Advertisment

Tamil News: நீட் விவகாரம் - முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Latest Tamil News : பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்த பொதுநல மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.

author-image
WebDesk
New Update
Tamil News: நீட் விவகாரம் - முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Tamil News Today : வேட்பாளர் செலவினங்களுக்கான நிதித்தொகை அதிகரிப்பு

Advertisment

நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர் செலவினங்களுக்கான நிதித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தொகுதிக்கு ரூ.75 லட்சத்திலிருந்து 90 லட்சமாகவும் சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாகவும் தேர்தல் செலவின நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒமிக்ரான் சாதாரணமானது இல்லை

ஒமிக்ரான் பாதிப்பின் தாக்கம் கடுமையாக இல்லை என்றாலும், சாதாரணமானது என வகைப்படுத்த முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரக்கைவிடுத்துள்ளார்.

24 மணி நேரத்தில் 23.67 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 23.67 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 6,263  பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 6.48 லட்சம், பிரான்ஸில் 2.61 லட்சம், பிரிட்டனில் 1.79 லட்சம் மற்றும் இத்தாலியில் 2.19 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் இன்று தொடக்கம்

நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகள் 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 64-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:34 (IST) 07 Jan 2022
    நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 20:51 (IST) 07 Jan 2022
    அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

    அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தவிட்டுள்ளது.


  • 20:48 (IST) 07 Jan 2022
    10 மற்றும் 12-ம் வகுப்புககுக்கான திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் திருத்த தடை

    10 மற்றும் 12-ம் வகுப்புககுக்கான திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் திருத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 19-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் முதல்முறையாக மாநிலம் தழுவிய அளவில் பொதுவான கேள்விகளை உருவாக்கி நடத்தப்பட உள்ள நிலையில், திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக்கூடாது என்றும், ஒரு பள்ளி மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டு்ளளது.


  • 20:39 (IST) 07 Jan 2022
    தமிழகத்தில் 9 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில், 8981 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2276413 ஆக உயர்ந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு இன்று 8 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 36833 ஆக உயர்ந்துள்ளது.


  • 19:32 (IST) 07 Jan 2022
    நீலகிரியில் சுற்றுலா தலங்களுக்கு நாளை முதல் கட்டுப்பாடு

    நீலகிரியில் சுற்றுலா தலங்களுக்கு நாளை முதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலை 10 முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


  • 19:24 (IST) 07 Jan 2022
    வெளிநாட்டில் இருந்து திரும்புவர்களுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை - மத்திய அரசு

    இந்தியாவில் கொரோன மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அணைவரும் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு்ளளது.


  • 19:09 (IST) 07 Jan 2022
    ஆளுநர் - பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பாதுகாப்பில், குறைப்பாடு மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.


  • 19:04 (IST) 07 Jan 2022
    அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக சார்பாக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீநிவாசன்

    நீட் விலக்கு மசோதா தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக சார்பாக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீநிவாசன் கலந்து கொள்வார் என்றும், கூட்டத்தில் நீட் எதற்காக தேவை என்பது குறித்து பாஜக எம்.எல்.ஏ. விளக்கம் அளிப்பார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


  • 19:04 (IST) 07 Jan 2022
    உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதமாக உயரும் என கணிப்பு

    இந்திய பொருளாதாரத்தில் கடந்தாண்டு ஜிடிபி 7.3 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.


  • 18:51 (IST) 07 Jan 2022
    இது பஞ்சாப் அரசின் கவனக்குறைவு : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

    பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி மேம்பாலத்தில் காத்திருந்த சம்பவம் பெரும் வைரலாக பரவி வரும் நிலையில், "பிரதமரின் பயணம் குறித்து முன் கூட்டியே தெரிவித்தும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை" இது பஞ்சாப் அரசின் கவனக்குறைவு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


  • 18:13 (IST) 07 Jan 2022
    பொங்கல் பரிசுப்பொருளில் பல்லி கிடந்த அதிர்ச்சி

    திருத்தணியில் பண்டக சாலையில், கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருளில் பல்லி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தன் என்பவர் தனது குடும்ப அட்டைக்கு கொடுக்கப்பட்ட பரிசுப்பொருளை வாங்கி சென்று வீட்டில் பிரித்து பார்த்தபோது புளியில் பல்லி கிடந்துள்ளது. இது குறித்து பண்டக சாலை ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.


  • 18:09 (IST) 07 Jan 2022
    குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த வழக்கு : விசாரணை நேர்மையாக நடைபெறுவதாக தகவல்

    புதுக்கோட்டை மாவட்டத்தில், குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த வழக்கில் விசாரணை நேர்மையாக நடைபெற்று வருகிறது. சிறுவன் மீது பாய்ந்த தோட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்குப் பிறகு அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் கூறியுள்ளார்.


  • 17:52 (IST) 07 Jan 2022
    கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா தாக்கல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    தமிழ்நாடு சட்டசபையில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்கும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

    இந் நிலையில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் இதற்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ள சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “1983 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டாக குறைப்பதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை. அனைத்து கூட்டுறவு சங்கங்களும் தற்போது லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.


  • 17:47 (IST) 07 Jan 2022
    ’ஊ சொல்றியா’ பாடல் சர்ச்சையானதில் கவலை இல்லை - தேவிஸ்ரீ பிரசாத்

    ‘புஷ்பா’ படத்தில் பணியாற்றியது எனக்கு ஐந்து வெவ்வேறு படங்களில் பணியாற்றியதுபோல் இருந்தது. ’ஊ சொல்றியா’ பாடல் சர்ச்சையானதில் எனக்கு கவலை இல்லை” என்று இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.


  • 17:32 (IST) 07 Jan 2022
    கொரோனா ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

    கொரோனா ஊரடங்கு வாகனச் சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் -என காவல்துறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 17:29 (IST) 07 Jan 2022
    ஞாயிறு முழு ஊரடங்கில் புறநகர் மின்சார ரயில் சேவை 50%ஆக குறைப்பு!

    வருகிற ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால், வழக்கம் போல் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரயில் சேவை நடைபெறும் என்றும், புறநகர் மின்சார ரயில் சேவை 50% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


  • 17:13 (IST) 07 Jan 2022
    அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை

    ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மக்கள் சிக்கல்களை சந்தித்தால் 011-23063554, 23060625 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 17:03 (IST) 07 Jan 2022
    பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்குகள் ரத்து - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு!

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கில் அரசியல் தலைவர்களை விமர்சித்து பேசியதாக பதியப்பட்ட 3 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மத உணர்வுகளை புண்படுத்துதல், இரு குழுக்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்துதல், பிரிவினையை ஏற்படுத்துவதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஏற்கத்தக்கதே என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


  • 16:53 (IST) 07 Jan 2022
    இந்தியாவில் மீண்டும் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு...!

    இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தபின்னர், கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த 5 நாட்களாக தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.

    நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று அதிரடியாக கிட்டத்தட்ட 91 ஆயிரம் பேருக்கு (சரியாக 90 ஆயிரத்து 928) கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

    இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 1.17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 28 சதவீதம் அதிகமாகும், (இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 36,265 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).


  • 16:47 (IST) 07 Jan 2022
    வரும் ஞாயிறன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு!

    வருகிற 9ம் தேதி ஞாயிறன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிறது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்று நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 16:29 (IST) 07 Jan 2022
    தேனியில் சேவல் சண்டை அனுமதி!

    தேனி உத்தமபாளையத்தில் ஜனவரி 17ல் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கியுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்த கூடாது என்றும், சேவலின் கால்களில் பிளேடு உள்ளிட்டவை கட்ட கூடாது என்றும் விதிமுறைகளை நியமித்துள்ளது.


  • 16:18 (IST) 07 Jan 2022
    தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிக்கை!

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து அதிமுகவின் கே.சி.பழனிசாமி வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இவ்வழக்கை நிராகரிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  • 16:11 (IST) 07 Jan 2022
    நீர் மேலாண்மைக்கான மத்திய ஜல் சக்தி துறை விருதுகள்; தமிழகத்திற்கு 3வது இடம் அறிவிப்பு !

    நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு மத்திய ஜல் சக்தி துறை விருது அறிவித்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசத்திற்கு முதலிடம், ராஜஸ்தானுக்கு 2வது இடம், தமிழகத்துக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது.


  • 16:07 (IST) 07 Jan 2022
    நீட் விவகாரம்; நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம்!

    நீட் விவகாரம் தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


  • 15:38 (IST) 07 Jan 2022
    பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை புகார்; ஐஜி-யின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

    பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐஜி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


  • 15:36 (IST) 07 Jan 2022
    ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல் - முதல்வர் ஸ்டாலின் !

    இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி. ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்.

    ஆதிக்க சக்திகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைத்து வந்த அநீதி துடைத்தெறியப்பட்டுள்ளது. 10% இடஒதுக்கீடு போராட்டத்திலும், அநீதியை முறியடித்து வெல்வோம் " என்று தெரிவித்துள்ளார்.


  • 15:25 (IST) 07 Jan 2022
    வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் - மத்திய அரசு

    வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இனி 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தனிமை காலம் முடிந்ததும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


  • 14:48 (IST) 07 Jan 2022
    தமிழ்நாடு அமைதியான பூமியாக உள்ளது: ஆளுநர் ஆர். என்.ரவி!

    கோவை, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உலக திருக்குறள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, தமிழ்நாடு அமைதியான பூமியாக உள்ளது. தமிழ் தெரியாது, ஆனால் மொழியை கற்று வருகிறேன் என அவர் பேசினார்.


  • 14:34 (IST) 07 Jan 2022
    இந்தியாவில் இதுவரை 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை!

    இந்தியாவில் இதுவரை 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளோம். அடுத்த 5 நாட்களில் 15 - 17 வயதுடைய 1.5 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


  • 14:33 (IST) 07 Jan 2022
    கர்நாடக வருவாய்த்துறை அமைச்சருக்கு கொரோனா!

    கர்நாடக மாநிலம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக்கிற்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 14:30 (IST) 07 Jan 2022
    இந்தியாவில் இதுவரை 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை!

    இந்தியாவில் இதுவரை 150 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளோம். அடுத்த 5 நாட்களில் 15 - 17 வயதுடைய 1.5 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


  • 14:27 (IST) 07 Jan 2022
    சென்னை எம்.ஐ.டி.யில் மொத்தம் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

    சென்னை, குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் இன்று மேலும் 61 பேருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எம்.ஐ.டி. கல்லூரியில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 14:21 (IST) 07 Jan 2022
    செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில், 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

    செங்கல்பட்டு அருகே போலீஸ் என்கவுன்ட்டரில், நேற்று நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரவுடிகளை ஒடுக்க சிறப்பு அதிகாரியாக வெள்ளத்துரை சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.


  • 14:17 (IST) 07 Jan 2022
    பிரதமர் மோடி புதுச்சேரி பயணம் ரத்து!

    பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி புதுச்சேரி வருவதாக இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


  • 14:12 (IST) 07 Jan 2022
    புதுச்சேரியில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

    புதுச்சேரியில் ரூ. 490 கோடி மதிப்பில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு இலவசமாக வழங்கப்படும். வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


  • 14:10 (IST) 07 Jan 2022
    அனைத்து அரசு பணிகளும் தமிழர்களுக்கு வழங்கப்படும்: நிதியமைச்சர்!

    அனைத்து அரசு பணிகளும் தமிழர்களுக்கு வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளிலும் அரசு உத்தரவு பொருந்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் கூறினார்.


  • 14:03 (IST) 07 Jan 2022
    யார் தவறு செய்தாலும் இந்த அரசு பார்த்துக் கொண்டு இருக்காது: அமைச்சர் பெரியசாமி!

    நகைக்கடன் வழங்கியதில் என்ன தவறு நேர்ந்தது என்பதை நேற்று சுட்டிக்காட்டினேன். யார் தவறு செய்தாலும் இந்த அரசு பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று பேட்டியின் போது கூறினார்.


  • 14:02 (IST) 07 Jan 2022
    கோவை அருகே பெண் மீது ஆசிட் வீச்சு!

    கோவை அருகே, அம்மன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசியதில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 13:35 (IST) 07 Jan 2022
    ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு.. தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி..வில்சன் எம்.பி!

    மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பெற்றிருப்பது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆண்டும் 4000 இடங்களை இழந்து வந்த ஒபிசி பிரிவினருக்கு சமூக நீதி கிடைத்துள்ளது என ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் திமுக சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.


  • 13:34 (IST) 07 Jan 2022
    ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு…தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி!

    மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பெற்றிருப்பது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆண்டும் 4000 இடங்களை இழந்து வந்த ஒபிசி பிரிவினருக்கு சமூக நீதி கிடைத்துள்ளது என ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் திமுக சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.


  • 13:22 (IST) 07 Jan 2022
    சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகம் திறப்பு!

    மேற்கு வங்கம், கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில், ரூ. 530 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ள, 2-வது வளாகத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த புற்றுநோயாளிகள் இதன்மூலம் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 13:15 (IST) 07 Jan 2022
    பஞ்சாப் தலைமை செயலாளருக்கு சம்மன்!

    பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான வழக்கில் பஞ்சாப் தலைமை செயலாளர் சத்தோபாத்யாயாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழு முன்பு ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 13 மூத்த அதிகாரிகளுக்கும் விசாரணை குழு சம்மன் அனுப்பியுள்ளது.


  • 12:59 (IST) 07 Jan 2022
    தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    கலைவாணர் அரங்கில் 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


  • 12:43 (IST) 07 Jan 2022
    10 மற்றும் 11 தேதிகளில் தமிழகத்தில் மழை

    தமிழ்நாடு வெதர்மென் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தமிழகத்தில் குறிப்பாக கடலோர, உள் மற்றும் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

    Clash between westerly trough and easterlies to bring rains from 10/11th to the state of Tamil Nadu along coast, interior and south Tamil Nadu. It will be accompanied by thunders and lightening due to clash of winds from opposite directions. pic.twitter.com/Ocrv0OLIKG
    — Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) January 7, 2022

  • 12:34 (IST) 07 Jan 2022
    சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறது

    திமுகவை சேர்ந்த ஒருவர் தவறு செய்தாலோ, ஒரு சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலோ, நிச்சயமாக, உறுதியாக அண்ணா மீது ஆணையாக, கலைன்ஞர் மீது ஆணையாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் பேச்சு


  • 12:24 (IST) 07 Jan 2022
    நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாசிடிவ்

    நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் வடிவேலு, கமல்ஹாசன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கோலிவுட் டவுனில் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 11:59 (IST) 07 Jan 2022
    சென்னைக்கே திரும்ப வரும் தமிழ் கல்வெட்டுகள்

    இந்திய தொல்லியல் துறை, மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் இருந்த கல்வெட்டுகள் உதகைக்கு மாற்றப்பட்டு பிறகு மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது


  • 11:55 (IST) 07 Jan 2022
    கொரோனா தடுப்பு பணிகள் : 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்பார்வையிட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நோய் தொற்று பரவல் தடுக்கும் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்துதல் போன்ற பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்பார்வை செய்ய உள்ளனர்.


  • 11:41 (IST) 07 Jan 2022
    15, 18, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மூடப்படும்

    தமிழகத்தில் ஜனவரி 15, 18, மற்றும் 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், 18 வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் மற்றும் ஜனவரி 26ம் தேதி அன்று குடியரசு தினம் என்பதால் இந்த அறிவிப்பு வெலியாகியுள்ளது.


  • 11:39 (IST) 07 Jan 2022
    ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது - முதல்வர்

    ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும் அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆளுநர் உரை மீதான முதல்வர் பதிலுரையில் முக ஸ்டாலின் பேச்சு


  • 11:38 (IST) 07 Jan 2022
    அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்க இயலவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    கொரோனா தொற்று காரணமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


  • 11:25 (IST) 07 Jan 2022
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்து தற்போது ரூ. 35, 888-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ. 14 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 4,486க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


  • 11:21 (IST) 07 Jan 2022
    மருத்துவ மேற்படிப்பு - ஓ.பி.சி.யினருக்கு 27% இட ஒதுக்கீடு உறுதி

    மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சியினருக்கு 27% இட ஒதுக்கீட்டினை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடத்த இடைக்கால அனுமதி அளித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.


  • 11:17 (IST) 07 Jan 2022
    அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

    கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்கும் வகையில் பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  • 11:02 (IST) 07 Jan 2022
    ஓ.பி.சி. பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு அறிவிக்கை செல்லும்

    மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு அறிவிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஓபிசி பிரிவனருக்கான ரூ.8 லட்சம் ஆண்டு வருமான வரையறை நடப்பு கல்வியாண்டுக்கு மட்டும் செல்லும் என்றும் தெறிவித்துள்ளது.


  • 10:56 (IST) 07 Jan 2022
    சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வாய்ப்பில்லை

    சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா என்று உறுப்பினர் ராஜா வினவியதற்கு சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வாய்ப்பில்லை என்றும் திருப்பூர், காஞ்சிபுரம், பல்லடம், நாகை உள்ளிட்ட 5 இடங்களில் புதிதாக ஜவுளி பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன என்றும் அமைச்சர் காந்தி பதிலளித்தார்.


  • 10:50 (IST) 07 Jan 2022
    மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க இயலாத சூழல்

    குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க இயலாத சூழல் உள்ளது என்றும் மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்து விட்ட நிலையில் கூடுதலாக பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


  • 10:49 (IST) 07 Jan 2022
    வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க சாத்தியக் கூறு இல்லை

    விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படுமா என்று உறுப்பினர் மார்க்கண்டேயன் எழுப்பிய கேள்விக்கு விளாத்திகுளத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க சாத்தியக் கூறு இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்துள்ளார்.


  • 10:20 (IST) 07 Jan 2022
    கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து தொடர்பாக இன்று மசோதா தாக்கல்

    தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து தொடர்பாக இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.


  • 10:19 (IST) 07 Jan 2022
    பாகிஸ்தானில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்திற்கு பெண் நீதிபதி நியமனம்

    லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆய்ஷா மாலிக், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க பாகிஸ்தானின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் உருவானதிலிருந்து அந்த நாட்டு உச்சநீதிமன்றத்திற்கு பெண் ஒருவர் முதன்முறையாக நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.


  • 10:18 (IST) 07 Jan 2022
    புற்றுநோய் 2-வது வளாகம் திறப்பு

    மேற்கு வங்கம், கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த புற்றுநோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


  • 10:16 (IST) 07 Jan 2022
    செங்கல்பட்டு இரட்டைக்கொலை - 2 பேர் என்கவுன்ட்டர்

    செங்கல்பட்டில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.


  • 10:15 (IST) 07 Jan 2022
    பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் கைது

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். தலைமறைவாக இருந்து ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார், நாங்குநேரி அருகே கைது.


  • 10:11 (IST) 07 Jan 2022
    சென்னையில் தங்கம் விலை குறைவு

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.35,888-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,486-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 10:09 (IST) 07 Jan 2022
    இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,007-ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் நேற்று 2,630-ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 3,007-ஆக அதிகரித்துள்ளது.


Corona Virus Stalin Modi Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment