Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
அரசு பிஎட் கல்லூரிகளில் சேர செப்.16 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
நடப்பு கல்வி ஆண்டின் பிஎட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 16-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 26-ம் தேதி முடிவடைகிறது. 30-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் அக்டோபர் 23-ம் தேதி தொடங்கும். பிஎட் படிப்பில் அரசு கல்லூரிகளில் 900 இடங்கள், அரசு நிதியுதவி உதவிபெறும் கல்லூரிகளில் 1,040 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
-
Sep 14, 2024 17:18 IST"ஜனநாயகத்தின் `ஒளி விளக்கு' வருவார்..!"
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் கடைசியாக நடிக்கும் `தளபதி69' திரைப்படம் 2025 அக்டோபரில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
Sep 14, 2024 16:37 ISTஅன்னபூர்ணா விவகாரம் - பா.ஜ.க. நிர்வாகி நீக்கம்
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில்தவறான தகவல்களை பரப்பியதாக பா.ஜ.க. நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அன்னபூர்ணா ஹோட்டல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சதீஷ் மீது புகார்
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
-
Sep 14, 2024 16:21 ISTவேன் மீது கார் மோதி 4 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதி 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் இருந்து சுப நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் கார் மீது சுற்றுலா வேன் மோதியுள்ளது. காரில் வந்தவர்களில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Sep 14, 2024 16:20 ISTமகாவிஷ்ணுவின் காவல் நீட்டிப்பு
மகாவிஷ்ணு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வரும் 20 ஆம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மகாவிஷ்ணு. அரசு பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டவர். திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Sep 14, 2024 16:19 IST'புதிய வீடியோதான்; கோரிக்கை பல ஆண்டுக்கு முன்பு வைத்தது' - மதுரையில் திருமாவளவன் பேச்சு
மதுரையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை. பழைய கோரிக்கையை நினைவுபடுத்தி தற்போது ஏன் போட்டனர் என்பதை அட்மினிடம் தான் கேட்க வேண்டும். ஆட்சி, அதிகாரம் குறித்து நான் பேசியதை ஏன் எடுத்து போட்டனர் என்பது குறித்து விளக்கம் கேட்பேன்." என்று அவர் கூறினார்.
-
Sep 14, 2024 16:16 IST'தி.மு.க கூட்டணியில் வி.சி.க தொடர்கிறது' - திருமாவளவன்
"திமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து விசிக எப்போதுமே பேசவில்லை. திமுக கூட்டணியில் தான் இப்போதும் விசிக இருக்கிறது" மதுரையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
Sep 14, 2024 15:15 ISTபா.ஜ.க நிர்வாகி நீக்கம்
கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
Sep 14, 2024 15:14 IST'முதல் படம் வெற்றி படம்' - லெஜெண்ட் சரவணன்
"யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என்னை பொறுத்தவரை முதல் படம் வெற்றி படம், இரண்டாவது படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும்" என்று லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.
-
Sep 14, 2024 14:32 ISTகுரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி?
தமிழகத்தில் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வியா? 'ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது' என குறிப்பிட்டு இடம்பெற்ற கேள்வி. ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது எனவும் கேள்வி இருந்துள்ளது.
அரசு, ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், குரூப் 2 தேர்வில் சர்ச்சை கேள்வி.சனாதனம் குறித்து பேசியவர்கள், தற்போது அமைதியாகி விட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை இன்று மறைமுகமாக சீண்டி இருந்தார்
-
Sep 14, 2024 14:16 ISTசார்-பதிவாளர் அலுவலகத்தில் திருஷ்டி கழிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருஷ்டி கழிக்கப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
Sep 14, 2024 13:54 ISTவீடியோவை நீக்கியது அட்மின் தான்- திருமா
'ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. அமைச்சரவையிலும் பங்கு..' என வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசிய விவகாரம். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வீடியோவை நீக்கியது அட்மின் தான். அவரிடம் விசாரித்து சொல்கிறேன் என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
-
Sep 14, 2024 13:46 ISTநடிகர் சங்கத்திற்கு தனுஷ் நன்றி
நடிகர் சங்கத்திற்கு தனுஷ் நன்றி. என் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் உறுதுணையாக இருந்த நடிகர் சங்கத்திற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
-
Sep 14, 2024 13:32 ISTநேரில் அழைத்தால் தான் பங்கேற்பது பற்றி முடிவு - ஜெயக்குமார்
வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டிற்கு நேரில் அழைத்தால் பங்கேற்பது பற்றி அதிமுக பரிசீலிக்கும். அதிமுக உடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் ஆட்சியில் பங்கு தரப்படாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
Sep 14, 2024 13:13 ISTபுதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
"வேண்டியவர்களுக்கு புறவாசல் வழியாக பணி நியமனம் அளித்து, வாக்களித்த மக்களுக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்? ஏமாற்றுகிறீர்கள்?. 16 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி அரசுக்கு, நியாயமான தேர்வை நடத்த முடியாதா?”. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 52 துறைகளில் புறவாசல் நியமனங்கள் நடைபெறுவதாக புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. முறையான அறிவிப்பு வெளியிட்டு, விதிகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தி, தகுதியின் அடிப்படையில், இடஒதுக்கீட்டை பின்பற்றி பணிநியமனங்கள் வழங்க அறிவுறுத்தல். சட்ட விரோதமாக பணி நியமனங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Sep 14, 2024 12:50 ISTஎண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு. லிட்டருக்கு ₹25 வரை உயரும் என எண்ணெய் விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Sep 14, 2024 12:22 IST'ஆட்சியிலும் பங்கும், அதிகாரத்திலும் பங்கு' - திருமாவளவன்
'ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. கடைசி மனிதனுக்கும் சனநாயகம்.. எளிய மக்களுக்கும் அதிகாரம் என குறிப்பிட்டு பழைய வீடியோவை பகிர்ந்திருந்தார், திருமாவளவன். சமூக வலைதளங்களில் விவாத பொருளான நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கினார். முன்னதாக வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க., த.வெ.க.,வை அழைப்பு விடுத்தது பேசு பெருளானது குறிப்பிடத்தக்கது.
-
Sep 14, 2024 12:20 ISTகாவல்துறையைச் சேர்ந்த 129 பேருக்கு விருது
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, 129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Sep 14, 2024 11:16 ISTதமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் திடீர் ராஜினாமா
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமான் திடீரென ராஜினா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார்!
-
Sep 14, 2024 11:01 ISTமீனவர்கள் பிரச்சனைக்கு இந்திராகாந்திதான் காரணம்: மதுரை ஆதீனம் பேட்டி
மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் கச்சத்தீவை தாரை வார்த்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்திதான் காரணம். கச்சத்தீவை மீட்டால்தான் மீனவர்களை காப்பாற்ற முடியும்
மதுரை ஆதீனம் பேட்டி
-
Sep 14, 2024 10:43 ISTடிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி
குரூப் 2, 2A தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட கூடுதலாக ஸ்கேனிங் இயந்திரங்கள், பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
– டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி
-
Sep 14, 2024 10:10 ISTஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கதேச கடற்கரை பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம், ஜார்கண்ட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க கூடும்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
-
Sep 14, 2024 10:06 ISTகாஷ்மீரில் 2 வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க, ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
-
Sep 14, 2024 09:21 ISTஇபிஎஸ் வெளிநாடு சென்றபோது 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை
எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றபோது, 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை.. அதை வெளியில் சொன்னால் அவருக்கு அவமானம்
அமெரிக்காவில் இருந்து திரும்பிய.ஸ்டாலின் பேட்டி
-
Sep 14, 2024 08:55 ISTசென்னை திரும்பினார் ஸ்டாலின்
அமெரிக்க பயணம் மிகப் பெரிய பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. உலகின் புகழ்பெற்ற தலைசிறந்த நிறுவனங்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளேன்.
- மு.க.ஸ்டாலின் பேட்டி
-
Sep 14, 2024 08:15 ISTஜம்மு-காஷ்மீரில் பிரதமர் மோடி இன்று பிரசாரம்
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். பரப்புரை மேற்கொள்ளும் பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Sep 14, 2024 07:43 IST9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வடகிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் புயல் எச்சரிக்கை
-
Sep 14, 2024 07:43 ISTதமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. 2,327 பணியிடங்களுக்கு 7.90 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 2,763 மையங்களும், சென்னையில் மட்டும் 251 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
-
Sep 14, 2024 07:42 ISTஅமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் இன்று சென்னை வருகை
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்புகிறார்.
இன்று காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து முதல்வரை வரவேற்கின்றனர்.
-
Sep 14, 2024 07:42 ISTஸ்ரீ விஜயபுரம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேரின் (Portblair) பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.