/tamil-ie/media/media_files/uploads/2019/10/kochi-voting-pti-min.jpg)
IE Tamil Updates
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 34-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 61.22% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 69.27% நீர் இருப்பு உள்ளது.
புழல் - 85.09%, பூண்டி - 38.62%, சோழவரம் - 19.89%, கண்ணன்கோட்டை - 80.4% ஆக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Apr 18, 2024 20:28 IST
மக்களவை தேர்தல்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தயார் நிலையில் சுகாதாரத்துறை உத்தரவு
வெப்ப அலை காரணமாக நாளை வாக்களிக்க வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படக்கூடும். எனவே தமிழக முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது
-
Apr 18, 2024 19:40 IST
மக்களவை தேர்தல்; தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கன்னியாகுமரிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறினர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது
-
Apr 18, 2024 19:08 IST
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது
-
Apr 18, 2024 18:49 IST
6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
மக்களவை தேர்தலையொட்டி மெட்ரோ ரயில்கள் நாளை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது
-
Apr 18, 2024 18:23 IST
நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல; ஐகோர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் செங்கோல் விவகாரத்தில் கணவரை இழந்தோருக்கு செங்கோலை வழங்க தடை விதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஆகம விதிகள் விவகாரத்தில் ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் ஒன்றும் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது
-
Apr 18, 2024 18:08 IST
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தல் நாளில் இலவச டிக்கெட் வழங்க ஏற்பாடு
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. இலவச போக்குவரத்து வசதிகள் தேவைப்படுவோர், 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது
-
Apr 18, 2024 17:50 IST
மக்களவை தேர்தல்; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
மக்களவை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் ஒரே நேரத்தில் புறப்படுவதால் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவை, குமரி, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
Apr 18, 2024 17:43 IST
சென்னை - நெல்லை தேர்தல் சிறப்பு ரயில்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இன்றிரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் நாளை காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் இருந்து நாளை மாலை 7 மணிக்கு புறப்படும் ரயில், நாளை மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்
-
Apr 18, 2024 16:57 IST
தேர்தல் வழக்கு: தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு
வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
Apr 18, 2024 16:35 IST
விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள 337 வாக்குப் பதிவு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மண்டலங்கள் வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. -
Apr 18, 2024 16:18 IST
கொடைக்கானலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்!
கொடைக்கானலில் வாகனங்கள் செல்லமுடியாத மலைக் கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் போலீசார் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
-
Apr 18, 2024 15:51 IST
தமிழ்நாட்டில் வெயில் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளம், ஆந்திரா, ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. -
Apr 18, 2024 15:21 IST
கள்ளழகர் திருவிழா.. தண்ணீர் அடிக்க கட்டுப்பாடு ரத்து
முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. -
Apr 18, 2024 15:03 IST
அண்ணாமலை மீது தி.மு.க புகார்; ஜிபே மூலம் பணம் அனுப்புகிறார்
கோவை மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு அண்ணாமலை ஜிபே மூலமாக வாக்குக்கு பணம் அளிப்பதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
-
Apr 18, 2024 14:00 IST
நிர்மலா தேவி விவகாரம்.. விசாகா கமிட்டி: உயர் நீதிமன்றம் கேள்வி
பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரை 6 ஆண்டுகள் கடந்தும் விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன் எனஅருப்புக்கோட்டை கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
-
Apr 18, 2024 13:57 IST
பாதுகாப்பு பணியில் 18,500 போலீசார்
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவத்தினருடன் இணைந்து பாதுகாப்பு பணி. பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்கு செலுத்தும் வகையில் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்
சென்னை காவல்துறை
-
Apr 18, 2024 13:23 IST
மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் பயணம் செய்யும் வீடியோ
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் பயணம் செய்யும் வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் பெருமிதம்
Polling team proceeding to Gate and Gasheng village under Payum circle in Siang District- Arunachal Pradesh, Dated 17th, April 2024.@ceoarunachal 🙌🤝#Elections2024 #IVoteForSure #ChunavKaParv #DeshKaGarv #saathchalenge #YouAreTheOne pic.twitter.com/hZ0YQ6sycr
— Election Commission of India (@ECISVEEP) April 18, 2024 -
Apr 18, 2024 13:20 IST
பெண்களுக்கான பிங்க் வாக்குச்சாவடி மையம்
சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே. கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 18, 2024 13:03 IST
வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இத்தனை நாள் பாடுபட்டது பயன் தர, வாக்குப்பதிவு நாளன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் வாக்குப்பதிவு முடியும் வரை விழிப்புடன் செயலாற்றினால்தான் கழக கூட்டணியின் வெற்றி உறுதியாகும்
- வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
-
Apr 18, 2024 13:03 IST
வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது
மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல 1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால், வாகனம் ஏற்பாடு செய்யப்படும்
மொத்த வாக்குச்சாவடிகளில் 44,800 வாக்குச்சாவடிகள் (65%) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன
வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றாலும், வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி
-
Apr 18, 2024 12:34 IST
சத்ய பிரதா சாகு பேட்டி
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10,000த்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.32 கோடி
முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம்
காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும்; காலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும்
- சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி
-
Apr 18, 2024 12:23 IST
சண்முக பாண்டியன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக உரிய அனுமதியின்றி தெப்பக்குளம் அருகில் பிரசாரம் செய்த சண்முக பாண்டியன், நடிகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
-
Apr 18, 2024 12:23 IST
நயினார் நாகேந்திரன் வழக்கு- தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை காங்கிரஸ், பா.ஜ. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் வழக்கு முடித்துவைப்பு
-
Apr 18, 2024 11:53 IST
பழச்சாறில் விஷம் கலந்து தந்தார்கள்- மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு
குடியாத்தம் சந்தையிலிருந்து பிரச்சார பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கட்டாயப்படுத்தி பழச்சாறு, மோர் வழங்கப்பட்டது. குடித்த சில நிமிடங்களிலேயே மயக்கம், நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
தற்போது நலமாக இருப்பதாக மன்சூர் அலிகான் அறிக்கை
-
Apr 18, 2024 11:49 IST
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீச வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்
- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
Apr 18, 2024 11:32 IST
விசாரணை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100% ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிடக் கோரிய மனுவில், நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணை தொடங்கியது
-
Apr 18, 2024 11:31 IST
மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பச்சை நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தாமதம் நிலவுகிறது
சென்ட்ரல் மெட்ரோ மற்றும் ஷெனாய் நகர் இடையே மெட்ரோ ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
-
Apr 18, 2024 11:31 IST
இபிஎஸ் மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு
மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியை 95% மேல் பயன்படுத்தியுள்ளேன்.
- தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ் பேசியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் தயாநிதி மாறன்.
-
Apr 18, 2024 11:28 IST
வனத்துறை அறிவிப்பு
மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகளை சரணாலயத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.
-
Apr 18, 2024 11:00 IST
இ.பி.எஸ்-க்கு எதிராக தயாநிதி மாறன் வழக்கு
தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ் பேசியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் தயாநிதி மாறன். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதுவரை 95% நிதியை பயன்படுத்தியுள்ளதாக தயாநிதி மாறன் விளக்கம்
-
Apr 18, 2024 10:56 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு. தங்கம் ஒரு கிராம் ரூ.6,835க்கும், சவரன் ரூ.54,680க்கும் விற்பனையாகிறது.
-
Apr 18, 2024 10:56 IST
பாஜக வேட்பாளரின் சொத்துமதிப்பு ரூ.1,400 கோடி
பாஜக வேட்பாளரின் சொத்துமதிப்பு ரூ.1,400 கோடி. கோவா தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போவின் சொத்து மதிப்பு ரூ.1,400 கோடி. இந்தியாவில் புகழ்பெற்ற டெம்போ குழுமத்தின் தலைவரான ஸ்ரீனிவாஸ் டெம்போவின் மனைவி தான் இவர்.
ரியல் எஸ்டேட், கப்பல் கட்டுமானம், கல்வி, சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை இக்குழுமம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது
-
Apr 18, 2024 10:51 IST
திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவச அனுமதி
உலக மரபு சின்ன தினத்தை ஒட்டி இன்று முதல் ஒரு வாரத்திற்கு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றி பார்க்கலாம். நாளை மட்டும் திறந்திருக்காது தொல்லியல் துறை அறிவிப்பு, இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை இலவசம் என அறிவிப்பு
-
Apr 18, 2024 10:18 IST
போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்
சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து நேற்று 2,899 பேருந்துகள் இயக்கம்
46,503 பேர் சென்னையிலிருந்து பயணம் செய்ய இன்று வரை முன்பதிவு
-
Apr 18, 2024 09:38 IST
நோட்டா 'வேண்டாம்' : சத்குரு அறிவுரை
அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் நாட்டை யார் வழி நடத்துவார்கள் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை கையிலெடுக்குமாறு சத்குரு வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஜனநாயக செயல்முறையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் சக்தியை வீண் போக விடாதீர்கள் அல்லது நோட்டாவைத் தேர்ந்தெடுத்து 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் எதிர்காலத்தை கட்டமைக்கும் சக்தியை இழந்து விடாதீர்கள் என சத்குரு கேட்டுக்கொண்டார்.
-
Apr 18, 2024 09:30 IST
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான மனு இன்று விசாரணை
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை
₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல்
-
Apr 18, 2024 09:30 IST
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான மனு இன்று விசாரணை
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை
₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல்
-
Apr 18, 2024 09:30 IST
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான மனு இன்று விசாரணை
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை
₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல்
-
Apr 18, 2024 09:30 IST
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான மனு இன்று விசாரணை
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை
₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல்
-
Apr 18, 2024 08:37 IST
தமிழகத்தில் 2 நாட்கள் வெப்ப அலை வீசும்
தமிழ்நாடு, புதுச்சேரியில் இரண்டு நாட்கள் வெப்ப அலை வீசும். மஞ்சள் எச்சரிக்கை விடுத்த, இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
Apr 18, 2024 08:36 IST
2-வது நாளாக விமான சேவை ரத்து
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை - 2வது நாளாக விமான சேவை ரத்து
சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து - தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார்
துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம்
விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு
-
Apr 18, 2024 08:36 IST
2-வது நாளாக விமான சேவை ரத்து
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை - 2வது நாளாக விமான சேவை ரத்து
சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து - தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார்
துபாய் செல்ல வந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிறுவன கவுன்டரில் வாக்குவாதம்
விமான நிறுவன அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு
-
Apr 18, 2024 08:35 IST
பஞ்சாப் - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை. சண்டிகரின் முல்லான்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
-
Apr 18, 2024 08:28 IST
முதல் கட்ட தேர்தலில் 8 மத்திய அமைச்சர்கள்
மக்களவை முதல் கட்ட தேர்தலில் 8 மத்திய அமைச்சர்கள், ஒரு முன்னாள் ஆளுநர், 3 முன்னாள் முதல்வர்கள் போட்டி. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு, எல்.முருகன், ஜித்தேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால், சஞ்சீவ் பல்யான், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை, முன்னாள் முதல்வர்கள் பிப்லப் குமார் தேவ், நாவம் துகி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் களத்தி உள்ளனர்.
-
Apr 18, 2024 08:17 IST
தமிழகம், புதுவையில் நாளை வாக்குப் பதிவு
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 மக்களவைத் தொகுதிகளில் நாளை (ஏப்.19) வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட வாக்குப் பதிவு. தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
-
Apr 18, 2024 08:15 IST
அதிகாலையிலேயே வாக்களியுங்கள்: மோடி
கோடைக்காலம் என்பதால், அதிகாலையே சென்று வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
-
Apr 18, 2024 08:14 IST
தபால் வாக்களிக்க இன்று கடைசி நாள்
இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.