Advertisment

Tamil News Highlights : நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

Latest Tamil News : கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights :  நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

Tamil News Highlights : கனடாவின் ராணுவ அமைச்சராகத் தமிழக பெண்

Advertisment

கடந்த மாதம் கனடாவில் நடந்த பார்லிமென்ட் தேர்லில், மொத்தமுள்ள 338 இடங்களில், பிரதமர் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றின. 170 இடங்கள் கைப்பற்றினால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, 38 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்ட பிரதமர் ட்ரூடோ. அதில், ராணுவ அமைச்சராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், 54, நியமிக்கப்பட்டுள்ளார். அனிதா ஆனந்தின் தந்தை எஸ்.வி.ஆனந்த், தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய், பஞ்சாபைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி - 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா

அணுக்குண்டுகளைச் சுமந்துகொண்டு 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரிகளைத் தவிடுபொடியாக்கும் அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. ஒடிஷா மாநிலம் அருகே அப்துல் கலாம் தீவில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையில் அக்னி ஏவுகணை நிர்ணயித்தபடி இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15% போனஸ்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி 15 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தரப்படும் என்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். மூலப்பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தீப்பெட்டியின் விலையை 2 ரூபாய் ஆக உயர்த்துவது குறித்து விவாதித்த உற்பத்தியாளர்கள், வங்கிக் கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வீடுவீடாகச் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு

நாடெங்கும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ள போதிலும், பல மாவட்டங்கள் இப்பணியில் மிகவும் பின்தங்கியுள்ளன. இதனால், கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதனை, வரும் 2-ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சிறப்புப் பரப்புரையை நடத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.105.13-க்கும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.101.25-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:06 (IST) 28 Oct 2021
    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

    வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


  • 21:05 (IST) 28 Oct 2021
    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

    வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


  • 20:13 (IST) 28 Oct 2021
    தமிழகத்தில் இன்று 1,061 பேருக்கு கொரோனா தொற்று; 12 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்


  • 19:50 (IST) 28 Oct 2021
    இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக் கல்வியினை மேலும் மேம்படுத்தும் - முதலமைச்சர் ஸ்டாலின்

    இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக் கல்வியினை மேலும் மேம்படுத்தும் என்றும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    மேலும், தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையும் அவர்களது பங்களிப்பும் கல்வியாளர் குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்


  • 18:55 (IST) 28 Oct 2021
    சென்னை கே.பி. பார்க் கட்டிடத்தின் பூச்சு வேலை மோசமாக உள்ளதாக ஐஐடி ஆய்வறிக்கை தாக்கல்

    சென்னை கே.பி. பார்க் கட்டிடத்தின் தரம் குறித்து ஐஐடி ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் பூச்சு வேலை மோசமாக உள்ளதாகவும், சிமெண்ட்டின் அளவு தேவையை விட மிக குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது


  • 18:52 (IST) 28 Oct 2021
    நவம்பர் 13, 14, 27, 28 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

    நவம்பர் 13, 14, 27, 28 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவ.1ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


  • 18:33 (IST) 28 Oct 2021
    நன்மாறன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 18:32 (IST) 28 Oct 2021
    நன்மாறன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 18:00 (IST) 28 Oct 2021
    ஆசிரியர்களின் சொத்துக்கள், கடன் விபரம் தாக்கல் செய்ய உத்தரவு

    அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் தங்களது சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


  • 17:44 (IST) 28 Oct 2021
    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, சாட்சியங்களை கலைத்ததாக தனபால் உள்ளிட்ட 2 பேரை தனிப்படை கைது செய்தது


  • 17:27 (IST) 28 Oct 2021
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் மரணம்

    சிபிஐ (எம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான நன்மாறன் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  • 16:55 (IST) 28 Oct 2021
    போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட்

    போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


  • 16:00 (IST) 28 Oct 2021
    எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்தவர் அதிமுகவில் இருந்து நீக்கம்

    இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த எடப்பாடி பழனிசாமி துரோகி என்று விமர்சித்த அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் கட்சியில் இருந்து நீக்கி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


  • 15:48 (IST) 28 Oct 2021
    வேலை வாங்கி தருவாக ரூ.76.5 லட்சம் மோசடி; அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு

    அதிமுக முன்னாள் சமூகநலத் துறை மற்றும் சத்துணவு மதிய உணவுத் திட்ட அமைச்சர் டாக்டர் வி சரோஜா, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.76.5 லட்சம் மோசடி செய்ததாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

    முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் என்று கூறப்படும் கலை மதி, மதிய உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், சரோஜாவின் அறிவுறுத்தலின் பேரில், ராசிபுரத்தில் வசிக்கும் கலை மதி மற்றும் அவரது கணவர் குணசீலன் ஆகியோர் அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக 15 பேரிடம் ரூ.76.5 லட்சம் பணம் வசூலித்துள்ளனர். இவர்கள் அந்த பணத்தை சரோஜாவுக்கு இரண்டு தவணைகளில் கொடுத்ததாகவும் ஆனால், வேலை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.


  • 15:34 (IST) 28 Oct 2021
    மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விதிமீறல் மீது நடவடிக்கை தேவை; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விதிமீறல் மீது நடவடிக்கை தேவை என்றும் அது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத உணர்வுகளை காரணம் காட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபட அனுமதிக்க கூடாது. அதிக ஒலி போன்ற விதிமீறல்களை அரசு தீவிரமாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.


  • 15:28 (IST) 28 Oct 2021
    மமக தலைவர்கள் ஜவாஹிருல்லா, அப்துல் சமதுவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ்

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் அப்துல் சமதுவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இருவரும் மமக உறுப்பினர்களாக தொடர தடை கோரி இளைஞர் அணி செயலாளர் அப்துல் ஹக்கீம் வழக்கு தொடர்ந்துள்ளார்.


  • 15:25 (IST) 28 Oct 2021
    சங்கராபுரம் பட்டாசு குடோன் தீ விபத்தில் 7 பேர் பலி; கலெக்டருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

    சங்கராபுரம் பட்டாசு குடோன் தீ விபத்தில் 7 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் 6 வாரங்களில் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


  • 14:01 (IST) 28 Oct 2021
    நவம்பர் 5 கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை

    நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி அடுத்த நாள் நவம்பர் 5 ஆம் தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிப்பதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


  • 13:49 (IST) 28 Oct 2021
    அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

    அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை. சசிகலா உடன் தொடர்பில் இருந்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கருத்து ஆரோக்கியமானதல்ல. அவர் கருத்துக்கு நான் எதிர்கருத்து சொல்வது சரியாக இருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


  • 13:48 (IST) 28 Oct 2021
    அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

    அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த காலத்திலும் இடமில்லை. சசிகலா உடன் தொடர்பில் இருந்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கருத்து ஆரோக்கியமானதல்ல. அவர் கருத்துக்கு நான் எதிர்கருத்து சொல்வது சரியாக இருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


  • 13:08 (IST) 28 Oct 2021
    அண்ணாத்த படம்: பேரன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான் - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

    மகள், மருமகன், பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்ததாக ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார். படத்தை பார்த்த தனது பேரன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


  • 12:37 (IST) 28 Oct 2021
    5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றுழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 12:30 (IST) 28 Oct 2021
    அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்

    அரசுப் பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற கூலித் தொழிலாளியின் மகன் அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


  • 12:19 (IST) 28 Oct 2021
    மீண்டும் சூர்யா - பாலா கூட்டணி

    “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்; ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான், அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்” என நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.


  • 12:00 (IST) 28 Oct 2021
    தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது. கோவில் நகைகளை உருக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 11:39 (IST) 28 Oct 2021
    நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் - உச்சநீதிமன்றம்

    16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது 2 பேருக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.


  • 11:27 (IST) 28 Oct 2021
    கல்லூரி கட்டிடங்கள் முதல்வர் திறப்பு

    ரூ.102.94 கோடி மதிப்பிலான உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


  • 11:25 (IST) 28 Oct 2021
    ஐஐடி மாணவனின் கட்டணத்தை அரசே ஏற்கும்

    அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமாரின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 11:18 (IST) 28 Oct 2021
    ஆர்யன் கான் வழக்கின் முக்கிய சாட்சி கைது

    நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியான கிரண் கோஸாவி போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கைது செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


  • 10:40 (IST) 28 Oct 2021
    இலக்கை நோக்கி வீர நடைபோடுவேன் - ராமதாஸ்

    "பாட்டாளிகளின் அன்பு, பாசம், பற்று, மதிப்பு மற்றும் மரியாதைக்கு முன் எந்த துரோகமும் என்னை என்ன செய்து விட முடியும்? வெகுவிரைவில் பாட்டாளிகளை சந்திப்பேன். அவர்களையும் அழைத்துக்கொண்டு இலக்கை நோக்கி வீர நடைபோடுவேன், வெற்றி இலக்கை விரைவாகவே அடைவோம்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


  • 10:38 (IST) 28 Oct 2021
    24 மணி நேரத்தில் 16,156 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,156 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது மற்றும் 733 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,60,989 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  • 10:37 (IST) 28 Oct 2021
    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயரும்!

    பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சமையல் காஸ் சிலிண்டர் விலையும் அடுத்த வாரம் உயர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


  • 09:52 (IST) 28 Oct 2021
    பாகிஸ்தான் வெற்றிக்காக கொண்டாட்டம் - உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் 6 பேர் கைது

    கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றதை கொண்டாடியதுடன் இந்தியாவை இழிவாக பேசியதாக கூறி உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று காஷ்மீரிலும் பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


  • 09:50 (IST) 28 Oct 2021
    22 வயது பெண் சிங்கம் உயிரிழப்பு

    சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கவிதா என்ற 22 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.


  • 09:49 (IST) 28 Oct 2021
    ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு - 3வது நாளாக விசாரணை

    போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.


  • 09:47 (IST) 28 Oct 2021
    அரசின் உரிமைகளில் ஆளுநரின் தலையீடு உள்நோக்கம் கொண்டது

    மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


  • 09:46 (IST) 28 Oct 2021
    சபர்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்திற்கு காந்தியின் கொள்ளுப்பேரன் எதிர்ப்பு

    குஜராத்தில் சபர்மதி ஆஸ்ரம மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.


Tamil Nadu Corona Virus Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment