Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மக்கள் கவனத்திற்கு
வைகை அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 1 முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- மதுரை மாநகராட்சி அறிவிப்பு
-
Jun 30, 2024 00:05 ISTஇதுவே எனது கடைசி டி-20 உலக கோப்பை; விராத் கோலி
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலக கோப்பையை வென்றுள்ள நிலையில் விராத் கோலி, இதுவே எனது கடைசி உலக கோப்பை தொடர் என அறிவித்துள்ளார்.
-
Jun 29, 2024 21:15 ISTமதுரை, தேனி, காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. -
Jun 29, 2024 19:52 ISTசுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யுங்கள்: எடப்பாடி பழனிசாமி
"சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது" "சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்க" என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Jun 29, 2024 19:51 ISTலிஃப்ட் அறுந்து விழுந்து ஒருவர் பலி
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்ததில், கணேசன்(52) என்பவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
-
Jun 29, 2024 19:09 ISTமெட்ரோ குடிநீரில் கலப்படம் இல்லை : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்
சென்னை, சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் "மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை, சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தனியார் சார்பில் கேன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது"என தெரிவித்துள்ளார்.
-
Jun 29, 2024 18:14 ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவல்
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
-
Jun 29, 2024 18:13 ISTவிஷ்னுவர்த்தன் பட விழாவில் நயன்தாரா
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி உள்ளிட்டோர் நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகை நயன்தாரா “நான் பொதுவா எந்த விழாவுக்கும் போகமாடேன்.. ஆனால் இது ரொம்ப ஸ்பெஷல்”என கூறியுள்ளார்.
-
Jun 29, 2024 18:12 ISTவிஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
“பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊடகங்கள் அங்கீகாரம் கொடுக்கும்போது, செஸ், கிரிக்கெட் போன்ற போட்டிகளில் சாதிப்பது போல இந்த துறையிலும் சாதிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
-
Jun 29, 2024 17:00 ISTகெட்டப்பை கலைக்காமல் விழாவுக்கு வந்த விஜய் ஆண்டனி
சென்னையில் நடைபெற்று வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு, புதுப்படத்தின் ஷூட்டிங் கெட்டப்பிலேயே வருகை தந்த நடிகர் விஜய் ஆண்டனி. கெட்டப்பை கலைக்க 1 மணி நேரம் ஆகும் என்பதாலும், விழாவுக்கு தாமதமாகிவிடக் கூடாது என்பதாலும் அப்படியே வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
-
Jun 29, 2024 16:34 ISTகுடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து!
ஊருக்கு வெளியே தீயுடன் லாரியை இயக்கிச் சென்ற ஓட்டுநரால் பரபரப்பு - தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினரால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.
-
Jun 29, 2024 16:33 IST6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jun 29, 2024 15:53 ISTஜூலை 2-ல் அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா
அண்ணா பல்கலைக்கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா ஜூலை 2-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. காலை 11 மணியளவில் பல்கலை வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெறும். விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஏ.ஐ.சி.டி.சி தலைவர் சீதாராம் பங்கேற்கின்றனர்.
-
Jun 29, 2024 14:32 ISTஇந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை
இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 603 ரன்கள் குவித்து இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை.
-
Jun 29, 2024 14:22 ISTசேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் நீட்டிப்பு
துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025 மே மாதம் வரை நீட்டித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!
-
Jun 29, 2024 14:17 ISTடெல்லியை தொடர்ந்து குஜராத் விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து.
கனமழை காரணமாக விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்ததால் பரபரப்பு.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றி இறக்கிவிடும் வாகனங்களுக்கான பகுதியில் நடந்த விபத்து.
மேற்கூரை சரிந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என தகவல்.
நேற்று டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார் - 5 பேர் காயம் அடைந்தனர்.
-
Jun 29, 2024 13:39 ISTமது குடித்த 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது குடித்த 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்
மஞ்ச நாயக்கனூரை சேர்ந்த கட்டட தொழிலாளிகளான மகேந்திரன், ரவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததாக பரவிய வதந்தி - போலீசார் விசாரணை
திருப்பூர், கோவை போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை - மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி தகவல்
முதல்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தியது கள்ளச்சாராயம் இல்லை என்பது உறுதி - ஐ.ஜி. பவானீஸ்வரி
-
Jun 29, 2024 13:38 ISTபூரண மது விலக்கு தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி
பூரண மது விலக்கு கொண்டு வருவதற்கான சூழல் தற்போது இல்லை - அமைச்சர் முத்துசாமி
பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்கிற விருப்பம் எங்களுக்கு இருக்கிறது - அமைச்சர் முத்துசாமி
-
Jun 29, 2024 13:03 ISTதமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்
தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின்றன
வருவாய், மக்கள் தொகை வரம்புகள் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்
மாநகராட்சியாக தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றம்
நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைப்பு
புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உதயம்
திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உதயம்
-
Jun 29, 2024 12:55 ISTஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு: 5 ராணுவ வீரர்கள் பலி
லடாக்கில், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 5 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு.
ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் ராணுவ வீரர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதாக தகவல்.
-
Jun 29, 2024 12:35 ISTகொடநாடு வழக்கை இன்டர்போல் விசாரிக்க வேண்டும்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 செல்போன் 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8,000 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. வழக்கை இன்டர்போல் விசாரிக்க வேண்டும்- சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை
-
Jun 29, 2024 12:14 ISTவிஷச் சாராய விவகாரத்தில் துரித நடவடிக்கை: ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது
சாத்தான்குளம் சம்பவத்தை அப்போதைய அதிமுக அரசு மறைக்க நினைத்தது. அதனால் திமுக சிபிஐ விசாரணை கேட்டது
கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. தான் பொறுப்பு என அறிவுறுத்தப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரை
-
Jun 29, 2024 11:55 ISTகாவல்துறை திருத்தச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்.
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த காவல்துறை திருத்தச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், ஏற்காட்டில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும்.
கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ₹5 கோடியில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும்.
மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரப்படும்.
201 புதிய காவல் குடியிருப்புகள் கட்டப்படும்
- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
-
Jun 29, 2024 11:33 ISTகோடநாடு கொலை வழக்கு
கோடநாடு கொலை வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 8 செல்போன்கள் ஆய்விற்கு அனுப்பபட்டுள்ளது. வெளிநாட்டு அழைப்புகளும் இருப்பதால் இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை
-
Jun 29, 2024 11:33 ISTபிரச்னையை திசை திருப்பும் நாடகம்: சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. விஷச் சாராயம் மட்டுமில்லாமல், போதைப் பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என அவர்கள் கூறுவது பிரச்னையை திசை திருப்பும் நாடகம்
ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். இந்த அரசு இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்
-சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பதில் உரை
-
Jun 29, 2024 11:30 ISTதமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா தாக்கல்
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து மசோதா முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் முத்துசாமி
விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ₹10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது!
- அமைச்சர் முத்து சாமி
-
Jun 29, 2024 10:48 ISTகிருஷ்ணகிரி அகழாய்வில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சொன்னானூர் கிராமத்தில் நடக்கும் அகழாய்வில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுப்பு.
கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள் உள்ளிட்டவை கண்டெடுப்பு
- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
-
Jun 29, 2024 10:47 ISTஅரசு மருத்துவமனைகளில் புதிய தாய்சேய் நல கருத்தரித்தல் மையம்
சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இம்மையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது
நேற்றைய அறிவிப்பின்படி கோவை, சேலத்தில் இந்த ஆண்டு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வரும்.
இந்தியாவில் முதல்முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ₹13 கோடி மதிப்பில் அதினவீன மூளை இரத்தநாள ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மதுரை மாவட்டங்களை தொடர்ந்து சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும்
- சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் பதில்
-
Jun 29, 2024 10:42 ISTமலேசிய பிரதமர் உடன் கமல்ஹாசன் சந்திப்பு
இந்தியாவை சேர்ந்த சூப்பர் ஸ்டார் கமல்ஹாசனை சந்தித்தேன். 30 நிமிட சந்திப்பில் சினிமா துறை சார்ந்து விரிவாக உரையாடினோம். ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம்
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்
Dalam sela-sela tugasan rasmi, saya sempat meluangkan masa bersama seniman dan ‘superstar’ tersohor India, Kamal Haasan.
— Anwar Ibrahim (@anwaribrahim) June 28, 2024
Kesempatan yang ada kira-kira 30 minit itu digunakan untuk berbicara dan bertukar pandangan terkait industri perfileman termasuk ketegasan terhadap rasuah.… pic.twitter.com/hubTml54HA -
Jun 29, 2024 10:18 ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 200 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடைந்தது. 2 நாட்களுக்கு முன் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து சுமார் 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
-
Jun 29, 2024 10:18 ISTதங்கம் விலை உயர்வு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் ரூ.6,685க்கும், சவரன் ரூ.53,480க்கும் விற்பனையாகிறது.
-
Jun 29, 2024 09:51 ISTபந்தலூர் பகுதியில் 28 செ.மீ அதிகனமழை பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 28 செ.மீ அளவில் அதிகனமழை பதிவாகியுள்ளது.
கூடலூரில் 19 செ.மீ என்ற அளவில் மிக கனமழை பதிவாகியுள்ளது
- வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jun 29, 2024 09:51 ISTதமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள் அமர்வு தொடங்கியது.
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச்சட்ட முன்வடிவை வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்
-
Jun 29, 2024 09:32 ISTவிருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
விருதுநகர், சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
வெடிமருந்து கலவை செய்யும் போது விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
-
Jun 29, 2024 09:23 ISTவிராலிமலை அருகே சாலை விபத்தில் தந்தை, மகள் பலி
விராலிமலை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, மறுபக்க சாலைக்கு சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த முருகன் (40) அவரது மகள் தியா (6) இருவரும் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் முருகனின் மனைவி மற்றும் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Jun 29, 2024 09:23 ISTபந்தலூரில் 27.8 செ.மீ மழை பதிவு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 27.8 செ.மீ. மழைப் பதிவு
தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான்
-
Jun 29, 2024 08:49 ISTயுஜிசி நெட் மறுதேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு
அண்மையில் ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்தது
யூ.ஜி.சி. சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஜூலை 25, 27 தேதிகளில் நடைபெறும்
யூ.ஜி.சி. நெட் தேர்வு வரும் ஆக. 21 முதல் செப். 4 வரை நடைபெறும்.
வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த யூ.ஜி.சி. நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது
- தேசிய தேர்வு முகமை
-
Jun 29, 2024 08:24 ISTஇலவச சைக்கிள்களில் தரம் இல்லை: ப.சிதம்பரம்
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள்களில் தரம் இல்லை. இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்
— P. Chidambaram (@PChidambaram_IN) June 29, 2024
இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்… -
Jun 29, 2024 07:33 ISTநீலகிரியில் கனமழை
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இரண்டு தாலுகாக்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு
-
Jun 29, 2024 07:32 ISTதமிழகத்தில் ஜூலை 2 வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சனி முதல் செவ்வாய்க்கிழமை வரை (ஜூன் 29-ஜூலை 2) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 29,30 -ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
-
Jun 29, 2024 07:31 ISTமதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தை தொடர்ந்து, மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம்
- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
-
Jun 29, 2024 07:31 ISTநீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.