Tamil News Highlights : அரசு ஆவணங்களில் தாயார் பெயர்
அரசுத் துறைகளில் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ், உரிமம் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரைக் குறிப்பிடும் வகையில் தனிப் பிரிவை ஏற்படுத்தக்கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். அந்த மனுவில், இந்திய அரசியல் சட்டம், ஆண்- பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தாய்நாடு, தாய்மொழி என்றும் நதியைப் பெண்களின் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசுத் துறை ஆவணங்கள், விண்ணப்பங்கள், சான்றிதழ்களில் தாய் பெயரைக் குறிப்பிடும் வகையில் உரியத் திருத்தம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைந்த இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி – மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் லூகாசிடம் 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார் சுகாஷ் யத்திராஜ். இதுவரை 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் இந்தியா 26-வது இடத்தில் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து, ரூ.98.96-க்கும் டீசல் விலை 12 காசுகள் குறைந்து ரூ.93.26-க்கும் விற்கப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட்டின் 2 ஆவது இன்னிங்க்ஸில் தேனீர் இடைவேளை வரை இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 445 ரன்கள் எடுத்துள்ளது. பண்ட் 50 ரன்களும் ஷர்துல் தாக்கூர் 60 ரன்களும் எடுத்தனர்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பாஜக அரசை கண்டித்து செப்.20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
சென்னை, மீனம்பாக்கம், அனகாபுத்தூர், அடையாறு, கோட்டூர்புரம், சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெயது வருகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
“முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று வரை யாரும் அவரை நோக்கி கை நீட்டி குறை சொல்ல முடியாத ஆட்சி நடத்துகிறார். செக்கிழுத்த செம்மலுக்கு மிகப்பெரிய மரியாதை செய்த மு.க.ஸ்டாலின் வயதில் இளையவரென்றாலும் அவரது பாதங்களை தொட்டு வணங்குகிறேன்!” என்று எழுத்தாளர், பேச்சாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “நிபா வைரஸ் காரணமாக பதற்றப்படத் தேவையில்லை; வௌவால்கள் மூலமாக பரவக்கூடிய நோயாக இது உள்ளது, தொடர்ந்து எச்சரிக்கையாக கண்காணித்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
நாகை மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கு எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ள நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், “தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு ஊக்குவிப்பதாகவும், கடற்கொள்ளையர்கள் மற்றும் இலங்கை அரசு மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
“ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள்! ஆசிரியப்பணி என்பது கல்வியைப் புகட்டுவதோடு, மனிதர்களை; அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் அறப்பணி. என்னரும் தமிழ்நாட்டின்கண் அனைவரும் கற்று இன்புறச் செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் #teachersday வாழ்த்துகள்!” என்று முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#weatherupdate #tamilnadu pic.twitter.com/a715fONNye
— AIR News Chennai (@airnews_Chennai) September 5, 2021
டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 42,618 ஆக இருந்தது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு, 2024 ஆம் ஆண்டு கண்டிப்பாக தங்கம் வெல்வேன் என சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3ம் தேதி கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியப்பணி என்பது கல்வியைப் புகட்டுவதோடு, மனிதர்களை, அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் அறப்பணி என ஆசிரியர் நினைத்த முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய 'நல்லாசிரியர்' விருதை காணொலி வாயிலாக வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கைவிடுத்துள்ளார்.
“என் அன்புக்குரிய மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமும் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இறைவனின் அருளும், உங்கள் அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் எனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும், சக்தியையும் கொடுத்ததாக நான் மனப்பூர்வமாக உணர்கிறேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவிலிருந்து தமிழகம் வருவோர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் தமிழகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்,
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இரண்டு நாட்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அதனால், வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் பென்னிக்ஸ்சின் நண்பரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், மேலும் இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கும் முடிவை துணைநிலை ஆளுநர் தமிழிசை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
கோழிக்கோடு மாவட்டம் சூலூரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் கடந்த 1-ம் தேதி உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அச்சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை ஓட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,குழந்தைகளின் அறிவாற்றல், ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்க ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுவதாக, தனது சுற்றறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுவதாகவும், இணையவழி கல்வி மூலம் ஏற்பட்ட சவால்களை ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக மருத்துவ நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.