Tamil News Highlights : வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில், சமையல் கேஸ் சிலிண்டரின் விலை, ரூ.900 என விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.15.50 உயர்ந்து தற்போது ரூ.915.50 என்றாகியுள்ளது. கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி சமையல் எரிவாயு, 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டெம்பர் 1-ம் தேதி, மேலும் 25 ரூபாய் உயர்ந்து 900- ஐ கடந்தது. தற்போது இன்னும் 15 ரூபாய் உயர்ந்து, ரூ.915-க்கு விற்கப்படவுள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் சிலிண்டர் விலை ரூ.300 உயர்ந்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் - 3 பேர் கொலை
காஷ்மீரில் ஒரு மணி நேரத்துக்குள் நடைபெற்ற 3 பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இக்பால் பார்க் என்ற இடத்தில் மருந்துக் கடை நடத்தி வரும் 68 வயதான மாக்கான் லால் பிந்த்ரோ என்பவர் சுமார் 7 மணி அளவில், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் பீகாரைச் சேர்ந்த சாலையோர கடை வியாபாரி வீரேந்திர பாஸ்வானையும், முகம்மது சாஃபி என்பவரையும் சுட்டுக் கொலை செய்துள்ளனர் பயங்கரவாதிகள். தடை செய்யப்பட்ட லக்ஷர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடைய தி ரெசிஸ்டென்ஸ் ப்ரண்ட் என்ற அமைப்பினர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப்படையினர் சந்தேகிக்கின்றனர்.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அடுத்த 24மணி நேரத்திற்கு, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில், பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:18 (IST) 06 Oct 2021உ.பி வன்முறை; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்த ராகுல், பிரியங்கா
லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்தனர்
- 21:52 (IST) 06 Oct 2021விவசாயிகளுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு; பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்கள் அறிவிப்பு
உத்திரபிரதேச வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு மற்றும் சத்தீஸ்கர் அரசு தலா ரூ. 50 லட்சம் வழங்குவதாக, அம்மாநில முதல்வர்கள் முறையே சரண்ஜித் மற்றும் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளனர்
- 21:52 (IST) 06 Oct 2021வியாழக்கிழமை வன்முறை நடந்த இடத்திற்கு அகிலேஷ் பயணம்
உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை வன்முறை நடந்த இடத்தை பார்வையிடுகிறார்
- 21:45 (IST) 06 Oct 2021வன்முறை நடந்த இடத்தை அடைந்த ராகுல் பிரியங்கா
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி, உத்திர பிரதேசத்தில் வன்முறை நடந்த இடத்திற்கு சென்று விவசாயிகளை சந்தித்து வருகின்றனர்
- 19:57 (IST) 06 Oct 2021தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,432 பேருக்கு கொரோனா;25பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 25பேர் உயிரிழந்துள்ளனர்.
- 19:56 (IST) 06 Oct 2021தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,432 பேருக்கு கொரோனா;25பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 25பேர் உயிரிழந்துள்ளனர்.
- 19:20 (IST) 06 Oct 2021வேலூரில் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
வேலூரில் தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 19:19 (IST) 06 Oct 2021வேலூரில் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
வேலூரில் தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 19:06 (IST) 06 Oct 2021ராகுலுடன் பிரியங்கா காந்தி லக்கிம்பூர் பயணம்
தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியுடன் லக்கிம்பூர் செல்கிறார்
- 18:35 (IST) 06 Oct 2021கேரளாவில் மேலும் 12,616 பேருக்கு கொரோனா;134 பேர் உயிரிழப்பு
கேரளாவில் மேலும் 12,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 134 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
- 18:35 (IST) 06 Oct 2021கேரளாவில் மேலும் 12,616 பேருக்கு கொரோனா;134 பேர் உயிரிழப்பு
கேரளாவில் மேலும் 12,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 134 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
- 18:14 (IST) 06 Oct 2021ஊரக உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி உடன் நிறைவு பெற்றுள்ளது.
- 18:14 (IST) 06 Oct 2021ஊரக உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி உடன் நிறைவு பெற்றுள்ளது.
- 17:55 (IST) 06 Oct 2021வாக்களிக்க முடியாததால் பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் மாவட்டம் இராமலை ஊராட்சியின் 3 மற்றும் 4வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு, 61வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 1,380 வாக்குகள் உள்ள நிலையில், ஒரே ஒரு வாக்குச்சாவடி மையமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாக்குகளை செலுத்துவதில் சிரமம் உள்ளதால் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- 17:53 (IST) 06 Oct 2021வாக்களிக்க முடியாததால் பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் மாவட்டம் இராமலை ஊராட்சியின் 3 மற்றும் 4வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு, 61வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 1,380 வாக்குகள் உள்ள நிலையில், ஒரே ஒரு வாக்குச்சாவடி மையமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாக்குகளை செலுத்துவதில் சிரமம் உள்ளதால் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- 17:04 (IST) 06 Oct 2021ஊரக உள்ளாட்சி தேர்தல்
வேலூர் மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.32 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.3 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
- 17:03 (IST) 06 Oct 2021பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே இரு பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ளளது.
- 16:19 (IST) 06 Oct 2021ஊரக உள்ளாட்சி தேர்தல் : நெல்லை மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.01 சதவீதம் வாக்குப்பதிவு
ஊரக உள்ளாட்சி தேர்தல் : நெல்லை மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 41.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- 15:38 (IST) 06 Oct 20212021ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2021
The 2021 nobelprize in Chemistry has been awarded to Benjamin List and David W.C. MacMillan “for the development of asymmetric organocatalysis.” pic.twitter.com/SzTJ2Chtgeஜெர்மனியை சேர்ந்த பெஞ்சமின் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:25 (IST) 06 Oct 2021உள்ளாட்சி தேர்தல் : இதுவரை 33.78% சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், இதுவரை 33.78% சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 15:19 (IST) 06 Oct 2021லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா
கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சொந்த வாகனத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி விமான நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- 14:57 (IST) 06 Oct 2021லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுமதி
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 5 பேர் மட்டும் செல்ல உ.பி. அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி உ.பி. சென்றுள்ளார்
- 14:56 (IST) 06 Oct 2021இணையமைச்சர் அஜய் மிஸ்ரா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு
லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொன்ற விவகாரத்தில் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
- 14:23 (IST) 06 Oct 2021தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளிநாடுவாழ் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க புதிய முயற்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
- 14:20 (IST) 06 Oct 2021கேரளா முதல்வருடன் திமுக எம்.பி சந்திப்பு
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
- 13:45 (IST) 06 Oct 2021வேட்பாளர் பெயர் பட்டியல் ஒட்டாத சர்ச்சை...வேட்பாளர் வாக்குவாதம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் ராமையன் பட்டியில், வார்டு உறுப்பினருக்காக பெயர் பட்டியல் ஒட்டப்படாதது ஏன் என்பது குறித்து வேட்பாளர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டு்ளளது. இதன் காரணமாக வேட்பாளர் வாக்குப்பதிவை நிறுத்த வலியுறுத்தியதால், அருகில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்த பெயர் பட்டியலை எடுத்து வந்து ஒட்டி அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
- 13:30 (IST) 06 Oct 2021லக்கிம்பூர் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி
லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி ஆகிய 5 நபர்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- 13:02 (IST) 06 Oct 2021உள்ளாட்சி தேர்தல் - 19.61% வாக்குகள் பதிவு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் காலை 11 மணி நிலவரப்படி 19.61% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- 12:50 (IST) 06 Oct 2021புலம்பெயர் நலவாரியம்
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புதிதாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைத்து பாதுகாப்பு செலுத்துவதும் தமிழகத்தின் கடமையாகும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
- 12:35 (IST) 06 Oct 2021உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்
பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரிய இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு கட்டுப்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சிவகாசியில் 5 லட்சம் குடும்பத்தினர் இந்த தொழிலை நம்பியுள்ளனர் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதம் செய்ய, தடை செய்யப்பட்ட பேரியம் உப்பு ஏன் பட்டாசு தொழிற்சாலையில் வைத்துள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- 12:33 (IST) 06 Oct 2021வானிலை அறிக்கை
நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12:06 (IST) 06 Oct 2021முதல்வர் மு.க.ஸ்டாலின் - டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினை டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பின் போது முதல்வருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, உயரதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.
- 12:04 (IST) 06 Oct 2021ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. ஜனநாயகத்துக்கு நேர் விரோதமாகவே நடைபெறுகிறது. வாக்குச் சாவடி தகவல்கள் அடங்கிய சீட்டுகளை வாக்காளர்களிடம் முறையாக வழங்கவில்லை என்று ஜெயக்குமார் குற்றச்சாட்டு
- 11:48 (IST) 06 Oct 2021ஊரக உள்ளாட்சி தேர்தல் : 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளது
காலை 9 மணி நிலவரப்படி 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை 97.98 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் கண்காணிப்புப் பணியில் 129 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.
- 11:45 (IST) 06 Oct 2021ஜவ்வரிசி கலப்படம் - நீதிமன்றம் உத்தரவு
ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 11:16 (IST) 06 Oct 2021உள்ளாட்சி தேர்தல் - 7.72% வாக்குப்பதிவு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், காலை 9 மணி நிலவரப்படி 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
- 11:16 (IST) 06 Oct 2021பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு
நேற்று லக்னோ சென்ற பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை எனவும் லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
- 11:14 (IST) 06 Oct 2021மத்திய அரசு அநீதி இழைக்கிறது - ராகுல் காந்தி
*விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது என்றும் மத்திய அரசு, விவசாயிகளை அவமதிப்பது மட்டுமன்றி அவர்களை கொலை செய்து வருகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
- 11:13 (IST) 06 Oct 2021ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்
புலியை பிடிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறோம் என்றும் பல்வேறு குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்றும் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி நிலவரம் குறித்து வன அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
- 10:12 (IST) 06 Oct 2021ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் மனு தள்ளுபடி
அதிமுக கிளைச் செயலாளருக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 10:08 (IST) 06 Oct 2021தனி ஊராட்சி கோரிக்கையை ஏற்காததால் தேர்தல் புறக்கணிப்பு
தனி ஊராட்சி கேட்டு விழுப்புரம் செஞ்சிக்குட்பட்ட கிராமமொன்றின் மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் அப்பகுதி வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
- 10:07 (IST) 06 Oct 2021குலசை தசரா திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா ,கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 15-ம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 09:32 (IST) 06 Oct 2021ராணிப்பேட்டையில் திமுக - அதிமுக மோதல்
ராணிப்பேட்டை சிப்காட் வ.உ.சி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக - அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்கு அருகே அதிமுகவினர் பேனர் வைத்ததாக கூறி இருதரப்புக்கு இடையே கைகலப்பு அரங்கேறியது.
- 09:06 (IST) 06 Oct 2021ஸ்வமித்வா திட்டம் இன்று துவக்கம்
மத்தியப் பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டப் பயனாளிகளுடன் இன்று பிரதமர் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 300 பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டைகளையும் பிரதமர் வழங்கவுள்ளார்.
- 09:03 (IST) 06 Oct 2021நவ.1-ம் தேதி 1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
நவ.1-ம் தேதி 1-8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க முன்னேற்பாடுகள் தொடர்பாக வரும் 12-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- 09:01 (IST) 06 Oct 2021ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி கோரியிருந்த நிலையில் அவருக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.
- 08:36 (IST) 06 Oct 2021முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.