Advertisment

Tamil News Highlights: தேர்தல் வந்தால் மட்டும் பிரதமர் விலைகளை குறைக்கிறார் : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Tamil News Live Updates- 27 March 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin Nanguneri

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஐ.பி.எல் இன்றைய போட்டி 

17-வது ஐ.பி.எல் சீசனில் இன்று ஐதராபாத்- மும்பை அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும்  8-வது லீக் போட்டியில், ஐதராபாத்- மும்பை அணிகள் பலப்பரீட்சை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

 

  • Mar 27, 2024 23:11 IST
    எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை கூட்டத்தில் சிக்கி ஒருவர் பலி

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற நடுவக்குறிச்சியைச் சேர்ந்த வள்ளிநாயகம் (60) கூட்டத்தில் சிக்கி உயிரிழப்பு



  • Mar 27, 2024 23:08 IST
    சாத்தான்குளம் வழக்கு - சிபிசிஐடி அதிகாரி சாட்சியம்

    சாத்தான்குளம் வழக்கில் தந்தை-மகன் கொடூரமாக தாக்கப்படுவதற்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதரே காரணம் சிபிசிஐடி அதிகாரி அனில்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம்



  • Mar 27, 2024 21:05 IST
    புதிய தமிழகம் கட்சி தலைவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டி

    தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி



  • Mar 27, 2024 20:43 IST
    ஆளுநருக்கும் எனக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா? இ.பி.எஸ் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி

    ஆளுநர் தனக்கு பிரச்னை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக் கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் எனக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா? தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் இருப்பதால் அவரை எதிர்க்கிறோம். ஒரு எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என பொருள்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Mar 27, 2024 20:39 IST
    பிரதமர் மோடி தப்புக்கணக்கு போடுகிறார் : மு.க.ஸ்டாலின்

    "புதிய வாக்குறுதிகளைக் கொடுத்தால், நிறைவேறாத பழைய வாக்குறுதிகளை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக்கணக்கு போடுகிறார். தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கியுள்ளார். 



  • Mar 27, 2024 20:12 IST
    தேர்தல் வந்தால் மட்டும் பிரதமர் விலைகளை குறைக்கிறார் : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

    5 மாநில தேர்தலின்போது பிரதமர் சிலிண்டர் விலையை குறைத்தார். வருடம் வருடம் தான் மகளிர் தினம் வந்தது ஏன் அப்போது சிலிண்டர் விலை குறைப்பு இல்லை. தேர்தல் வந்தால் மட்டும் பிரதமர் விலைகளை குறைக்கிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற பிரதமர் நாடகம் போடுகிறார்" "மக்கள் யாரும் பிரதமர் மோடியை நம்பவில்லை" என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Mar 27, 2024 19:46 IST
    பானை சின்னம் - மேல்முறையீடு செய்யும் விசிக

    பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில் பானை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி  முடிவு செய்துள்ளது.



  • Mar 27, 2024 18:55 IST
    தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

    கன்னியாகுமரி, நாகர்கோவிலில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி: “தி.மு.க ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ளது. தி.மு.க ஆட்சியில் காவலருக்கு கூட பாதுகாப்பு இல்லை. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” என்று விமர்சனம் செய்தார்.



  • Mar 27, 2024 18:52 IST
    ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா? இ.பி.எஸ் கேள்வி

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “தி.மு.க-வினரை தன் குடும்பம் எனக் கூறும் ஸ்டாலின், கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா? வாக்குகளைப் பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க-வினரிடம் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க; சாதாரண தொண்டனும் அ.தி.மு.க-வில் பொறுப்புக்கு வரலாம் என்று கூறியுள்ளார்.



  • Mar 27, 2024 18:22 IST
    வி.சி.க-வுக்கு பானை சின்னம் ஒதுக்க இயலாது - தேர்தல் ஆணையம்

    திருமாவளவன் தலைமையிலான வி.சி.க 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்  திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட வி.சி.க 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த மக்களவைத் தேர்தல் 2024-ல் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க பானை சின்னம் கேட்டிருந்த நிலையில், வி.சி.க-வுக்கு பானை சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 27, 2024 18:14 IST
    தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க ம.தி.மு.க கோரிக்கை

    பம்பரம் சின்னம் ஒதுக்காத நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க தேர்தல் அலுவலரிடம் ம.தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. மாநிலக் கட்சியாக இருப்பதால் கேட்கும் சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ம.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 27, 2024 17:57 IST
    என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை - சீமான்

    விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நா.த.க வேட்பாளர் கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல்  திணறியது குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை.  என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை” என்று கூறியுள்ளார்.



  • Mar 27, 2024 17:57 IST
    21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதலை கட்டாயமாக்குவோம் - பா.ம.க தேர்தல் அறிக்கை

    மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க தேர்தல் அறிக்கைவெளியிட்டுள்ளது. அதில், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதலை கட்டாயமாக்க வழி செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Mar 27, 2024 16:41 IST
    செல்போன் வெடித்து விபத்து - 3 பேருக்கு காயம்

    கடலூர், வழிசோதனை பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரின் செல்போன் வெடித்து விபத்துக்குள்ளானதில், வாகனத்தில் சென்ற புஷ்பராஜ், அவரின் தாய், பாட்டி என 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Mar 27, 2024 16:39 IST
    அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியானது

     பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியானது. அசையும் சொத்து ரூ.36 லட்சமும், அசையா சொத்து ரூ.1.12 கோடி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலை மனைவி அகிலாவின் பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 லட்சம் அசையா சொத்தும் இருப்பதாக தகவல்



  • Mar 27, 2024 16:37 IST
    கெஜ்ரிவால் கைது குறித்த அமெரிக்கா கருத்து; இந்தியா எதிர்ப்பு

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக, அமெரிக்கா தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது



  • Mar 27, 2024 16:30 IST
    தென்காசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய 26 பேர் காத்திருப்பு

    தென்காசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய 26 பேர் வரிசையில் காத்திருக்கின்றனர். அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக கிருஷ்ணசாமி போட்டியிடும் நிலையில், 4 சுயேச்சை கிருஷ்ணசாமிகள் வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருக்கின்றனர்



  • Mar 27, 2024 16:10 IST
    கைதி பேச்சிதுரை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி மனு

    போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி பேச்சிதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றக் கோரி பேச்சிதுரையின் தாய் மனு தாக்கல் செய்துள்ளார். 



  • Mar 27, 2024 16:09 IST
    ராக்கெட் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி

    2009ம் ஆண்டு வாகன சோதனையின் போது காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ராக்கெட் ராஜா என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். மனுதாரர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இதில் தொடர்பு இல்லை எனக் கூற எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு



  • Mar 27, 2024 16:00 IST
    மக்களுக்காக பணியாற்ற தேனியில் போட்டியிடுகிறேன் – டி.டி.வி தினகரன்

    தோல்வி பயத்தில் உள்ளவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை. மக்களுக்காக பணியாற்ற தேனியில் போட்டியிடுகிறேன். தேனி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்



  • Mar 27, 2024 15:43 IST
    தேனி மக்களவை தொகுதியில், டி.டி.வி தினகரன் வேட்பு மனு தாக்கல்

    தேனி மக்களவை தொகுதியில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்



  • Mar 27, 2024 15:33 IST
    ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டி

    ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதுவரை மொத்தம் ஆறு பன்னீர் செல்வங்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்



  • Mar 27, 2024 15:20 IST
    ம.தி.மு.க பம்பர சின்னம் வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

    மக்களவைத் தேர்தலில், மதிமுகவுக்கு பம்பர சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது



  • Mar 27, 2024 14:58 IST
    வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவு

    தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3 மணியுடன் நிறைவடைகிறது



  • Mar 27, 2024 14:57 IST
    விருதுநகர் தொகுதிக்கு பம்பரம் சின்னம்?

    விருதுநகர் தொகுதிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக தொடந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வருகிறது.



  • Mar 27, 2024 14:26 IST
    சத்யபிரதா சாகு பேட்டி



  • Mar 27, 2024 14:25 IST
    அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது



  • Mar 27, 2024 14:25 IST
    திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்புமனு தாக்கல்



  • Mar 27, 2024 14:24 IST
    திருமாவளவன் அதிருப்தி

    சின்னம் ஒதுக்குவதில் தேர்தல்  ஆணையமே ஒருதலைப்பட்சமாக நடந்துக்கொள்வது அதிர்ச்சியளிக்கிறது

    விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தி



  • Mar 27, 2024 13:57 IST
    பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது

    மாதம் ரூ.6000 தருவோம் என கூறினார்கள்;

    100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என சொன்னார்கள்;

     மகளிர் வங்கிகளில்  அடமானம் வைத்த நகைகளை திருப்பி கொடுப்போம் என கூறினார்கள்;

    2019-ல் பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது

    -  கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி



  • Mar 27, 2024 13:36 IST
    டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    மக்களவைத் தேர்தலில் விசிக கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

    பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அதனை விசிகவுக்கு ஒதுக்கக் கோரி மனுவில் கோரிக்கை



  • Mar 27, 2024 13:31 IST
    பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம்

    பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது! - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு பாஜக அரசால் தீர்வு காண முடியாதுஎன மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி அனந்த் நாகேஸ்வரன் அறிவித்த நிலையில் கருத்து



  • Mar 27, 2024 13:28 IST
    ப.சிதம்பரம் X தளத்தில் பதிவு

    வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு  பாஜக அரசால் தீர்வு காண முடியாதுஎன மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி அனந்த் நாகேஸ்வரன் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது;

    இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது

    பாஜக அரசால் இயலாது என்றால் நாற்காலியைக் காலி செய்என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும்;

    வேலைவாய்ப்பின்மைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்

    - ப.சிதம்பரம் X தளத்தில் பதிவு



  • Mar 27, 2024 13:16 IST
    திமுக வேட்பாளர் ஆ.ராசா பேட்டி

    இந்தியாவில் உள்ள பல்வேறு இனங்கள், பண்பாடுகள், கலாச்சார அடையாளங்கள் அத்தனையும் அழித்து ஒற்றை சர்வாதிகார  ஆட்சியை கொண்டு வர விரும்பும் பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

    நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் இந்திய அரசியலமைப்பை காப்பாற்ற போகும் தேர்தல்;

    காப்பாற்ற வேண்டும் என்று நம்புகிறவர்கள் ஓரணியில் இருக்க வேண்டிய தேர்தல்;

    ஊழலும், மதவாதமும் ஒன்றாக இணைந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கிறது

    - நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பேட்டி



  • Mar 27, 2024 13:14 IST
    தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு வரவேற்பு



  • Mar 27, 2024 13:03 IST
    தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு தாக்கல் 

    நீலகிரி மக்களவை தொகுதியில், தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு தாக்கல் 



  • Mar 27, 2024 13:02 IST
    அன்பை நாடி ஆளுநரில் இருந்து அக்காவாக வந்திருக்கிறேன்

    நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை" "அன்பை நாடி ஆளுநரில் இருந்து அக்காவாக வந்திருக்கிறேன்" "ஆளுநர் பதவியை துறந்தது ஒரு நல்ல முடிவு" "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..விரும்பி வந்துட்டேன்னு சொல்லு" "உங்களுக்கு தான் வட போச்சே"- தமிழிசை 



  • Mar 27, 2024 12:43 IST
    வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல்

    சிதம்பரம் மக்களவை தொகுதியில், வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல். 



  • Mar 27, 2024 12:25 IST
    மைக் சின்னத்தில் போட்டி - சீமான்

    மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது - சீமான் அறிவிப்பு



  • Mar 27, 2024 12:13 IST
    பா.ம.க தேர்தல் அறிக்கை வெளியீடு

    நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்" "அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" "என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்" "மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை மாநிலங்களுக்கு கொடுக்க பாமக பாடுபடும்" "தனியார் துறை, நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும்" "ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயிக்க நடவடிக்கை.



  • Mar 27, 2024 12:09 IST
    தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்

    மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்



  • Mar 27, 2024 12:08 IST
    பானை சின்னம் கோரி விசிக வழக்கு

    மக்களவை தேர்தலில் பானை சின்னம் ஒதுக்கக் கோரி விசிக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு.



  • Mar 27, 2024 11:32 IST
    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்போது வேட்பு மனு தாக்கல்: போலிசார் பா.ஜ.கவினரிடையே தள்ளுமுள்ளு

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்போது வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் அண்ணாமலை ஊர்வலமாக வந்தார். அப்போது தடுப்புகளை அகற்றி புகுந்ததனால் போலிசார் பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு.வாத்திய ஜமாப் கருவியை போலிசார் மீது பா.ஜ.கவினர் வீசினர்.



  • Mar 27, 2024 11:30 IST
    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

    மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம் இ.பி.எஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார்.



  • Mar 27, 2024 11:18 IST
    நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம்

    சின்னம் மறுக்கப்பட்டது குறித்து, இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம் - துரை வைகோ புதிய சின்னம் கொடுத்தாலும், மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறுவேன் பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் தற்போது இல்லை பாஜக கூட்டணி கட்சிகளுக்கு, அவர்கள் கேட்ட சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது - துரை வைகோ



  • Mar 27, 2024 10:44 IST
    பம்பரம் சின்னம்: பிற்பகலில் விசாரணை

    மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில். பம்பரம் சின்னம் குறித்து இன்று காலைக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து, மதிமுகவுக்கும் கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு 



  • Mar 27, 2024 10:12 IST
    ம.தி.மு.கவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது

    மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் பதில் 

    ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

    பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது



  • Mar 27, 2024 09:33 IST
    வைகை ஆற்றுக்கு மரியாதை செலுத்தி பரப்புரை

    வைகை ஆற்றுக்கு மரியாதை செலுத்திவிட்டு பரப்புரையை தொடங்கிய மதுரை சி.பி.எம். வேட்பாளர் சு. வெங்கடேஷன் மற்றும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். 



  • Mar 27, 2024 09:32 IST
    பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

    மக்களவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது



  • Mar 27, 2024 09:32 IST
    ஸ்டாலின் இன்று இங்கு பரப்புரை

    விருதுநகர் மற்றும் தென்காசி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை. 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment