பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 577-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம்
இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கெஜ்ரிவால், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்பு. எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட், மக்களவை தேர்தலுக்கான வியூகம், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனைக்கு வாய்ப்பு.
-
Dec 19, 2023 23:44 ISTடெல்லியில் மோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின்; வெள்ள பாதிப்பிற்கு ரூ.12,659 கோடி வழங்க கோரிக்கை
டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக ரூ. 7,033 கோடியும் நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் வகங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
-
Dec 19, 2023 23:12 ISTமோடியை நேரில் சந்தித்த ஸ்டாலின்: ரூ. 2000 கோடி அவசர நிதியாக வழங்க வலியுறுத்தல்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். தென் மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 2,000 கோடியை அவசர நிதியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
-
Dec 19, 2023 20:53 ISTஇந்தியா கூட்டணி வெற்றிக்கு பிறகு பிரதமர் தேர்வு: மல்லிகார்ஜூன கார்கே
“இந்தியா கூட்டணியின் இலக்கு வெற்றிதான்; வெற்றிக்கு பின்னர் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்” என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
Dec 19, 2023 20:49 ISTதிருநெல்வேலியில் அண்ணாமலை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்
திருநெல்வேலி பாளையங்கோட்டை தொகுதியில் உள்ள சிஎன் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
அப்போது திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உடனிருந்தார்.நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி சி.என்.கிராமம் பகுதியில், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு.@NainarBJP அவர்கள், தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு.@ponbalabjp அவர்கள் ஆகியோருடன் நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களை… pic.twitter.com/eeTh5UP9Gd
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 19, 2023 -
Dec 19, 2023 20:44 ISTதூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் உணவுப் பொருள்கள்
மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் சுமார் 10,000 கிலோ நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டுள்ளன. -
Dec 19, 2023 19:40 ISTமாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை: ஆளுநர் மாளிகை
மழை மற்றும் வெள்ளம் தொடர்பாக ஆளுநரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. -
Dec 19, 2023 19:13 ISTதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
“தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் புதிதாக 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது” என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
Dec 19, 2023 19:08 ISTமழை வெள்ள பகுதிகளை பார்வையிட்ட பொன். ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட போது.. pic.twitter.com/EV1N6EGVu0
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 19, 2023 -
Dec 19, 2023 18:05 ISTநெல்லை ரயில் நிலைய சேவை நிறுத்தம்
கனமழை காரணமாக நெல்லை ரயில் நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை ஜங்ஷனில் தங்கியுள்ள மழை நீர் ராட்சத மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. -
Dec 19, 2023 18:01 ISTஇந்தியா கூட்டணி கூட்டத்தில் தொல் திருமாவளவன் பங்கேற்பு
டெல்லியில் நடைபெற்ற இந்திய கூட்டணி கூட்டத்தில் தொல். திருமாவளவன் பங்கேற்றார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர், “புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றேன். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்” எனத் தெரிவித்துள்ளார். -
Dec 19, 2023 17:56 ISTகாயல்பட்டினம் பகுதியில் 116 செமீ மழை பதிவு; தலைமை செயலர்
“திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் வெள்ளத்தில் சிக்கிய 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லையில் முழுமையாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்விநியோகம் சரியாக உள்ளது.
48 மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மீட்புபடையினர் போதுமான அளவிற்கு உள்ளனர்; 323 படகுகள் கூடுதலாக செயல்படுத்தியுள்ளோம்” என தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா கூறினார். -
Dec 19, 2023 17:56 ISTகாயல்பட்டினம் பகுதியில் 116 செமீ மழை பதிவு; தலைமை செயலர்
“திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் வெள்ளத்தில் சிக்கிய 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லையில் முழுமையாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்விநியோகம் சரியாக உள்ளது.
48 மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மீட்புபடையினர் போதுமான அளவிற்கு உள்ளனர்; 323 படகுகள் கூடுதலாக செயல்படுத்தியுள்ளோம்” என தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா கூறினார். -
Dec 19, 2023 16:19 ISTஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன ஸ்டார்க்
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க். மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
தற்போது நடந்து வரும் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் பேட் கம்மின்ஸ் ஏல தொகையை மிட்செல் ஸ்டார்க் முந்தினார்.
-
Dec 19, 2023 15:59 ISTகடவுளுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி
"கடவுளே நன்றி...நான் எம்.பி.இல்லை... இருந்திருந்தால் என்னையும் சஸ்பெண்ட் செய்திருப்பார்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
Dec 19, 2023 15:42 IST'உரிய முன்னெச்சரிக்கையை அரசு எடுக்கவில்லை': நெல்லையில் இ.பி.எஸ் குற்றச்சாட்டு
நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசால் எடுக்கப்படவில்லை' என்று குற்றம் சாட்டினார்.
-
Dec 19, 2023 15:07 ISTநெல்லையில் 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்!
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆலங்குளம் அருகே உள்ள சிவலிங்கபுரத்தில் உள்ள மானூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வயல்களின் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 1000 ஏக்கர் பரப்பில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது.
-
Dec 19, 2023 15:04 ISTதொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை அமைத்த காங்.,!
2024 மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் உடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த மூத்த நிர்வாகிகள் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது.
-
Dec 19, 2023 15:02 ISTஅதிக தொகைக்கு ஏலம் போன கம்மின்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 20.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.
-
Dec 19, 2023 14:05 ISTமழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய கூடுதல் அமைச்சர்கள் நியமனம்
தூத்துக்குடி, நெல்லை மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் உட்பட 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டம் - அமைச்சர் எ.வ. வேலு, காயல்பட்டினம் - அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி மாநகராட்சி - அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Dec 19, 2023 13:47 ISTமீட்புப் பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இணைப்புச் சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலமே மீட்க முடிகிறது, பாதிப்பு அதிகம் உள்ளதால் பேரிடரின் தன்மையை கருத்தில் கொண்டு நடவடிக்கை தேவை என்று கூறி மீட்புப் பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
Dec 19, 2023 13:45 IST7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Dec 19, 2023 12:59 ISTஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதி
ஸ்ரீவைகுண்டம் ரயிலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் அனுசுயா மயில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Dec 19, 2023 12:57 ISTமக்களவையில் மேலும் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்
விடுதலை சிறுத்தைகள் எம்பி திருமாவளவன், மதிமுக எம்பி கணேசன் மூர்த்தி உள்ளிட்ட 12 பேர் மக்களவையில் இருந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக எம்.பி தனுஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சூலே, டிம்பிள் யாதவ் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மக்களவையில் 33 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
-
Dec 19, 2023 11:54 ISTவெள்ள பாதிப்பு : தென்மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென் மாவட்டங்களுக்கு செல்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Dec 19, 2023 11:53 ISTதமிழ்நாடு அரசின் பணிகளை பாராட்டியுள்ளது மத்திய குழு : முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்பு குறித்து விரிவாக பேச விரும்புகிறேன். ஏற்கனவே புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழு தமிழ்நாடு அரசின் பணிகளை பாராட்டியுள்ளது. மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல், புயல் நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக அறிவித்தது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Dec 19, 2023 11:20 ISTஆருத்ரா மோசடி வழக்கு : ஆர்.கே.சுரேஷ்க்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு
ஆருத்ரா மோசடி புகாரில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் அளித்த ஆவணங்கள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வங்கியிடம் விவரங்களை கேட்டுப்பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆர்.கே.சுரேஷிற்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Dec 19, 2023 11:17 ISTதமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 19, 2023 11:16 ISTரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க சென்ற ஹெலிகாப்டர்
ரயிலில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்ட உடன் அழைத்து செல்ல 13 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. பயணிகளை, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வாஞ்சி மணியாச்சியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பயணிகளை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளை மீட்பதற்காக சென்ற ஹெலிகாப்டர் ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்தை நெருங்கியுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் 5 உணவு மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ரயிலில் சிக்கியுள்ள பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயிலில் உள்ளவர்களை இன்று மாலைக்கு மீட்டுவிடுவோம் என்று தெரிவித்துள்ளதாக கூறியுள்ள ரயிலில் சிக்கியுள்ள பயணி ஒருவர், ரயில்நிலையத்தில் தேங்கி இருந்த நீர் வடிந்து தற்போது தான் தண்டவாளம் தெரிகிறது. தண்டவாளம் தெரிந்தாலும், ரயில் பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று கூறியுள்ளார்.
-
Dec 19, 2023 11:11 ISTஅமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு
லஞ்ச ஒழிப்பு துறையின் மேல்முறையீட்டு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து செய்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் டிச.21ம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனை விவரங்களை அறிவிக்க வழக்கு விசாரணை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்
-
Dec 19, 2023 10:37 ISTமீட்புப் பணிக்கு 6 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு
கனமழை, வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
-
Dec 19, 2023 10:26 ISTஸ்ரீவைகுண்ட ரயில் நிலையத்தில் இருந்து கர்ப்பிணி மீட்பு
ஸ்ரீவைகுண்ட ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பயணி பத்திரமாக மீட்பு
-
Dec 19, 2023 09:59 ISTதென் மாவட்டங்களில் முழு வீச்சில் மீட்புப் பணிகள்
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க மாநில, தேசிய பேரிடர் மீட்பு படைகளை சேர்ந்த 818 வீரர்கள் களத்தில் உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Dec 19, 2023 09:53 ISTஸ்ரீவைகுண்டத்தில் 3-வது நாளாக தவிக்கும் பயணிகள்
மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள ரயிலில் 3-வது நாளாக தவிக்கும் பயணிகள். திருச்செந்தூர் விரைவு ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மீட்க தீவிர முயற்சி
-
Dec 19, 2023 09:18 ISTபயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக ஹெலிகாப்டர் புறப்பட்டது. ரயிலில் உள்ள 500 பயணிகளுக்கு உணவு வழங்க மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டது.
-
Dec 19, 2023 09:09 ISTகாட்டாற்று வெள்ளம்: விவசாய நிலங்கள் சேதம்
நெல்லை, ஏர்வாடி அடுத்த கோதைசேரி கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் 200 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல், வாழை சேதம்
-
Dec 19, 2023 09:08 ISTகுற்றாலத்தில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு
குற்றால அருவிகளில் 3வது நாளாக நீடிக்கும் வெள்ளப்பெருக்கு. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மெயின் அருவி பகுதிகள் சேதம்
-
Dec 19, 2023 09:08 ISTநெல்லை: வெள்ள நீரில் மிதக்கும் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
நெல்லை பேருந்து நிலையத்தில் உள்ள வெள்ள நீரில் மிதக்கும் ஆண் சடலம் மீட்கப்பட்டால் தான் ஆண் சடலம் குறித்தான விவரங்கள் தெரிய வரும்
-
Dec 19, 2023 09:06 ISTதூத்துக்குடியில் 3-வது நாளாக விமான சேவைகள் ரத்து
தூத்துக்குடிக்கு விமான சேவைகள் ரத்து. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3வது நாளாக விமான சேவைகள் ரத்து. வானிலை சீரானதும் விமான சேவை தொடங்கும் என அதிகாரிகள் தகவல்
-
Dec 19, 2023 09:05 IST6 கி.மீ. தூரம்; ஸ்ரீவைகுண்டத்தை நெருங்கும் மீட்பு குழு
ஸ்ரீவைகுண்டத்தை நெருங்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர். ரயிலில் சிக்கி இருப்பவர்களுக்கும், எங்களுக்கும் 6 கி.மீ. தூரம் தான் உள்ளது - என்.டி.ஆர்.எஃப் அதிகாரி ரவீந்தர்
-
Dec 19, 2023 09:04 ISTமுழுக்கொள்ளளவை எட்டிய வைகை அணை
முழுக்கொள்ளளவை எட்டிய வைகை. அணை 34வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டிய வைகை அணை வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
Dec 19, 2023 09:04 ISTஸ்ரீவில்லிபுத்தூரில் 2 அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று 2 அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. மகாராஜபுரம் அரசுப்பள்ளி, கூமாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை
-
Dec 19, 2023 08:52 ISTவைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததையடுத்து தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல். அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவும், செல்ஃபி எடுக்கவும் வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை
-
Dec 19, 2023 08:26 ISTஸ்ரீவைகுண்டம் நோக்கி புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு செல்வதில் தாமதம்
நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி புறப்பட்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழு செல்வதில் தாமதம். மேலக்குளம் அடுத்துள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர் அதிவேகமாக கரைபுரண்டு ஓடுவதால் ஸ்ரீவைகுண்டத்தை அடைவதில் சிரமம். வாகனத்தில் செல்ல முடியாததால் படகு மூலம் ஸ்ரீவைகுண்டம் செல்ல முயற்சி
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை சென்றடைய இன்னும் 9 கி.மீ உள்ளதாக என்.டி.ஆர்.எஃப் அதிகாரி தகவல். ஸ்ரீவைகுண்டம் நோக்கிய பயணம் மிக சவாலாக உள்ளது- என்.டி.ஆர்.எஃப் அதிகாரி. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை சென்றடைய 5 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் முயற்சி.
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளில் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளது- என்.டி.ஆர்.எஃப் குழு அதிகாரி ரவீந்தர்.
-
Dec 19, 2023 07:57 ISTஇன்று நடைபெறுகிறது ஐபிஎல் மினி ஏலம்
துபாயில் இன்று நடைபெறுகிறது 2024 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் மினி ஏலத்திற்கு 333 வீரர்கள் பதிவு, 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் பதிவு
-
Dec 19, 2023 07:49 ISTதிமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு
தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. ஏற்கனவே டிச.17-ம் தேதி நடைபெற இருந்த மாநாடு சென்னை வெள்ளம் காரணமாக டிச.24-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் 2-வது மாநாடு ஒத்திவைப்பு
-
Dec 19, 2023 07:48 ISTபிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு
பிரதமர் மோடியை இன்று இரவு சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.