பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 54-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளில் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 53.58% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 59.61%, புழல் - 87.76%, பூண்டி - 23.52%, சோழவரம் - 9.9%, கண்ணன்கோட்டை - 72.6% ஆக நீர் இருப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
May 09, 2024 22:15 IST10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள்
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, 13ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
-
May 09, 2024 21:35 ISTசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது
-
May 09, 2024 21:00 ISTசிவகாசி வெடிவிபத்து: ஒ.பன்னீர் செல்வம் இரங்கல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மே தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட காயம் மறைவதற்குள், மீண்டும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும், இவற்றினால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் அனைத்து விபத்துகளுக்கும் காரணம் இரசாயனக் கலவையின்போது ஏற்படும் உராய்வுதான். பட்டாசுத் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததும், பாதுகாப்பு விதிமுறைகளை தொழிற்சாலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை அரசு கண்காணிக்காததும்தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம். இதன் விளைவாக மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. எனவே, இனி வருங்காலங்களிலாவது இந்தக் கடமையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
-
May 09, 2024 19:27 ISTவிஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிய விருதை, பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.
-
May 09, 2024 19:27 ISTவிஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிய விருதை, பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.
-
May 09, 2024 18:54 IST12 இடங்களில் சதம் அடித்த வெயில்; எந்தெந்த இடங்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று 100டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவான இடங்கள் வருமாறு.
கரூர் பரமத்தி - 107°F, ஈரோடு - 107°F, நாமக்கல் - 103°F, மதுரை விமான நிலையம் - 103°F. திருச்சி - 103°F, சேலம் - 102°F, மதுரை நகரம் - 101°F, கோவை - 101°F, பாளையங்கோட்டை - 101°F, திருப்பத்தூர் - 101°F, திருத்தணி - 100°F, வேலூர் - 100°F -
May 09, 2024 18:27 ISTசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்
சிவகாரி அருகே கீழ்திருத்தங்கல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
May 09, 2024 18:25 ISTராயன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு
தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரின் 50-வது படமாக ராயன் படத்தின் அடங்காத அசுரன் என்ற முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
-
May 09, 2024 18:24 ISTநீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் 13 பேர் கைது
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பெற்றோர் மற்றும் தேர்வு எழுதிய மாணவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு குறித்து தேசிய தேர்வு முகமை இன்னும் உறுதியான தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
May 09, 2024 18:08 ISTநாய் கடித்து சிறுமி படுகாயம் : தமிழகத்தில் நாய் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடு
சென்னையில் 5 வயது சிறுமி ராட்வீலர்ஸ் நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த விவகாரத்தில், தமிழகத்தில ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக் உட்பட 23 வகை நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வகை நாய் கலப்பினங்கள் இறக்குமதி, இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வகை நாய்களை வைத்திருப்போர் உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும் என்றும் எத்தரவிட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது
-
May 09, 2024 18:04 ISTநெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரண வழக்கு : போலீசாருக்கு வலுக்கும் சந்தேகம்
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், மாயமான ஜெயக்குமாரின் செல்போன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
May 09, 2024 18:03 ISTநெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் தாமதமாகும் என அறிவிப்பு
இணை ரயில் தாமதமாக வருவதால், நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் இன்று தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 6.45 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணியளவில் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
May 09, 2024 16:58 ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது : அமலாக்கத்துறை சார்பில் மது தாக்கல்
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மது தாக்கல் செய்துள்ள நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கூடாது என அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
-
May 09, 2024 16:55 ISTவகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை : மருத்துவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க மறுப்பு
தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்தது நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது,
-
May 09, 2024 16:35 ISTதிருமணமாக இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
27 வருடங்களாக தான் ஆண் என தெரியாமல் பெண்ணாக வாழ்ந்து வந்த லி யுவான் என்ற நபர், வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இன்மையும், பெண்ணுக்குரிய ஹார்மோன்களும் குறைவாக சுரந்துள்ளன. ஆனால் ஆண்களுக்குரிய ஹார்மோன் சரியான அளவில் சுரந்துள்ளது.
இந்த குறைபாடுகள் குறித்து மருத்துவமனையில் பரிசோதித்தபோது, ஆணுக்குரிய பிறப்புறுப்பு வயிற்றுக்குள் வளர்ந்து வந்ததை கவனித்த மருத்துவர்கள், அதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
-
May 09, 2024 14:42 ISTவருமான வரித்துறை அதிகாரி போல் மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது
சிவகாசியில் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி மிரட்டி, பட்டாசு விற்பனையாளர் சௌந்தர்ராஜன் என்பவரிடம் ரூ. 50 லட்சம் கேட்டு ரூ.10 லட்சம் பெற்ற கருப்பசாமி, ரமேஷ், சுப்பிரமணி, ஓட்டுநர் மகேஷ் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
May 09, 2024 14:40 IST'யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்து இது தான் சரியான நேரம்': சென்னை ஐகோர்ட் கருத்து
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன் ஜாமின் கோரிய யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிஸ் ஜெரால்ட் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், "நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற, தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்" என்று நீதிபதி குமரேஷ் பாபு கருத்து தெரிவித்துள்ளார்.
-
May 09, 2024 14:38 ISTநாய்கள் கடித்து சிறுமியின் மருத்துவ செலவிற்கு முன்பணம்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ராட்வீலர் நாய்கள் கடித்து சிறுமி படுகாயமடைந்தார். அந்த சிறுமியின் மருத்துவ செலவிற்கு மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் முன்பணம் வழங்கப்பட்டது. சிறுமிக்கு இன்று பகல் அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது.
-
May 09, 2024 14:11 ISTவேலூரில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வேலூர் மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியாத்தத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கை அம்மன் திருக்கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 09, 2024 14:04 ISTயூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் 2 வழக்குகளில் கைது
சென்னையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர், வீரலட்சுமி ஆகிய இருவர் அளித்த புகாரில் ஏற்கனவே வழக்குப்பதிவு இந்த இரு வழக்குகளிலும் யூ டியூபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று கைது செய்தனர் இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5ஆக உயர்வு.
-
May 09, 2024 14:02 ISTதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. நெல்லை, தேனி, தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
May 09, 2024 13:15 ISTசென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
-
May 09, 2024 13:10 ISTவாகனங்களில் படங்கள் ஒட்ட தடையா? : நீதிமன்றம் நோட்டீஸ்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் - மனு
-
May 09, 2024 13:01 ISTதலைமைச் செயலர், டி.எஸ்.பி.எஸ்.சி செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் முடித்து வைப்பு
டி.என்.பி.எஸ்.சி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்த விவகாரம் : தலைமைச் செயலர் மற்றும் டி.எஸ்.பி.எஸ்.சி செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் முடித்து வைப்பு கடந்த 2003 ஆம் மார்ச் மாதத்திற்கு பிறகு வெளியான சீனியாரிட்டி பட்டியலை உச்சநீதிமன்ற 2023 ஆம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த உத்தரவு.
-
May 09, 2024 12:33 ISTமு.க.ஸ்டாலினுடன் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி சந்திப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி சந்திப்பு.
-
May 09, 2024 12:16 ISTஆந்திரா : தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனை: ரூ.8 கோடி பறிமுதல்
ஆந்திரா, என்டிஆர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் உரிய ஆவணங்களின்றி லாரியில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட போது சோதனையில் பணம் சிக்கியது
-
May 09, 2024 12:14 ISTசவுக்கு சங்கர் வழக்கு: தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாய் அளித்த மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்" தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சிறையில் தாக்குதல் நடத்தியது குறித்து நீதி விசாரணை கோரி, சங்கரின் தாய் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தது நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு சிறையில் சவுக்கு சங்கரை விசாரித்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிக்கை தாக்கல்.
-
May 09, 2024 12:09 ISTபள்ளி பேருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வு
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருவண்ணாமலை ஆயுதப்படை வளாகத்தில் இன்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் ஆகியோர் அனைத்து பேருந்துகளின் தரத்தையும் உறுதித் தன்மையும் ஆய்வு செய்தனர்!
-
May 09, 2024 12:00 ISTவேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
-
May 09, 2024 11:51 ISTஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 2வது நாளாக திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னையில் இருந்து சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய 8 விமானங்கள் ரத்து.
-
May 09, 2024 11:48 ISTமீனவர் வலையில் சிக்கிய திமிங்கல எச்சம்
ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய எச்சத்தை விற்பனை செய்ய வந்தவரை கைது செய்து எண்ணூர் போலீசார்.
-
May 09, 2024 11:19 ISTஅரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி
பெண் போலிசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி.
-
May 09, 2024 11:14 ISTதலைமை தேர்தல் ஆணையரை இந்தியா கூட்டணிக்கட்சி தலைவர்கள் சந்திக்கும் நேரத்தில் மாற்றம்
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் I.N.D.I.A. கூட்டணிக்கட்சி தலைவர்கள் சந்திக்கும் நேரத்தில் மாற்றம்; டெல்லியில் நாளை மாலை 5 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையரை I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர்
-
May 09, 2024 11:08 ISTபிரான்ஸ் நாட்டிற்கு வந்தடைந்த ஒலிம்பிக் தீபம்
கிரீஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீபம், 12 நாட்கள் பயணத்திற்கு பிறகு, 128 ஆண்டுகள் பழமையான கப்பல் மூலம் பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்ச்செய்லிக்கு வந்தடைந்தது.
-
May 09, 2024 10:46 ISTதாம்பரம் பகுதிகளில் மிதமான மழை
சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், செம்பாக்கம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை. ஒன்றரை மாதமாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று வெயில் தாக்கம் சற்று குறைவாக இருந்ததாக பொதுமக்கள் பெருமூச்சு.
-
May 09, 2024 10:27 ISTஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: 25 பேர் பணி நீக்கம்
ஒரே நாளில் மொத்தமாக விடுப்பு எடுத்த விவகாரம் - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளர்கள் 25 பேர் அதிரடியாக பணி நீக்கம். ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் விடுப்பு காரணமாக கடந்த 2 நாட்களில் 86 விமான சேவைகள் ரத்தாகின - பயணிகள் அவதி
வேலைக்கு செல்லத் தவறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விதிகளை மீறுவதாக தெரிவித்து பணி நீக்கம் செய்து உத்தரவு
இடையூறுகளைத் தவிர்க்க அடுத்த சில நாட்களுக்கு குறைவான விமானங்களை இயக்குவோம் - ஏர் இந்தியா
நாளொன்றுக்கு சுமார் 360 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா
-
May 09, 2024 09:57 ISTதுபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானம் ரத்து
சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக ரத்து
இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை மீண்டும் துபாய்க்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 09, 2024 09:57 ISTசவுக்கு சங்கர் மீது புதிதாக 2 வழக்குகள் பதிவு
கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சவுக்கு சங்கரை கைது செய்வதற்கான ஆவணங்களை கொடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்
சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், புதிதாக 2 வழக்குகள் பதிவு
இந்த வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தீவிரம்
-
May 09, 2024 09:14 ISTசென்னையில் பசுமை பந்தல் அமைப்பு
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு. தேவைப்படும் இடங்களிலும் பசுமை பந்தல் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு
-
May 09, 2024 08:49 ISTவாக்கு எண்ணும் மையத்தில் 2 கேமராக்கள் பழுது
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது
மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 கேமராக்கள் பழுதாகின. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.
-
May 09, 2024 08:42 IST7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசனது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 09, 2024 08:42 ISTபஞ்சாப்- பெங்களூரு அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் தொடரின் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் இன்று மோதல். தரம்சாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது
-
May 09, 2024 08:24 ISTநாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பு. http://tnresults.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணைதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.