Advertisment

Tamil News Highlights: காற்​றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு: வானிலை மையம்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weather oct12

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Nov 23, 2024 20:48 IST
    யானை தாக்கி பாகன் மரணம்: நிதியுதவி அறிவித்த மு.க.ஸ்டாலின்!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் தெய்வானை யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிவபாலன் ஆகியோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இருவரது குடும்பத்திற்கும் தலா ரூ2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 



  • Nov 23, 2024 16:48 IST
    கனிமொழிக்கு ஸ்டாலின் பாராட்டு

    நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி வீரமங்கையாக செயல்பட்டு வரக்கூடியவர் என முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.



  • Nov 23, 2024 15:51 IST
    ஆ. ராசா வழக்கு - அமலாக்கத்துறைக்கு உத்தரவு

    ஆ. ராசா எம்.பிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை தொடங்க கூடாது எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Nov 23, 2024 15:28 IST
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முக்கிய அறிவிப்பு

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முக்கிய அறிவிப்புஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது குளிர் கால அட்டவணையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் வாராந்திர விமானங்களின் எண்ணிக்கையை 107-ல் இருந்து 140 ஆக அதிகரித்துள்ளது.



  • Nov 23, 2024 15:19 IST
    த.வெ.க நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம்

    தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு, தங்கம் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதனை அக்கட்சி தலைவர் விஜய் வழங்கினார்.



  • Nov 23, 2024 15:00 IST
    அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

    கோவில்பட்டி அருகே விளாத்திக்குளம் - எட்டையபுரம் சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



  • Nov 23, 2024 14:50 IST
    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம்

    ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 10-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • Nov 23, 2024 14:26 IST
    மிக கனமழை எச்சரிக்கை

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் நவம்பர் 25-ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 23, 2024 13:58 IST
    விவசாயிகளுக்கு விருந்து - அலுவலகம் வந்த விஜய்

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து அளிப்பதற்காக, பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவகலத்திற்கு விஜய் வருகை தந்தார்.



  • Nov 23, 2024 13:22 IST
    புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 25 ம் தேதி தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறகூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 23, 2024 12:52 IST
    தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

    தமிழகத்தில் வரும் 25 முதல் 28-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



  • Nov 23, 2024 12:31 IST
    நிலம் வழங்கியவர்களை கௌரவிக்கும் விஜய்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருந்து அளிக்கப்படுகிறது. இந்நிகழ்வில், விவசாயிகளுக்கு விஜய் சைவ விருந்து பரிமாறுகிறார்.



  • Nov 23, 2024 12:09 IST
    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    9 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 23, 2024 07:31 IST
    அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

    அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 23, 2024 07:29 IST
    தென்காசியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    தென்காசி மாவட்டத்தில் இன்று(நவ.23) வாக்காளர்கள் முகாம் நடைபெறவுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 23, 2024 07:27 IST
    விருந்துக்கு ஏற்பாடு செய்த விஜய்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் வழங்கிய உரிமையாளர், விவசாயிகளுக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • Nov 23, 2024 07:24 IST
    வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

    மகராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களின் தேர்தல் முடிந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.



  • Nov 23, 2024 07:23 IST
    தமிழ்நாட்டில் இன்று கிராமசபை கூட்டம்

    தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூடுகிறது..வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment