Advertisment

Tamil News Today : சுபஸ்ரீ மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.99க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.86க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : சுபஸ்ரீ மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Tamil News Today Updates: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அபாயகரமானது எனக் கூறி அதனை மீண்டும் திறக்க தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வீசி தலைமைக் காவலர் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்து வெடிகுண்டு வீசிய ரவுடியும் உயிரிழப்பு. உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

Advertisment

பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியுடன் இணைத்து உத்தரவிட, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை பா.ஜ.க வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுமை கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்து கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 20-வது நாளாக 6000-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 82.87% ஆக இருக்கிறது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu News Today Updates

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    20:50 (IST)19 Aug 2020

    நீட் அச்சத்தால் மாணவி தற்கொலை; சுபஶ்ரீ மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை. சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு” என்று விமர்சித்துள்ளார்.

    20:50 (IST)19 Aug 2020

    நீட் அச்சத்தால் மாணவி தற்கொலை; சுபஶ்ரீ மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை. சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும். கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு” என்று விமர்சித்துள்ளார்.

    19:44 (IST)19 Aug 2020

    ஆர்டி - பிசிஆர் கருவிகளை மருத்துவமனைகளில் ஒப்படைக்க கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

    கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில், கல்லூரிகள் தங்களிடம் உள்ள ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை அருகில் உள்ள மருத்துவமனைகளில் ஒப்படைக்க் வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

    19:22 (IST)19 Aug 2020

    தமிழகத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்

    தமிழகத்தின் இன்றைய கொரோனா வைரஸ் தொற்று தினசரி அறிக்கையில், இன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் 5,795 எண்ணிக்கையைவிட குணமடைந்தவர்கள் 6,384 பேர் என்ற எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    18:24 (IST)19 Aug 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று; 116 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 116 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:53 (IST)19 Aug 2020

    கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும் - பிரதமர்

    பிதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு முகமை வரமாக இருக்கும். பொது தகுதி தேர்வு மூலம் ஏராளமான தேர்வுகள் விலைமதிப்பற்ற நேரம் மற்றும் செலவுகள் குறையும். வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

    17:24 (IST)19 Aug 2020

    எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    17:20 (IST)19 Aug 2020

    தமிழகம் முழுவதும் 2 நாட்களில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்பு - தமிழக அரசு தகவல்

    தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், முதல் நாளில் 1.4 லட்சம் இ-பாஸும், 2-வது நாளில் 1.3 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16:56 (IST)19 Aug 2020

    உயர் அதிகாரிகள் இறுதி அஞ்சலி

    காவலர் சுப்பிரமணி உடல் அவரது சொந்த ஊரான பண்டாரவிளை பகுதியில் அடக்கம்

    போலீஸ் உயர் அதிகாரிகள் இறுதி அஞ்சலி

    மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் இறுதி அஞ்சலி

    16:56 (IST)19 Aug 2020

    தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

    "ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்தால், தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது"

    - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

    16:33 (IST)19 Aug 2020

    இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்

    அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில்,

    16:23 (IST)19 Aug 2020

    உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

    வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டது

    * காவலர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

    16:08 (IST)19 Aug 2020

    உடனடி தேர்வுகள்...

    10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடனடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.

    15:51 (IST)19 Aug 2020

    வெளிமாவட்ட பயணிகளை கண்காணிக்க தீவிர நடவடிக்கை

    சென்னைக்கு வரும் வெளிமாவட்ட பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த

    வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இ-பாஸ் பெற்று வருபவர்களை கண்காணிக்க தீவிர நடவடிக்கை

    15:15 (IST)19 Aug 2020

    தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்

    கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் எ டப்பாடி பழனிசாமிஉத்தரவு

    இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தகவல்.

    15:15 (IST)19 Aug 2020

    மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது

    கோவை மாநகராட்சி பெயரில் வெளியான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் போலியானது

    மாநகராட்சி தரப்பில் விண்ணப்பங்கள் எதுவும் வழங்கப்பட இல்லை- மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் பேட்டி

    மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஸ்வரன்குமார் ஜடாவத்

    14:35 (IST)19 Aug 2020

    மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

    காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்பு

    தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி

    மத்திய அரசு பணிகளில் பிரிவு 3,4-ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பை ஏற்படுத்த அனுமதி; பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நியமனம் இந்த புதிய அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும்

    14:32 (IST)19 Aug 2020

    'மத்திய விவசாயத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்'

    ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலையை ரூ.99.60 லிருந்து ரூ.125 ஆக உயர்த்த வேண்டும்

    - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

    14:32 (IST)19 Aug 2020

    மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை

    3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை

    அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின் வெளியிடப்படவில்லை

    - கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் இந்தி பற்றிய கேள்விக்கு ஆணையர் விளக்கம்

    14:11 (IST)19 Aug 2020

    பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்து உள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    13:31 (IST)19 Aug 2020

    திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

    கள்ளக்கறிச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக வசந்தம் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உதயசூரியன் நியமனம்

    திமுக மகளிர் அணி துணைச் செயலாளராக அங்கயற்கண்ணி நியமனம் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

    13:31 (IST)19 Aug 2020

    3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா?’- கேள்வியால் சர்ச்சை

    தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்த நிலையில், 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    13:30 (IST)19 Aug 2020

    நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி

    அமைச்சர், அவரது மனைவி, மகள் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

    13:18 (IST)19 Aug 2020

    எஸ்.பி.பி-யின் உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை

    பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை. நாளை மாலை 6 மணிக்கு வீடுகளில் அமர்ந்து திரையுலக பிரமுகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். எஸ்.பி.பி.யின் பாடல்களை பாடி பிரார்த்தனை செய்ய இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். 

    13:18 (IST)19 Aug 2020

    எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

    சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது

    சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

    வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைப்பு

    13:17 (IST)19 Aug 2020

    எஸ்.பி.பி உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை

    பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை

    * நாளை மாலை 6 மணிக்கு வீடுகளில் அமர்ந்து திரையுலக பிரமுகர்கள் பிரார்த்தனை

    * ஸ்.பி.பி.யின் பாடல்களை பாடி பிரார்த்தனை செய்ய முடிவு - இயக்குநர் பாரதிராஜா அழைப்பு

    13:17 (IST)19 Aug 2020

    துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆலோசனை

    ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிசைமாற்று வாரிய திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆலோசனை

    பயனாளிகளுக்கு தேவையான வீடுகளை விரைவாக கட்டிமுடிக்க துணை முதலமைச்சர் உத்தரவு

    13:17 (IST)19 Aug 2020

    மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் பகுதியில் உயர் அலைகள் எழும்பக்கூடும் - வானிலை மையம்

    13:16 (IST)19 Aug 2020

    பாதிப்பு 21,725ஆக உயர்வு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 226 பேருக்கு கொரோனா - பாதிப்பு 21,725ஆக உயர்வு

    இதுவரை 18,402 பேர் குணமடைந்துள்ள நிலையில் 356 பேர் உயிரிழப்பு

    13:16 (IST)19 Aug 2020

    வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது

    ஒரு சில சம்பவங்களை வைத்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரிப்பு என்று கூறக்கூடாது - டிஜிபி திரிபாதி

    காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை - டிஜிபி திரிபாதி

    12:57 (IST)19 Aug 2020

    தமிழக டிஜிபி திரிபாதி அஞ்சலி

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் புகைப்படத்திற்கு தமிழக டிஜிபி திரிபாதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

    12:45 (IST)19 Aug 2020

    ராகுல் காந்தி கருத்து

    வேலையின்மை, பொருளாதார சீரழிவின் உண்மையை இந்திய மக்களிடம் இருந்து மறைக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முக்கிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

    12:25 (IST)19 Aug 2020

    விநாயகர் சதுர்த்தி - சென்னை உயர்நீதிமன்றம்

    தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    11:53 (IST)19 Aug 2020

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சார்பில் இந்த மனு தாக்கல். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    11:31 (IST)19 Aug 2020

    சுஷாந்த் சிங் மரண வழக்கு

    நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    10:53 (IST)19 Aug 2020

    தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைவு

    தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் சவரன் ரூ.41,248க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,156 க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,600 குறைவு

    10:29 (IST)19 Aug 2020

    ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை

    6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை எனவும், 6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தியதாகவும், தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். 

    10:00 (IST)19 Aug 2020

    பள்ளிகள் எப்போது திறப்பு?

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    09:43 (IST)19 Aug 2020

    இந்தியாவில் கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27,02,742 லிருந்து 27,67,273 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 19.77 லட்சத்தில் இருந்து 20.37 லட்சமாக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 லிருந்து 52,889 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    09:27 (IST)19 Aug 2020

    பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்

    ’எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். 

    09:25 (IST)19 Aug 2020

    மதுரையை 2-வது தலைநகரமாக்க ஆர்.பி.உதயகுமார் தீவிரம்

    மதுரை மாவட்டத்தை தமிழகத்தின் 2-வது தலைநகராக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். மதுரையில் ஆகஸ்ட் 21-ம் தேதி, அமைச்சர் உதயகுமார் தலைமையில் தென்மாவட்ட தொழில் வர்த்தகர்களின் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் 10 மாவட்ட தொழில் வர்த்தகர்கள் பங்கேற்கிறார்கள். 

    09:17 (IST)19 Aug 2020

    3 மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். கொரோனா தடுப்புப்பணிகளை ஆய்வு செய்த பின் விவசாயிகள், தொழில் துறையினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 

    Tamil News Breaking: போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment