Advertisment

Tamil News Highlights: மத்திய அரசின் நிதிக் குழு சென்னை வருகை; ஸ்டாலினுடன் இன்று ஆலோசனை

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN CM Stalin announces 3 per cent hike in DA for state government employees Tamil News

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் தினமும் சற்று மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு 

தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 11,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் 10,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. 

 

  • Nov 17, 2024 21:40 IST
    டெல்லியில் காற்று மாசு தீவிரம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு - டெல்லி அரசு அறிவிப்பு

    டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மாநகராட்சி, தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணியாற்றவும்ம் மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்புக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த டெல்லி அரசு அறிவுத்தியுள்ளது.



  • Nov 17, 2024 20:12 IST
    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப்: 3 பிரிவுகளில் தங்கம் வென்ற காசிமா; உதயநிதி வாழ்த்து

    சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில், 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்து, தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித் தந்துள்ளார். அவருடைய வெற்றிப் பயணம் தொடரட்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Nov 17, 2024 19:48 IST
    ஏ.ஐ-ல் அதிக செலுத்த வேண்டும் - ஏஆர். ரகுமான் பேச்சு

    சென்னை ஐ.ஐ.டி-யின் மெய்நிகர் தொழில்நுட்ப மைய விருதைப் பெறும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ)  தொழில்நுட்பத்தில் அதிக செலுத்த வேண்டும்; புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.



  • Nov 17, 2024 19:11 IST
    ‘எளியோரின் வெற்றிதான் திராவிட மாடலின் வெற்றி...’ கேரம் உலக கோப்பையில் வென்ற காசிமாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

    “அமெரிக்காவ்ல் நடைபெற்ற 6-வது Carrom World Cup-ல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ் மகள் காசிமா 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்; வாழ்த்துகள். பெருமைகொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரம் உலக கோப்பையில் வென்ற காசிமாவுக்கு வாழ்த்து தெர்வித்துள்ளார்.



  • Nov 17, 2024 19:05 IST
    வேதாரண்யத்தில் கொட்டித்தீர்த்த கனமழை; மாலை 5 மணி வரை 18 செ.மீ மழை பதிவு

    வேதாரண்யத்தில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை, அதிகபட்சமாக 18 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது. காலை முதல் மாலை வரை வேதாரண்யத்தில் மழை வெளுத்து வாங்கியுள்ளது.



  • Nov 17, 2024 18:21 IST
    நயன்தாரா ஆவணப்படத்தில் இடம்பெற்றது 3 விநாடி காட்சி

    நயன்தாராவின் திரைப்பயணம் மற்றும் காதல் திருமணத்தை உள்ளடக்கிய ஆவணப்படத்தில் நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டதாக குற்றம்சாட்டி 3 வினாடிக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. நயன்தாராவின் ‘பியானண்ட தி ஃபேரிடேல்ஸ்’ என்ற ஆவணப்படடததின் ப்ரிவ்யூ ஷோ இன்று திரையிடப்பட்டுள்ளது. நாளை இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.



  • Nov 17, 2024 17:25 IST
    தைல டப்பா தொண்டையில் சிக்கி உயிருக்கு போராடிய 7 மாத ஆண் குழந்தை

    தைல டப்பா தொண்டையில் சிக்கியதால் 7 மாத ஆண் குழந்தை உயிருக்கு போராடியது. இருப்பினும் அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இன்றி டப்பாவை லாவகமாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்



  • Nov 17, 2024 16:59 IST
    8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 17, 2024 16:38 IST
    வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார் திரவுபதி முர்மு

    குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரும் 27ம் தேதி, தமிழகம் வருகிறார் 



  • Nov 17, 2024 16:08 IST
    நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் மரணம்

    கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்தனர். உச்சிலா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள ஒரு தனியார் பீச் ரிசார்ட்டில் இந்த விபத்து நிகழ்ந்தது. மைசூரை சேர்ந்த நிஷிதா, பார்வதி மற்றும் கீர்த்தனா என்ற இளம் பெண்கள் உயிரிழந்தனர். 6 அடி ஆழ நீச்சல் குளத்தில் முதலில் ஒருவர் மூழ்கிய நிலையில், காப்பாற்ற முயன்று மற்ற இருவரும் உயிரிழந்தனர்



  • Nov 17, 2024 15:47 IST
    மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருது

    நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘The Grand Commander of The Order of the Niger’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது



  • Nov 17, 2024 15:33 IST
    சிங்கிள் மதர் என்பதால் சொந்த ஜாமினில் வெளியே விடவேண்டும் - கஸ்தூரி வேண்டுகோள்

    சிங்கிள் மதர் என்பதை சுட்டிக்காட்டி சொந்த ஜாமினில் வெளியே விடவேண்டும் என நீதிபதி முன் நடிகை கஸ்தூரி வேண்டுகோள் விடுத்தார். எனக்கு சிறப்பு குழந்தை இருக்கிறார், அவரை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஜாமீனில் வெளியே விட வேண்டும் என கஸ்தூரி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.



  • Nov 17, 2024 15:12 IST
    இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அ.தி.மு.க.,வை பா.ஜ.க.,வுடன் இணைத்து விடுவார் இ.பி.எஸ் - உதயநிதி

    இன்னும் ஒரு ரெய்டு நடந்தால்போதும் அ.தி.மு.க.,வை பா.ஜ.க.,வுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவார் எடப்பாடி பழனிசாமி என சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்



  • Nov 17, 2024 14:56 IST
    மழைக்கு வாய்ப்பில்லை - தனியார் வானிலை ஆர்வலர்

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 9 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.



  • Nov 17, 2024 14:38 IST
    நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்ற காவல்

    நடிகை கஸ்தூரிக்கு வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி உத்தரவு.



  • Nov 17, 2024 13:59 IST
    நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகை கஸ்தூரி

    நடிகை கஸ்தூரி, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். குறிப்பாக, காவல் நிலையம் முன்பு அரசியல் அராஜகம் ஒழியட்டும், நீதி வெல்லட்டும் என கஸ்தூரி முழக்கமிட்டார்.



  • Nov 17, 2024 13:44 IST
    இன்னொரு கூட்டணிக்கு அவசியமில்லை - திருமாவளவன்

    நாங்கள் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம் எனவும், மற்றொரு கூட்டணிக்குச் செல்ல வேண்டிய தேவை எழவில்லை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் நம்முடன் தான் இருக்கிறார் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கூறியதற்கு அவர் பதிலளித்துள்ளார்.



  • Nov 17, 2024 13:23 IST
    ஸ்டாலினின் அடுத்தகட்ட ஆய்வு

    முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த கட்டமாக வரும் 28 மற்றும் 29-ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் கட்சியினரை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



  • Nov 17, 2024 13:05 IST
    த.வெ.க-வில் வழிகாட்டுதல் குழு அமைக்க திட்டம்

    தமிழக வெற்றிக் கழகத்தில் வழிகாட்டுதல் குழு அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 



  • Nov 17, 2024 12:58 IST
    அர்ஜுன் சம்பத் கைது

    கோவையில் தனது மகனின் கைது கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.



  • Nov 17, 2024 12:46 IST
    12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 17, 2024 12:20 IST
    சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி

    ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார். 



  • Nov 17, 2024 11:59 IST
    குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

    சென்னை கண்ணகி நகரில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையை கடத்தி சென்ற தீபா என்ற பெண்ணை தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

    தீபாவை ஈரோட்டில் கைது செய்த கண்ணகி நகர் தனிப்படை போலீசார் தீபாவை கண்ணகி நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர். ஏற்கனவே குழந்தையை போலீசார் மீட்ட நிலையில், குழந்தையை கடத்திய தீபா கைது செய்யப்பட்டுள்ளார். 



  • Nov 17, 2024 11:30 IST
    கங்குவா மீது திட்டமிட்டு அவதூறு- ஜோதிகா

     'கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார். மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்?. படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.  



  • Nov 17, 2024 11:28 IST
    பொதுமக்கள் போராட்டம்  வாபஸ்

    மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த 
    அதிகாரிகள் வருவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    சின்ன உடைப்பு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின்  மீது ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

    இந்நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம் வீடுகளை காலி செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 



  • Nov 17, 2024 11:13 IST
    சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி!

    தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவாகரத்தில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னை அழைத்து வரப்பட்டார்



  • Nov 17, 2024 10:48 IST
    மதுரை விமான நிலைய விரிவாக்கம்; கிராம மக்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

    மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான கிராம மக்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிலத்தை காலி செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது



  • Nov 17, 2024 10:33 IST
    11 மாவட்டங்களில் மழை

    அடுத்த 3 மணி நேரத்தில் (10 AM to 1 PM) இந்த மாவட்டங்களில் கடலூர், அரியலூர்,  மயிலாடுதுறை,  நாகை,  திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையத் தெரிவித்துள்ளது. 

     



  • Nov 17, 2024 09:42 IST
    லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் இ.டி சோதனை நிறைவு 

    கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின்   வீடு, அலுவலகங்கள், ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.

    3 நாட்களாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது



  • Nov 17, 2024 08:33 IST
    மதுரை விமான நிலைய விரிவாக்கம்- மக்கள் போராட்டம்

    மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் வருவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் ,

    சின்ன உடைப்பு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின்  மீது ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



  • Nov 17, 2024 07:58 IST
    நிதிக் கமிஷன் குழு தமிழ்நாடு வருகை

    6-வது நிதிக் கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தருகின்றனர்.

    வரி பகிர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என நிதிக்குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், நிதிக் ழுவினர் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.



  • Nov 17, 2024 07:56 IST
    தாம்பரம் - சென்னை மின்சார ரயில் ரத்து

    தாம்பரம் பணிமனையில் பராமரிப்புப் பணியையொட்டி தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று (நவ.17) மின்சார ரயில் சேவை மாலை 5 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    பல்லாவரம் - சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதால், தாம்பரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment