Tamil News : தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமின் போது, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் 2-வது மெகா தடுப்பூசி முகாமில் 30 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முகாம் நடைபெறும் நிலையில், சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆயிரத்து 600 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாமல்லபுரம் சென்ற ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, ஆர்.என். ரவி புதிய ஆளுநராக நேற்று பதவியேற்றார். இதையடுத்து குடும்பத்துடன் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்குச் சென்ற அவர், அங்குள்ள புராதன சிற்பங்களைப் பார்வையிட்ட பிறகு சென்னைக்குத் திரும்பினார்.
தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி உடனே ஏற்க வேண்டும்
காங்கிரசுக்கு நிரந்தரத் தலைவர் இருக்க வேண்டும் என தாங்கள் அனைவரும் விரும்புவதாகவும் சோனியா காந்தி கட்சியை நன்றாக வழிநடத்திய தலைவர் என்றபோதிலும், தலைமைப் பொறுப்பிலிருந்து விலக விரும்புவதாக அவர் நீண்டகாலமாக கூறி வருகிறார் என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி உடனடியாக ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் சமூக ஊடகப்பிரிவு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
“கருப்பானவர்கள் அழகானவர்கள் இல்லை என்ற எண்ணம் இங்கு நம்மில் பலருக்கு உண்டு. பரட்டை, சுருட்டை, குட்டை என்ற கேலிக்கு ஆளாகி நானே பலமுறை மீம்ஸ்க்கு உள்ளாகியிருக்கிறேன். ஆனால், தல வரலாற்றில் கருப்பு அழகின் வெளிப்பாடாக பாடப்பட்டுள்ளது.” என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம்; இன்று ஒரே நாளில் 15.23 லட்சம் தடுப்பூசிகளும், இதுவரை 4.12 கோடி தடுப்பூசிகளும் அரசால் செலுத்தப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்றில் இருந்து 1,594 பேர் குணமடைந்த நிலையில், 27 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.
சண்டிகரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சரண்ஜித் சிங் பஞ்சாபின் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும், கோவாக்சின் தடுப்பூசி போதுமான அளவு வரவில்லை என்றும், கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் தற்போது போடப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் குறித்து முதல்வர் ரங்கசாமியுடன் பா.ஜ.க. தலைமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தலைகீழாக நின்றாலும், தமிழக பாஜக ஆட்சிக்கு வராது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலம் பிற்பகல் 3.30 மணி வரை 12.23 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும், இன்று ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் இனி பாஜகவின் ஆட்சி தான் என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு திருமாவளவன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் இடங்கள் குறித்து அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
'விண்வெளிக்கு ஆய்வுக்காக மட்டுமல்லாமல் சுற்றுலாவும் செல்லலாம்' என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாவாக சென்றவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் 551 யூனிட் மணல் உள்ளது என திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை சமர்பித்துள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஜிகா மற்றும் நிபா வைரஸ் பரவல் இருந்தது. தீவிர கண்காணிப்பால் அவை தமிழகத்திற்குள் எட்டிக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மநீமவிற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 'டார்ச்லைட்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 2-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் படிப்படியாக தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,34,48,163-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 38,945 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். நலம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.