரே கட்டிடத்தில்  வரையப்பட்டுள்ள நிகழ்வு,  அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 



  • Mar 26, 2024 15:00 IST

    இமாச்சலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் சீட் வழங்கிய பா.ஜ.க

    இமாச்சல பிரதேசத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜ.க சீட் வழங்கியது



  • Mar 26, 2024 14:39 IST

    மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை விரட்டிய மாணவர்கள்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மது அருந்திவிட்டு போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரை காலணி, கற்களால் தாக்கி மாணவர்கள் விரட்டி அடித்தனர் 



  • Mar 26, 2024 14:23 IST

    விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

    விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்



  • Mar 26, 2024 14:09 IST

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஒரு டிக்கெட் விலை ரூ.55,000

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி அணி விளையாடும் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை ரூ.55,000 வரை விற்பனையாகியுள்ளது



  • Mar 26, 2024 13:46 IST

    கொடநாடு வழக்கு; சந்தோஷ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 8வது குற்றவாளி சந்தோஷ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்



  • Mar 26, 2024 13:33 IST

    அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் நீரில் மூழ்கியதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Mar 26, 2024 13:22 IST

    ஆளுக்கு தகுந்தாற் போல் இ.பி.எஸ் பேசி வருகிறார், எங்களால் அப்படி பேச முடியாது - உதயநிதி

    ஆளுக்கு தகுந்தாற் போல் ஈபிஎஸ் பேசி வருகிறார், எங்களால் அப்படி பேச முடியாது. ஜூன் 3ல் கலைஞரின் பிறந்தநாள், ஜூன் 4ல் 40க்கு 40 வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.



  • Mar 26, 2024 12:47 IST

    பல்லடத்தில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம்

    மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 400 எம்.பி.க்களை பெற வேண்டும்

    400 எம்.பி.க்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம்

    "கட்சிகளுடன் சண்டையிட போட்டியிடவில்லை"அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை, மாற்றத்திற்காக போட்டியிடுகிறேன்

    3வது முறையாக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் குழாய் மூலம் கேஸ் விநியோகம் செய்யப்படும்

    - அண்ணாமலை



  • Mar 26, 2024 12:33 IST

    மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை

    பிரதமர் நரேந்தி மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை;

    பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது;

    தமிழ்நாட்டில் பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வெறும் 2.4 சதவீத வீடுகள் தான் கட்டிக் கொடுத்துள்ளோம்;

    தமிழ்நாட்டில் பாஜக எம்.பி.க்கள் இல்லாதது தான் இதற்கு காரணம்

    - திருப்பூர் பல்லடத்தில் பாஜக மாநில தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பேச்சு



  • Mar 26, 2024 12:32 IST

    அண்ணாமலை பேச்சு

    கோவையில் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கிவிட்டது

    வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சி பாஜக என தெரியும்;

    மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வருவார் என தெரிந்து நடக்கும் தேர்தல்

    - திருப்பூர் பல்லடத்தில் பாஜக மாநில தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பேச்சு



  • Mar 26, 2024 12:23 IST

    தூத்துக்குடியில் கனிமொழி வேட்பு மனுத்தாக்கல்!



  • Mar 26, 2024 12:06 IST

    பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வைகோ தொடர்ந்த வழக்கு இன்று மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு

    பம்பரம் சின்னம் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் பட்டியலில் உள்ளதா, இல்லை  பொதுசின்னங்கள் பட்டியலில் உள்ளதா? என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி;

    ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட்டால்  மட்டுமே கட்சிகள் கேட்கும்  சின்னங்களை ஒதுக்க முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்;

    அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே ஒதுக்குவார் எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம்

    இன்று மாலைக்குள் சின்னங்கள் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு;

    மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி மதிமுக பொதுசெயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு



  • Mar 26, 2024 11:43 IST

    ஈரோடு அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி

    வங்கி கணக்கில் சுமார்  ரூ.7 கோடி இருப்பதாகவும் வேட்பு மனுவில் ஆற்றல் அசோக் குமார் தகவல்

    அசையும் சொத்து - ரூ.526.53 கோடி, அசையா சொத்து - ரூ.56.95 கோடி

    ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது

    ஆற்றல் அசோக் குமாரின் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி

    இருவர் பெயரிலும், வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக வேட்பு மனுவில் தகவல்



  • Mar 26, 2024 11:22 IST

    பினராயி விஜயன் கேள்வி

    பாரத் மாதா கி ஜே' கோஷத்தை அஜிமுல்லாகான் என்ற இஸ்லாமியர் உருவாக்கினார், இஸ்லாமியர் உருவாக்கியதால் இந்த கோஷத்தை சங்பரிவார் அமைப்புகள் கைவிடுமா? "

    -கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி



  • Mar 26, 2024 11:13 IST

    தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

    Credit: Sun News Twitter 



  • Mar 26, 2024 10:41 IST

    அதிமுக, பாஜக மாவட்டச் செயலாளர்கள் மீது வழக்கு

    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நீலகிரி அதிமுக மற்றும் பாஜக மாவட்டச் செயலாளர்கள் மீது வழக்குப் பதிவு. 

    அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் மீது 4 வழக்குகளும், பாஜக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இரு கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு. மேலும் தேர்தல் பரப்புரை ஊர்வலம் செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறி காவல்துறையினரின் தடுப்பை மீறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை.



  • Mar 26, 2024 10:23 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்தது

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,200க்கும், ஒரு சவரன் ரூ.49,600க்கும் விற்பனை



  • Mar 26, 2024 10:09 IST

    மக்களவை தேர்தல்: சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம்

    மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதால், புதுச்சேரி அரசின் தொழில் மேம்பாட்டு அபிவிருத்திக் கழக சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம்



  • Mar 26, 2024 09:42 IST

    பண்ணாரி கோயிலில் தீமிதித்து அமுதா ஐ.ஏ.எஸ் நேர்த்திக்கடன்

    பண்ணாரி அம்மன் கோயிலில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார் தமிழக உள்துறை செயலாளர் அமுதா,

    ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

    முன்னதாக, தீக்குழி முன் சிறப்பு பூஜை செய்து பூசாரி பார்த்திபன் பய பக்தியுடன் குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து பரம்பரை அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் குண்டம் இறங்கினர். பின்னர் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 



  • Mar 26, 2024 09:41 IST

    மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய ஸ்டாலின்

    தூத்துக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதலமைச்சர் ஸ்டாலின். தூத்துக்குடி லையன்ஸ் ஸ்டோன் பகுதியில் நடந்து வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றார்.

    வாக்கு சேகரிப்பின்-போது லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்கு சென்று முதல்வர் வாக்கு சேகரித்து அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேனிநீர் அருந்தினார்.



  • Mar 26, 2024 09:31 IST

    ஸ்டாலின், இ.பி.எஸ் ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம்

    தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம். மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் எம்.பி கனிமொழியை ஆதரித்து ஸ்டாலினும், மாலை 4 மணிக்கு சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரச்சாரம்.



  • Mar 26, 2024 08:54 IST

    தேர்தல் பரப்புரை தொடங்கும் அண்ணாமலை

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் 29-ம் தேதியன்று, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மற்றும் சென்னை தொகுதிகளில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

    மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள அவர், மார்ச் 31-ம் தேதி முதல், தான் போட்டியிடும் கோவை தொகுதியில் பரப்புரை செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 26, 2024 08:50 IST

    10-ம் வகுப்பு தேர்வு- ஸ்டாலின் வாழ்த்து

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள் - முதல்வர் ஸ்டாலின்



  • Mar 26, 2024 08:34 IST

    இன்று முதற்கட்ட தேர்தல் பரப்புரை தொடங்கும் அண்ணாமலை

    சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார் அண்ணாமலை



  • Mar 26, 2024 08:33 IST

    கனிமொழிக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

    தூத்துக்குடியில் வாக்கு சேகரித்த முதல்வர். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின். காமராஜர் சந்தை பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களிடம் முதல்வர் வாக்கு சேகரிப்பு 



  • Mar 26, 2024 08:32 IST

    10ம் வகுப்பு தேர்வு: விஜய் வாழ்த்து

    10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து



  • Mar 26, 2024 07:53 IST

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம் 

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம் 

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகின்றன. இன்று தொடங்கும் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 9.10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: