Tamil News : உலகின் பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பலருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாம் அனைவரும் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும் மாஸ்க் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவதை மறந்துவிடக்கூடாது என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் உரையாற்றினார். மேலும், இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகளும் 90,000 குழந்தைகளுக்கான கொரோனா படுக்கைகளும் தயாராகவுள்ளன என்று குறிப்பிட்டார். இந்தியாவில் 15-18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல்(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படும். அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
சுனாமி தாக்கி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவு
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி, இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நிலைகுலைய வைத்தது. அத்துயர சம்பவம் நடந்து ஆண்டுகள் 17 ஆன நிலையில், தமிழகத்தில் 17-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர், நாகை கடற்கரைகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பெட்ரோல் - டீசல் விலை
சென்னையில் 52-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:17 (IST) 26 Dec 2021ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சிறை செல்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்: “ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சிறை செல்வது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.
- 21:14 (IST) 26 Dec 2021பிரபல பின்னணி பாடகர், நடிகர் மாணிக்க விநாயகம் மரணம்
பிரபல பின்னணி பாடகர் மற்றும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.
- 21:10 (IST) 26 Dec 2021முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 மோசடி புகார்கள்
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் மீது மேலும் 3 மோசடி புகார்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிபாளர் அலுவலகத்தில் வந்துள்ளன.
சிவகாசியைச் சேர்ண்த நபருக்கு உதவி மக்கள் தொடர்பாளர் பணியும் மதுரையைச் சேர்ந்த நபருக்கு மாநகராட்சி அலுவலக உதவியாளர் பணியும் கடலூரைச் சேர்ந்த நபருக்கு இந்து அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் பணியும் வாங்கித் தருவதாகக் கூறி தலா 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன் தெரிவித்துள்ளார்.
- 20:17 (IST) 26 Dec 2021ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினா் சென்னை வருகை
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 4 போ் கொண்ட மத்திய குழுவினா் டெல்லியிலிருந்து சென்னை வருகை தந்துள்ளனர்.
- 20:12 (IST) 26 Dec 2021நாளை முதல் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு
டெல்லியில் ஒமிக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் நாளை முதல் (டிசம்பர் 27) இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
- 18:24 (IST) 26 Dec 2021பழனி அருகே வரதமாநதி அணையில் தவறி விழுந்து 3 பேர் உயிரிழப்பு; செல்ஃபி எடுத்தபோது விபரீதம்
பழனி அருகே வரதமாநதி அணையில் தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். செல்ஃபி எடுத்தபோது தவறி விழுந்ததனர்.
- 17:44 (IST) 26 Dec 2021ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்: “முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் சரணடைந்து பின் ஜாமின் பெற்று தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
- 17:22 (IST) 26 Dec 2021விஜய் ஹசாரே கோப்பையை வென்றது இமாச்சலப் பிரதேசம் அணி
விஜய் ஹசாரே கோப்பை 2021-22 இறுதி ஆட்டத்தில், தமிழ்நாடு அணியை எதிர்கொண்ட இமாச்சல பிரதேச அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் VJD முறையில் அபார வெற்றி பெற்றது. இமாச்சல பிரதேசம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது.
- 17:13 (IST) 26 Dec 2021இந்திய தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் அரை சதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான "பாக்சிங் டே டெஸ்ட்" போட்டியில் இந்திய தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் அரை சதம் அடித்துள்ளார்
- 17:04 (IST) 26 Dec 2021அரசுப் பேருந்து வீட்டின் மீது மோதி விபத்து - ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
கடலூரில் அரசுப் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியான நிலையில், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- 16:42 (IST) 26 Dec 2021நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ25 லட்சம் வழங்க வேண்டும் - ஈபிஎஸ்
நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ25 லட்சம் வழங்க வேண்டும். நீட் ரத்து செய்யும் வரை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
- 16:11 (IST) 26 Dec 2021ஜம்மு காஷ்மீர்; காவல் நிலையம் மீது குண்டு வீச்சு
ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்
- 15:57 (IST) 26 Dec 2021பள்ளி, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை – சென்னை மாநகராட்சி
பள்ளி, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. குளிர்சாதன வசதிகளை பயன்படுத்துக் கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது
- 15:37 (IST) 26 Dec 2021பூஸ்டர் டோஸ் அறிவிப்பு - ராகுல் காந்தி வரவேற்பு
இந்தியாவில் ஜனவரி 10 முதல் முன்னுரிமை அடிப்படையில் பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்
- 15:22 (IST) 26 Dec 2021மத்திய பிரதேசத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று
மத்திய பிரதேசத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
- 15:03 (IST) 26 Dec 2021பிரதமர் மோடி நாளை இமாச்சல் பிரதேசம் பயணம்
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க, ஒரு நாள் பயணமாக நாளை இமாச்சல் பிரதேசம் மாநிலம் மண்டிக்கு பிரதமர் மோடி செல்கிறார்
- 14:54 (IST) 26 Dec 2021பீகாரில் கொதிகலன் வெடித்ததில் 6 பேர் பலி
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
- 14:30 (IST) 26 Dec 2021மின் கட்டண ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் : ஓபிஎஸ்
தமிழகத்தில் மின் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்
- 14:14 (IST) 26 Dec 2021நளினிக்கு நாளை முதல் 30 நாட்கள் பரோல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு நாளை முதல் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது
- 14:09 (IST) 26 Dec 2021அமைச்சர் பதவி ஆசை இல்லை - கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை என கோவையில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
- 13:52 (IST) 26 Dec 2021இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான்
இமாச்சல பிரதேசத்தில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து திரும்பியவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 13:37 (IST) 26 Dec 2021சென்னையில் 120 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணி
சென்னையில் ரூபாய்.120 கோடி செலவில் 45 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
- 13:21 (IST) 26 Dec 2021பாக்சிங் டே டெஸ்ட்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி முதலில் பேட்டிங்
செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
- 12:43 (IST) 26 Dec 2021கர்நாடகாவில் இரவு ஊரடங்கு
கர்நாடகாவில் வரும் 28 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12:00 (IST) 26 Dec 2021நல்லகண்ணுவுக்கு முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு பிறந்தநாளையொட்டி, சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
- 11:22 (IST) 26 Dec 2021இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 422ஆக அதிகரிப்பு
இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா -108, டெல்லி -79, குஜராத்-43, தெலங்கானா-41,கேரளா-38,தமிழ்நாடு -34, கர்நாடகா-31,ராஜஸ்தான்-22 பேரும் பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
- 10:15 (IST) 26 Dec 2021நெடுஞ்செழியன் சிலை திறப்பு
நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அவரது சிலை இன்று திறக்கப்படவுள்ளது. சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நிறுவப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
- 10:15 (IST) 26 Dec 20214 பேர் கொண்ட மத்தியக்குழு இன்று சென்னை வருகை
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட மத்தியக்குழு இன்று சென்னை வருகின்றனர். இந்தியாவில் 10 மாநிலங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10:13 (IST) 26 Dec 2021இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422-ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- 10:11 (IST) 26 Dec 2021இந்தியாவில் மேலும் 6,987 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நேற்று புதிதாக 6,987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால், மொத்த பாதிப்பு 3,47,79,815-ஆக அதிகரிப்பு. மேலும், கொரோனா பாதிப்பால் 162 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, பலி எண்ணிக்கை 4,79,682-ஆக அதிகரித்துள்ளது.
- 10:10 (IST) 26 Dec 2021கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட தமிழகம்
இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம். மத்திய அரசின் உத்தரவுப்படி ஜனவரி 3-ம் தேதி முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்றும் 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என்று அமைச்சர் மா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.