News Highlights: தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு; ஐகோர்ட் புதிய முடிவு

News Update Today : காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களை கொடுக்கும் கட்சிதான் பாஜகவின் பி. டீம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Tamil News : அதிமுக கூட்டணியில் உள்ள, பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய கட்சியாக பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறுகிறது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 10-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  திருச்சி பொதுக்கூட்டத்தில் லட்சிய பிரகடனம் வெளியிடப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக – மதிமுக இடையேயான தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில், இழுபறி நீடிக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகள் உடன் பொதுச்செயலாளர் வைகோ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்க, கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொகுதி உட்பட 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை அதிமுக ஒருங்கினைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் வரை குறைந்த அளவே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஒபேக் நாடுகள் முடிவு செய்திருப்பதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ரூ-100 நெருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை 86.45 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.


20:51 (IST)06 Mar 2021

விசிக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல் என பரவும் தகவல் உண்மை அல்ல – திருமாவளவன்

விசிக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல் என பரவும் தகவல் உண்மை அல்ல. இயக்கத் தோழர்கள் இதனைப் பொருட்படுத்த வேண்டாம்.  தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்த பின்னர் தேர்வுக் குழு வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும்.  அதன்பிறகே அறிவிக்கப்படும் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.   

20:45 (IST)06 Mar 2021

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் தில்லி, சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களில்  கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அன்றாட புதிய பாதிப்புகளும் அதிகரித்து வருவது குறித்து மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே பால் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். 

பெருந்தொற்றின் பரவல் அதிகரித்த காலத்தில் பின்பற்றப்பட்ட பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை என்ற சிறந்த வியூகத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மாவட்டங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

20:38 (IST)06 Mar 2021

தமிழகத்தில் மூன்றாவது அணி மீது நம்பிக்கை கிடையாது

தமிழகத்தில் மூன்றாவது அணி மீது நம்பிக்கை கிடையாது. இந்த தேர்தல் திமுக, அதிமுக என்ற இருபெரும் கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.        

20:27 (IST)06 Mar 2021

அசாமில் முதலாவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.

அசாம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிடும் முதலாவது வேட்பாளர் பட்டியலை பிஜேபி இன்று வெளியிட்டது.

19:19 (IST)06 Mar 2021

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த ஆறிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.       

18:44 (IST)06 Mar 2021

அமமுக விருப்பமனு : 8, 9 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும்

அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என கட்சி தலைமை அலுவலகம் அறிவிப்பு

18:43 (IST)06 Mar 2021

80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதிலிருந்து விலக்கு – தேர்தல் ஆணையம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

18:31 (IST)06 Mar 2021

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் சென்னை பயணம்

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மூன்று நாள் பயணமாக வரும் 9ஆம் தேதி சென்னை வருகிறார்.  

18:04 (IST)06 Mar 2021

தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க ஒரு எடுபடாத கூட்டணி – கே. பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க ஒரு எடுபடாத கூட்டணி என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.        

17:55 (IST)06 Mar 2021

தமிழகத்தில் கொவிட் தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் கொவிட் தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளில் 82 சதவீதம் இந்த ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் 543 பேருக்கு புதிதாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.   

17:53 (IST)06 Mar 2021

நேர்முக தேர்வு மூலம் 533 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தேசிய ராணுவ அகாடெமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளின் 145-வது பயிற்சிக்கும், கடற்படை அகாடெமியின் 107-வது பயிற்சிக்கும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 செப்டம்பர் 6 அன்று நடத்திய எழுத்து தேர்வு மற்றும் அதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியம் நடத்திய நேர்முக தேர்வு மூலம் 533 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

விரிவான விவரங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின்  www.joinindianarmy.nic.in http://www.joinindiannavy.gov.in மற்றும் http://www.careerindianairforce.cdac.in ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.

17:50 (IST)06 Mar 2021

திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ?

திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.  

17:37 (IST)06 Mar 2021

மார்ச் 8ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் மார்ச் 8ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.    

16:39 (IST)06 Mar 2021

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனாயக கூட்டணியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

16:04 (IST)06 Mar 2021

தொடரை கைப்பற்றிய இந்திய அணி; 4வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4 வது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 365 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததது. அதோடு 160 ரன்கள் முன்னிலையிலும் இருந்தது.

இந்நிலையில் தற்போது 2வது இன்னிங்ஸ் விளையாடி வந்த இங்கிலாந்து அணி, 135 ரன்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் அக்சர் படேல் தலா 5 விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளனர்.

இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதால்,  ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

15:33 (IST)06 Mar 2021

ஐபிஎல் 2021 போட்டிகள் ஏப்ரல் 9 தொடங்கி மே 30 முடியும் என அறிவிப்பு 

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2021 போட்டிகள் ஏப்ரல் 9- தேதி தொடங்கும் எனவும், இறுதி போட்டி மே மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்றும் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

15:20 (IST)06 Mar 2021

மதிமுக உயர்நிலைக் கூட்டம் 

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மதிமுகவின் உயர்நிலைக் கூட்டம் தொடங்கியது; வைகோ, அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

15:01 (IST)06 Mar 2021

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிந்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் எனவும், தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

14:52 (IST)06 Mar 2021

“அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிமுக அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது” – கே.பாலகிருஷ்ணன்

“அதிக தொகுதிகளில் போட்டியிட கட்சிகள் விரும்புகின்றன. நாங்களும் அதையே விரும்புகிறோம். மற்ற கட்சிகளை ஒப்பிட்டு நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்கவில்லை, திமுகவுடன் விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். மற்றும் அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிமுக அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

14:13 (IST)06 Mar 2021

இம்ரான்கான் அரசு வெற்றி

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு வெற்றி பெற்றுள்ளது. இதனால் இம்ரான்கான் அரசின் ஆட்சி மீண்டு தொடரும். 

14:02 (IST)06 Mar 2021

காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது – ம.நீ.ம. பொதுச்செயலாளர் குமரவேல்

திமுக – காங். இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ‘காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது’ ம.நீ.ம. பொதுச்செயலாளர் குமரவேல் அழைப்பு விடுத்துள்ளார். 

13:59 (IST)06 Mar 2021

4வது டெஸ்ட் போட்டி: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4 வது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 365 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததது. அதோடு 160 ரன்கள் முன்னிலையிலும் இருந்தது.

இந்நிலையில் தற்போது 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறது. அந்த அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தால், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. 

13:50 (IST)06 Mar 2021

5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் விதிக்கக் கோரி வழக்கு

5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு; பிரதமர் நாட்டு மக்களுக்கு பொதுவானவர் என்பதால் அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்யக்கூடாது என மனு தாக்கல். 

13:28 (IST)06 Mar 2021

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு

பதவி காலம் முடிந்த பிறகே, தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

13:26 (IST)06 Mar 2021

கூட்டணி தொடர்பாக கமல்ஹாசன் – சரத்குமார் பேச்சுவார்த்தை

கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பாபுவும் பங்கேற்றுள்ளார்.

12:51 (IST)06 Mar 2021

தங்கம் விலை அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728-க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் ரூ.4,216-க்கு விற்பனை 

12:51 (IST)06 Mar 2021

வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை குறித்து அதிமுக ஆலோசனை

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை

12:49 (IST)06 Mar 2021

காங்கிரஸ் சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல்

காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் சத்தியமூர்த்தி பவனில் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

12:47 (IST)06 Mar 2021

கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த பின்னரே திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று,தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

12:45 (IST)06 Mar 2021

திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி தினேஷ் திரிவேதி பா.ஜ.க-வில் இணைந்தார்

திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி தினேஷ் திரிவேதி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

12:40 (IST)06 Mar 2021

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ்

முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள நடிகர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

12:19 (IST)06 Mar 2021

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

12:16 (IST)06 Mar 2021

என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார் – புதுச்சேரி காங்கிரஸ்

பொது எதிரியான பாஜகவை வீழ்த்த என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

12:14 (IST)06 Mar 2021

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12:10 (IST)06 Mar 2021

திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை – கே.பாலகிருஷ்ணன்

திமுக தொகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில், திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

12:02 (IST)06 Mar 2021

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் – திருமாவளவன்

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 20 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

11:13 (IST)06 Mar 2021

இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு ஆல்அவுட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

10:30 (IST)06 Mar 2021

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்ற வேண்டும்- தேர்தல் ஆணையம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதாக தகவல் 

10:29 (IST)06 Mar 2021

திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மார்க்சிஸ்ட் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், சௌந்தரராஜன், சம்பத் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

09:51 (IST)06 Mar 2021

வாக்காளர் தகவல் சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது- தேர்தல் ஆணையம்

வாக்காளர் தகவல் சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது என்றும், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பான் கார்டு, ஊரக வேலை திட்ட பணி அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை ஆதாரமாக கொண்டு வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

09:44 (IST)06 Mar 2021

தேர்தல் ஆணையம் உத்தரவு

அதிகாரிகள் சொந்த தொகுதியில் பணியாற்றி வருவதாக எழுந்த புகாரை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோரை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

09:05 (IST)06 Mar 2021

அதிமுக தேர்தல அறிக்கை தொடர்பாக இன்று ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தேர்தல அறிக்கை தொடர்பாக சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதலவர் ஒ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

08:58 (IST)06 Mar 2021

பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக நிச்சயம் ஒதுக்கும் – ஹச்.ராஜா

234 தொகுதிகளிலும் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ள பஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹச்.ராஜா, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக நிச்சயம் ஒதுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

08:56 (IST)06 Mar 2021

டாலர் கடத்தல் விவகாரம் – முதல்வர் சபாநாயகருக்கு தொடர்பு

டாலர் கடத்தல் விவகாரத்தில் அதிரடி  “கேரள முதல்வர், சபாநாயகருக்கு தொடர்பு” இருப்பதாக கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கூறியதாக வெளியான தகவல் வெளியாகியள்ளது. 

08:27 (IST)06 Mar 2021

முதல்வர் வேட்பாளராக மெட்ரோமேன் ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை – கேரளா பாஜக தலைவர்

கேரளா சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளராக “மெட்ரோமேன் ஸ்ரீதரன் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை கேரளா மாநில பாஜக தலைவர் அறிவித்ததாக கூறப்பட்ட நிலையில், பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளர்? “மெட்ரோமேன் ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை” – மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங். – மக்கள் நீதி மய்யம் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியுடன் ம.நீ.ம. மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக தகவல்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் வரைவு தேர்தல் அறிக்கை தயாராகிவிட்தாகவும், இந்த அறிக்கை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live tn assembly election campaign election alliance tamilnadu live news weather update

Next Story
சிறப்பு டிஜிபிக்கு எதிராக திரண்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்: டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார்special DGP sexual harassment case, Women IPS officers meet Tamil Nadu DGP tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express