Tamil News Updates: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது

அனைத்து செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

அனைத்து செய்திகளையும் இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thoothukudi flood

IE Tamil LIVE Update (File Image)

பெட்ரோல்- டீசல் விலை

Advertisment

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ.  94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பயிர்சேதம் பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது. விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி

Advertisment
Advertisements

சிதம்பரம் தலைமையில் குழு 

வரும் 2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ் சார்பில் 16 போ் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக டி.எஸ். சிங் தேவ் செயல்படுவார். காங்கிரஸ் மூத்த தலைவா்களான சித்தராமையா, பிரியங்கா காந்தி, ஆனந்த் சா்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூா், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 14 போ் உறுப்பினா்களாக செயல்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Dec 22, 2023 22:16 IST

    ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை  தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிவிப்பு

    தமிழ்நாடு பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் நாளை முதல் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.



  • Dec 22, 2023 21:56 IST

    கொஞ்சமாவது அக்கறை வைத்து நிதி தாருங்கள்; நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு உதயநிதி பதில்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மரியாதைக்குரிய அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை, தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம். வழக்கமாக, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்துவிட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மரியாதை தருவதற்கு தயாராகவே இருக்கிறோம், தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை வைத்து நிதியைத் தாருங்கள், மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே!” என்று கேட்டுள்ளார்.



  • Dec 22, 2023 21:30 IST

    கிறிஸ்துமஸ் விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி - ஸ்டாலின்

    சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “கிறிஸ்துமஸ் விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இங்கே நடத்துகிறார்; அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன. ஆனால், எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை, திராவிட மாடல் ஆட்சியில்,  எல்லா பிரிவு மக்களும்  அமைதியாக வாழ்கின்றனர். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய் தவிக்கிறது” என்று கூறினார்.



  • Dec 22, 2023 20:30 IST

    தென் மாவட்டங்களில் மீட்பு பணிகள் நிறைவு - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி: “தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நிறைவடைந்தது; வெள்ளம் பாதித்த பகுதிகளில் 49,707 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; 67 நிவாரண முகாம்களில் சுமார் 17,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சமுதாய கூடம் மூலம் 5 லட்சம் உணவு பாக்கெட்டுகள் விநியோகம்
    செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது. நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது. தூத்துக்குடி மாவட்டத்தில் 81% பால் விநியோகம் சீரானது.” என்று கூறினார்.



  • Dec 22, 2023 20:26 IST

    மத்திய அரசிடம் கேட்டது ரூ.21,000 கோடி... கொடுத்தது ரூ.450 கோடி - தங்கம் தென்னரசு

    அமைச்சர் தங்கம் தென்னரசு: “தமிழ்நாடு அரசு ரூ. 21,00 கோடி மத்திய அரசிடம் நிதி கேட்ட நிலையில், ரூ.450 கோடி மட்டுமே வந்திருக்கிறது; தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படுகிறது; மத்திய அரசின் ரூ. 450 கோடி நிதி என்பது இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 2வது மாநிலர் பேரிடர் நிவாரண நிதிதான்.” என்று கூறினார்.



  • Dec 22, 2023 19:58 IST

    மழை வெள்ளம் 235 ரேஷன் கடைகள் பாதிப்பு

    “தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 235 ரேசன் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து ரேசன் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
    நெல்லையில் 700க்கும் மேற்பட்ட கடைகளில் 95% கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 160 கடைகளில் 92 கடைகள் திறக்கப்பட்டுள்ளன” என தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.



  • Dec 22, 2023 19:54 IST

    கிறிஸ்துமஸ் விழா நடத்தும் இந்து அறநிலையத் துறை அமைச்சர்: மு.க. ஸ்டாலின்

     

    கிறிஸ்துமஸ் விழாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல் அரசு. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஆனால் ஒரு சிலர் இதை அரசியல் காரணத்திற்காக குலைக்க பார்க்கிறார்கள்.
    மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் இங்கு வேரூன்ற முடியாது என பெரம்பூரில் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.



  • Dec 22, 2023 19:38 IST

    சென்னையில் 98 சதவித மக்களுக்கு நிவாரணம்: மு.க. ஸ்டாலின்

    சென்னையில் 98 சதவித மக்களுக்கு மழை வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
    மேலும் மழை வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கோரிக்கைகளை பரிசீலித்து நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.



  • Dec 22, 2023 18:37 IST

    சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

    சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் போதைப் பொருள்களை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர்.
    பறிமுதல் செய்யப்பட்ட 56 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.280 கோடி ஆகும்.



  • Dec 22, 2023 18:10 IST

    அரசு விடுமுறை, அலுவலர்களுக்கு பொருந்தாது: மாவட்ட ஆட்சியர்


    தூத்தூக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை அலுவலர்களுக்கு பொருந்தாது; மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூறியுள்ளார்.



  • Dec 22, 2023 17:39 IST

    பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு


    பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வான நிலையில் பஜ்ரங் புனியா இவ்வாறு அறிவித்துள்ளார்.



  • Dec 22, 2023 16:49 IST

    விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை

    கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் "கூட்டுறவு சங்கத்துல வாங்குன கடன்களை அரசு தள்ளுபடி செஞ்சா கொஞ்சம் உதவியா இருக்கும்" என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை



  • Dec 22, 2023 16:47 IST

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தெற்கு ரயில்வே தகவல் புதிய அறிவிப்பு

    சென்னை புறநகர் ரயில் சேவை வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று ஞாயிறு அட்டவணையின் படி இயங்கும் என தெற்கு ரயில்வே தகவல்



  • Dec 22, 2023 16:03 IST

    சாக்‌ஷி மாலிக் விவகாரத்தில் தலையிட முடியாது : மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

    மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் விவகாரம் குறித்த கேள்விக்கு, “வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாதுஎன சென்னையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில்



  • Dec 22, 2023 16:02 IST

    ஏரல் பாலம் வெள்ளத்தில் உடைந்ததால் 5வது நாளாக போக்குவரத்து முடக்கம்

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பாலம் வெள்ளத்தில் உடைந்ததால் 5வது நாளாக போக்குவரத்து முடக்கம். தற்காலிக ஏற்பாடாக தரைப்பாலம் சீர் செய்யப்படுகிறது



  • Dec 22, 2023 16:01 IST

    மின் கம்பங்கள் தண்ணீல விழுந்ததால் மீன் ஊழியர்களுக்கு சவலான பணி

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பெருமழையில் சேதமான மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் "மின் கம்பங்கள் எல்லாம் தண்ணீல விழுந்ததால கொஞ்சம் சவாலா இருக்கு, ஆனா கூடிய சீக்கிரம் கரண்ட் தந்துடுவோம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



  • Dec 22, 2023 15:19 IST

    மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகை விடுவிப்பு : தமிழகத்திற்கு ரூ 2976 கோடி

    மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகை விடுவிப்பு

    மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ₨72,961 கோடியை விடுவித்தது மத்திய அரசு. புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளது. இந்த நிதியில்  தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வாக ₨2,976 கோடியை விடுவித்தது மத்திய அரசு..



  • Dec 22, 2023 15:17 IST

    500 அலங்கார மீன்களை மீட்ட வனத்துறையினர்

    அஸ்ஸாமின் திப்ரூக்கர் நகரில் 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 அலங்கார மீன்களை வனத்துறையினர் மீட்டனர். சென்னா பார்க்கா எனப்படும் அலங்கார மீன் ஒன்றின் விலை இந்திய சந்தையில் ரூ.75,000 வரை இருக்க கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Dec 22, 2023 14:57 IST

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது - ஆர்.எஸ்.பாரதி

     

    "பேரிடர் நேரத்தில் நிர்மலா சீதாராமன் அரசியல் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. ரூ. 4000 கோடி செலவிட்டதால் தான் மழை வெள்ளம் வடிந்தது." என ரூ. 4000 கோடி எங்கே போனது என்ற நிர்மலா சீதாராமனின் கேள்விக்கு தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதி பதில் தெரிவித்துள்ளார். 



  • Dec 22, 2023 14:23 IST

    ரூ.6,000 நிதியை வங்கியில் போடலாமே? - நிர்மலா சீதாராமன்  

    ரூ.6,000 நிவாரணத்தை தொகையை வங்கிக் கணக்கு மூலம் அளிக்கலாமே. ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்?. ரூ.6,000 நிதியை ரொக்கமாக வழங்கியதற்கு பதிலாக  வங்கிக் கணக்குகளில் செலுத்தினால் வெளிப்படைத்தன்மை இருக்கும். 

     



  • Dec 22, 2023 14:07 IST

    மன்சூர் அலிகானுக்கு ரூ 1 லட்சம் அபராதம்

     

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர நடிகர் மன்சூர் அலிகான் அனுமதி கோரி இருந்தார். இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

     



  • Dec 22, 2023 13:50 IST

    உதயநிதியின் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் காட்டம்

     

    மத்திய அரசில் இருப்பவர்கள் 'அப்பன் வீட்டு பணத்தையா தருகிறார்கள்' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் தொடர்பாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கருணாநிதி மிகப் பெரிய தமிழ் பேரறிஞர். அவரது பேரன் இப்படி நாகரிகமற்ற முறையில் பேசுவது சரியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தகுதியுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார். 



  • Dec 22, 2023 13:43 IST

    “வானிலை மையத்தை குறை கூறுவதா?": நிர்மலா சீதாராமன் கேள்வி 

     

    "2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இவ்வளவு மழை பெய்யும் என யாரும் சரியாக கணித்துக் கூற முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கமால் வானிலை மையத்தை குறைவது ஏன்? மழை எச்சரிக்கை அடிப்படையில் எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். 



  • Dec 22, 2023 13:39 IST

    ரூ. 4000 கோடி செலவிடப்பட்டதா? - நிர்மலா சீதாராமன்

     

    "மழைநீர் வடிகால் பணிகள் 42% மட்டுமே நிறைவு பெற்றதாக கூறினார்கள்: அதிலும் சந்தேகம். வெல்ல தடுப்பு நிதியை முறையாக பயன்படுத்தி இருந்தாலே பாதிப்பை தவிர்த்து இருக்கலாம். மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவளிக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.



  • Dec 22, 2023 13:36 IST

    'மழை பாதிப்பின்போது முதல்வர் டெல்லியில் இருந்தார்' - நிர்மலா சீதாராமன்

     

    4 மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போது தமிழக முதல்வர் எங்கு இருந்தார்?. நிவாரணப் பணிகளில் ஈடுபடாமல் டெல்லியில் இருந்தார். இந்தியா கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின் போகிற போக்கில் பிரதமரை சந்தித்து பேசினார். இரவு நேரம் என்றாலும் பிரதமர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கினார்.

    மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போது முதல்வருக்கு இந்தியா கூட்டணியுடன் ஆலோசனைதான் முக்கியமாகிவிட்டதா என்று கேட்ட நிர்மலா சீதாராமன், 4 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி போய் மக்களை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.



  • Dec 22, 2023 12:55 IST

    சென்னை வானிலை மையம் அதிநவீனமானது- நிர்மலா சீதாராமன்

    சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளது

    அதிகனமழை எச்சரிக்கையை 12ம் தேதியே வழங்கியது. ஒவ்வொரு 3 மணி நேரமும் மழை குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டது- நிர்மலா சீதாராமன்



  • Dec 22, 2023 12:54 IST

    குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

    தென்காசி: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் 5 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி



  • Dec 22, 2023 12:54 IST

    நிர்மலா சீதாராமன் பேட்டி

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது

    வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்

    தென்மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது- டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி



  • Dec 22, 2023 12:36 IST

    இ.பி.எஸ் வலியுறுத்தல்

    மின் கட்டண உயர்வால் மின் நுகர்வோர், தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    பீச் ஹவர் கட்டணங்களை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும். சோலார் பேனல்களை அமைத்து மின் உற்பத்தி செய்வதற்கு மின்வாரியம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1.53 பைசா கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    ஒரு கிலோ வாட்டுக்கு நிலை கட்டணமாக ரூ.35 மட்டுமே விதிக்க வேண்டும்- இ.பி.எஸ்



  • Dec 22, 2023 12:31 IST

    நெல்லையில் அன்புமணி பேட்டி

    சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நிலைதான் இப்போதும் உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்- நெல்லையில் அன்புமணி பேட்டி



  • Dec 22, 2023 12:22 IST

    இந்திய மீனவர்கள் பிரச்னை- அமைச்சர் வி.முரளீதரன் அளித்த பதில்

    இந்திய மீனவர்கள் பிரச்னையை மத்திய அரசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது;

    மீனவர்கள் பிரச்னையை முற்றிலும் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்னையாகக் கருத இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது;

    2023ம் ஆண்டு மட்டும் 220 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 173 பேர் விடுவிக்கப்பட்டும், 43 பேர் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்-  மாநிலங்களவையில் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் அளித்த பதில்



  • Dec 22, 2023 12:17 IST

    மத்திய நிதியமைச்சருடன் அன்ணாமலை சந்திப்பு

    டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

    தமிழக வெள்ள பாதிப்பு, மத்திய அரசின் சார்பிலான மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து எடுத்துரைத்ததாக தகவல்



  • Dec 22, 2023 12:03 IST

    நிவாரண தொகைக்கு 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் நிவாரண தொகை பெற 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

    சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விண்ணப்பம்



  • Dec 22, 2023 12:01 IST

    திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து

    ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்புப் பணி காரணமாக, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும், தூத்துக்குடி திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயிலும் (06667) வெள்ளி,  சனி ஆகிய 2 நாள்களும் ரத்து செய்யப்படுகின்றன.  இதே போல,  வாஞ்சிமணியாச்சி   திருச்செந்தூர் தடத்தில் ரயில் சேவை,  திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கபடுகிறது.



  • Dec 22, 2023 12:01 IST

    5 நாட்களுக்குப் பின், தூத்துக்குடி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ்

    5 நாட்களுக்குப் பிறகு முத்துநகர் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து இன்று (டிச.22) காலை தூத்துக்குடி சென்றடைந்தது.



  • Dec 22, 2023 11:39 IST

    ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு

    சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்திப்பு



  • Dec 22, 2023 11:38 IST

    ககன்தீப் சிங் பேடி பேட்டி

    தூத்துக்குடி, வெள்ளம் பாதித்த பகுதிகளில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது.. மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்-ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர்



  • Dec 22, 2023 11:38 IST

    தப்பியோடிய கைதி மீண்டும் சிறையில் அடைப்பு

    மதுரை மத்திய சிறையில் இருந்து நவம்பர் 29 அன்று தப்பியோடிய தண்டனை கைதி ஜெயக்குமார் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 6 தனிப்படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் கைதி கண்டுபிடிக்கப்பட்டார்



  • Dec 22, 2023 11:37 IST

    ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

    சம்பள உயர்வு, உயிர் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எண்ணூர் துறைமுக வாயிலில் அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்



  • Dec 22, 2023 11:26 IST

    3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Dec 22, 2023 11:17 IST

    கனிமொழி பேட்டி

    மழை வெள்ள எச்சரிக்கைகள் வரத் தொடங்கியதும் நாங்கள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைக்க செல்ல முயற்சித்த போது, அவர்கள் வர மறுத்து விட்டனர். எங்கள் மூதாதையர்கள் காலத்தில் இருந்தே இங்கு வெள்ளம் வந்ததில்லை.

    இங்கிருந்து கிளம்புங்கள் எங்களுக்கு ஒன்றும் ஆகாது என்கிறார்கள். ஆனால் அப்பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது- மீட்பு பணிகளில் ஏற்பட்ட சிரமம் குறித்து கனிமொழி எம்.பி. பேட்டி



  • Dec 22, 2023 11:06 IST

    பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி..

    சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாதுஎன உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு 



  • Dec 22, 2023 11:06 IST

    தனி தீவு போல காட்சியளிக்கும் தளவாய்புரம் கிராமம்

    நெல்லை, தொடர் கனமழை, வெள்ளத்தால் தனி தீவு போல காட்சியளிக்கும் களக்காடு அருகே உள்ள தளவாய்புரத்தில்  கிராமம்;

    சாலை போக்குவரத்து, முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி



  • Dec 22, 2023 10:52 IST

    ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும்.  2021-ல் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு



  • Dec 22, 2023 10:11 IST

    தங்கம் விலை

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு ஒரு கிராம் தங்கம் ரூ.5,860க்கும், ஒரு சவரன் ரூ.46,880க்கும் விற்பனை



  • Dec 22, 2023 09:51 IST

    வேதாரண்யத்தில் உள்வாங்கிய கடல் நீர்

    வேதாரண்யத்தில் உள்வாங்கிய கடல் நீர் .வேதாரண்யத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் நீர் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்.



  • Dec 22, 2023 09:51 IST

    நெல்லையில் மீண்டும் கனமழை

    நெல்லையில் மீண்டும் கனமழை. நெல்லை நகரில் நேற்றிரவு மீண்டும் பெய்த கனமழை வண்ணாரப்பேட்டை பாலம் அருகே மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



  • Dec 22, 2023 09:30 IST

    பொது மருத்துவமனைகளின் சிகிச்சை உபகரணங்கள் என சுகாதார கட்டம்மைப்புகளில் சேதம்

    வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளின் சிகிச்சை உபகரணங்கள் என சுகாதார கட்டம்மைப்புகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், வெள்ளம் சூழ தொடங்கிய உடனே மருத்துவமனைகளில் முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன- தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி



  • Dec 22, 2023 09:24 IST

    அனைத்து கிராமங்களுக்கும் வரும் நடமாடும் மருத்துவ குழுவிடம் சென்று உடல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்

    "வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் பொது மக்களும் விழிப்போடு இருக்க வேண்டும், அனைத்து கிராமங்களுக்கும் வரும் நடமாடும் மருத்துவ குழுவிடம் சென்று உடல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்-சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி



  • Dec 22, 2023 09:01 IST

    நெல்லையில் பள்ளிகள் திறக்க வேண்டாம்: முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

    நெல்லையில் பள்ளிகள் திறக்க வேண்டாம். நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: