Advertisment

Tamil news today : தமிழ்நாடு முழுவதும் நவ. 4ம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் - திமுக அறிவிப்பு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
DMK

திமுக தலைமையகம்

Petrol and Diesel Price

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நாள் ஆட்டம்

தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதல், இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதல், பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோதல்

தங்க கவசம் கொண்டு செல்லப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்க உள்ள தங்க கவசம்  நீதிமன்ற உத்தரவு படி மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் இருந்து கவசத்தை மதுரை மாவட்ட டி.ஆர்.ஓ கொண்டு சென்றார். பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.



  • 21:25 (IST) 27 Oct 2022
    தமிழ்நாடு முழுவதும் நவ. 4ம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் - திமுக அறிவிப்பு

    தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும். பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.



  • 19:43 (IST) 27 Oct 2022
    சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

    சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய பிரமுகர்களின் குடியிருப்புகளில் டிரோன்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம், கோவில் திருவிழா, சினிமா, குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகே டிரோன்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • 19:41 (IST) 27 Oct 2022
    நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:19 (IST) 27 Oct 2022
    என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்தது பாராட்டத்தக்க செயல் - தமிழிசை சௌந்திரராஜன்

    கோவை சம்பவம் குறித்து இன்னும் ஆராய வேண்டும். என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைத்தது பாராட்டத்தக்க செயல். கோவையில் பரபரப்பான நிகழ்வுகள் நிகழாமல், அமைதியான இடமாக இருக்க வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.



  • 17:42 (IST) 27 Oct 2022
    கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக நெல்லையில் சோதனை

    கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக நெல்லையில் உள்ள முகமது உசைன் என்பவரின் வீட்டில் நெல்லை மாநகர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய பிரச்சாரத்தில் இயக்கத்தில் உள்ள முகமது உசைன் அடிக்கடி கோவை சென்று வந்துள்ளார்



  • 17:41 (IST) 27 Oct 2022
    வேலுமணி மீது முறையாக விசாரிக்காமல் அவசரமாக வழக்குப்பதிவு - உயர்நீதிமன்றம் கருத்து

    முன்னாள் அமைச்சர் வேலுமணி தன் மீது தொடரப்பட்டுள்ள டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் முறையாக விசாரிக்காமல் அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அரசியல் காரணங்களால் சொத்து விவரங்கள் குறித்து எந்த விளக்கமும் கேட்கவில்லை என்று வேலுமணி தரப்பு கூறியுள்ளர். இதனிடையே வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் வேலுமணிக்கு எதிராக புதிதாக வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.



  • 17:39 (IST) 27 Oct 2022
    மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்

    சென்னை, நந்தனத்தில் மெட்ரோ ரயில் தலைமை அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் திறந்து வைத்தனர். 3.90 லட்சம் சதுர அடியில் ₨365 கோடி செலவில் 12 அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 17:00 (IST) 27 Oct 2022
    கோவை கார் வெடிப்பு சம்பவம் - நெல்லையில் ஒருவரிடம் விசாரணை

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த முகமது உசேன் லெப்பை என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • 16:54 (IST) 27 Oct 2022
    2024ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகளை அமைக்க முடிவு - அமித்ஷா

    எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாளுவது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு. 2024ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்



  • 16:36 (IST) 27 Oct 2022
    கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்.ஐ.ஏ வழக்குப்பதிவு

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனையடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்



  • 16:14 (IST) 27 Oct 2022
    டி20 உலகக்கோப்பை : நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்

    டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில், நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 180 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை இந்திய அணி வென்றது



  • 15:55 (IST) 27 Oct 2022
    பரங்கிமலை கொலை வழக்கு; சதீஷை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை

    பரங்கிமலையில் ரயில்முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைதான சதீஷை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது



  • 15:41 (IST) 27 Oct 2022
    கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது



  • 15:25 (IST) 27 Oct 2022
    போக்குவரத்து விதி மீறல்; சென்னையில் ஒரேநாளில் ரூ.15.5 லட்சம் அபராதம் வசூல்

    சென்னையில் நேற்று ஒரேநாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி ரூ.15.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது



  • 15:15 (IST) 27 Oct 2022
    நயன் - விக்கி தம்பதியை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம். அவர்கள் தொடர்பான பதிவேடுகளை மருத்துவமனை முறையாக பின்பற்றவில்லை. மருத்துவமனைக்கு அது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்



  • 14:59 (IST) 27 Oct 2022
    கோவை சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது தவறு

    கோவை சம்பவத்தை அரசியலாக்க முயற்சிப்பது தவறு. தமிழ்நாட்டில் இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.



  • 14:48 (IST) 27 Oct 2022
    தமிழகம் வரும் மோடி

    திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நவ.11ம் தேதி தமிழகம் வருகிறார்.



  • 14:48 (IST) 27 Oct 2022
    ஐசிசி டி20 உலக கோப்பை

    ஐசிசி டி20 உலக கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி - 62, ரோகித் ஷர்மா - 53, சூர்யகுமார் யாதவ் - 51 ரன்கள் எடுத்தனர். 180 ரன்களை இலக்டன் நெதர்லாந்து அணி களத்தில் உள்ளது.



  • 14:15 (IST) 27 Oct 2022
    டி20 உலக கோப்பை.. ரோகித் ஷர்மா 2வது இடம்

    டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்து ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்தார். டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் ஷர்மா 2வது இடம் பிடித்தார்.



  • 14:14 (IST) 27 Oct 2022
    தென்மேற்கு பருவமழை இயல்பை விட 45% அதிகம்

    தென்மேற்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி விலகியது. வடகிழக்கு பருவ மழை, வரும் 29ம் தேதியை ஒட்டி துவங்குவதற்கான சூழல் நிலவுகிறது. நவம்பர் 4ம் தேதி வரை சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை இயல்பை விட 45% அதிகம் கிடைத்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.



  • 14:11 (IST) 27 Oct 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 13:32 (IST) 27 Oct 2022
    பிசிசிஐ அறிவிப்பு

    இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இணையாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டி ரூ. 6 லட்சம், டி20 போட்டி ரூ. 3 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.



  • 13:31 (IST) 27 Oct 2022
    ரூ. 9 கோடி வருமானம்

    தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ. 9 கோடி அளவுக்கு வருமானம் வந்துள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து சேவைகளில் கடந்த செப். வரை 173 கோடி பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்துள்ளார்கள் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.



  • 13:01 (IST) 27 Oct 2022
    கோயில்களின் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை

    தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும் - நீதிபதிகள்

    திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கோயில் உள் பிரகாரத்தில் தங்க அனுமதி இல்லை என்ற நிலைப்பாடு மிக சரியானது

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் நேரடியாக கடவுளை தரிசிக்கலாம் - நீதிபதிகள்



  • 12:46 (IST) 27 Oct 2022
    டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

    டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் சிட்னியில் இந்தியா-நெதர்லாந்து மோதல். டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு



  • 12:30 (IST) 27 Oct 2022
    பா.ஜ.க க்கள் பிரச்சினைக்காக ஏன் போராடவில்லை? - செந்தில்பாலாஜி

    முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது, பாஜகவினர் என்ன செய்தனர்?

    கோவை சம்பவத்துக்காக போராட்டம் நடத்தும் பாஜக, மக்கள் பிரச்சினைக்காக ஏன் போராடவில்லை? - அமைச்சர் செந்தில்பாலாஜி



  • 12:30 (IST) 27 Oct 2022
    முதல்வர் உத்தரவின் பேரில் போர்க்கால நடவடிக்கை

    கோவை சம்பவம் தொடர்பான விசாரணையை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து வந்தார்

    சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் காரின் உரிமையாளர் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டது

    கோவையில் இயல்பு நிலையில் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடினர் - அமைச்சர் செந்தில்பாலாஜி

    முதல்வர் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    தவறு செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் - அமைச்சர் செந்தில்பாலாஜி



  • 11:56 (IST) 27 Oct 2022
    என்.ஐ. ஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் - செந்தில்பாலாஜி

    விசாரணை அறிக்கை வெளிவரும் முன்பே, சம்பவம் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்?

    அண்ணாமலைக்கு தகவல்களை கொடுத்தது யார் என என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் - அமைச்சர் செந்தில்பாலாஜி



  • 11:55 (IST) 27 Oct 2022
    கோவை சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்கிறது - திருமாவளவன்

    கோவையில் நடந்தது அதிர்ச்சியளிக்கிறது, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

    தமிழக காவல்துறையின் செயல் பாராட்டுதலுக்குரியது

    கடையடைப்பின் மூலம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி - விசிக தலைவர் திருமாவளவன்

    கோவை சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்கிறது - திருமாவளவன்



  • 11:55 (IST) 27 Oct 2022
    கோவையில் ஆட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம்

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம்

    மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்பு

    கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பங்கேற்பு



  • 11:14 (IST) 27 Oct 2022
    இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு

    தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம். நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு



  • 11:05 (IST) 27 Oct 2022
    ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு . ரூ. 15 லட்சம் அபராதமாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நேற்று முதல் சென்னையில் அமல்படுத்தப்பட்டது.



  • 09:14 (IST) 27 Oct 2022
    கோவை காரில் இருந்த சிலிண்டர் வெடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

    கோவை காரில் இருந்த சிலிண்டர் வெடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது. கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரான அப்சர்கான் கைது. ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6வது நபரை போலீசார் கைது செய்தனர்.



  • 08:33 (IST) 27 Oct 2022
    7 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

    ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது



  • 08:31 (IST) 27 Oct 2022
    கனமழை விடுமுறை

    தூத்துக்குடியில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment