Advertisment

Tamil Breaking News Highlights: பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Salem Mayilai Train

Tamil news today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

புனித ஹஜ் பயணம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை செப்.23 வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது.

ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது http://www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

  • Sep 11, 2024 21:49 IST
    குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு குட் நியூஸ்

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 நடந்து முடிந்த நிலையில், குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 28 வகையான பணிகளில் 480 கூடுதல் காலி இடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 6,224 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9-ம் தெதி தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.



  • Sep 11, 2024 21:34 IST
    மிலாடி நபி, வார இறுதி விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

    முகூர்த்தம், மிலாடி நபி, வார இறுதி நாட்களை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டம்; கிளாம்பாக்கத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு செப்டம்பர் 13, செப்டம்பர் 14-ல் 955 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.



  • Sep 11, 2024 21:28 IST
    ஆயூஷ்மான் பாரத் திட்டம்: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீடு - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்; வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மருத்துவக் காப்பீடு தரப்படும் என்றும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.



  • Sep 11, 2024 20:11 IST
    மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் -  கோர்ட் உத்தரவு

    பிற்போக்கு பேச்சு மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் கைதான மகாவிஷ்ணுவிற்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மகாவிஷ்ணுவின் பின்னணி குறித்து விசாரிக்க 7 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் அனுமதி கோரி நிலையில் 3 நாட்கள் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Sep 11, 2024 19:47 IST
    வி.சி.க மது ஒழிப்பு மாநாடு: திருமாவளவனின் நோக்கம் வரவேற்கத்தக்கது  - சீமான்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “மது ஒழிப்பு என்ற திருமாவளவனின் நோக்கம் வரவேற்கத்தக்கது; மது விற்பனை குறைந்தால் நடவடிக்கை எடுக்கும் ஆட்சியுடன் கூட்டணி வைத்து, மதுவை ஒழிக்க போராடி என்ன பயன்? ஒரே அணியில் மதுவுக்கு எதிராக கொள்கையை முன்வைத்து தேர்தலை சந்திக்கத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Sep 11, 2024 19:43 IST
    கொலை மிரட்டல் வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பிக்கு நீதிமன்ற காவல் - கோர்ட் உத்தரவு

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தம்பி எம்.ஆர். சேகர் கொலை மிரட்டல் வழக்கில் செப்டம்பர் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



  • Sep 11, 2024 19:01 IST
    ஓலா ஷோரூமுக்கு தீ வைத்த வாடிக்கையாளர்

    கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் இ-ஸ்கூட்டர் வாங்கிய 2, 3 நாட்களிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இ-ஸ்கூட்டரை சரி செய்வதில் ஷோரூம் ஊழியர்கள் அலட்சியம் காட்டியதால் வாடிக்கையாளர் ஷோரூமுக்கு தீ வைத்துள்ளார் 



  • Sep 11, 2024 18:47 IST
    வெள்ளப்பெருக்கு - குற்றால அருவிகளில் குளிக்க தடை

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்



  • Sep 11, 2024 18:23 IST
    பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் சலசலப்பு

    பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் சிலர் நினைவிடத்தின் மீது ஏறி அஞ்சலி செலுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. புதிய தமிழகம் கட்சி பொதுச்செயலாளர் வி.கே. ஐயரை சிலர் கீழே தள்ளிவிட்டனர்



  • Sep 11, 2024 18:06 IST
    தி.மு.க.,வை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் – எல்.முருகன்

    தி.மு.க.,வை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். திருமாவளவனுக்கு எதாவது கோரிக்கை இருக்கலாம். மது ஒழிப்பு மாநாட்டை மிரட்டுவதற்கான யுக்தியாக பார்க்கிறேன். திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்



  • Sep 11, 2024 17:48 IST
    கூட்டணி வைக்கும் போது மது ஒழிப்பு குறித்து வலியுறுத்தினார்களா? வி.சி.க.,வுக்கு சீமான் கேள்வி

    கூட்டணி வைக்கும் போது மது ஒழிப்பு குறித்து வலியுறுத்தினார்களா? மதுவுக்கு எதிராக ஒரே அணி அமைத்து தேர்தலை சந்திப்போமா? டாஸ்மாக்கில் விற்பனை குறைந்தால், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. திருமாவளவன், யாருடன் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்



  • Sep 11, 2024 17:26 IST
    மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

    அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி கைதாகியுள்ள மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது



  • Sep 11, 2024 16:35 IST
    தவறான தகவல் தெரிவித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி

    சிவகங்கையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தவறான தகவல்களை தெரிவித்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,



  • Sep 11, 2024 16:32 IST
    உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட 11 வயது சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை

    திண்டுக்கல்: நடுப்பட்டி கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிராமம் முழுவதும் நாளை காய்ச்சல் முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



  • Sep 11, 2024 16:29 IST
    ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி

    நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற அகில இந்திய செயலாளர் குமரன் என்பவரின் குழந்தைக்கு கணியன் என பெயர் சூட்டிய விஜய் சேதுபதி குழந்தையைக் கொஞ்சி முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது



  • Sep 11, 2024 16:27 IST
    ஜாஃபர் சாதிக்கின் மனு தள்ளுபடி

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய ஜாஃபர் சாதிக்கின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Sep 11, 2024 15:47 IST
    தன் வழக்கில் தானே வாதாட உள்ளதாக மகா விஷ்ணு தெரிவிப்பு

    வழக்கறிஞர் விலகியதால், தன் வழக்கில் தானே வாதாட உள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்த மகா விஷ்ணு, போலீஸ் காவலுக்கு அனுப்பினால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்



  • Sep 11, 2024 15:45 IST
    பில் கட்ட சொன்னதால் உணவக ஊழியரை கடத்திய கும்பல்

    மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தப்பியோடிய கும்பலை தடுத்து நிறுத்த முயன்ற உணவக ஊழியரை காரில் தரதரவென இழுத்து சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.  கடத்தப்பட்ட  ஊழியரின் கண்ணை கட்டி இரவு முழுவதும் சிறை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 11, 2024 15:12 IST
    கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா

    கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா கார் விபத்தில் சிக்கியுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் கார் மோதியுள்ளது. இருசக்கர வாகனம் திடீரென குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. 



  • Sep 11, 2024 15:02 IST
    வெள்ளப்பெருக்கு - ஏனாம் பிராந்தியத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கனமழை காரணமாக கௌதமி, கோதாவரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

     



  • Sep 11, 2024 15:02 IST
    மதுரை புத்தக கண்காட்சி: மாணவர்களை வெயிலில் நிற்க வைத்ததாக புகார் 

    மதுரை புத்தக கண்காட்சியில் மாணவர்களை வெயிலில் நிற்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை அடுத்து மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம்  செய்து கொடுத்துள்ளது. மதுரை புத்தகக் கண்காட்சியை காண வந்த மாணவர்கள் நிழல் பந்தலில், நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பகுதி பகுதியாக மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 



  • Sep 11, 2024 14:01 IST
    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, தென்காசி, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Sep 11, 2024 13:46 IST
    பாடகர் மனோவின் 2 மகன்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்க வந்தவர்களை குடிபோதையில் இருந்த பாடகர் மனோவின் மகன்கள் உட்பட 5 பேர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. 

    பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்



  • Sep 11, 2024 13:19 IST
    பாலிவுட் நடிகையின் தந்தை தற்கொலை

    பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா தற்கொலை

    மும்பையில் தான் வசிக்கும் குடியிருப்பு கட்டடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

    மலைகாவின் தந்தை நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தகவல்,

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை, உயிரே படத்தில் இடம்பெற்ற "தைய்யா தைய்யா" பாடல் மூலம் பிரபலமடைந்தவர் மலைகா அரோரா

    நடனம் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் நடிகை மலைகா அரோரா



  • Sep 11, 2024 12:53 IST
    அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவனால் பரபரப்பு

    நெல்லை மாவட்டம் தாழையூத்து அரசு உதவி பெறும் பள்ளியில் அரிவாளுடன் வந்த மாணவனால் பரபரப்பு

    சக மாணவனுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், அரிவாளை எடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல்

    ஆசிரியர் சோதனை செய்த போது பையில் அரிவாள் இருந்தது கண்டுபிடிப்பு.

    காவல்துறை விசாரணைக்குப் பின், அரிவாள் எடுத்து வந்த மாணவன் உட்பட 3 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு



  • Sep 11, 2024 12:40 IST
    மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்

    மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

    மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ள போலீசார்



  • Sep 11, 2024 12:36 IST
    ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசல்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு

    4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலை கணிசமாக குறையும் - மனுதாரர்

    பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பில் சேர்க்கும் கோரிக்கையை பரிசீலிக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ள கேரள உயர் நீதிமன்றம்

    கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு அவகாசம்



  • Sep 11, 2024 12:12 IST
    ஜாமின் கோரி மகாவிஷ்ணு மனு

    மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு ஜாமின் கோரி மனு

    சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது



  • Sep 11, 2024 12:09 IST
    மனோவின் மகனிடம் போலீசார் விசாரணை

    16 வயது சிறுவனை தாக்கிய புகாரில் பிரபல பாடகர் மனோவின் மகனிடம் போலீசார் விசாரணை

    வளசரவாக்கத்தில் உள்ள மனோவின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வரும் போலீசார்

    நேற்றிரவு ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் குடிபோதையில் கிருபாகரன் மற்றும் மதுரவாயிலை சேர்ந்த 16 வயது சிறுவனை தாக்கியதாக புகார்

    கிருபாகரனுக்கு தலையிலும், 16 வயது சிறுவனுக்கு உடலின் பல இடங்களிலும் காயம் என தகவல்

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை



  • Sep 11, 2024 11:44 IST
    மதுக்கடைகளை மூடுவதில் என்ன சிக்கல்?: திருமா

    தமிழகத்தில் மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக மதுவிலக்கு மாநாட்டில், கட்சி வரம்புகளை கடந்து அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    எல்லா கட்சிகளும் மதுவிலக்கில் உடன்பாடாக இருக்கும் போது, மதுக்கடைகளை மூடுவதில் என்ன சிக்கல்? 

    மதுக்கடைகளை மூடி, பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது, தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?"

    எல்லாவற்றையும் அரசியல், கூட்டணியோடு இணைத்து பார்க்க கூடாது- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 



  • Sep 11, 2024 11:39 IST
    சீமான் இரங்கல்

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவிற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்



  • Sep 11, 2024 11:12 IST
    7 மாவட்டங்களில் இன்று மழை

    தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 



  • Sep 11, 2024 10:59 IST
    இமானுவேல் சேகரன் நினைவு தினம்

    இமானுவேல் சேகரன் நினைவு தினம்: தமிழ்நாடு அரசு சார்பில் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை;
    அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், பெரிய கருப்பன், மூர்த்தி, நவாஸ் கனி எம்.பி. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடனிருந்தனர்



  • Sep 11, 2024 10:35 IST
    7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Sep 11, 2024 10:30 IST
    ஜெயம் ரவி மீது ஆர்த்தி குற்றச்சாட்டு

    திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல

    -ஜெயம் ரவி மீது ஆர்த்தி குற்றச்சாட்டு



  • Sep 11, 2024 10:16 IST
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ. 6,715க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ. 53,720க்கும் விற்பனை



  • Sep 11, 2024 09:24 IST
    ஃபார்முலா 4 கார் பந்தயம் 3வது சுற்று

    ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் அடுத்த பகுதியாக, 3வது சுற்று, சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் வரும் செப். 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் நடைபெறவிருந்த இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் கார் பந்தயம், சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.



  • Sep 11, 2024 08:31 IST
    ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை

    முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை.

    தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை



  • Sep 11, 2024 07:50 IST
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

    நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியதில் கார்தி, சண்முகம், ராமையன், தேவராஜ் உட்பட 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Sep 11, 2024 07:35 IST
    தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப். 11) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 16-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Sep 11, 2024 07:34 IST
    பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

    பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (செப்.12) முதல் தொடங்குகிறது.

    ஜனவரி 10-ஆம் தேதி பயணம் செய்வோர் செப்.12-ஆம் தேதியும், ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோர் செப்.13-ஆம் தேதியும், ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோர் செப்.14-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

    பொங்கல் பண்டிகைக்கு செல்வோரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆா்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment