பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் இன்று ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.100.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.48க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் 1-ம் தேதியை ஒட்டி மாநிலம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நேற்று திறக்கப்பட்டது.
-
Nov 16, 2024 22:35 ISTகிண்டி மருத்துவமனையில் திடீர் மின்தடை: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவசர பிரிவில் சிகிச்சையில் உள்ளோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு தனி ஜெனரேட்டர் மூலம் மிக்சாரம் வழங்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறியுள்ளார்.
-
Nov 16, 2024 22:32 ISTவி.சி.க பிரமுகர் திருமணத்தில் மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான எஸ்.எஸ்.பாலாஜியின் மகன் மரு.பா.கௌதம் - மரு.இரா.கீர்த்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.
-
Nov 16, 2024 22:30 ISTகிண்டி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு
சென்னை: கிண்டி மருத்துவமனை மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக 2 மணிநேரத்திற்கு மேலாக மின் துண்டிப்பு - நோயாளிகள் அவதி
-
Nov 16, 2024 21:05 ISTநடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது
தெலுங்கு பேசும் மக்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது
-
Nov 16, 2024 19:53 ISTரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: தாம்பரத்தில் இருந்து நாளை 50 சிறப்பு பேருந்தகள் இயக்கம்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை 50 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
-
Nov 16, 2024 19:51 IST27 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
-
Nov 16, 2024 18:47 ISTஎலி மருந்து விவகாரம் - தனியார் நிறுவனத்திற்கு சீல்
சென்னை குன்றத்தூர் அருகே எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் தி.நகரில் உள்ள தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
-
Nov 16, 2024 18:45 ISTஇயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் கேள்வி
"3 வினாடி விளம்பரத்துல FREE-ஆ நடிப்பீங்களா..? உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா..?" நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் சரமாரி கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Nov 16, 2024 17:58 ISTமின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
மாடு மேய்க்கும்போது மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தனது தந்தைக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி ரமேஷ் என்பவர் தொடுத்த வழக்கில், உயிரிழப்பிற்கு மின்சார வாரியம் பொறுப்பு ஏற்காது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Nov 16, 2024 17:17 ISTபுஷ்பா - 2 அப்டேட்!
அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா-2’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 6.03 மணிக்கு வெளியாகும் எனவும் படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் எனவும் புதிய போஸ்டரை பகிர்ந்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
Nov 16, 2024 16:56 ISTஎதேச்சதிகாரத்தோடு நடந்து கொண்டீர்கள் - இயக்குநர் எஸ்.எஸ். குமரன்
‘LIC’ என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருப்பதாக நேர்மையாக கூறினேன் ஆனால் என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா தம்பதியினர் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என இயக்குநர் எஸ்.எஸ். குமரன் கூறியுள்ளார்.
-
Nov 16, 2024 16:53 ISTபில்லியன் டாலரை தாண்டிய அரிசி ஏற்றுமதி
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் அரிசி ஏற்றுமதி 1 பில்லியன் டாலரை தாண்டியதாக கூறப்படுகிறது.
-
Nov 16, 2024 16:29 ISTஇன்ஸ்டாகிராமில் வந்த லிங்க்யை க்ளிக் செய்ததால் பணத்தை இழந்த பெண்!
பகுதிநேர வேலை தேடிக்கொண்டிருந்த பெண் ஒருவர் அமேசான் நிறுவனத்தில் வேலை எனப் பார்த்ததும் அந்த லிங்கை க்ளிக் செய்துள்ள பணம் செலுத்தினால் அதிகம் சம்பாதிக்கலாம் என அவர்கள் கூறியதை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக யூபிஐ மூலம் ரூ. 1.94 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார்.
-
Nov 16, 2024 15:57 ISTமாரடைப்பால் உயிரிழந்த 12 வயது சிறுமி!
தெலங்கானாவில் பள்ளிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு வந்த 12 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
-
Nov 16, 2024 15:44 ISTதமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
Nov 16, 2024 15:29 ISTசென்னை - சிங்கப்பூர் விமானம் தாமதம்
மோசமான காலநிலை காரணமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் 6 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Nov 16, 2024 14:25 ISTதிரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை அறிமுகம்
மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களுக்கு 'யு', 'ஏ', மற்றும் 'யுஏ' ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வந்தது. இந்நிலையில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப, உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க புதிய சான்றளிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, யு வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும், ஏ வகை திரைப்படங்கள் 18 வயது கடந்தவர்களுக்கு மட்டும் என முன்பு இருந்த நடைமுறையுடன் தற்போது 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததாக யுஏ7+, யுஏ 13+, யுஏ 16+ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு, ஒரு திரைப்படத்தை பார்க்க அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரத்தை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
-
Nov 16, 2024 14:23 ISTபராமரிப்பு பணிகள் - நாளை மின்சார ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நேரத்தில் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6.15 மணி முதல் மாலை 5.05 மணி வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை மாலை 5 மணிக்குப் பிறகு மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 16, 2024 14:19 ISTவி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
"அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல. என் மீது எந்தப் புகார்களும் இல்லை. அரசியலுக்கு வந்தபோதே எனது நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகி விட்டேன். அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டு, சோதனை நிறைவுற்றுள்ளது" என்று வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
-
Nov 16, 2024 14:12 ISTமைக் டைசனை வீழ்த்திய இளம் வீரர்
குத்துச் சண்டை போட்டியில், முன்னாள் உலக சாம்பியனான குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை இளம் வீரர் ஜேக் பால் வீழ்த்தியுள்ளார். 79-க்கு 73 என்ற புள்ளி கணக்கில் ஜாக் பாலிடம் மைக் டைசன் தோல்வியடைந்துள்ளார்.
-
Nov 16, 2024 14:11 ISTதனுஷுக்கு விக்னேஷ் சிவன் பதிலடி
நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திற்கு 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், நயன்தாராவை தொடர்ந்து, தனுஷ் பேசிய வீடியோவை பகிர்ந்து `வாழு வாழ விடு' என பதிவிட்டு அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் பதிலடி கொடுத்துள்ளார்.
ரூ.10 கோடி கேட்டு தனுஷ் அனுப்பிய வக்கீல் நோட்டீஸையும் பதிவிட்டுள்ளார் நயன்தாராவின் கணவன் விக்னேஷ் சிவன். -
Nov 16, 2024 14:10 ISTதனுஷை ஜெர்மன் வார்த்தையால் திட்டிய நயன்தாரா
நடிகை நயன்தாரா காட்டமாக எழுதியிருக்கும் கடிதத்தில், நடிகர் தனுஷை 'ஷாடன்ஃப்ரூட்' (Schadenfreude) என்கிற ஜெர்மன் வார்த்தையால் திட்டியுள்ளார். இந்த வார்த்தையின் அர்த்தம் அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர் என்பதாகும்.
-
Nov 16, 2024 14:07 ISTநடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு
``நெட்பிலிக்ஸ் தளத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது. அதில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் படத்தின் பாடல் காட்சிகள், சில காட்சிகள் இடம் பெற தனுஷ் அனுமதி மறுத்துள்ளார்.
3 வினாடி வீடியோவுக்கு நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் எடுத்த இந்த நடவடிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எனக்கு அனுப்பியுள்ள நோட்டிஸ்க்கு உரிய பதிலளிப்பேன் எனவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்'' என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
-
Nov 16, 2024 12:47 IST"2026-ல் கூட்டணி ஆட்சி தான் அமையும்": அன்புமணி ராமதாஸ்
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனவும், அதில் பா.ம.க இடம்பெறும் எனவும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
Nov 16, 2024 12:21 IST7 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
இன்று முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 16, 2024 12:10 ISTஅமலாக்கத்துறை சோதனை நிறைவு
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 2 நாள்களாக சோதனை நடைபெற்றது.
-
Nov 16, 2024 11:49 ISTநெல்லை திரையரங்கம் மீது தாக்குதல் எதிரொலி - போலீசார் பாதுகாப்பு
நெல்லை, மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் அமரன் மற்றும் கங்குவா திரைப்படங்கள் ஓடும் நிலையில், அதன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால், முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்து முன்னணியினர் திரையரங்கம் முன்பு திரண்டு வந்ததால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
-
Nov 16, 2024 11:41 ISTஎரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த நபர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
-
Nov 16, 2024 11:26 ISTதேசிய பத்திரிகை தினத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து
தேசிய பத்திரிகை தினத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையை நிலைநாட்ட போராடி வரும் பத்திரிகையாளர்களுக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
Nov 16, 2024 10:54 ISTபெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து
சென்னை குன்றத்தூரில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் இறந்த விவகாரத்தில் Unique பெஸ்ட் கன்ட்ரோல் என்ற தனியார் நிறுவனத்தின் உரிமத்தை வேளாண் துறை அதிகாரிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
-
Nov 16, 2024 10:50 ISTஆந்திராவில் நடிகை கஸ்தூரி தலைமறைவு?
நடிகை கஸ்தூரி பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.
-
Nov 16, 2024 10:28 ISTகத்திக்குத்து விவகாரம் - விக்னேஷின் தாயார் மீது புகார்
கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் மீது கத்தியால் குத்திய விவகாரத்தில் புதிய திருப்பம. கக்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தன் மீது அவதூறு பரப்பி வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார். "கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நான் கூறியதாக தவறான கருத்து" கூறி வருகிறார்.
என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதால் நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
நுரையீரல் பிரச்சினைக்கு பிரேமா 3 முறை மருத்துவர் ஜேக்கலின் மோசஸிடம் சிகிச்சை எடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
-
Nov 16, 2024 09:35 ISTவாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்று, நாளையும் (நவ.16,17) வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது;
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம், -
Nov 16, 2024 09:34 ISTமணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.
-
Nov 16, 2024 08:52 ISTரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இணைத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
Nov 16, 2024 08:45 IST20 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம் தவிர, புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், ஆகிய மாட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 16, 2024 08:41 IST'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குநர் சுரேஷ் சங்கையா
ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 41. இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Nov 16, 2024 07:54 IST‘அமரன்' படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ‘அமரன்‘ திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை அதிகாலையில் மர்ம நபர்கள் வீசிச் சென்றனர்.
சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.