Advertisment

Tamil News Highlights: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி

Tamil News Live Updates- 30 March 2024-இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn election commission

Tamilnadu: பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 15-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கிரஸ் இன்று போராட்டம்

பொருளாதார ரீதியாக காங்கிரஸை பா.ஜ.க அரசு முடக்குவதாக கண்டனம். எதிர்க்கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசுக்கு கண்டனம். காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Mar 30, 2024 23:23 IST
    வேட்பாளரே இல்லாமல் வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன்!

    மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் செல்வம் வராததால், சூளைமேட்டில் நடந்த பரப்புரையில் தனியாகவே சென்று வேட்பாளருக்காக வாக்கு சேகரித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். ஜி.கே.வாசனின் பரப்புரையில் கலந்துகொள்ளாமல் தனியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் வினோஜ் செல்வம்.



  • Mar 30, 2024 23:22 IST
    ஹேமந்த் சோரனின் மனைவி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியுடன் சந்திப்பு

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை டெல்லியில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ளார்.



  • Mar 30, 2024 21:18 IST
    அடிமைகளின் எஜமானர்களை விரட்ட பானை சின்னத்திற்கு வாக்களியுங்கள் : உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

    “தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டியதுபோல், ஒன்றியத்தில் “தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டியதுபோல், ஒன்றியத்தில் அடிமைகளின் எஜமானர்களை விரட்ட பானை சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்..” -சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை நீங்கள் வாக்களிக்க வேண்டும்..” சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை



  • Mar 30, 2024 21:16 IST
    நிர்மலா சீதாராமன் கருத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பதில்

    "நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் பொருளாதார சூழல் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, பொது வாழ்விலே அவர்களது நேர்மைக்கும், வெளிப்படைத் தன்மைக்கும் எடுத்துக்காட்டு.."என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,கூறியுள்ளார்.



  • Mar 30, 2024 20:04 IST
    ஒ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு விவசாயி சின்னம்

    ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஒ.பன்னீர்செல்வம் என்பவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.



  • Mar 30, 2024 18:43 IST
    ஏரியில் குளித்த போது மூழ்கி சிறுமி உட்பட 4 பெண்கள் மரணம்

    வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றவர்கள், அங்குள்ள ஏரியில் குளித்த போது ஏரியில் மூழ்கி சிறுமி உட்பட 4 பெண்கள் உயிரிழந்தனர். தற்போது அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 4 பேரும் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.



  • Mar 30, 2024 18:40 IST
    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ம.க வேட்பாளர் தங்கர்பச்சான் உள்ளிட்ட 5 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி பிரசாரம் செய்ததாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • Mar 30, 2024 17:45 IST
    ஓ.பி.எஸ்-க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது



  • Mar 30, 2024 17:27 IST
    ‘அரண்மனை 4’ படத்தின் டீசர் வெளியீடு

    சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அரண்மனை 4’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது



  • Mar 30, 2024 16:56 IST
    பா.ஜ.க தேர்தல் அறிக்கைக் குழு அறிவிப்பு

    மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். 

    மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்



  • Mar 30, 2024 16:39 IST
    வி.சி.க-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட் வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். சிதம்பரம் மக்களவை தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிடுகிறார் திருமாவளவன். விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடுகிறார் ரவிக்குமார்



  • Mar 30, 2024 16:26 IST
    ம.தி.மு.க-விற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

    ம.தி.மு.க-விற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். தீப்பெட்டி சின்னத்தை வைத்து அமைச்சர் ரகுபதி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் 

    ம.தி.மு.க-விற்கு தீப்பெட்டி சின்னம் வழங்கியதாக தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் தகவல் தெரிவித்தார். 

    ம.தி.மு.க ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி என்பதால் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது

    திருச்சி மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடுகிறார் துரை வைகோ. மாற்று சின்னத்தை ம.தி.மு.க கோரி இருந்த நிலையில் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



  • Mar 30, 2024 15:33 IST
    பிறந்த மருத்துவமனையிலே பணி -  அசத்தும் பெண் மருத்துவர் பானு 

    குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்து அதே மருத்துவமனையில் சேவையாற்றி  பெண் மருத்துவர் பானு அசத்தி வருகிறார். தந்தை இறந்த பின் தாயார் கைத்தறி கூலி வேலை செய்து தன்னையும் தன் சகோதரியையும் வளர்த்து ஆளாக்கியதாக நெகிழ்ந்துள்ளார். நிறைய மருத்துவமனைகளில் வாய்ப்பு வந்தும், தான்  பிறந்த மருத்துவமனையிலே பணியாற்ற விரும்பிய ஏற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

     



  • Mar 30, 2024 15:31 IST
    தமிழ்நாட்டில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் நிறைவு 

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்கள், தென் சென்னையில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக தஞ்சை, காஞ்சிபுரம் தொகுதிகளில் தலா 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.



  • Mar 30, 2024 14:35 IST
    ஆப்கானில் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை அமல்

     

    ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தலிபான்களின் அறிவிப்புக்கு சர்வதேச மகளிர் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 



  • Mar 30, 2024 14:33 IST
     பறக்கும்படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்

    நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாத விவகாரத்தில், தேர்தல் பறக்கும் படை பெண் அதிகாரி கீதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 



  • Mar 30, 2024 13:55 IST
    முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் பதில்

    பிரதமர் தமிழில் பேச ஆரம்பித்தால், திராவிட மாடல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லாமல் போகும்

    மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் நடவடிக்கை எடுத்தது

    தமிழின் பெயரை சொல்லி வரும் திமுகவினர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - எல்.முருகன்



  • Mar 30, 2024 13:46 IST
    அண்ணாமலை பேச்சு

    பாஜகவில் இருந்து யார் விலகினாலும் கண்டுக்கொள்ள வேண்டாம்

    தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் தான் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வரும்

    - சிதம்பரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு



  • Mar 30, 2024 13:21 IST
    பாஜகவுக்கு வைக்கும் வேட்டு

    I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை

    ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள சின்ன கட்சிகளுக்கு கூட கேட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது

    அரசியல் வழிகாட்டியான ரவிக்குமாருக்கு ஆதரவாக பானைசின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டு வந்துள்ளேன்;

    பானைசின்னம் பெற சட்டப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது;

    பானைசின்னத்தில் வாக்களிப்பது தான் பாஜகவுக்கு வைக்கும் வேட்டு            

    - விழுப்புரத்தில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்



  • Mar 30, 2024 13:20 IST
    வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம்

    இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு பெறுகிறது;

    3 மணிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்

    - சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி



  • Mar 30, 2024 12:55 IST
    திருமாவளவன் சொல்வது பொய்யான சமூக நீதி - அண்ணாமலை

    வி.சி.க என்றால் விழுப்புரம், சிதம்பரம் கட்சி என்பது பொருள்

    திருமாவளவனுக்கு ஓட்டு போட்டால், 5 ஆண்டு என்ன நடந்ததோ அதே தான் மீண்டும் நடக்கும்

    வி.சி.க தலைவர் திருமாவளவன் சொல்வது பொய்யான சமூக நீதி - அண்ணாமலை



  • Mar 30, 2024 12:41 IST
    அதிமுகவினர் உடன் பெண்கள் வாக்குவாதம்

    கரூர் அதிமுக வேட்பாளரை வரவேற்க சுமார் 2 மணி நேரம் தாம்பூலத் தட்டுடன்  காத்திருந்தவர்களுக்கு தலா ரூ.50 வழங்கப்பட்டதால் அதிமுகவினர் உடன் பெண்கள் வாக்குவாதம்

    அதிமுக வேட்பாளர் தங்கவேல் இன்றி பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரத்தை முடித்து கொண்டு புறப்படும் வரை வராத அதிமுக வேட்பாளர்



  • Mar 30, 2024 12:30 IST
    மோடியை விமர்சித்து காங்கிரஸ் தேர்தல் பரப்புரை வீடியோ



  • Mar 30, 2024 12:27 IST
    கைலாஷ் கெலாட் ஆஜர்

    டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகினார் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்



  • Mar 30, 2024 12:06 IST
    பாரத ரத்னா விருது

    எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுகளை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

    டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

    ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது இதுவே முதல்முறை



  • Mar 30, 2024 12:06 IST
    டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு

    டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான கைலாஷ் கெலாட் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன்;

    இந்த வழக்கில் இதுவரை 16 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



  • Mar 30, 2024 11:47 IST
    திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள் மாயம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகன்நாத பெருமாள் கோவிலில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மாயம்

    சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்



  • Mar 30, 2024 11:44 IST
    நாற்பதும் நமதே!



  • Mar 30, 2024 11:36 IST
    மு.க.ஸ்டாலினுடன், கமல்ஹாசன் சந்திப்பு



  • Mar 30, 2024 11:09 IST
    தங்கர் பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

    கடலூர் தொகுதி பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

    அடித்தட்டு மக்களுக்காக மத்திய பாஜக ஆட்சி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது

    தங்கர் பச்சானின் வெற்றி என்பது சாமானிய மக்களின் வெற்றியாகும்''

    - அண்ணாமலை  



  • Mar 30, 2024 11:09 IST
    அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் காரில் சோதனை

    கோவை கவுண்டம்பாளையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவின் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்

    சோதனையில் எந்தவிதமான பணமோ, பரிசு பொருட்களோ கைப்பற்றப்படவில்லை



  • Mar 30, 2024 11:08 IST
    காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் வேலை- ப.சிதம்பரம்

    இந்தியா ஜனநாயகத்தில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது

    இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் வேலை

    வரும் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு அனைத்து பதில்களையும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்

    ஒரு கட்சி பல ஆயிரம் கோடி ஊழல் செய்துவிட்டு தேர்தலை சந்திக்கிறது;

    வருமானவரி செலுத்தக் கோரி மற்றொரு கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது

    இப்படிப்பட்ட நிலைமையில் மக்களவைத் தேர்தலை சுதந்திரமான, நியாயமான தேர்தல் என எவ்வாறு கூற முடியும் ?;

    வெளிப்படைத்தன்மையும், நியாமான நடைமுறையுமே ஜனநாயகத்துக்கு தேவையே தவிர வரி தீவிரவாதம் அல்ல

    - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் X தளத்தில் பதிவு    



  • Mar 30, 2024 10:43 IST
    பிரதமரை தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?- ஸ்டாலின்

    “பிரதமரை தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?''

    தமிழ்த் தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு தேர்தலில் ஏமாற்றமே பரிசாகும் 

    மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? 

    `எங்கும் இந்தி! எதிலும் இந்தி!' என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை

    தமிழ்த் தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு தேர்தலில் ஏமாற்றமே பரிசாகும் - முதல்வர் ஸ்டாலின்



  • Mar 30, 2024 10:10 IST
    பாஜக தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்

    பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு பா.ஜ.கவில் இடம் கிடைக்காததால்,  பா.ஜ.கவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 



  • Mar 30, 2024 09:47 IST
    டேனியல் பாலாஜி கண்கள் தானம்

    மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தானம் செய்யப்பட உள்ளது. 



  • Mar 30, 2024 09:45 IST
    தோனியை முந்திய விராட் கோலி

    ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள். தோனியை முந்திய விராட் கோலி. இதுவரை 241 சிக்சர்கள் அடித்துள்ள கோலி.



  • Mar 30, 2024 09:19 IST
    நாட்டுப்புற பாடல் பாடி வாக்கு சேகரித்த சிபிஐ வேட்பாளர்

    திருவாரூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நாட்டுப்புற பாடல் பாடி வாக்கு சேகரித்த திமுக கூட்டணியில் சிபிஐ சார்பில் போட்டியிடும் நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ். 



  • Mar 30, 2024 09:15 IST
    பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம்

    ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம்

    ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம்

    உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை.



  • Mar 30, 2024 09:15 IST
    பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4 முதல் 9-ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம்

    ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம்

    ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம்

    உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை.



  • Mar 30, 2024 09:10 IST
    சேலத்தில் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

    சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

    சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வாக்குசேகரிப்பு

    அக்ரஹாரம் வீதி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்



  • Mar 30, 2024 09:06 IST
    இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

    மக்களவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற இன்றே கடைசிநாள். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் இதுவரை 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 1,085 மனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளன. 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment