Tamil News Highlights : தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களான மருத்துவர்கள் வினிதா, புர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்னை வந்தடைந்தனர். இவர்கள், தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்வார்கள். மேலும், ஒமிக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரைகள் வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் இன்று இமாச்சல் பயணம்
பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேசம் பயணம் செய்யவிருக்கிறார். அங்கு, ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டம் – பரிசீலனை செய்யக் கோரிக்கை
அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
என்றும் அதனால், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் 53-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை சத்தியம் தியேட்டர் 6 ஸ்கிரீன்ல 5ல் RRR ரிலீஸ் செய்வோம் என மேடையில் ராஜமௌலிக்கு உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்
சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து உணவுகளும் தரமான முறையில் வழங்கப்படுகிறது. எந்த ஒரு சத்துணவு மையத்திலும் கெட்டுப்போன அல்லது தரமற்ற முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தெருவாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியரையே சாரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்த பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகத்தின் உடல் இன்று இறுதிச்சடங்கிற்கு பின்பு கோட்டூர்புரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2வது டோஸ் போடப்பட்டு 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது.
கேரளாவில் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில்
டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டு டிசம்பர் 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சசிகலா: “ஒருதலைபட்சமாக செயல்படும் ஆளுங்கட்சியினரை மக்கள் புறக்கணிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எம்ஜிஆர் நினைவிடம் செல்ல அனுமதி மறுத்த நிலையில்,திமுகவினர் மட்டும் பொதுக்கூட்டம் நடத்துவது சரியா? சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அரசு கடைபிடிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
பொன்னேரி பேருந்து நிலையம் எதிரே இன்று அதிகாலையில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ப்ளே ஸ்டோர் ரசீது கொள்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரி கூகுள் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னையில் இருந்து சார்ஜாவிற்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ.1.15 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு காரணமாக பலர் தங்களது பணத்தை இழந்துள்ள நிலையில். இந்த ஆன்லைன் சூதாட்டம்காரணமாக உயிர்ப்பலிகள் தொடர்ந்து அரங்கேரி வருகிறது. இதனை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில்,அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பேருந்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
சோமாலியாவில் ஊழல் மற்றும் நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள பிரதமர் முகமது ஹுசைன் ரோபிளை பணியிடை நீக்கம் செய்து அதிபர் முகமது அப்துல்லாஹி அதிரடி பிறப்பித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட்ட உள்ள நிலையில், மாநில அரசு புதிய அமைச்சர்கள் நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்பார்கள் என்று அரியானா அரசு அறிவித்துள்ளது.
அன்னை தெரசா சேவை நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 22 – அதிகமான நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.75 ஆக நிலைபெற்றது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் இன்று முதல் தர 30 பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 295.93 புள்ளிகள் உயர்ந்து 57,420.24 புள்ளிகளில் நிலைபெற்றது. முதல் தர 50 பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 82.50 புள்ளிகள் உயர்ந்து 17,086.25 புள்ளிகளில் நிலைபெற்றது
ராஜஸ்தானில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் 37 பேர் குணமடைந்துள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
வேப்பனப்பள்ளி அருகே தவறான சிகிச்சை அளித்ததால் பிரபாகரன் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், மருந்தகம் நடத்திவரும் தேவராஜ் அளித்த தவறான சிகிச்சையால்தான் பிரபாகரன் உயிரிழந்ததாக வட்டார மருத்துவ அலுவலர் உறுதி செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றுடன் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றுடன் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கோவாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்துவந்த 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகத் திட்டத்தைச் செயல்படுத்த முதல் தவணையாக ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் தலைநகர் சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி, பெற்றுள்ள நிலையில்,இது பஞ்சாப் தேர்தல் வெற்றியின் முன்னோட்டம் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது அனில் தேஷ்முக் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதாக பதியப்பட்ட வழக்கில், அனில் தேஷ்முக்கின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்புகளை கட்டப்படுத்த சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சீனாவின் ஷான்சி மாகாணத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 5வது நாளாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில், முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் என மாநில அரசுத் தெரிவித்துள்ளது.
சோமாலியா நாட்டு பிரதமரின் அதிகாரங்களை பறித்து அதிபர் முகமது அப்துலாஹி உத்தரவிட்டுள்ளார். ராணுவத்துக்குச் சொந்தமான நிலத்தை, அதிகார துஷ்பிரயோகம் செய்து, அபகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சாலையில், சரக்கு லாரி மோதி அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில், பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் உள்பட எட்டு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
புதுக்கோட்டையில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அம்ஜத்கானுக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவொற்றியூர் குடியிருப்பு இடிந்த இடத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், விரிசல் ஏற்பட்டவுடன் மக்கள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அருகே உள்ள கட்டடங்களும் ஆய்வு செய்யப்படும் எனக் கூறினார்.
டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதிவுத் துறை சார்ந்து பணியாற்றும், ஆவண எழுத்தாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆவண எழுத்தர் நல நிதியம் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில், கேரளா முதலிடத்தையும், தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பகத்தில், புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு ஜனவரி 1 முதல் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யலாம். ஆதார் இல்லாதவர்கள் பள்ளி அடையாள அட்டை மூலம் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது!
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது. தேர்தலை நடத்துவதில் உள்ள சாதக பாதக அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்தது. இதில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு, இன்று மாலைக்குள் தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், ஒரு வாரத்தில் மாற்று வீடுகள் வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டியின்போது கூறினார்.
பண்டிகை காலத்தில், ஒமிக்ரான் பரவுவதை தடுக்க மாவட்ட, மாநில அளவில் இரவு ஊரடங்கை பிறப்பிக்கலாம் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை நாடு முழுவதும் வருகிற ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுப்பு!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை நடத்த, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரிவாக்குளம் பகுதியில் 24 வீடுகள் இடிந்து விழுந்தன. சென்னை மாநகரத்தில் மட்டும் இதுபோன்று 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எனவே 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டியில் கூறினார்.
கிருஷ்ணர், ராதா காதலை மறு உருவாக்கம் செய்து நடிகை சன்னி லியோன் நடனத்தில் வெளியான வீடியோவை யூடியூபில் இருந்து நீக்காவிட்டால், எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் இடிந்த குடியிருப்புக்கு பதிலாக மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள்ளார். இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களை சேகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக கடலோர மாவட்டங்களில் வருகின்ற 29ம் தேதி வரை மிதமான கழைக்கு வாய்ப்பு என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
மரபணு பகுப்பாய்வு முடிவுகள் கிடைக்க தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பிற்கு ஆளான 34 நபர்களில் இதுவரை 18 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் 97 நபர்களுக்கு ஒமிக்ரான் அறிகுறிகள் உள்ளன என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடங்களை ஆய்வு செய்ய தர கட்டுப்பாடு குழு அமைக்கப்பட்டுள்ளது. அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் சந்தித்து பேச்சு வார்த்தை. பாஜக – பஞ்சாப் லோக் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என தகவல்