Advertisment

Tamil Breaking News Highlights: 'சண்டாளர்' என்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது- தமிழக அரசு எச்சரிக்கை

Tamil Nadu News Update Today- 15 July 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN head

Tamil news today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

திருச்சி- அபுதாபி இடையே 4 கூடுதல் விமான சேவைகள்

திருச்சி - அபுதாபி இடையே வாரநாள்களில் 4 சேவைகளை இயக்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு 10 மணிக்கு அபுதாபியை சென்றடையும்.

முன்பதிவுகள் தொடங்கியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • Jul 16, 2024 07:04 IST
    கனமழை: வால்பாறை, நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 16) விடுமுறை அறிவிப்பு

    கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 16) விடுமுறை

    மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 16) விடுமுறை

    மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு 



  • Jul 15, 2024 21:45 IST
    வால்பாறை பள்ளிகளுக்கு ஜூலை 16 விடுமுறை

    கனமழை காரணமாக வால்பாறை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையை கோவை ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • Jul 15, 2024 19:37 IST
    24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை உட்பட 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Jul 15, 2024 19:36 IST
    நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் போதைப் பொருள் வழக்கில் கைது

    நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்



  • Jul 15, 2024 18:25 IST
    காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்; பங்கேற்பதாக அ.தி.மு.க அறிவிப்பு

    காவிரி விவகாரம் தொடர்பாக நாளை (ஜூலை 16) தலைமைச்செயலகத்தில் நடைபெற உள்ள அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க கலந்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது



  • Jul 15, 2024 18:22 IST
    பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் 'சண்டாளர்' என்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது - ஆணையம் எச்சரிக்கை

    பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் 'சண்டாளர்' என்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது மீறினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது



  • Jul 15, 2024 18:21 IST
    நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை; போக்குவரத்து பாதிப்பு

    நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கூடலூரிலிருந்து உதகை செல்லும் மலைப்பாதையில் ஆகாச பாலம் எனுமிடத்தில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது



  • Jul 15, 2024 18:18 IST
    காமராஜர் லட்சியத்தை நிறைவேற்றுவோம் - மோடி புகழஞ்சலி

    கல்வி போன்ற துறைகளில் காமராஜரின் பங்கு ஈடு இணையற்றது. காமராஜர் லட்சியத்தை நிறைவேற்ற உறுதியேற்போம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்



  • Jul 15, 2024 16:47 IST
    திருப்பதியில் பக்தர்களை இடையூறு செய்த டி.டி.எஃப். வாசனுக்கு போலீஸ் சம்மன்

    திருப்பதியில் பக்தர்களை இடையூறு செய்த டி.டி.எஃப். வாசனுக்கு திருப்பதி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டி.டி.எஃப் வாசன் திருப்பதியில் பக்தர்களை பிராங்க் செய்ததாக வீடியோ வெளியான நிலையில் திருப்பதி காவல்துறை டி.டி.எஃப். வாசனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.



  • Jul 15, 2024 16:44 IST
    ஜாபர் சாதிக்கிற்கு ஜூலை 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் - கோர்ட் உத்தரவு

    சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாபர் சாதிகை ஜூலை 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் கோரிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ஜாபர் சாதிக்கை நாளை வரை புழல் சிறையில் அடைத்திருக்க நீதிபதி அல்லி உத்தரவு.



  • Jul 15, 2024 16:07 IST
    சிகரெட் கம்பெனிக்கும் தமிழ் பல்கலை-க்கும் வித்தியாசம் இல்லையா? - ஐகோர்ட் கேள்வி

    தஞ்சாவூர் வல்லப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தான் சித்தமருத்துவம் கிளினிக் நடத்துவதில் தலையிடக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றக் மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்தமருத்துவம் பார்க்க இயலாது என்று சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு, எதன் அடிப்படையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சித்தமருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்குகிறது, யு.ஜி.சி-யிடம் அனுமதி பெற்றுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்தமருத்துவம் பார்க்க இயலாது என்று சான்றிதழில் சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது என்பது சிகரெட் பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ளது போல சிறிய எழுத்தில் குறிப்பிட்டுள்ளது ஏன், பெரிய எழுத்தில் குறிப்பிட்டால் என்ன, சிகரெட் கம்பெனிக்கும் பல்கலைக்கும் வித்தியாசம் இல்லையா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.



  • Jul 15, 2024 15:26 IST
    தேவர் சமுதாயம்  குறித்த அரசாணையை அமல்படுத்தக் கோரி வழக்கு; தமிழக் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அவகாசம்

    ள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் சமுதாயம்  என அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jul 15, 2024 15:21 IST
    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது; கர்நாடக அரசு மு.க. ஸ்டாலின் கண்டனம்

    கர்நாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை (ஜூலை 16) அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார்.



  • Jul 15, 2024 14:16 IST
    உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் நடைமுறை தற்காலிகமாக தொடரும்

    உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் நடைமுறை தற்காலிகமாக தொடரும்" அமைச்சர் மூர்த்தி தலைமையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, அமைச்சர், ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தேசிய நெடுஞ்சாலை துறை செயலாளர் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை



  • Jul 15, 2024 13:56 IST
    பட்டியலின இளைஞர் கொலை: 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

    கோவையில் கடந்த 2015ல் பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் தீர்ப்பு தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிறிஸ்டோபர், கருப்பு கௌதம் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம் கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலில் அடித்து கொல்லப்பட்ட பட்டியலின இளைஞர் தாமரைக் கண்ணன் கொலை தொடர்பாக 14 பேர் வழக்கு பதிவு செய்தது கோவை காவல்துறை 8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பு வழக்கில் தொடர்புடைய 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டணை



  • Jul 15, 2024 13:29 IST
    சவுக்கு சங்கர் வழக்கு : தமிழக அரசுக்கு கேள்வி

    சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?/சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? - தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உச்சநீதிமன்றம் சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமினில் விடுவிக்ககூடாது? - உச்சநீதிமன்றம் சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும் - தமிழ்நாடு அரசு தரப்பு "சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" குண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை தள்ளிவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு



  • Jul 15, 2024 13:05 IST
    சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் : காவல் ஆணையர் அருண் உத்தரவு

    சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் சென்னையில் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு "ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும்". 



  • Jul 15, 2024 12:53 IST
    நாளை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்

    காவிரி பிரச்சினை தொடர்பாக நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்-  முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு 



  • Jul 15, 2024 12:53 IST
    கேசவ விநாயகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிசிஐடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் - சிபிசிஐடி தரப்பு

    "ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தான் சம்மன் அனுப்ப முடியுமா? "

    4 கோடி ரூபாய் வழக்கில் சம்பந்தப்பட்ட "ஹார்ட் டிஸ்க்" காணாமல் போய் உள்ளது- சிபிசிஐடி தரப்பு

    நீதிமன்ற அனுமதி இன்றி கேசவ விநாயத்தை விசாரணைக்கு அழைக்க கூடாது என்ற உத்தரவை ரத்து செய்க- சிபிசிஐடி தரப்பு



  • Jul 15, 2024 12:27 IST
    எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி மனு

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி மனு.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

     எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் கரூர் மாவட்ட நீதிமன்றம் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனுவை விரைவில் விசாரிக்க உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளை 

    நிலமோசடி புகாரில்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி போலீசார் தேடி வருகின்றனர்



  • Jul 15, 2024 12:26 IST
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் யார் மீது அண்ணாமலைக்கு சந்தேகம்: ரகுபதி

    போலீசார் பிடியில் இருந்து தப்பிக்கும் ரவுடிகளை சுட்டு தான் பிடிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராஙை கொன்ற நபர்களை தான் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளோம். ஆ. அம்ஸ்ட்ராங் வழக்கில் யார் மீது அண்ணாமலைக்கு சந்தேகம்ண்ணாமலை விவரங்களை சொன்னால் விசாரிக்க தயாராக உள்ளோம்" சட்டத்துறை அமைச்சர் ரகுபதி



  • Jul 15, 2024 12:25 IST
    புதிய கல்வி கொள்கையில் காலை உணவு திட்டம்: அண்ணாமலை 

    புதிய கல்வி கொள்கையில் காலை உணவு திட்டம் இடம்பெற்றிருந்தது.

    புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களை மாநில அரசு கொண்டு வர வேண்டும்.

    காலை உணவு திட்டத்தில் அரசியல் செய்யக் கூடாது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட வேண்டும்.

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு பெயர் மாற்றி உள்ளது தமிழக அரசு.

    நீட் தேர்வு இருக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வில் நடந்த தவறுகள் சரி செய்யப்படுகிறது.

    நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் உள்ள நிலவரம் - வெள்ளை அறிக்கை தேவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 



  • Jul 15, 2024 12:24 IST
    திருவேங்கடத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    மாதவரம் மேஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் நடந்த திருவேங்கடத்தின் பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனைப் பிறகு திருவேங்கடத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    மூலகொத்தளம் சுடுகாட்டில் திருவேங்கடத்தின் உடலை எரியூட்ட உறவினர்கள் ஏற்பாடு

    திருவேங்கடத்தின் தந்தை கண்ணன், சகோதரி முனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை



  • Jul 15, 2024 11:56 IST
    ஜெ. வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு

    தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த 
    ஆறுமுகசாமி ஆணையம் புலன் விசாரணை நடத்த பரிந்துரைத்தது - மனுதாரர் தரப்பு

    ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு



  • Jul 15, 2024 11:33 IST
    சாலையில் ஆடுவெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது: நீதிமன்றம்

    "சாலையில் ஆடுவெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது"

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் திமுக தொண்டர்கள் கிருஷ்ணகிரியில் ஆடு வெட்டிய விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கருத்து

    திமுக தொண்டர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் தொடர்ந்த வழக்கு

    தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 



  • Jul 15, 2024 10:50 IST
    9 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம்

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டார்.



  • Jul 15, 2024 10:47 IST
    15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jul 15, 2024 10:45 IST
    போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் கைது

    மயிலாடுதுறை: பெரம்பூர் காவல் நிலைய காவலர் திருநாவுக்கரசு என்பவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்

    போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவு



  • Jul 15, 2024 09:47 IST
    காலை உணவுத் திட்டம் அரசுக்கு செலவு இல்லை; முதலீடு- ஸ்டாலின்

    காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு செலவு ஏற்பட்டாலும், பரவாயில்லை ஒரு குழந்தை கூட பசியோடு வகுப்புகளில் அமர கூடாது என்று நோக்கில் முதலமைச்சரின் காலை உணவு  திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

    இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முதலீடு.

    இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்

    திருவள்ளூர், கீழச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின்



  • Jul 15, 2024 09:20 IST
    ரவுடி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு மனைவி மனு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது மனைவி தரப்பில் மனு



  • Jul 15, 2024 09:19 IST
    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 4047 கன அடியாக அதிகரிப்பு

    கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வரும் நாட்களில் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்ப்பு



  • Jul 15, 2024 09:19 IST
    கேரள, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

    கனமழை காரணமாக கேரள, கர்நாடகா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது



  • Jul 15, 2024 09:18 IST
    அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

    இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.



  • Jul 15, 2024 08:38 IST
    ரவுடி திருவேங்கடத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் நள்ளிரவில் உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பு



  • Jul 15, 2024 08:33 IST
    விபத்தை வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டத்தின் மீது கார் மோதியதில் 17 பேர் காயம்

    விருத்தாச்சலம் அருகே பரவலூர்- கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் லாரி  மோதியதில் உயிரிழந்தனர்.

    விபத்தை வேடிக்கைப் பார்த்த கூட்டத்தின் மீது கார் மோதியதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், கார் ஓட்டுநரை பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர்.

    இந்த விபத்துக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

     



  • Jul 15, 2024 08:24 IST
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது

    தர்மபுரி, ஒகேனக்கல்லில் கடந்த வாரம் முழுவதும் நீர்வரத்து 5000 கன அடியாக இருந்த நிலையில் இன்று 4500 கன அடியாக குறைந்தது



  • Jul 15, 2024 08:23 IST
    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Jul 15, 2024 07:46 IST
    தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,  தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jul 15, 2024 07:33 IST
    4வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது ஸ்பெயின்

    பரபரப்பான இறுதிப்போட்டியில் 2க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது

    ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ், மைகேல் யார்ஸபால் இருவரும் தலா 1 கோல் அடித்தனர். இங்கிலாந்தின் கோலே பால்மர் ஒரு கோல் அடித்துள்ளார்.

    யூரோ தொடரில் முறையே 1964, 2008, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணியாக மாறியுள்ளது.



  • Jul 15, 2024 07:32 IST
    சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

    3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2730 மில்லியன் கன அடியாக உள்ளது.

    1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 136 மில்லியன் கன அடியாக உள்ளது.

    500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 313 மில்லியன் கன அடியாக உள்ளது.



  • Jul 15, 2024 07:31 IST
    தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை

    தென்காசி, குற்றாலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை தொடர்கிறது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை



  • Jul 15, 2024 07:30 IST
    ஜிம்பாப்வே அணியை 125 ரன்களுக்கு சுருட்டி இந்தியா வெற்றி

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி நிலையில் 4-1 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

    நேற்று நடைபெற்ற கடைசி  டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6விக்கெட் இழப்பிற்கு 167ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு இந்திய அணி 168ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங்கிய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 20ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை 4-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது.



  • Jul 15, 2024 07:30 IST
    தமிழ்நாட்டிற்கு இன்று முதல் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகா முடிவு

    கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து இன்று முதல் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

    காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பெங்களுருவில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment