Tamil News : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது. டெல்லியில் உள்ள இல்லத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கன்டோண்ட்மென்ட் மயானத்திற்கு இன்று பிற்பகல் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று முழு கடையடைப்பு.
குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூருவில் தீவிர சிகிச்சை
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங்கிற்கு, பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வருணுக்கு 80 சதவீத அளவுக்குத் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மற்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பெங்களூர் விமானப்படை மருத்துவனைக்கு சென்று, அங்கு குரூப் கேப்டன் வருண்சிங்கிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.
கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் சிறையில் அடைப்பு
சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதற்காக, யூடியூபர் மாரிதாஸ் மீது மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யக் கொண்டு சென்ற போது, காவல்துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிபதி சுந்தர காமேஸ்வர், மாரிதாஸை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாரிதாஸை, மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்ற போலீசார், பின்னர் உத்தமபாளையம் கிளை சிறையில் அடைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:55 (IST) 10 Dec 2021இங்கிலாந்தில் மேலும் 448 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
இங்கிலாந்தில் மேலும் 448 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இதுவரை 1,265 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- 20:07 (IST) 10 Dec 2021ஜெ அத்தை பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை - ஜெ தீபா
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நுழைந்த அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா ஊடகங்களிடம் கூறுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஜெ அத்தை பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
- 19:36 (IST) 10 Dec 2021ஜனவரி 23-ல் வடபழனி கோயில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
சென்னை வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
- 19:14 (IST) 10 Dec 2021வேதா இல்லத்தின் எந்த அறையும் சீல் வைக்கப்படவில்லை - ஜெ. தீபா
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நுழைந்த அவருடைய அண்ணன் மகள் ஜெ. தீபா: “சென்னை, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தின் எந்த அறையும் சீல் வைக்கப்படவில்லை. அதிமுக மேல்முறையீடு செய்தால் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார்.” என்று தெரிவித்துள்ளார்.
- 18:46 (IST) 10 Dec 2021கோயில் குத்தகை பணம் கொடுக்காவிட்டால் அடுத்த பிறவி வவ்வால், பெருச்சாளிதான் - மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிகாச்சார்யார்: “கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால் பெருசாளியாக பிறப்பார்கள். தற்போது பலருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை; அதனால், நல்ல சம்பளம், அழகு இருந்தாலும் பெண் கிடைப்பதில்லை. பெண் கிடைத்தாலும் நல்ல மாமியர் கிடைப்பது இல்லை. மாமியார் நல்ல விதமாக அமைந்தாலும் மருமகள் சரியாக இருப்படில்லை.” என்று கூறியுள்ளார்.
- 18:15 (IST) 10 Dec 2021தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என விதிகள் இல்லை - ஐகோர்ட்
2018ல் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்காதது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து: தமிழ்த் தாய் வாழ்த்து என்பது இறைவணக்கப் பாடல். அது தேசிய கீதம் அல்ல. தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என விதிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
- 17:39 (IST) 10 Dec 2021மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தீவிரமாக கண்காணிக்கப்பட போவதாக மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், “யானைகள் இறப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. யானை வழித்தடங்களில் ரயில்களை மெதுவாக இயக்கினால் என்ன?” என கேள்வியெழுப்பியுள்ளது.
இதுபோன்று யானைகள் இறப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை ஜனவரி 21ல் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதிஷ்குமார் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 17:34 (IST) 10 Dec 2021குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல்!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்ற வந்த 2 கடைகளுக்கு காவல்துறை சீல் வைத்தது.
சோதனையில் 2 கடைகளில் இருந்து 100 ஹான்ஸ் பாக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ஹான்ஸ் பாக்கெட்களை பறிமுதல் செய்த போலீஸ் 2 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
- 17:33 (IST) 10 Dec 2021குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல்!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்ற வந்த 2 கடைகளுக்கு காவல்துறை சீல் வைத்தது.
சோதனையில் 2 கடைகளில் இருந்து 100 ஹான்ஸ் பாக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ஹான்ஸ் பாக்கெட்களை பறிமுதல் செய்த போலீஸ் 2 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
- 17:23 (IST) 10 Dec 2021சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அடுத்த 2-3 நாட்களுக்கு சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
- 17:10 (IST) 10 Dec 2021ராணுவ மரியாதையுடன் முப்படைத் தளபதி பிபின் ராவத் உடல் தகனம்; இறுதிச் சடங்கு செய்த மகள்கள் !
டெல்லி பிரார் சதுக்கத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் முழு ராணுவ மரியாதை உடன் 17 - துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டன. மகள்கள் கிருத்திகா மற்றும் தரணி அவர்களின் பெற்றோருக்கு இறுதிச் சடங்கு செய்தார்கள்.
watch | Delhi: cdsgeneralbipinrawat laid to final rest with full military honours, 17-gun salute. His last rites were performed along with his wife Madhulika Rawat, who too lost her life in tamilnaduchoppercrash.
— ANI (@ANI) December 10, 2021
Their daughters Kritika and Tarini performed their last rites. pic.twitter.com/uTECZlIhI0Delhi: cdsgeneralbipinrawat laid to final rest with full military honours. His last rites were performed along with his wife Madhulika Rawat, who too lost her life in tamilnaduchoppercrash.
— ANI (@ANI) December 10, 2021
Their daughters Kritika and Tarini performed their last rites. pic.twitter.com/ijQbEx9m51 - 16:35 (IST) 10 Dec 2021முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் இறுதி அஞ்சலி!
கன்டோன்மென்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள்கள் கிருத்திகா மற்றும் தரணி அவர்களின் பெற்றோருக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அவர்களுடன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Delhi: Daughters of cdsgeneralbipinrawat and Madhulika Rawat - Kritika and Tarini - pay tribute to their parents. Other members of the family also join them in paying last respects. pic.twitter.com/Wc88k8oZaF
— ANI (@ANI) December 10, 2021 - 16:25 (IST) 10 Dec 2021பிபின் ராவத் உடலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி!
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Delhi: Defence Minister Rajnath Singh pays tribute to cdsgeneralbipinrawat. pic.twitter.com/1a02c6COaU
— ANI (@ANI) December 10, 2021 - 16:12 (IST) 10 Dec 2021முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம்; வெளிநாட்டு அதிகாரிகள் அஞ்சலி
கன்டோன்மென்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் மற்றும் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Delhi: Emmanuel Lenain, Ambassador of France to India and Alex Ellis, British High Commissioner to India pay tribute to cdsgeneralbipinrawat and his wife Madhulika Rawat. pic.twitter.com/c6mRPT7znM
— ANI (@ANI) December 10, 2021 - 16:10 (IST) 10 Dec 2021முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம்; உயர் அதிகாரிகள் அஞ்சலி!
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு ராணுவம் மற்றும் அண்டை நாடுகளின் தூதரக உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்கிறார்கள்.
Delhi: Defence Attaches of different nations pay tribute to cdsgeneralbipinrawat pic.twitter.com/fUWs5kvgWA
— ANI (@ANI) December 10, 2021 - 15:53 (IST) 10 Dec 2021குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: அவதூறு கருத்து தெரிவித்தவர் கைது
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த ஷிபின் என்ற 26 வயது இளைஞர், தனது டுவிட்டர் பக்கத்தில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
நல்ல பீஸா சிக்கிருக்கு @tnpoliceoffl pic.twitter.com/3U7I6ZhEOL
— Savukku_Shankar (@savukku) December 9, 2021 - 15:46 (IST) 10 Dec 2021முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்திற்கு தொடங்கிய நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் வெளிநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
- 15:30 (IST) 10 Dec 2021அரசு விழாக்களில் இனி தமிழ்த்தாய் வாழ்த்து ரெக்கார்டர்களில் போடக்கூடாது! தமிழக அரசு உத்தரவு!
தமிழக அரசு விழாக்களில், இனி தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கி, தமிழக அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது. ரெக்கார்டர்களில் பாட்டை போடுவதால், யாரும் வாய்கூட அசைக்கவில்லை. அதற்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வைக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 15:23 (IST) 10 Dec 2021பிபின் ராவத் உண்மையிலேயே அன்புடன் நினைவுகூரப்படுவார்: பிரான்ஸ் தூதர்!
ஒரு சிறந்த இராணுவத் தலைவர், அன்பான, உறுதியான மற்றும் சிறந்த நண்பராக எனது நாட்டுடன் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல அவரை நாங்கள் நினைவுகூருவதால், அந்த விழாவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த விரும்பினேன். உண்மையிலேயே அன்புடன் நினைவுகூரப்படுவார்: இம்மானுவேல் லெனைன், பிரான்ஸ் தூதர்
- 15:17 (IST) 10 Dec 2021இந்தியா ஒரு சிறந்த தலைவனை இழப்பது வருத்தம் அளிக்கிறது: பிரிட்டிஷ் உயர் ஆணையர்!
பிபின் ராவத் மறைந்தது நம்பமுடியாத வருத்தமாக இருக்கிறது. இங்கிலாந்தில் நாங்கள் பின்பற்றும் கூட்டு பாதுகாப்பு அணுகுமுறையை அவர் தொடங்கியதால் அவர் ஒரு முன்னோடியாக இருந்தார். இந்தியா ஒரு சிறந்த தலைவன், ஒரு சிப்பாய் மற்றும் ஒரு நல்ல மனிதனை இழப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது: அலெக்ஸ் எல்லிஸ், பிரிட்டிஷ் உயர் ஆணையர்.
- 15:05 (IST) 10 Dec 2021குஜராத் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
குஜராத் | ஜாம்நகரில், ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் அவர்கள் இருவருக்கும் ஓமிக்ரான் இருப்பது தெரியவந்தது. 3 பேருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் விஜய்குமார் காரடி தெரிவித்துள்ளார்.
- 15:01 (IST) 10 Dec 2021ஹெலிகாப்டர் விபத்து: குமரியில் பொய் தகவல் பரப்பியவர் கைது!
ராணுவ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பாதுகாப்பு வீரர்கள் டிசம்பர் 8, 2021 அன்று தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொய் செய்திகளை பரப்பியதாக , கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷபிந்த் தாசன் என்ற 24 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஹெலிகாப்டர் விபத்து குறித்து பொய் தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 14:46 (IST) 10 Dec 2021மறைந்த ராணுவ ஜெனரல் இறுதிச் சடங்கில் பல நாட்டு இராணுவ தளபதிகளும் பங்கேற்பு!
இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் இராணுவத் தளபதிகள், இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கின்றனர்.
- 14:25 (IST) 10 Dec 2021மறைந்த ராணுவ ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்திற்கு தொடங்கியது.
watch | Delhi: The funeral procession of cdsgeneralbipinrawat leaves from his residence to Brar Square crematorium in Delhi Cantonment pic.twitter.com/ysWIGSEjDk
— ANI (@ANI) December 10, 2021 - 14:18 (IST) 10 Dec 2021மறைந்த சிடிஎஸ் ஜெனரல் உடலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அஞ்சலி!
புதன்கிழமை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய காட்சி!
Union Ministers Nirmala Sitharaman, Mansukh Mandaviya, Smriti Irani, and Sarbananda Sonowal paid tribute to CDS General Bipin Rawat who lost his life in the IAF chopper crash on Wednesday pic.twitter.com/cdqVXHzJEx
— ANI (@ANI) December 10, 2021Delhi | External Affairs Minister (EAM) S Jaishankar pays tribute to CDS Gen Bipin Rawat who lost his life in the IAF chopper crash on Wednesday pic.twitter.com/upUbFz0gNM
— ANI (@ANI) December 10, 2021 - 14:14 (IST) 10 Dec 2021மறைந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உ.பி. முதல்வர்!
புதன்கிழமை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்துக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார்.
Delhi | Uttar Pradesh Chief Minister Yogi Adityanath pays tribute to CDS Gen Bipin Rawat who lost his life in the IAF chopper crash on Wednesday pic.twitter.com/bQDZrMaIdd
— ANI (@ANI) December 10, 2021 - 14:11 (IST) 10 Dec 2021மறைந்த முப்படை தலைமை தளபதி உடலுக்கு தலைமை நீதிபதி இறுதி மரியாதை!
மறைந்த முப்படை தலைமை தளபதி உடலுக்கு இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா இறுதி மரியாதை செலுத்தினார்!
Chief Justice of India NV Ramana pays last respects to cdsgeneralbipinrawat pic.twitter.com/ymUbnm4haP
— ANI (@ANI) December 10, 2021 - 14:07 (IST) 10 Dec 2021மறைந்த ராணுவ ஜெனரல் உடலுக்கு முப்படைகளின் தளபதிகளும் அஞ்சலி!
ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, இந்திய விமானப்படையின் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் ஆகிய மூன்று ராணுவத் தலைவர்களும் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய காட்சி!
Delhi: The three service chiefs - Army Chief Gen MM Naravane, IAF chief Air Chief Marshal VR Chaudhari & Navy Chief Admiral R Hari Kumar pay tribute to cdsgeneralbipinrawat. pic.twitter.com/syQv17b79F
— ANI (@ANI) December 10, 2021 - 14:04 (IST) 10 Dec 2021இது எப்போதுமே என் அத்தை வீடு.. ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு வருகை தந்த தீபா!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை, தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர், வேதா இல்ல சாவியை, தீபக், தீபாவிடம் இன்று ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து இருவரும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது உருவப்படத்துக்கு இருவரும் மாலை தூவி மரியாதை செய்தனர். அப்போது பேசிய தீபா: என்னைப் பொருத்தவரை இது எப்போதுமே என் அத்தை வீடு; இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதே முதல் பணி. அம்மா அவர்கள் இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை; ஆனால், இப்போதைய அதிமுக தலைவர்கள் இந்த வீடு இல்லையென்றால் அரசியல் இல்லை என்பது போல செயல்பட்டு வருகின்றனர் என்று பேசினார்!
- 13:57 (IST) 10 Dec 2021திருவள்ளூர்: தடுப்பூசி போட்டவர்கள் மட்டும்தான் தியேட்டரில் அனுமதி!
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தியேட்டர்களில் அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் அறிவித்துள்ளார். மேலும் கோயில் மற்றும் டாஸ்மாக் கடைகளிலும் தடுப்பூசி போட்டிருந்தால் தான் அனுமதி என்பது விரைவில், கொண்டுவரப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்!
- 13:26 (IST) 10 Dec 2021மக்களவையில் எம்.பி. ரவிக்குமார் பேச்சு
எந்தவொரு இயற்கை பேரிடராக இருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு தான் அதிக பாதிப்பு என்று மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் பேசியுள்ளார்.
- 13:24 (IST) 10 Dec 2021தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை - காவல்துறை
நீலகிரி, குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 13:07 (IST) 10 Dec 2021மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்
தேசிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநில கல்வி கொள்கையை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம். 3ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்ற தேசிய கல்வி கொள்கை ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.
- 13:05 (IST) 10 Dec 2021வேதா இல்லத்தின் சாவி தீபா தீபக் ஆகியோரிடம் ஒப்படைப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவி அவரின் வாரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ள தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்துள்ளார்.
- 12:35 (IST) 10 Dec 2021எதிர்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு
நெல்லையில் கல்குவாரிகளில் நடைபெற்ற கனிமவள கடத்தல் மீது நடவடிக்கை எடுத்த துணை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று எதிர்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
- 12:34 (IST) 10 Dec 2021வதந்திகளை பரப்ப வேண்டாம் - இந்திய விமானப்படை
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான உண்மைகள் விரைவில் வெளிவரும், அதுவரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று - இந்திய விமானப்படை கூறியுள்ளது.
- 12:34 (IST) 10 Dec 2021வதந்திகளை பரப்ப வேண்டாம் - இந்திய விமானப்படை
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான உண்மைகள் விரைவில் வெளிவரும், அதுவரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று - இந்திய விமானப்படை கூறியுள்ளது.
- 11:50 (IST) 10 Dec 2021போக்குவரத்து கழக ஊழியர்கள் குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் - டிடிவி தினகரன்
கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் நிகழ்ந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன சமூக பொறுப்பு குறித்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்றும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
- 11:49 (IST) 10 Dec 2021பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே, மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கே.ஆண்டனி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி அ.ராசா, மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
- 11:46 (IST) 10 Dec 2021பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே, மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கே.ஆண்டனி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி அ.ராசா, மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
- 11:16 (IST) 10 Dec 2021சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் 2.5 ஹெக்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா திறக்கப்பட்டது. சென்னை, தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 11:15 (IST) 10 Dec 2021நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக மோடி ஆலோசனை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், அனுராக் தாகூர், பியூஷ் கோயல் ஆகியோர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார்.
- 11:13 (IST) 10 Dec 2021ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கடிதம்
கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள். ஈடுசெய்ய முடியாத இழப்பில் இருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் பெற வேண்டும் என்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.
- 10:26 (IST) 10 Dec 2021தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 10:25 (IST) 10 Dec 2021அண்ணா பல்கலைக்கழக விடுதியில் கொரோனா பரவல்
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
- 10:23 (IST) 10 Dec 2021அதிகாரி பிரிகேடியர் எல்.எஸ் லிட்டெரின் உடலுக்கு இறுதிச்சடங்கு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அதிகாரி பிரிகேடியர் எல்.எஸ் லிட்டெரின் உடலுக்கு டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
- 09:47 (IST) 10 Dec 2021குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- 09:46 (IST) 10 Dec 2021விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. நாளை முதல் வீடுகளுக்கு செல்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
- 09:45 (IST) 10 Dec 2021ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
கன்னியாகுமரி; நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து நரிக்குறவர்களை இறக்கி விட்ட சம்பத்தை அடுத்து ஓட்டுனர் நெல்சன் மற்றும் நடத்துனர் ஜெயபாலன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- 09:44 (IST) 10 Dec 2021ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா உறுதுணையாக இருக்கும் - மோடி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் உலகளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.