anna university latest news , anna university bifurcation
Tamil News Today : யுஜிசி விதிப்படியே அரியர்ஸ் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வெளியூர் பேருந்து சேவை தொடங்கியது - மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கம்.
Advertisment
மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், அனைத்து விதமான தளர்வுகளையும், அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா நோய் பரவல் அதிகரிப்பதை தடுக்க, அரசு தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், 8ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜே.ஜே.எம். குடிநீர் திட்டப் பணிகளுக்காக மாவட்ட அளவில் விடப்பட்ட பேக்கேஜ் டெண்டர் முறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசு நிர்வாக நெறிமுறைகளை வளைத்து, கிராம ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மிரட்டி, முன்தேதியிட்டு தீர்மானங்கள் பெற முயற்சிப்பதாக அறிக்கையில் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
விமான பயணச்சீட்டு தொகையை திரும்ப ஒப்படைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil