Advertisment

Tamil News Highlights: தபால் வாக்களிக்க இன்று கடைசி நாள்: சத்ய பிரதா சாகு தகவல்

Tamil News Updates-17-04-2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தபால் வாக்கு விவரங்களை வெளியிட்ட விவகாரம் : ஆசிரியை உட்பட 3 பேர் கைது

Tamil News

பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

சென்னையில் 33-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐ.பி.எல் இன்று 

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில்  குஜராத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை. இந்த அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

    • Apr 17, 2024 22:12 IST
      மக்களவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்து

      மக்களவை முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, 24 மணி நேரமும் உழைப்போம். ஒவ்வொரு வாக்காளரின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த, என் ஆயுள் முழுவதும் செயல்படுவேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்



    • Apr 17, 2024 21:05 IST
      தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

      மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது



    • Apr 17, 2024 20:52 IST
      நடிகர் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

      நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

       



    • Apr 17, 2024 20:29 IST
      நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்; அண்ணாமலை

      உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என திட்டவட்டமாக தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



    • Apr 17, 2024 19:06 IST
      பாஜக பிரமுகர் வீட்டில் சோதனை

       

      பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கே.ஆர்.வெங்கடேஷ் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
      திருவள்ளூரில் பாஜக சார்பில் பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்றது.



    • Apr 17, 2024 18:53 IST
      இனி யாரும் பரப்புரை செய்யக்கூடாது - சத்ய பிரதா சாஹூ

      தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ: “தமிழகம் அம்ற்றும் புதுச்சேரியில் இனியாரும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளக்கூடாது; வீடு விடாக சென்றுகூட அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளக்கூடாது; மக்கள் அமைதியாக இருந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்; வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



    • Apr 17, 2024 18:01 IST
      தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

      தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுவந்தனர். தேர்தல் பிரச்சாரம் செய்ய கடைசி நாள் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணி வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாம் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு மேல் யாராவது பிரச்சாரம் செய்தால் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளது.



    • Apr 17, 2024 17:52 IST
      சென்னையில் பா.ஜ.க மாநில நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை

      பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக, சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க மாநில நிர்வாகியின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.



    • Apr 17, 2024 17:49 IST
      இரவில் தனியாக பேய்ப்படம் பார்த்தவர்கள்கூட மோடி பேசப்போகிறார் என்றால் பயப்படுகிறார்கள் - ஸ்டாலின்

      சென்னை பெசண்ட் நகரில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “இரவில் தனியாக பேய்ப்படம் பார்த்தவர்கள்கூட இரவில் மோடி டிவியில் பேசப்போகிறார் என்றால் பயப்படுகின்றனர்” என்று ஸ்டாலின் பிரதமர் மோடியை சாடினார்.



    • Apr 17, 2024 17:39 IST
      பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி-யால் பலர் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்; மோடி அரசு மீது ஸ்டாலின் தாக்கு

      சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றுவரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: “ஏழைகளின் சுருக்குப் பையில் உள்ள பணத்தைக் கூட எப்படி பறிக்கலாம் என்று மோடி அரசு செயல்பட்டுவருகிறது; பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பலர் நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.” என்று பா.ஜ.க-வை சாடினார்.



    • Apr 17, 2024 17:36 IST
      திண்டுக்கல்லில் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து இந்தியா கூட்டணி கட்சியினர் பரப்புரை

      திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-க்கு ஆதரவாக, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி தொண்டர்கள் இறுதிக்கட்ட வாகனப் பரப்புரையில் ஈடுபட்டனர்.



    • Apr 17, 2024 17:33 IST
      ஜனநாயகத்தையும் நாட்டையும் காக்க இந்த தேர்தல்; திருமா வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்

      சிதம்பரம் தொகுதி வி.சி.க வேட்பாளர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டு பேச்சு: “நாட்டை காப்பதற்காக நாம் சந்திக்கும் தேர்தல் இது; நாட்டு நலன்களை முன்னிறுத்தி INDIA கூட்டணியை உருவாக்கியுள்ளோம். நாடாளுமன்ற ஜனநாயகமே தற்போது பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய மாநில உரிமைகளைக் காக்க INDIA கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 



    • Apr 17, 2024 17:20 IST
      பானை சின்னத்தில் வாக்களிக்க  திருமா வேண்டுகோள்

      சிதம்பரம் தொகுதி வி.சி.க வேட்பாளர் திருமாவளவன், “ஜனநாயகத்தையும் நாட்டையும் காக்க இந்த தேர்தல்; பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என வீடியோ வெளியிட்டு வாக்கு சேகரித்தார்.



    • Apr 17, 2024 17:18 IST
      கோவை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

      கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். 



    • Apr 17, 2024 16:28 IST
      பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தடை

      பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து அரசு உத்தரவு. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்



    • Apr 17, 2024 16:27 IST
      தன் மீது பதியப்பட வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் வேட்பாளர் தனலட்சுமி மனு

      2011 தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தன் மீது பதியப்பட வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த தனலெட்சுமி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். 2019 தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 4349 வழக்குகளில், 1733ல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் 8655 வழக்குகள் பதிவாகி, 1414ல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தனலட்சுமியின் வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி புகழேந்தி



    • Apr 17, 2024 16:25 IST
      இந்தியாவில் நம்பர் 1 தொகுதியாக கோவையை கொண்டு வருவேன் : அ.தி.மு.க வேட்பாளர்

      இந்தியாவில் நம்பர் 1 தொகுதியாக கோவையை கொண்டு வருவேன். 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்தனி அலுவலகம் அமைப்பேன். படித்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என கோவை அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.



    • Apr 17, 2024 16:17 IST
      தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த வழக்கு : தேர்தல் ஆணையத்திற்கு புதிய உத்தரவு

      திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கில் "தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்ற உத்தரவு நகலை நாளை தாக்கல் செய்ய வேண்டும்" என தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



    • Apr 17, 2024 15:57 IST
      ஐ.ஜே.கே. கட்சி அலுவலகம் அருகே தனியார் விடுதியில் வருமான வரி சோதனை

      பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம் முசிறியில் ஐ.ஜே.கே. கட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்



    • Apr 17, 2024 15:57 IST
      பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

      தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



    • Apr 17, 2024 15:14 IST
      சிறையில் இருந்து கெஜ்ரிவால் ஆட்சி செய்ய மனு

      டெல்லி திகார் சிறையில் இருந்து டெல்லியை ஆட்சி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருந்து ஆட்சி செய்ய பிரதமருக்கோ, முதல்வருக்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்தவித தடையும் இல்லை என சுட்டிக்காட்டி இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



    • Apr 17, 2024 15:13 IST
      கோவில்களில் நிரந்தர கண்காணிப்புக்குழு எதற்கு? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

      கோயிலில் குழந்தை திருமணங்களை தடுக்க நிரந்தர கண்காணிப்புக்குழு அமைக்கக்கோரி வழக்கறிஞர் சரண்யா தொடர்ந்த வழக்கின் விசாரணையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணங்கள் செய்வது குறித்து புகாரளித்தால், மாவட்ட சமூக நல அதிகாரி நடவடிக்கை எடுப்பார். அதற்காக நிரந்தர கண்காணிப்புக்குழு எதற்கு என  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி  எழுப்பிய நிலையில், வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தார்.



    • Apr 17, 2024 14:42 IST
      சென்னை அண்ணா பல்கலை. பதிவாளர் நியமனம்- உயர் நீதிமன்றத்தில் வழக்கு

      சென்னை அண்ணா பல்கலை. பதிவாளராக பிரகாஷ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சிண்டிகேட் உறுப்பினர் மற்றும் திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் உயர் நீதிமன்றத்தில் வழக்கில், பல்கலை. நிர்வாகம், உயர் கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு

      பிரகாஷை பதிவாளராக நியமிக்க சிண்டிகேட் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கூட்ட முடிவுகளை திருத்தி அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என துணை வேந்தர் மீது மனுவில் குற்றச்சாட்டு



    • Apr 17, 2024 14:26 IST
      44,800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா

      தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். சிறையில் உள்ளவர்கள் சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தபால் வாக்கு அளிக்கலாம்.

      தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்



    • Apr 17, 2024 14:19 IST
      திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

      உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, I.N.D.I.A. கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்

      ஜனநாயகத்தையும், மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 10 ஆண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் ஏப்ரல் 19. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது

      - திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்



    • Apr 17, 2024 14:09 IST
      மு.க. ஸ்டாலின் வீடியோ

      திமுக அரசின் சாதனைகள் அனைத்தும் நாடு முழுக்க எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்துங்கள்என திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.



    • Apr 17, 2024 13:58 IST
      மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள்

      அதிமுக ஆட்சியில்  சென்னை கடற்கரையிலும், தூத்துக்குடியிலும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  இலங்கையால் மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாப்பேன் என வாக்குறுதி அளித்த மோடி எதையும் செய்யவில்லை.

       ஸ்டாலின் ஆட்சியில்  மீனவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

      3 ஆண்டுகளில் 4.69 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு ரூ.258 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

      மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு, திமுக அறிக்கை



    • Apr 17, 2024 13:45 IST
      திருநர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு?

      திருநர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில்  முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

      கணக்கெடுப்பின் அடிப்படையில் திருநர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு;

      திருநர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் தொடர்ந்த வழக்கு ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைப்பு



    • Apr 17, 2024 13:21 IST
      ஐஜேகே நிர்வாகி வீட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்

      திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐஜேகே கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

      பறக்கும் படையினர் வருவதை அறிந்த ஐஜேகே நிர்வாகி வீட்டின் கழிவறையில் பணத்தை பதுக்கியுள்ளார். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



    • Apr 17, 2024 13:20 IST
      மக்களவைத் தேர்தலுக்கான இணையதளம்

      ராம ராஜ்யம் என்ற பெயரில் மக்களவைத் தேர்தலுக்கான இணையதளத்தை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி.



    • Apr 17, 2024 12:56 IST
      முருகனுக்கு பராசக்தி வேல் கொடுத்தது போல் மகனுக்கு வேல் கொடுத்தேன்

      "முருகனுக்கு பராசக்தி வேல் கொடுத்தது போல் மகனுக்கு வேல் கொடுத்தேன்" திருப்பரங்குன்றத்தில் மகனிடம் வேல் கொடுத்து `வென்று வா' என பிரேமலதா விஜயகாந்த் ஆசி.



    • Apr 17, 2024 12:54 IST
      ரூ.10 லட்சம் மதிப்பிலான 7,000 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

      கன்னியாகுமரி: புதுக்கடை அருகே வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 7,000 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 



    • Apr 17, 2024 12:11 IST
      இந்தியா கூட்டணி இந்த முறை மத்தியில் ஆட்சி அமைக்க போகிறது

      இந்தியா கூட்டணி இந்த முறை மத்தியில் ஆட்சி அமைக்க போகிறது; அதற்கான ஆரம்பப் புள்ளியாக கோவை மக்களவைத் தொகுதி இருக்க போகிறது.  கோவையில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்



    • Apr 17, 2024 12:07 IST
      பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மனு

      ரூ.4 கோடி பிடிப்பட்ட விவகாரத்தில் நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மனு. 



    • Apr 17, 2024 11:31 IST
      இந்தியாவின் தலையாயப் பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம்- ராகுல்

      இந்தியாவின் தலையாயப் பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம்; 2-வது பெரிய பிரச்னை பணவீக்கம்; இது போன்ற பிரச்னைகள் குறித்து மக்கள் பேசாமல் இருப்பதற்கு திசை திருப்பல் முயற்சிகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது- ராகுல் 



    • Apr 17, 2024 11:30 IST
      அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

      கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.



    • Apr 17, 2024 11:12 IST
      இந்தியா கூட்டணி அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயல்கின்றன

      பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் அரசியல் சாசனத்தையும், ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயல்கிறது; மறுபுறம் இந்தியா கூட்டணி அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயல்கின்றன; இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல்” - உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில்  ராகுல் காந்தி பேட்டி



    • Apr 17, 2024 10:59 IST
      மோடியின் பக்தி தேசபக்தி அல்ல வேச பக்தி- தமிமுன் அன்சாரி

      'மோடியின் பக்தி தேசபக்தி அல்ல வேச பக்தி'

      தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை 



    • Apr 17, 2024 10:56 IST
      பேட்மிண்டன் விளையாடி வாக்கு சேகரித்த வேலுமணி

      கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக பேட்மிண்டன் விளையாடி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி



    • Apr 17, 2024 10:55 IST
      செல்லூர் ராஜூ பிரசாரம்

      மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்



    • Apr 17, 2024 10:14 IST
      பா.ஜ.க பற்றி இ.பி.எஸ் விமர்சனம்

      பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக தரவில்லை

      இயற்கை சீற்றங்களின் போது கேட்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை

      பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

      இரட்டை இலை மற்றும் முரசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 



    • Apr 17, 2024 10:14 IST
      பா.ஜ.க பற்றி இ.பி.எஸ் விமர்சனம்

      பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக தரவில்லை

      இயற்கை சீற்றங்களின் போது கேட்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை

      பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

      இரட்டை இலை மற்றும் முரசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 



    • Apr 17, 2024 09:42 IST
      சென்னையில் 10 விமானங்கள் ரத்து

      சென்னையில் இருந்து 10 விமானங்கள் ரத்து, ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கான 10 விமானங்கள் ரத்து. 



    • Apr 17, 2024 09:42 IST
      மோடி ராமநவமி வாழ்த்து

      ராமர் ஆசீர்வாதங்கள் புதிய ஆற்றலை வழங்கும். தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் தீர்மானத்திற்கு, ராமரின் ஆசீர்வாதங்கள் புதிய ஆற்றலை வழங்கும். ராமரின் லட்சியங்கள் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக, பிரதமர் மோடி ராமநவமி வாழ்த்து



    • Apr 17, 2024 09:24 IST
      தலைவர்கள் இறுதி கட்ட பரப்புரை

      அ.தி.முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை கோவையிலும் இன்று இறுதி கட்ட பரப்புரை மேற்கொள்கின்னர். 



    • Apr 17, 2024 09:10 IST
      3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

      மக்களவை தேர்தலை ஒட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்.



    • Apr 17, 2024 09:03 IST
      யு.ஏ.இ-ல் கனமழை: சிவப்பு எச்சரிக்கை

      ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை

      துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்



    • Apr 17, 2024 08:11 IST
      விவேகானந்தர் மண்டபம் : படகு போக்குவரத்து ரத்து

      கன்னியாகுமரி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் வெள்ளிக் கிழமை விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு



    • Apr 17, 2024 08:11 IST
      பெசன்ட் நகரில் ஸ்டாலின் பிரசாரம்

      தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பெசன்ட் நகரில் இன்று மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 



    • Apr 17, 2024 08:10 IST
      கோவையில் உதயநிதி பிரச்சாரம்

      கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ் குமாரை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 



    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment