Chennai | Uttarakhand | பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 554-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தி.நகர். கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, கந்தன்சாவடி, கிண்டி, பல்லாவரம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், ராமாபுரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, தென்காசி ஆகிய 22 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பதவியிலிருந்து விடுவிப்பு
கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் உத்தமராமசாமி பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சொந்த காரணங்களுக்காக பதவியிலிருந்து விடுவிக்கக் கோரி அண்ணாமலைக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்
அரோகரா கோஷம் முழுங்க திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
ஹர்திக் பாண்ட்யா-வை தக்க வைத்து கொண்டது குஜராத் அணி
2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா-வை குஜராத் அணி தக்க வைத்துக் கொண்டது.
தோனியை தக்க வைத்தது சி.எஸ்.கே அணி
2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு எம்.எஸ். தோனியை சி.எஸ்.கே அணி தக்க வைத்துக் கொண்டது.
ட்ரான்ஸ்பார்மரில் உள்ள மின் கலன் பாதுகாப்பு சாதனம் வெடித்ததால் பரபரப்பு
வேலூர்: சேண்பாக்கம் துணை மின் நிலையத்தில் ட்ரான்ஸ்பார்மரில் உள்ள மின் கலன் பாதுகாப்பு சாதனம் வெடித்து திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
இதனால் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இன்று மாலைக்குள் மின் வினியோகம் சீர் செய்யப்படும் என வேலூர் மின் பகிர்மான கோட்ட பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்தார்.
கிராமிய பாடல் பாய சிறுமிக்கு படவாய்ப்பு : டி.மான் உறுதி
கிராமிய பாடல் பாடி இணையத்தில் வைரலான செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற சிறுமிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தருவாதக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்!
தர்ஷினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டினார். மேலும் கட்டாயம் என்னுடைய படத்தில் நீங்கள் பாடுவீர்கள் என்ற நம்பிக்கையும் அளித்துள்ளார்.
திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் ஒரு பகுதியில் மட்டும் பொதுமக்கள் குளிக்க அனுமதி
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் ஒரு பகுதியில் மட்டும் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் 7 நாட்கள் தடைக்கு பிறகு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் : 4 நகரங்களில் நடைபெறும் என அறிவிப்பு
2023ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 நகரங்களில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டு அணியில் இடம்பெறுவதற்கான தேர்வு சோதனைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா பெற முயற்சி : இளைஞர்களை பிடிக்க ஹைதராபாத் விரைந்த தமிழ்நாடு போலீஸ்
போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா எடுக்க முயன்ற தெலங்கானா, ஆந்திர இளைஞர்கள் குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் குவியும் புகார்களால், கும்பலை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை ஹைதராபாத் விரைந்துள்ளனர். இந்த வழக்கில், ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த 4 பேர் ஏற்கனவே கைதாகியுள்ளனர். கல்விச்சான்று முதல் வங்கிக் கணக்கு சான்று வரை அங்கு போலியாக கிடைப்பதாக விசாரணையில் தகவல்
பிரதமரின் பாதுகாப்பு மீறல் - 7 போலீசார் சஸ்பெண்ட்
கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு மீறல் ஏற்பட்டது தொடர்பான விசாரணையில், பஞ்சாப் போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு
உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் 7 அடி உருவச் சிலையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்துவைத்தார்.
திரிஷா, குஷ்பு, சீரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு: மன்சூர் அலிகான்
திரிஷா, குஷ்பு, சீரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இது குறித்து அவர், “மூவர் மீதும் கிரிமினல், பொது அமைதியை கெடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாளை (நவ.27) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்றார்.
லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு. சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி கிராமம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.
காரில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் பலி. 2 பேர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி. காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை.
திருவண்ணாமலையில் ஹை-டெக் பாதுகாப்பு
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் (Thiruvannamalai ) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், திருவண்ணாமலையில் 14,000 போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
700-க்கும் மேற்பட்ட சிசிடிவி, ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரம். காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய பெற்றோர் பெயர், போன் நம்பருடன் Wrist Band இணைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய ஃபேஸ் ட்ராக் மூலம் 60 போலீஸ் குழுக்கள் அமைப்பு.
பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு. மதுரை மாட்டுத் தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.1800க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று ரூ.2200க்கு விற்பனை. நேற்று ரூ.50க்கு விற்பனையான வெவ்வந்திப் பூ இன்று ரூ.150 ஆக உயர்வு. அதிகளவில் வெவ்வந்தி விற்பனை ஆவதாகவும் தகவல்
இன்று திருப்பதி செல்கிறார் பிரதமர் மோடி
திருமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று(நவ.26) இரவு திருப்பதி செல்கிறார். திருமலையில் இன்று இரவு தங்கும் மோடி நாளை காலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய வைர தேரில் ரத வீதி உலா நடைபெற்றது.
வெறிச்சோடிய மீன் மார்க்கெட்
கார்த்திகை தீபத்தையொட்டி, மீன் வாங்க ஆர்வம் காட்டாத அசைவ பிரியர்கள். வெறிச்சோடி காணப்படும் சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்
வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அலைமோதும் நிலையில் இன்று வெறிச்சோடியது
'சேரி' என்ற வார்த்தையை குஷ்பு தவிர்த்திருக்கலாம்: ஜெயக் குமார்
'சேரி' என்ற வார்த்தையை குஷ்பு தவிர்த்திருக்கலாம் என்பது எங்களது கருத்து. சரியான பாதையில் அதிமுக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. மழை நீர் வடிகால்களை தமிழக அரசு முறையாக தூர்வாரவில்லை- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார்
தி.மலையில் டோக்கன் பெற முண்டியடிப்பு: சுவர் இடிந்து விபத்து
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலையேறும் பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு. கல்லூரி வளாகத்தில் அனுமதி சீட்டு விநியோகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடிப்பு
கல்லூரியின் சுற்றுச்சுவர் ஏறி குதித்த பக்தர்கள். சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு. சுவர் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.