Advertisment

Tamil News Highlights: ”படைப்பால் மட்டுமல்ல பண்பாலும் உயர்ந்தவர்..”! வதந்திகள் வேதனை அளிக்கிறது - ஏஆர் ரஹ்மான் மகன்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AR Rahman 1

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இன்று எந்த மாற்றமுல் இல்லை. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 47.24% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 56.82% ; புழல் - 71.42% ; பூண்டி - 15.69% ; சோழவரம் - 10.55% ; கண்ணன்கோட்டை - 61.00%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Nov 22, 2024 22:19 IST
    பேரிடர் நிதி கேட்டதற்கு... யானைப் பசிக்கு சோளப் பொரி போல் கொடுக்கிறது ஒன்றிய அரசு - தி.மு.க விமர்சனம்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தி.மு.க வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு இயற்கை பேரிடர் நிதியாக ரூ.37,907 கோடி பேரிடர் நிதி கேட்டதற்கு ரூ. 276 கோடியை யானைப் பசிக்கு சோளப் பொரி போல் கொடுக்கிறது ஒன்றிய அரசு. வரிப் பகிர்வில் தமிழ்நாடு அரசை தொடர்ந்து வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு” என்று விமர்சித்துள்ளது.



  • Nov 22, 2024 22:12 IST
    கேரம் உலகக் கோப்பையில் தங்கம் வென்ற காசிமா; மலர் தூவி வரவேற்ற வடசென்னை மக்கள்

    அமெரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கப் பதக்கங்கள் வென்று அசத்திய ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமாவிற்கு, வட சென்னை மக்கள் பட்டாசு வெடித்து மேளதாளங்களோடு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.



  • Nov 22, 2024 21:23 IST
    பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

    பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது; அரையாண்டுத் தேர்வு  டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி தேர்வுகள் முடிந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 22, 2024 21:20 IST
    திருச்சி காவிரி கரையோரத்தில் ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிப்பு

    திருச்சி அந்தநல்லூர் பகுதியில் காவிரி கரையோரத்தில் ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சர் பாதுகாப்பாக மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது; வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உதவியுடன் ராக்கெட் லாஞ்சர் வெடிக்க வைக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.



  • Nov 22, 2024 20:34 IST
    ஸ்டாலின் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; பா.ஜ.க அரசுக்கு எதிராக குரல் எழுப்ப தீர்மானம்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில: தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதியான செயல்பாடுகள் பற்றி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

    பா.ஜ.க அரசின் பாசிசத் தன்மைக்கு எதிராகவும், இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும் தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதியாக எடுப்போம் என இக்கூட்டம் உறுதி அளிக்கிறது.

    சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் வக்ப் வாரிய திருத்தச் சட்டம், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல், மாநிலங்களுக்கான அதிகாரங்களை அபகரிப்பது, நிதி ஒதுக்கீட்டில் - பேரிடர் நிதி வழங்குவதில் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி குறைப்பு, இளைஞர்களை திண்டாட வைக்கும் 9.2 விழுக்காட்டிற்கு மேலான வேலை வாய்ப்பின்மை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையிலான சமூகநீதிக்கு எதிரான  நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக, மக்கள், அரசியல் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக திமுகவின் உயர்நிலைச் செயல்திட்டக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்போம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



  • Nov 22, 2024 20:01 IST
    வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி வழக்கு; 5 மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநகராட்சி, நகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட வைகை ஆறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.



  • Nov 22, 2024 19:54 IST
    வாக்காளர்கள் முகாம்: தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நவ. 22-ம் தேதி விடுமுறை

    தென்காசி மாவட்டத்தில் நாளை (23.11.20240 வாக்காளர்கள் முகாம் நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நவம்பர் 20-ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 22, 2024 18:32 IST
    வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீடு... போலி சான்றைதழில் எம்.பி.பி.எஸ் சேர்ந்த 3 இடங்கள் ரத்து

    வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் (NRI Quota) தமிழ்நாட்டில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேர் போலிச் சான்றிதழ் அளித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான சான்றிதழ் அளித்து அவர்கள் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதில் 3 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25-ம் தேதி நடக்கும் சிறப்புக் கலந்தாய்வில் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த 6 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Nov 22, 2024 18:20 IST
    சேலத்தில் மாணவர்களை கால் அழுத்திவிடச் செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்

    சேலம் கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை தனக்கு கால் அழுத்திவிட சொல்லிவிட்டு ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷின் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவர் குடிபோதையில் பள்ளியில் தூங்குவதாகவும் கூறப்படும் நிலையில் வைரலாகும் வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் ஊடகங்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



  • Nov 22, 2024 17:30 IST
    4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    இன்று இரவு 7 மணிவரை நான்கு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 22, 2024 17:14 IST
    மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Nov 22, 2024 17:03 IST
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு விசாரணையை நவம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Nov 22, 2024 16:48 IST
    மாநில நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி

    திருவள்ளூரில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. நெல்லை மற்றும் கும்பகோணத்தில் நடந்த மோதல் சம்பவங்களை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 22, 2024 16:35 IST
    அதானி விவகாரம் - திருமாவளவன் குற்றச்சாட்டு

    மோடியின் அரசு, அதானியின் அரசாக தொடர்ந்து இயங்கி வருவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசினாலே ஆளுங்கட்சியினர் கொந்தளித்து, அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதானி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.



  • Nov 22, 2024 16:26 IST
    ஊழியரை தாக்கியதாக வி.சி.கவினர் மீது குற்றச்சாட்டு

    சென்னையில், மின் ஊழியரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் துண்டிக்கபட்டதாக தெரிகிறது. இதனால், பணியில் இருந்த ஊழியரை வி.சி.க நிர்வாகிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



  • Nov 22, 2024 16:14 IST
    2025-க்கான பொதுவிடுமுறை தினங்கள் அறிவிப்பு

    2025-ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 நாள்கள் பொதுவிடுமுறையாக குறிப்பிடப்பட்டுள்ளன.



  • Nov 22, 2024 16:13 IST
    அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் இல்லை - கே.பி.முனுசாமி

    "அ.தி.மு.க ஒரு ஜனநாயக கட்சி. இங்கு வாரிசு அரசியில் இல்லை.உழைப்பவர்கள் தானாக உயர்ந்த இடத்திற்கு வர முடியும். தாத்தா, அப்பா அடுத்தது அவரது மகன் என்கிற நிலையில் தான் திமுக தலைவர்கள் வருகிறார்கள்" என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 



  • Nov 22, 2024 16:08 IST
    ஊரப்பாக்கம் அருகே புகுந்த முதலை

    சென்னை, ஊரப்பாக்கம் அருகே ஊருக்குள் முதலை புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி முதலையை மீட்டனர்.



  • Nov 22, 2024 16:08 IST
    நிலம் கொடுத்த விவசாயிகளை கவுரவிக்கும் த.வெ.க 

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து அளித்து கவுரவிக்கும் நிகழ்வு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     



  • Nov 22, 2024 15:46 IST
    கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி 

    காஞ்சிபுரம் அருகே, தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணையை மனைவி ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    மதுபோதையில் கணவர் தினசரி ரகளையில் ஈடுபட்டு வந்ததால் விபரீதம்; பலத்த காயமடைந்த கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை கைது செய்து சோமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.



  • Nov 22, 2024 15:42 IST
    புதிய தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த ஸ்டாலின் 

    காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட துல்லியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.



  • Nov 22, 2024 15:39 IST
    10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை 

    சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



  • Nov 22, 2024 15:23 IST
    ரகுமான் விவாகரத்து - வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்

    " என் தந்தை ஒரு சாதனையாளர், இசை துறைக்கு அவர் அளித்த  பங்களிப்புகளுக்காக மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் ஈன்ற மதிப்புகள், மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் ஒரு சாதனையாளராகவே பார்க்க படுகிறார். அவர் குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை  பரப்புவதை தவிர்க்கவும். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம்" என்று ரகுமான் மகன் அமீன்  கூறியுள்ளார்.



  • Nov 22, 2024 15:18 IST
    பன்றி திருட்டு - முன் ஜாமின் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 3 பன்றிகளை திருடி விற்பனை செய்ததாக பதிவான வழக்கில், முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மீதான வழக்கில், அவரிடம் இருந்து இன்னும் பணம் பறிமுதல் செய்யப்படாததால் முன்ஜாமின் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மனுதாரரான சதீஷ் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். 



  • Nov 22, 2024 15:14 IST
    காரைக்குடியில் ஏர்போட்: மனுவை தள்ளுபடி  செய்த கோர்ட் 

    காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் 2-ம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட விமான ஓடுதள பாதையை சீரமைத்து, விமான சேவையை தொடங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனு தள்ளுபடிசெய்யப்பட்டது. 



  • Nov 22, 2024 14:53 IST
    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் உயர்ந்து 78,757 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 470 புள்ளிகள் உயர்ந்து 23,820 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.



  • Nov 22, 2024 14:35 IST
    எல்.ஐ.சி-யில் தொழில்நுட்ப கோளாறில்லை; அரசியல் கோளாறு :மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

    மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எல்.ஐ.சி இணைய தள இந்தி பிரச்சனையில் “தொழில்நுட்பக் கோளாறு” என்று எல்ஐசி விளக்கம் அளித்தது. எல் ஐ சி யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க நடந்துள்ள ஏற்பாடு. இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை. இது தொழில்நுட்பக் கோளாறில்லை. ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறு" என்று  அவர் குறியுள்ளார். 



  • Nov 22, 2024 14:15 IST
    வங்கக் கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

    தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை நவம்பர் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 22, 2024 13:18 IST
    சங்கி என்றால் சக தோழன்: சீமான் புது விளக்கம்

    திடீரென ரஜினிகாந்தை சந்தித்த குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சீமான், சங்கி என்றால் சக தோழன் என்று அர்த்தம். சங்க்பரிவார் என்பதை சுறுக்கி சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையில் யார் சங்கி என்றால் எங்களை சங்கி என்று சொல்பவர்கள் தான் உண்மையாக சங்கி என்று கூறியுள்ளார்.



  • Nov 22, 2024 12:58 IST
    திருநெல்வேலி அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல்

    திருநெல்வேலி அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் கேமரா ட்ரைபேட் (TRIPOD) பிடுங்கி நிர்வாகிகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை கணேஷ் ராஜா முறையாக செய்யவில்லை என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் முத்தையா கூறியதற்கு எதிர்ப்பு



  • Nov 22, 2024 12:03 IST
    பேப்பர் குடோனில் தீவிபத்து

    திருப்போரூர் அருகே பேப்பர் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள், இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.



  • Nov 22, 2024 11:34 IST
    திருச்சியில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்: பணிகளை தொடங்கி வைத்த கே.என்.நேரு

    திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், இங்கு, ரூ17.60 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் 



  • Nov 22, 2024 11:25 IST
    சபரி மலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

    சபரி மலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 77000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 9254 பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் பார்த்துள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல், வண்டிப்பெரியார், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Nov 22, 2024 11:21 IST
    புதிய ஐடி வளாகத்தை திறந்து வைக்க வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

    திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் புதிய ஐடி வளாகத்தை திறந்து வைக்க வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  5.57 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐடி வளாகத்தின் வாயிலாக 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது



  • Nov 22, 2024 10:58 IST
    ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்

    கோவை, வால்பாறையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் அவற்றை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



  • Nov 22, 2024 10:21 IST
    ஐபிஎல் அட்டவணை வெளியீடு

    3 ஐபிஎல் தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14, 2025 முதல் மே 25, 2025 வரை நடைபெறும் என பிசிசிஐ அட்டவணை வெளியிட்டுள்ளது.



  • Nov 22, 2024 10:20 IST
    பெண்கள் குண்டுகட்டாக கைது

    சென்னை துரைப்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போலீசாரால் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Nov 22, 2024 09:48 IST
    ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளி தான்..

    ஜெயிலுக்கு போயிட்டு வந்தாலே போராளிதான் ஒரு போராளிக்கு இன்னொரு போராளிதான் Support பண்ணணும் என்று கஸ்தூரியின் ஆதரவாளர் பேட்டி அளித்துள்ளனர்.



  • Nov 22, 2024 09:45 IST
    5 ரன்களில் ஆட்டமிழந்த விராட்கோலி..

    பார்டர்-கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டியில் 5 ரன்களில் விராட்கோலி ஆட்டமிழந்தார். 



  • Nov 22, 2024 08:49 IST
    STARTUP TN நிர்வாகிகள் பங்கேற்பு!

    பின்லாந்தில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர் சந்திப்பில் STARTUP TN நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.



  • Nov 22, 2024 08:35 IST
    இந்திய ஒப்பனர் ஜெய்ஸ்வால் டக் அவுட்..!

    ஆஸ்திரேலியா மண்ணில் முதல் போட்டியில்  இந்திய ஒப்பனர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார்.



  • Nov 22, 2024 08:19 IST
    வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

    அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.



  • Nov 22, 2024 08:19 IST
    ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    கனமழை காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • Nov 22, 2024 07:51 IST
    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வாகியுள்ள நிலையில் அணியை பூம்ரா வழி நடத்துவார். 



  • Nov 22, 2024 07:41 IST
    இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து

    சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



  • Nov 22, 2024 07:39 IST
    தமிழ்நாட்டு பக்தர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

    சபரிமலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என  சபரிமலைக்கு இருமுடி கட்டி சுவாமி தரிசனம் செய்தபின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பு தெரிவித்தார்.



  • Nov 22, 2024 07:35 IST
    புதிய புயல் எச்சரிக்கை

    வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி புதிய புயலாக உருவாகலாம்  என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் வருகிற 26 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



  • Nov 22, 2024 07:31 IST
    சென்னையில் இன்று தி.மு.க எம்.பிக்கள் கூட்டம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.



Cricket news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment