Tamil News Highlights : ஒமிக்ரான் பரவலால் 8 தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ, சுவாசிலாந்து, மொசாம்பிக், மலாவி ஆகிய 8 ஆப்பிரிக்க நாடுகளின் நாடுகளின் பயணிகள் நுழைய விதிக்கப்பட்ட தடையை அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார்.
கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
டெல்டாவை விட வேகமாகப் பரவும் ஒமிக்ரான்
மாறுபாடடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்றும் டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு
நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இன்று டெல்லியில் சந்திக்கவுள்ளனர். தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திருமாவளவன், சு.வெங்கடேசன், நவாஸ் கனி உள்ளிட்டோர் அடங்கிய குழு சந்திக்கவுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் 55-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ. 101.40-க்கும், டீசல் ரூ. 91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:43 (IST) 29 Dec 2021மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 85 பேருக்கு ஒமிக்ரான் உறுதி
மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 85 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 252 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
- 20:55 (IST) 29 Dec 20217 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்
- 20:31 (IST) 29 Dec 2021தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமிக்ரான் உறுதி - சுகாதாரத்துறை
தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஒமிக்ரான் பாதித்தோரில் 27 பேர் குணமடைந்த நிலையில், 17 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும், தமிழகத்தில் 129 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
- 20:24 (IST) 29 Dec 2021டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 923 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 100-க்கு கீழ் பதிவாகி வந்த நிலையில், ஒரேநாளில் ஆயிரத்தை நெருங்கியுள்ளது
- 20:04 (IST) 29 Dec 2021தஞ்சை மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்துவைத்தார் ஸ்டாலின்
தஞ்சை மாவட்ட திமுக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
- 19:59 (IST) 29 Dec 2021குஜராத்தில் மேலும் 19 பேருக்கு ஒமிக்ரான் உறுதி
குஜராத்தில் மேலும் 19 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தில் மொத்த பாதிப்பு 97 ஆக உயர்ந்துள்ளது
- 19:51 (IST) 29 Dec 2021தமிழ்நாட்டில் ஒரே நாளில் 739 பேருக்கு கொரோனா; 8 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்
- 19:37 (IST) 29 Dec 2021ஜனவரி 1 முதல் முன்பதிவில்லாத பெட்டிகள் வசதி மீண்டும் அறிமுகம்
41 ரயில்களில் ஜனவரி 1 முதல் முன்பதிவில்லாத பெட்டிகள் வசதி மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ராமேஸ்வரம் - திருச்சி, நாகர்கோவில் - கோவை உள்பட 41 ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது
- 19:36 (IST) 29 Dec 2021மேட்டூர் அணை மற்றும் பூங்காவை நாளை மறுநாள் முதல் 3 நாட்கள் பார்வையிட அனுமதி இல்லை
மேட்டூர் அணை மற்றும் பூங்காவை நாளை மறுநாள் முதல் 3 நாட்கள் பார்வையிட அனுமதி இல்லை. கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
- 19:18 (IST) 29 Dec 2021சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் மரபணு பகுப்பாய்வுக் கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்
டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் மரபணு பகுப்பாய்வுக் கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்டறியும் வகையில் மரபணு பகுப்பாய்வகம் அமைக்கப்பட்டுள்ளது
- 18:17 (IST) 29 Dec 2021செஞ்சூரியன் டெஸ்ட் - தென்னாப்பிரிக்காவுக்கு 305 ரன் வெற்றி இலக்கு
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான செஞ்சூரியன் டெஸ்ட் கிரிக்கிட் போட்டியில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் பண்ட் - 34, கே.எல்.ராகுல் - 23, ரஹானே - 20, கோலி - 18 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம், தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய அணி 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
- 17:43 (IST) 29 Dec 2021பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 17:36 (IST) 29 Dec 2021புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை; 3 மணி நேரம் மது விற்க தடை - ஐகோர்ட்
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மனி முதல் 1 மணி வரை மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 17:28 (IST) 29 Dec 2021பிரதான் மந்திரி கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு 10வது தவணை நிதியை விடுவிக்கிறார் பிரதமர்
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 10வது தவணை நிதியை பிரதமர் மோடி விடுவிக்கிறார். ஜனவரி 1ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி வாயிலாக தவணை நிதி ரூ.20,000 கோடியை விடுவிக்கிறார்.
- 16:47 (IST) 29 Dec 2021புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்றும், புதுச்சேரியில் புத்தாண்டு நள்ளிரவில் மது விற்பனைக்கும், பார்களுக்கும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் இரவு 10 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை 1 மணி வரை மதுபானங்கள் விற்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
- 16:35 (IST) 29 Dec 2021பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து ஜார்க்கண்ட் அரசு அதிரடி
இந்தியாவில் கடந்த பல மாதங்களாக பெட்ரால் டீசல் விலை தொடர் ஏற்றம் கண்டு வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டிசல் விலை 100-ஐ கடந்தது. இந்நிலையில்,? ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை ரூ 25 குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிடடுள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு இரு சக்கரவாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனறு முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26 முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
- 16:34 (IST) 29 Dec 2021பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து ஜார்க்கண்ட் அரசு அதிரடி
இந்தியாவில் கடந்த பல மாதங்களாக பெட்ரால் டீசல் விலை தொடர் ஏற்றம் கண்டு வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டிசல் விலை 100-ஐ கடந்தது. இந்நிலையில்,? ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை ரூ 25 குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிடடுள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு இரு சக்கரவாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனறு முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
- 16:30 (IST) 29 Dec 2021பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து ஜார்க்கண்ட் அரசு அதிரடி
இந்தியாவில் கடந்த பல மாதங்களாக பெட்ரால் டீசல் விலை தொடர் ஏற்றம் கண்டு வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டிசல் விலை 100-ஐ கடந்தது. இந்நிலையில்,? ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை ரூ 25 குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிடடுள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு இரு சக்கரவாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனறு முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26 முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
- 16:28 (IST) 29 Dec 2021மாநாடு' படக்குழுவுக்கு இயக்குநர் செல்வராகவன் வாழ்த்து
'மாநாடு' மாநாடு படத்தை பார்த்த நடிகரும் இயக்குநருமான செல்வராகவன். திரைப்படத்தை ரசித்துப் பார்த்தேன்; சிம்பு, எஸ்.ஜே. சூர்யா நடிப்பு அருமை; விடாமுயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
- 15:53 (IST) 29 Dec 2021பிரதமர் மோடியின் அமீரக பயணம் ஒத்திவைப்பு
ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 6ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த நிலையில் தற்போது இந்த பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:52 (IST) 29 Dec 2021புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரிய வழக்கில், டிச.31ஆம் தேதி மதுபானம் விற்க ஏன் தடை விதிக்க கூடாது? என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- 15:44 (IST) 29 Dec 2021மக்கள் பிரச்சனை தீர்க்காத அதிகரிகளின் சம்பளம் நிறுத்தி வைப்பு
மக்களிடம் இருந்து வந்த புகாருக்கு தீர்வு காணாததால், தனது சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய பிரதேச மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் ஜவல்பூர் மாவட்டத்தில் ஆட்சியராக உள்ள கரன்வீர் சர்மா, மக்களின் பிரச்சனையை தீர்ப்பதை தனது தார்மீக கடமையாக நினைத்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் மக்கள் கொடுத்த புகார் மனுக்களை இவர் ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வில் பல புகார்கள் 100 நாட்களை கடந்தும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு அதிகரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர் கரண்வீர் சர்மா அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தவிட்டுள்ளார். மேலும் இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று தனது சம்பளத்தையும் நிறுத்தி வைக்குமாறும் கூறியுள்ளார். ஆட்சியரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.
- 15:40 (IST) 29 Dec 2021மக்கள் பிரச்சனை தீர்க்காத அதிகரிகளின் சம்பளம் நிறுத்தி வைப்பு
மக்களிடம் இருந்து வந்த புகாருக்கு தீர்வு காணாததால், தனது சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய பிரதேச மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் ஜவல்பூர் மாவட்டத்தில் ஆட்சியராக உள்ள கரன்வீர் சர்மா, மக்களின் பிரச்சனையை தீர்ப்பதை தனது தார்மீக கடமையாக நினைத்து பணியாற்றி வருகிறார். சமீபத்தில் மக்கள் கொடுத்த புகார் மனுக்களை இவர் ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வில் பல புகார்கள் 100 நாட்களை கடந்தும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு அதிகரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆட்சியர் கரண்வீர் சர்மா அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தவிட்டுள்ளார். மேலும் இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று தனது சம்பளத்தையும் நிறுத்தி வைக்குமாறும் கூறியுள்ளார். ஆட்சியரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.
- 15:16 (IST) 29 Dec 2021புதுக்கோட்டையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நகையால் பரபரப்பு
புதுக்கோட்டையில் 750 சவரன் தங்க நகை கொள்ளை என புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நகைகளில் 380 சவரன் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
- 14:57 (IST) 29 Dec 2021கொரோனா பாதித்த கங்குலி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
- 14:49 (IST) 29 Dec 2021நிதி நிறுவனம் நடத்தி மோசடி: ஹெலிகாப்டர் சகோதரர் சுவாமிநாதனுக்கு நிபந்தனை ஜாமின்!
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக, கைதான ஹெலிகாப்டர் சகோதரர் சுவாமிநாதனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 14:31 (IST) 29 Dec 2021சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவு!
சென்னையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை, கட்டுமானத்துடன் அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில், சம்மந்தப்பட்டவர்கள் மீது அபராதத் தொகையோ அல்லது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14:12 (IST) 29 Dec 2021வடகிழக்கு பருவமழை பாதிப்பு: நிதியை உடனே வழங்க மோடிக்கு முதல்வர் கடிதம்!
வடகிழக்கு பருவ மழை பாதிப்பை, சீரமைக்க தமிழகத்திற்கு வரக்கூடிய ரூ.6,230 கோடியும், தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ. 1,510 கோடி நிதியை விரைவில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 14:06 (IST) 29 Dec 2021அதிமுக இமேஜை அழிக்க தமிழக அரசு முயற்சி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்; அதிமுக இமேஜை அழிக்க தமிழக அரசு முயற்சி செய்வதாகவும், ஒரு நாள் திமுக இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் என்று கூறினார்.
- 14:05 (IST) 29 Dec 2021பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஈபிஎஸ்!
திமுக அரசு வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியின்படி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் தமிழக அரசு கொண்டு வர வேண்டும். அதன்மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
- 13:54 (IST) 29 Dec 2021மதுரை சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்!
மதுரை மத்திய சிறையில் இன்று கைதிகள் திடீர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சிறைக்கு வெளியேயும் கற்களை கொண்டு வீசி வருதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
- 13:38 (IST) 29 Dec 2021தமிழகம் முன்னேற, தமிழ்நாட்டை பாமக ஆள வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பாமக கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பேசிய அன்புமணி ராமதாஸ், முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. தமிழகம் முன்னேற, தமிழ்நாட்டை பாமக ஆள வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. ஒருமுறை அதிகாரம் நம்மிடம் கிடைத்தால் தமிழகத்தை, நாட்டின் உயர்ந்த மாநிலமாக மாற்றுவோம் என கூறினார்.
- 13:33 (IST) 29 Dec 20216 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருது!
45வது சென்னை புத்தக திருவிழா, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜனவரி 6ல் தொடங்க உள்ளது. இதில், 6 எழுத்தாளர்களுக்கு முத்தமிழ் கலைஞர் பொற்கிழி விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார் என பபாசி தலைவர் வயிரவன் கூறியுள்ளார்.
- 13:32 (IST) 29 Dec 2021வடகிழக்கு பருவமழை பாதிப்பு: நிதியை உடனே வழங்க மோடிக்கு முதல்வர் கடிதம்!
வடகிழக்கு பருவ மழை பாதிப்பை, சீரமைக்க தமிழகத்திற்கு வரக்கூடிய ரூ.6,230 கோடியும், தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ. 1,510 கோடி நிதியை விரைவில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 13:20 (IST) 29 Dec 20212022ஆம் ஆண்டு 5ஜி சேவை சேவை அறிமுகம்!
இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில் வரும் 2022ஆம் ஆண்டு 5ஜி சேவை தொடங்க உள்ளதாக இந்திய தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
- 13:18 (IST) 29 Dec 2021போலி பெண் சாமியார் அன்னபூரணிக்கு கொலை மிரட்டல்!
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கள்ளக்காதல் விவாகரத்தில் சிக்கிய அன்னபூரணி சமீபத்தில் தன்னை ஆதிபாராசக்தியின் அவதாரம் என்று அறிவித்து, சாமியாராக வலம் வந்தார். அவரது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பல விமர்சனங்களை கிளப்பியது. இந்நிலையில் தனக்கு கொலைமிரட்டல் வருவதாக அன்னபூரணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
- 13:14 (IST) 29 Dec 2021பிரபல இசையமைப்பாளர் டி. இமான் –மோனிகா ரிச்சர்ட் தம்பதி விவாகரத்து!
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவி மோமிகார் ரிச்சர்ட்-ஐ விவகாரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளார். நானும் என் மனைவி மோனிகாவும் கடந்த 2020 நவம்பர் மாதம் சட்டப்படி விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டதாகவும், இனி நாங்கள் இருவரும் கணவன், மனைவி இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
- 13:09 (IST) 29 Dec 2021அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம்: மாஜி அமைச்சர் போராட்டம்!
அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதா புகைப்படம் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
- 12:29 (IST) 29 Dec 2021டிசம்பர் 31 இரவு தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை - தமிழ்நாடு டி.ஜி.பி
தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். நாளை மறுநாள் இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவர் என தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்,
- 12:29 (IST) 29 Dec 2021டிசம்பர் 31 இரவு தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை - தமிழ்நாடு டி.ஜி.பி
தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவர் என தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்,
- 12:29 (IST) 29 Dec 2021டிசம்பர் 31 இரவு தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை - தமிழ்நாடு டி.ஜி.பி
தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவர் என தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்,
- 12:25 (IST) 29 Dec 2021டிசம்பர் 31 இரவு தமிழக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை - தமிழ்நாடு டி.ஜி.பி
தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். நாளை மறுநாள் இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவர் என தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்,
- 12:18 (IST) 29 Dec 2021கடலோர மாவட்டங்களில் ஜன.,1 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 1-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 11:37 (IST) 29 Dec 2021ராஜேந்திர பாலாஜியை பிடிக்க டெல்லி விரைந்தது தனிப்படை!
பண மோசடி வழக்கில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 10:42 (IST) 29 Dec 2021ஒமிக்ரான் : 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்
ஒமிக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தெரு நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
- 10:41 (IST) 29 Dec 2021மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை
மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், 15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜன.3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் வேகமாக பரவும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
- 10:37 (IST) 29 Dec 202135,37,693 நகைக்கடன் தள்ளுபடி கிடையாது
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன்களில் 35,37,693 நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- 10:29 (IST) 29 Dec 2021உ.பி.யில் காளை தாக்கி இறப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
உ.பி.யில் காளை மாடு முட்டி இறந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
- 10:28 (IST) 29 Dec 2021திருப்பதிக்கு நெய் அனுப்பிய முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா?
மதுரை ஆவினில் இருந்து திருப்பதிக்கு நெய் அனுப்பியதில் நடந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடைபெற்றுவருகிறது.
- 10:27 (IST) 29 Dec 2021தங்கம் விலை குறைந்தது
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.36,216-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,527-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:26 (IST) 29 Dec 2021ஓசூரில் விமான நிலையம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்துக்கு உகந்த இடம், விமானநிலையம் அமைக்க வசதிகள் கொண்ட இடங்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 10:25 (IST) 29 Dec 2021ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை
திருவள்ளூரில் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் குமார் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவர்கள் கேலி செய்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 10:15 (IST) 29 Dec 2021மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்
ஒமிக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் முக கவசம் அணிவதை 100% கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் புத்தாண்டை முன்னிட்டு ஆங்காங்கே மக்கள் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 09:32 (IST) 29 Dec 2021கொரோனா பாதித்த மாநிலம்: உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு
உத்தரப் பிரதேசத்தை கொரோனா பாதிப்பு மாநிலமாக அறிவித்து, அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 09:31 (IST) 29 Dec 2021மாற்றுத்திறனாளிகளுக்கானப் பாதை விரைவில் நிரந்தரமாகும்
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிகப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.