News Highlights: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட் இலவச பயிற்சி- செங்கோட்டையன்

சென்னையில் 18-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

By: Oct 20, 2020, 7:53:05 AM

Tamil News Today Live Updates: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மக்கள் நலப்பணிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட் இலவச பயிற்சி கொடுக்கப்படும் என்றும், முதல் தேர்வில் தோல்வியுற்றவர்கள், இரண்டாம் தேர்வு எழுதுவதற்குத் தனியார் பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பில் இந்தியா உச்சத்தைக் கடந்து விட்டதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விதிகளை சரியாக பின்பற்றினால், பிப்ரவரிக்குள் கொரோனாவை முழுமையாக ஒழித்து விடலாம் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 108 நாட்களுக்குப் பிறகு 4000-க்குக் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு. இறப்பு எண்ணிக்கையும் அறுபதுக்குக் கீழ் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து, திரையரங்க உரிமையாளர்களுடன் ஓரிரு நாட்களில் முதல்வர் பேச்சு நடத்துவார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ள பாதிப்பால் தத்தளிக்கிறது ஹைதராபாத். கர்நாடகாவிலும் 4 மாவட்டங்களில் கடும் மழை.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:26 (IST)19 Oct 2020
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னணி - பிரதமர் மோடி

2020 கிராண்ட் சேலஞ்சஸ் வருடாந்திர கூட்டத்தில் காணொளி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கொரோனாவுக்கு பிந்தைய சுகாதார சவால்கள் தொடர்பாக கருத்தரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியாவில் சிறப்பான சுகாதார வசதிகளுக்கு பல புதுமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார். ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலக அளவில் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளில் 60% இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. விஞ்ஞானம் மற்றும் புதுமையில் முதலீடு செய்யும் அமைப்புகளே எதிர்காலத்தை வடிவமைக்கும்” என்று கூறினார்.

19:19 (IST)19 Oct 2020
தமிழகத்தில் இன்று புதிதாக 3,536 பேருக்கு கொரோனா; 49 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 49 உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

17:47 (IST)19 Oct 2020
முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி

முதல்வர் பழனிசாமி தாயார் தவசாயியம்மாள் அண்மையில் உடல் நலக் குறைவால் காலமானார். நடிகர் விஜய் சேதுபதி முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று அங்கே முதல்வரின் தாயார் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

17:28 (IST)19 Oct 2020
முதல்வர் பழனிசாமி தாயார் மறைவு; ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்தூவி அஞ்சலி

முதல்வர் பழனிசாமி தாயார் தவசாயியம்மாள் அண்மையில் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூறினார்.

16:27 (IST)19 Oct 2020
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 90 நாட்கள் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவைத்து வரும் நளினி தனக்கு, கண் புரை, பல் வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அதனால், சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ சிகிசை எடுத்துக்கொள்ள 90 நாட்கள் விடுப்பு வழங்குமாறு தமிழக உள்துறையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும், சிறையில் தனக்கு முழுமையான சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

16:09 (IST)19 Oct 2020
முத்தையா முரளிதரன் அறிக்கை; நன்றி வணக்கம் விஜய் சேதுபதி ட்வீட்

800 படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வந்தபோதும், முன்னதாக இலங்கை ஊடகத்துக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பேன் என்று உறுதியாகக் கூறினார். ஆனால், முத்தையா முரளிதரன், 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, முரளிதரனின் அறிக்கையை பதிவிட்டு நன்றி வணக்கம் என்று விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார். இதனால், விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகுவார் என்பது உறுதியாகி உள்ளது.

15:17 (IST)19 Oct 2020
800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட முரளிதரன் கோரிக்கை

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று குரல்கள் எழுந்த நிலையில், முத்தையா முரளிதரன், 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளலாம். விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

14:30 (IST)19 Oct 2020
தெலுங்கானாவுக்கு நிவாரணம் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

14:29 (IST)19 Oct 2020
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், அதனை முதல்வர் வேடிக்கை பார்ப்பதும் துரோகம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

13:39 (IST)19 Oct 2020
ரிசர்வ் வங்கி பதில்

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் ஆர்பிஐ பதில். கூட்டுறவு வங்கிகளை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

11:59 (IST)19 Oct 2020
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

அரசு வழங்கும் நீட் தேர்வு இலவசப் பயிற்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

10:40 (IST)19 Oct 2020
முதல்வரின் தாயார் படத்துக்கு மலர்தூவி ஸ்டாலின் மரியாதை

உடல்நலக் குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவுசாயம்மாள் கடந்த 13-ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 93. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அவரை நேரில் சந்தித்து திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் முதல்வரை சந்தித்த மு.க.ஸ்டாலின், இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

10:19 (IST)19 Oct 2020
முதல்வர் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார் ஸ்டாலின். அங்கு முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 

09:39 (IST)19 Oct 2020
விவசாயிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தம்
09:29 (IST)19 Oct 2020
புதிய தொற்றுகள் இல்லாத மிசோராம் மாநிலம்

மிசோரம் மாநிலத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.  மிசோரமில் 2,253 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொற்று காரணமாக இதுவரை யாரும் இறக்கவில்லை

09:16 (IST)19 Oct 2020
முதல்வருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

கிரீன்வேஸ் இல்லத்தில் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

Tamil News: சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கபூர். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரான கபூர் 1997ம் ஆண்டு மத்திய அரசு திட்டத்தின் கீழ் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பித்தார். அவருடைய விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்தி பரிந்துரை அளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இப்போது வரை பென்சன் கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருக்கிறார்.

Web Title:Tamil news today live theatre open coronavirus mk stalin edappadi palaniswami meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X