Tamilnadu: பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் இன்றைய போட்டி
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில், இன்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Mar 25, 2024 21:42 ISTபா.ஜ.க.,வை ஆதரிக்கவே அ.தி.மு.க வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார் இ.பி.எஸ் - மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க.,வை ஆதரிக்கவே அ.தி.மு.க வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என நாங்குநேரி பரப்புரை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்
-
Mar 25, 2024 21:02 ISTராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஓ.பி.எஸ். போட்டியிடும் நிலையில், மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்
-
Mar 25, 2024 20:45 ISTதங்க நகை தயாரிப்பாளர் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு
பறக்கும் படை தங்க நகைகளை பிடிப்பது ஏன்? தொழில் செய்ய அச்சமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்தல் முடியும் வரை நகைக்கடைகளை மூடும் நிலை ஏற்படும் என கோவை தங்க நகை தயாரிப்பாளர் சங்கத்தினர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளனர்
-
Mar 25, 2024 20:19 ISTபுயல், வெள்ள பாதிப்பின் போது வராத பிரதமர், இப்போது வருவது ஏன்? - ஸ்டாலின்
பா.ஜ.க வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள். புயல், வெள்ள பாதிப்பின் போது வராத பிரதமர், தற்போது வருவது ஏன்? வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை கூட வழங்கவில்லை என நெல்லை நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Mar 25, 2024 20:00 ISTமத்திய அரசுக்கு எதிராக வழக்கு; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை கொடுக்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளோம் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Mar 25, 2024 19:59 ISTஆட்சி மாற்றம் வர வேண்டும்; தயாநிதி மாறன்
“இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என ஆழ்வார்பேட்டையில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேசினார்.
-
Mar 25, 2024 19:00 ISTநாங்குநேரியில் மு.க ஸ்டாலின் பரப்புரை
திருநெல்வேலி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பொதுக்கூட்ட பரப்புரையில் ஈடுபட்டார். -
Mar 25, 2024 18:58 IST10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவ- மாணவியருக்கு விஜய் வாழ்த்து
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். -
Mar 25, 2024 18:37 ISTமகளிர் உரிமைத் தொகை கொடுத்துள்ளோம்; மோடி என்ன செய்தார்: உதயநிதி
காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, “10 வருடங்களாக ஆட்சி செய்த பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்?;
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்;
மக்களவைத் தேர்தலுக்குப் பின் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்” என்றார். -
Mar 25, 2024 17:59 ISTபடகு அல்லது பாய் மரப்படகு சின்னம் கேட்கும் சீமான்
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி முறையிட்டுள்ளது. படகு அல்லது பாய் மரப்படகு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் இன்றைக்குள் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.
-
Mar 25, 2024 17:55 ISTஎடப்பாடி செய்த துரோகத்தை தட்டி கேட்டதற்குதான் என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள் - ஓ.பி.எஸ்
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த பின் அ.தி.மு.க தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி: “எடப்பாடி செய்த துரோகத்தை தட்டி கேட்டதற்குதான் பொதுக்குழுவில் வைத்து என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள்” என்று கூறினார்.
-
Mar 25, 2024 17:50 ISTவேங்கை வயல் வழக்கு: 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கில், 3 பேர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
Mar 25, 2024 17:47 ISTஐ.பி.எல் இறுதிப்போட்டி மே 26-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு
நடப்பு ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணை விவரம் வெளியிடப்பட்டுள்ளது ஏற்கெனவே ஏப்ரல் 7-ம் தேதி வரை அட்டவணை வெளியாகி இருந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மே 26-ம் தேதி ஐ.பி.எல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 25, 2024 17:20 ISTவிளவங்கோடு இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை அறிவிப்பு
விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது
-
Mar 25, 2024 16:12 ISTநெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிப்பு
நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
Mar 25, 2024 15:54 ISTஅதிகாரிகளை மிரட்டினார்கள் - ஜெயக்குமார்
"தி.மு.க வேட்பாளரின் டோக்கன் எண் 8, எங்கள் டோக்கன் எண் 7. மரபை பின்பற்றாமல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க-வினர் வந்து வாக்குவாதம் செய்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய பிறகும், தி.மு.க-வினர் செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்." என்று கூறிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளை தி.மு.க-வினர் மிரட்டியதாக குற்றச்சாட்டினார்.
-
Mar 25, 2024 15:17 ISTசௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்
-
Mar 25, 2024 15:17 ISTசௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார்
-
Mar 25, 2024 14:30 ISTஅதிமுக ஜி.வி.கஜேந்திரன்வேட்பு மனு தாக்கல்
ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் -
Mar 25, 2024 14:30 ISTநாம் தமிழர் வித்யாராணி வேட்பு மனு தாக்கல்
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்
-
Mar 25, 2024 14:28 ISTசு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல்
தி.மு.க கூட்டணியில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்
-
Mar 25, 2024 13:51 ISTதமிழிசை வேட்பு மனு தாக்கல்
தென் சென்னை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்பு மனு தாக்கல்
-
Mar 25, 2024 13:30 ISTஅ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல்
கோவை மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல்
-
Mar 25, 2024 13:26 ISTவிஜய பிரபாகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல்
அதிமுக கூட்டணியில் விருதுநகர் மக்களைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
-
Mar 25, 2024 13:25 ISTராதிகா சரத்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல்
விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
-
Mar 25, 2024 13:24 ISTபொன் ராதாகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன்: வேட்புமனு தாக்கல்
கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் . தென் சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனு தாக்கல்
-
Mar 25, 2024 12:46 ISTராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்
-
Mar 25, 2024 12:33 IST10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வைத்து வன்னிய மக்களை ஏமாற்றியது பாமக,அதிமுக கட்சிகள்” - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
“தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் குடும்பமே வந்தாலும் பாமக வெற்றி பெறாது; வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வைத்து அதிமுக,பாமக கட்சிகள் வெற்றி பெற்றனர்; வரும் மக்களவைத் தேர்தலில் அது நடக்காது; 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வைத்து வன்னிய மக்களை ஏமாற்றியது பாமக,அதிமுக கட்சிகள்” - தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி
-
Mar 25, 2024 12:33 IST10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வைத்து வன்னிய மக்களை ஏமாற்றியது பாமக,அதிமுக கட்சிகள்” - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
“தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் குடும்பமே வந்தாலும் பாமக வெற்றி பெறாது; வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வைத்து அதிமுக,பாமக கட்சிகள் வெற்றி பெற்றனர்; வரும் மக்களவைத் தேர்தலில் அது நடக்காது; 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வைத்து வன்னிய மக்களை ஏமாற்றியது பாமக,அதிமுக கட்சிகள்” - தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி
-
Mar 25, 2024 12:22 ISTடி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல்
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் ராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்த டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி நாள்
-
Mar 25, 2024 12:21 ISTஅமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்.
-
Mar 25, 2024 12:09 ISTவிழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மனுதாக்கல்
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்
-
Mar 25, 2024 12:07 ISTகோபிநாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகு தி.மு.க கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
-
Mar 25, 2024 12:00 ISTஇரட்டை இலை, அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு
இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு; ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு; ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு
-
Mar 25, 2024 11:58 ISTபம்பரம் சின்னம் கோரி மதிமுக தொடர்ந்த மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட கோரி வைகோ வழக்கு
பம்பரம் சின்னம் கோரி மதிமுக தொடர்ந்த மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட கோரி வைகோ வழக்கு அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்த நிலையில் நாளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ஒப்புதல்
-
Mar 25, 2024 11:37 ISTகாங்கிரஸ் கட்சிக்கு பணம் ஒரு பொருட்டு இல்லை
காங்கிரஸ் கட்சியின் நிதி ஆதாரத்தை முடிக்கினால் காங்கிரஸ் முடங்கிவிடும் என பிரதமர் நரேந்திர மோடி பகல் கனவு காண்கிறார்; காங்கிரஸ் கட்சிக்கு பணம் ஒரு பொருட்டு இல்லை, மக்களை நம்பிதான் நாங்கள் நிற்கிறோம்” - செல்வப்பெருந்தகை
-
Mar 25, 2024 11:17 ISTகிருஷ்ணகிரி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு
கிருஷ்ணகிரி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு. கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை 20 நாட்களில் சரிபார்த்து எண்ணி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு மறு எண்ணிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கு .
-
Mar 25, 2024 10:54 ISTமீதமுள்ள தொகுதிகளுக்கு காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார்கள்- செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
-
Mar 25, 2024 10:51 ISTவெள்ளியங்கிரி மலை கோயில்: இதுவரை 5 பேர் பலி
கோவை வெள்ளியங்கிரி மலையேற கடந்த மாதம் 12ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
Mar 25, 2024 10:32 ISTவிநாயகர் கோயிலில் ஓ.பி.எஸ் சாமி தரிசனம்
பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
Mar 25, 2024 10:27 IST10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது;
தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் 9.38 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்
-
Mar 25, 2024 10:17 ISTசி.வி சண்முகம் பிரச்சாரம்
விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்கிய ராஜை ஆதரித்து முன்னாள் அமைச்சர் CV சண்முகம் பிரசாரம்
-
Mar 25, 2024 10:11 ISTஸ்டாலின் உடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்திப்பு
மக்களவைத் தேர்தல் 2024: திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்
-
Mar 25, 2024 10:02 ISTபட்டினப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்த தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்.
-
Mar 25, 2024 09:44 ISTசௌகார் பேட்டையில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்
களைகட்டிய ஹோலி கொண்டாட்டம். வண்ணமயமாக காட்சியளிக்கும் சௌகார் பேட்டை. ஹோலி பண்டிகையையொட்டி சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் உற்சாகத்துடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள்.
-
Mar 25, 2024 09:09 ISTடிடிவி தினகரனுக்கு ஆதரவாக ரவீந்திரநாத் பரப்புரை
பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தேனி எம்.பி. ரவீந்திரநாத் பரப்புரை
-
Mar 25, 2024 08:28 ISTதிமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்
திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகள் மும்முரம்.
-
Mar 25, 2024 08:16 ISTராகுலை எதிர்த்து பா.ஜ.கவில் சுரேந்திரன் போட்டி
கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக வேட்பாளராக கே. சுரேந்திரன் போட்டி
-
Mar 25, 2024 08:16 ISTராகுலை எதிர்த்து பா.ஜ.கவில் சுரேந்திரன் போட்டி
கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக வேட்பாளராக கே. சுரேந்திரன் போட்டி
-
Mar 25, 2024 08:14 ISTஅண்ணாமலையார்- உண்ணாமுலை அம்மன் திருக்கல்யாணம்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமாக பக்தர்கள் பங்கேற்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.