Advertisment

Tamil News Highlights: மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் இன்று மாலை உடன் பிரச்சாரம் ஓய்வு

Tamil News Updates -16-04-2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sta campai.jpg

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 32-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்.  3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2808 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியின் நீரிருப்பு 216 மில்லியன் கன அடி. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 406 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Apr 16, 2024 21:07 IST
    தமிழ்நாட்டில் பா.ஜ.க ஜெயிக்கும் என மோடியை யாரோ ஏமாற்றியுள்ளனர் - ஸ்டாலின்

    தி.மு.க.,வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்



  • Apr 16, 2024 20:26 IST
    கணவனை இழந்தவர்கள் செங்கோல் பெறக் கூடாது என ஆகம விதி உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

    “திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது.
    இந்தக் காலத்தில் இதுபோல் கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கது அல்ல” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.



  • Apr 16, 2024 19:29 IST
    விக்ரம் படத்தின் அப்டேட் வெளியீடு 

    நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 'Chiyaan 62' படத்தின் அப்டேட் வெளியாகிறது.



  • Apr 16, 2024 18:47 IST
    பா.ஜ.க-வின் 100-க்கு 100 பொய்யான கேள்விகள் - தி.மு.க பதிலடி

    பா.ஜ.க எழுப்பிய 100 கேள்விகளுக்கு பா.ஜ.க-வின் 100 கேள்விகளும் பித்தலாட்டம் என தி.மு.க பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்  “பா.ஜ.க நூற்றுக்கு 100 பொய்யான கேள்விகளை தொடுத்து மாயாஜாலம் காட்டுகிறது; 10 ஆண்டுகளாக வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என 100 முறை கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் 43 சதுர மற்ற 462 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன.” என்று தெரிவித்துள்ளது.



  • Apr 16, 2024 18:22 IST
    சத்தீஸ்கர் கன்கர் மாவட்டத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

    சத்தீஸ்கர் மாநிலம், கன்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற மோதலில் 18 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் மூன்று பாதுகாப்பு படையினர் சாயம் அடைந்தனர்.



  • Apr 16, 2024 17:41 IST
    அ.தி.மு.க கூட்டணியில் 2-வது இடத்தில் இருந்த பா.ம.க... பா.ஜ.க கூட்டணியில் 5-வது இடம் - இ.பி.எஸ் விமர்சனம்

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க தருமபுரி வேட்பாளர் அசோகனை ஆதரித்து  சேலம் மேச்சேரியில் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசியதாவது: “அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் வீண் என்று சொல்கிறார் அன்புமணி; அ.தி.மு.க ஓட்டு போட்டுதான் நீங்கள் எம்.பி ஆணார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோது 2-வது இடம்பிடித்த அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் 5-வது இடத்தில் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குலசேகரன் கமிட்டி அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கும் அளவுக்கு பா.ம.க-வின் நிலை போய்விட்டது” என்று கூறினார்.



  • Apr 16, 2024 17:19 IST
    வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

    நாளை மாலை 6 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது



  • Apr 16, 2024 17:05 IST
    திருவண்ணாமலையில் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ; பா.ஜ.க-வினர் வரவேற்பு

    திருவண்ணாமலையில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ நடத்தி வருகிறார். திருவண்ணாமலையில் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ காமராஜர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை நடைபெறுகிறது. பா.ஜ.க-வினர் திரளாக வந்து வரவேற்பு அளித்தனர்.



  • Apr 16, 2024 14:52 IST
    பலாப்பழம் பழுக்காமல் அழுகிவிடும் - செல்லூர் ராஜு பேச்சு 

    "பா.ஜ.க விளம்பரம் படத்தின் டிரைலர் போன்றது. ஃபிளாப் ஆகிவிடும். சிங்கம், சிறுத்தை இடையே அண்ணாமலை மாட்டிக் கொண்டார். இடத்திற்கு ஏற்றவாறு பிரதமர் மோடி பேச எழுதி கொடுக்கிறார்கள். எப்படி இருந்த ஓபிஎஸ் இன்று பலாப்பழத்துடன் நிற்கிறார். பலாப்பழம் பழுக்காமல் அழுகிவிடும்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

     



  • Apr 16, 2024 14:50 IST
    ஜாபர் சாதிக்கின் காவல் நீட்டிப்பு

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் 9ஆம் தேதி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரின் நீதிமன்ற காவலும் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணையும் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    டெல்லி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் ஜாபர் சாதிக் உடன் அவரது சகோதரர் சலீம் சந்தித்தார் என்பது குறிப்பித்தக்கது. 



  • Apr 16, 2024 14:12 IST
    பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு: வரும் 26 ஆம் தேதி தீர்ப்பு

    மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கில் வரும் 26ஆம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

    பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை. இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. 

    பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாகா குழு விசாரணை நடத்த முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருக்கிறார்களா என விளக்கமளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Apr 16, 2024 13:38 IST
    "மின்தடை ஏற்படுத்தி பணப்பட்டுவாடா"- அண்ணாமலை குற்றச்சாட்டு

    மின்தடை ஏற்படுத்தி பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்றும், செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தி, பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்றும் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார். 



  • Apr 16, 2024 13:34 IST
     அ.தி.மு.க  - தே.மு.தி.க மீது ராதிகா விமர்சனம் 

    "அ.தி.மு.க கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை" என்றும், "அ.தி.மு.க கூட்டணியால் மக்களுக்கு டீ-கூட வாங்கி தர முடியாது என்றும்" அ.தி.மு.க  - தே.மு.தி.க கூட்டணியை விருதுநகர் பா.ஜ.க வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார் விமர்சித்துள்ளார்.  

     



  • Apr 16, 2024 12:59 IST
    திமுக கூட்டணிக்கு ஆதரவு

    மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு முனைவர்கள் சங்கம் (TNEDA) ஆதரவு தெரிவித்துள்ளது.



  • Apr 16, 2024 12:49 IST
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி



  • Apr 16, 2024 12:47 IST
    வாக்குப்பதிவு

    மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் வரும் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • Apr 16, 2024 12:43 IST
    பாபா ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

    பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் தரப்பில், பொதுமக்களிடம் மன்னிப்பு கோரி விளம்பரங்கள் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் தொடர்ந்து பொய்யான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என பாபா ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.



  • Apr 16, 2024 12:00 IST
    வழக்குப்பதிவு

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Apr 16, 2024 12:00 IST
    அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வோம்- ராகுல் காந்தி

    அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தையும், நாட்டைக் காக்க வேண்டும் என்று கனவு காணும் துணிச்சலான இளைஞர்களையும் அவமதிக்கும் திட்டமாகும்.  இது இந்திய ராணுவத்தின் திட்டம் அல்ல, நரேந்திர மோடியின் அலுவலகத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் ராணுவத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது.

    I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பழைய நிரந்தர ஆட்சேர்ப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவோம்

    - ராகுல் காந்தி



  • Apr 16, 2024 11:59 IST
    தென்சென்னை- பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

    *பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால்களில் பிரச்சினை

    *மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்

    *தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்

    -அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில் தென்சென்னை-பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு



  • Apr 16, 2024 11:35 IST
    நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை  எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் மகாராஜன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Apr 16, 2024 11:34 IST
    ஜெ.பி.நட்டா வாகனப் பேரணி

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வாகனப் பேரணி மேற்கொண்டு வருகிறார்.



  • Apr 16, 2024 11:34 IST
    மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்தில் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Apr 16, 2024 10:50 IST
    கல்வீச்சு சம்பவம்: துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம்

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்

    ஆந்திர மாநில காவல்துறை அறிவிப்பு



  • Apr 16, 2024 10:47 IST
    2029-ல் உலகத்தின் தலைவராக மோடி இருப்பார்: அண்ணாமலை

    2029-ல் பிரதமர் நரேந்திர மோடி உலகத்தின் தலைவராக உருவெடுப்பார். உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும்;

    பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர எப்போதோ அறிவித்துவிட்டோம்; ஆனால் மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன - திருப்பூரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி



  • Apr 16, 2024 10:02 IST
    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. ஸ்டாலின் பரப்புரை

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் தொகுதி மறுசீரமைப்பு. 

    தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த பாஜக நினைக்கிறது. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.  நாடாளுமன்றத்தில் 888 பேர் அமரும் வகையில் மக்களவை இருக்கைகள் இருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி - முதல்வர் ஸ்டாலின்



  • Apr 16, 2024 09:48 IST
    வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்

    வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்: சவரனுக்கு ரூ.640 உயர்வு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,870க்கு விற்பனை



  • Apr 16, 2024 09:25 IST
    சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை: மேக்ஸ்வெல்

    நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை ஆர்.சி.பி. வீரர் க்ளென் மேக்ஸ்வெல் பேட்டி

    உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால் நடப்பு  ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என ஆர்.சி.பி. வீரர் க்ளென் மேக்ஸ்வெல் பேட்டி. "என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்"- மேக்ஸ்வெல் 



  • Apr 16, 2024 08:56 IST
    ஸ்டாலின் பிரச்சாரம்

    கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு. 



  • Apr 16, 2024 08:55 IST
    சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு: இருவர் கைது

    சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் இருவர் கைது. 
     
    மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் இருவர் கைது. விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இருவர் கைது.  குஜராத்தின் புஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 



  • Apr 16, 2024 08:16 IST
    8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Apr 16, 2024 07:58 IST
    முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மரணம்

    முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார். முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி(73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி



  • Apr 16, 2024 07:56 IST
    தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு 

    தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்துவதற்கு வழங்கிய ஒரு நாள் கூடுதல் அவகாசம் இன்றுடன் நிறைவு. இன்று (ஏப்ரல் 16) மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment