/tamil-ie/media/media_files/uploads/2023/07/rain-234.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 221-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தீவிர புயலாக ‘டானா’
மத்திய வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டாணா புயல் தீவிர புயலாக நேற்று வலுப்பெற்ற நிலையில் நாளை(அக்.25) ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 24, 2024 22:45 IST
கனமழை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அக். 25-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் 25-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
-
Oct 24, 2024 22:01 IST
திருச்சியில் நடந்ததை போலமதுரையிலும் விமானங்கள் இறங்குவதில் சிக்கலா? பரிதவிப்பில் பயணிகள்
மதுரை நகரில் காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை வேளையில் குளிர்ந்த காற்றுடன் லேசான தூறல் மழை பொழிய துவங்கிய நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெல்ல உருந்து செல்கிறது மதுரையில் சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில், மதுரையில் தற்போது கன மழை பெய்து இருந்தால் பெங்களூரில் இருந்து மதுரைக்கு வந்த விமானமும் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த விமானம் இரண்டு விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு வருகிறது.
மோசமான வானிலை காரணமாகவும் மழை பொழிவதால் சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் திருமங்கலம் பகுதிகளும் பெங்களூரில் இருந்து புறப்பட்ட விமானம் ஆண்டிப்பட்டி பகுதிகளிலும் வானத்தில் வட்டமடித்து வருகிறது. இரு விமானங்களும் மழை ஓய்ந்தால் மட்டுமே வானிலை சீரானால் மட்டுமே தரையிறங்க உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்படும் என்ற நிலையில் உள்ளது.
-
Oct 24, 2024 21:41 IST
சென்னையில் பி.எஸ்.கே குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
சென்னையில் பி.எஸ்.கே குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, பி.எஸ்.கே நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
Oct 24, 2024 20:44 IST
இதுதான் கடமையாக இருக்க வேண்டும்; ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
“படிக்கும் மேசையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கிவிட்டு படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்” என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார், அதில், அறிவியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்ப்பதுதான் கடமையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
-
Oct 24, 2024 20:26 IST
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு; மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Oct 24, 2024 19:52 IST
விளையாட்டுத் துறையும் வளர்ந்திருக்கு.. அமைச்சரும் வளர்ந்திருக்கிறார் - ஸ்டாலின் புகழாரம்
முதலமைச்சர் கோப்பை விருது வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “துறையும் வளர்ந்திருக்கு.. அமைச்சரும் வளர்ந்திருக்காரு” என்று துணை முதலமைச்சர் உதயநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
-
Oct 24, 2024 19:48 IST
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருகிறது - உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் கோப்பை பொட்டிகளுக்கு ரூ. 83 கோடி நிதியை முதலமைச்சர் ஒதுக்கினார். முதலமைச்சர் கோப்பை விருது வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு: “இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருகிறது; விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமிஅ ஒரு தடையாக இருக்கக்கூடாது” என்று கூறினார்.
-
Oct 24, 2024 18:57 IST
விஜய் வரும் வழியில் திடீர் மாற்றம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு, விஜய் வரும் வழியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-
Oct 24, 2024 18:38 IST
தீட்சிதர்களால் கோயில் நிலங்கள் விற்பனை; ஐகோர்ட்டில் அறநிலையத் துறை அறிக்கை
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்தது
-
Oct 24, 2024 18:14 IST
இந்து சமய அறநிலையத் துறைக்கு அவகாசம்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க உள்ள நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய உத்தரவுகளை பெற இந்து சமய அறநிலையத் துறைக்கு 3 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Oct 24, 2024 18:02 IST
காணொலி வாயிலாக கண்காணிக்கும் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் காணொலி காட்சி வாயிலாக கண்காணித்து வருகிறார்
-
Oct 24, 2024 17:50 IST
கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை
கடலூரில் இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
-
Oct 24, 2024 17:13 IST
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு - தேர்தல் ஆணையம் கடிதம்
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது
-
Oct 24, 2024 16:54 IST
‘புஷ்பா 2’ திரைப்படம், டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ திரைப்படம், டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது
-
Oct 24, 2024 16:38 IST
தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 6,792 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை 9 வது நாளாக தொடர்கிறது
-
Oct 24, 2024 16:18 IST
குடியிருப்பு கட்டடம் தரமானதாக இல்லை - குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு
சென்னை மூலக்கொத்தளம் நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு கட்டடம் தரமானதாக இல்லை. கான்கிரீட் தரமாக இல்லை என குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்
-
Oct 24, 2024 15:59 IST
85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
-
Oct 24, 2024 15:38 IST
எந்த தந்தையாவது மகன்கள் குடிக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பார்களா? - அன்புமணி
எந்த தந்தையாவது மகன்கள் குடிக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பார்களா?” தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலியில், “தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள்; போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கது தான்; ஆனால், அது முரண்பாடுகளின் மொத்த உருவம். செல்லும் பாதை நெடுகிலும் போதைப்பொருட்களின் விற்பனை தலைவிரித்தாடுகிறது; போதையை வெறுப்பவர்களைக் கூட போதைக்கு அடிமையாகும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை உறுதி செய்திருக்கும் தமிழ்நாடு அரசு, போதையின் பாதையில் செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுப்பதை விட இரட்டை வேடம் இருக்க முடியாது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
Oct 24, 2024 15:15 IST
கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண உயர்வு தொடர்பாக புகார் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகளை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
-
Oct 24, 2024 15:13 IST
த.வெ.க தொண்டர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை
த.வெ.க மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், வாகனங்களின் மேல் அமர்ந்து கொடிபிடித்து வரக்கூடாது. த.வெ.க மாநாட்டிற்கு மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் பெறவில்லை. மாநாடு முழுவதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். மின்வாரியத்திற்கு பணம் செலுத்தியதால் மாநாட்டு திடலில் இருக்கும் மின் கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன என மின்வாரிய தலைமை பொறியாளர் மணிமேகலை எச்சரிக்கை விடுத்துள்ளார்
-
Oct 24, 2024 14:34 IST
19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 24, 2024 14:33 IST
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
"இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
Oct 24, 2024 14:31 IST
தீபாவளி பண்டிகை - ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி வரும் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
Oct 24, 2024 13:41 IST
4 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் பட்டியல்
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 24, 2024 13:40 IST
15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 24, 2024 13:20 IST
தலைமைச் செயலக கட்டடத்தில் திடீர் விரிசல்: போலீசார் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பரவிய தகவல் வெளியானது. இதனால், தலைமைச் செயலக ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டதாகவும், எந்த பிரச்சினையும் இல்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வெளியே வந்த ஊழியர்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி உள்ளே செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் தளத்தில், ஒரு டைல்ஸில் மட்டுமே விரிசல், வேறு எந்த பிரச்சினையும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
Oct 24, 2024 13:17 IST
சேலம்: கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்த காவலர்கள்
சேலத்தில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை காவலர்கள் சரிசெய்துள்ளனர். சேலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் வராததால் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். ஒருபுறம் போக்குவரத்தை சீர்செய்தும் மறுபுறம் அடைப்பை சரிசெய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி மேற்பார்வையாளர் அலட்சியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
Oct 24, 2024 12:50 IST
கந்த சஷ்டி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
எதிர்வரும் நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 இடங்களில் பக்தர்கள் தங்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளன. 225 நிரந்தர கழிவறைகள், 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. வாகன நிறுத்தம், குடிநீர், எல்.இ.டி. திரைகள், கூடுதல் சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன
-
Oct 24, 2024 12:47 IST
ஆபாசமாக பேசிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க கோர்ட் உத்தரவு
சென்னை மெரினா லூப் சாலையில் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான பெண், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “தான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர், தவறுக்கு தான் மன்னிப்புக் கோரியுள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
-
Oct 24, 2024 12:30 IST
'கட்டிடம் உறுதியாக உள்ளது': ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீரென விரிசல் ஏர்பார்ப்பட்டதால், பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
முதல் தளத்தின் தரையில் இருந்த டைல்ஸில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பரவிய வதந்தியால் ஊழியர்கள் வெளியேறியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
“நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது” என்று ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
Oct 24, 2024 11:55 IST
தலைமைச் செயலக வளாகத்தில் திடீர் அதிர்வு; பதறியடித்து வெளியேறிய ஊழியர்கள்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு ஏற்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறியதால் பரபரப்பு
முதல் தளத்தின் தரையில் இருந்த டைல்ஸில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பரவிய வதந்தியால் ஊழியர்கள் வெளியேறியதாக விசாரணையில் தகவல், அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்
-
Oct 24, 2024 11:25 IST
இர்ஃபான், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; இர்ஃபான் மற்றும் மருத்துவர் மீது சட்ட ரீதியாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இர்ஃபானுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.
-
Oct 24, 2024 10:39 IST
சீமான் மீது வழக்கு
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணப்பாறை அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் திருச்சி எஸ்.பி வருண்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Oct 24, 2024 10:27 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.7,285க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Oct 24, 2024 09:52 IST
சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் விடிய விடிய சோதனை
மாநிலம் முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கில் வராத பணம லட்சக்கணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
-
Oct 24, 2024 09:49 IST
மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகரும் டாணா புயல்
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள டாணா புயல், சற்று வேகம் குறைந்து, மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது.
-
Oct 24, 2024 09:23 IST
ஏ.ஐ தொழில்நுட்ப கேமரா
பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் கூறப்பட்டுள்ளது.
விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம், இதுவரை ₹18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
-
Oct 24, 2024 09:19 IST
தீ பிடித்து எரிந்த அரசு பேருந்து
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் இருந்து புகை வருவதை கண்டதும் சுதாரித்து கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு, தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபடடுள்ளனர்.
-
Oct 24, 2024 08:43 IST
பதிலடி கொடுக்குமா இந்தியா?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி தீவிரம் காட்டுகிறது.
-
Oct 24, 2024 08:43 IST
பெங்களூரு கட்டிட விபத்து - பிரதமர் நிவாரணம்
பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்துள்ளார்.
-
Oct 24, 2024 07:56 IST
திருச்சியில் தொடரும் ஐ.டி ரெய்டு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான திருச்சி முசிறியில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை தொடர்ந்து வருகிறது. இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.