பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 109-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2753 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 128 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 300 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 04, 2024 21:47 ISTஇரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் 2 இலைகள் உள்ள மாம்பழம் நமது சின்னம் - ஓ.பி.எஸ் பேச்சு
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பா.ம.க வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க உரிமை மீட்புக் குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம், “இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் 2 இலைகள் உள்ள மாம்பழம் நமது சின்னம். அனைத்து நிலையிலும் தி.மு.க அரசு தோல்வி அடைந்துள்ளது. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளச்சாராயம் போதைப் பொருள் நிறைந்த ஆட்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
-
Jul 04, 2024 20:22 ISTஇடைத்தேர்தல் - என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்
என்.டி.ஏ கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பிரசாரம் நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
-
Jul 04, 2024 19:41 ISTதிருவள்ளூரில் வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தருக: அண்ணாமலை
பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது: - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட S.V.Gபுரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி, வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளித் துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.
பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், ஒதுங்க இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து அமர்ந்திருந்த, எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் கைது செய்து அத்து மீறியிருக்கிறது காவல்துறை. திருத்தணி யூனியன் பாஜக மண்டலத் தலைவர் வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் S.K.பாலாஜி ஆகியோரையும் கைது செய்திருக்கிறது திமுக அரசு.
கும்மிடிப்பூண்டியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன், திருவள்ளூரில் ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு.
திமுகவின் இந்த பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 04, 2024 19:36 ISTமும்பையில் ஜஸ்டின் பைபர்
தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்காக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் மும்பை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jul 04, 2024 17:44 IST43வது முறையாக செந்தில்பாலாஜியின் காவல் நீட்டிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 43வது முறையாக ஜூலை 8ம் தேதி வரை காவலை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில்பாலாஜி
-
Jul 04, 2024 17:41 ISTமீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த்
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
-
Jul 04, 2024 16:58 ISTவான்கடே மைதானத்தில் மழை; திட்டமிட்டப்படி வெற்றி ஊர்வலம் நடக்குமா?
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், மும்பையில் பேருந்தில் ஊர்வலமாக வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், வான்கடே மைதான பகுதியில் மகிழ்ச்சியை வரவேற்கும் விதமாக மழை பெய்து வருகிறது.
-
Jul 04, 2024 16:35 ISTஎம்.ஆர். விஜய பாஸ்கருக்கு ஜாமின் வழங்கப்படுமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
Jul 04, 2024 15:47 ISTஹேமந்த் சோரன் இன்று முதல்வராக பதவியேற்பு
ஜார்க்கண்ட் முதல் அமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு விழா மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. -
Jul 04, 2024 15:46 ISTகன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களிக்க ரிஷி வேண்டுகோள்
கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களியுங்கள், தொழிற்கட்சியின் பெரும்பான்மையை நிறுத்துங்கள் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
Jul 04, 2024 15:44 ISTமோடி உடன் நாயுடு சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேச முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
-
Jul 04, 2024 15:43 ISTபுதுச்சேரி அரசு போக்குவரத்து ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. -
Jul 04, 2024 15:13 ISTடெல்லியில் தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி
டெல்லியில் தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, “கைக்கூலிகளுக்கு இன்று இந்தியாவில் மரியாதை இல்லை, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும் மரியாதையையும் வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்றார்.
-
Jul 04, 2024 15:00 ISTசண்முகம் கொலை வழக்கு
சேலம் மாநகர் மாவட்ட பகுதி கழகச் செயலாளர் சண்முகம் கொலை வழக்கு தொடர்பாக திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் உள்ளிட்ட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Jul 04, 2024 14:07 ISTகள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அன்புமணி
சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது, ஆனால், நம்பிக்கை இல்லை. இதில் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ்
-
Jul 04, 2024 13:40 ISTபாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, நீட் தேர்வை எதிர்க்கின்றனர் - அண்ணாமலை
இடை தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகமாக இருக்கும். விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த திமுக அரசு, நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?
பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, நீட் தேர்வை எதிர்க்கின்றனர்
- அண்ணாமலை
-
Jul 04, 2024 13:16 ISTதிருநெல்வேலி மேயர் ராஜினாமா: ஜூலை 8-ம் தேதி சிறப்பு கூட்டம்
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 34ன் படி திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மாமன்ற தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார்.
பதவி விலகல் கடிதம் குறித்து மாமன்றத்தின் பார்வைக்கு வைப்பது தொடர்பான சிறப்பு கூட்டம் ஜூலை 8-ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
- திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தகவல்
-
Jul 04, 2024 13:15 ISTநீலகிரி, கோவைக்கு இன்று மஞ்சள் அலர்ட்
நீலகிரி, கோவையில் இன்று 7 முதல் 11 செ.மீ. மழைப் பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 04, 2024 12:59 ISTநீட் தேர்வு குறித்து கருத்து சொல்ல விஜய்க்கும் உரிமை உண்டு விஜய் தி.மு.க அரசியலை முன்னெடுப்பதால் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெறும் : அண்ணாமலை
தி.மு.க சார்ந்த அரசியலை விஜய் கையில் எடுப்பது போல் உள்ளது. நீட் தேர்வு குறித்து கருத்து சொல்ல விஜய்க்கும் உரிமை உண்டு விஜய் திமுக அரசியலை முன்னெடுப்பதால், தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை .
-
Jul 04, 2024 12:07 ISTஅதிமுக நிர்வாகி கொலை : இ.பி.எஸ் கண்டனம்
சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்று மர்மகும்பலால் வெட்டிக் கொலை.
-
Jul 04, 2024 11:50 ISTஅரசு சார்பில் நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராம மக்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமை புறக்கணிப்பதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராம மக்கள் அறிவிப்பு; மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்ட கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் மணிமுத்தாறு பேரூராட்சியில் தொடங்கிய சிறப்பு முகாமை தேயிலை தோட்ட கிராம புறக்கணிப்பதாக அறிவிப்பு
-
Jul 04, 2024 11:49 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெறும் என்ற அச்சத்தில் தி.மு.க உள்ளதாக நினைக்கிறேன்ள் ராமதாஸ் பேட்டி
விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விடும் என்ற பயத்தில் பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றது; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது பொதுமக்களை பங்கேற்க விடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்துவதாக தகவல்கள் வருகின்றன; விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெறும் என்ற அச்சத்தில் திமுக உள்ளதாக நினைக்கிறேன்” - திண்டிவனம் தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேட்டி
-
Jul 04, 2024 11:40 ISTதி.மு.க தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் X தள பதிவு
“திமுக இளைஞர் அணிச் செயலாளராக இன்று 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்; இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் X தள பதிவு
-
Jul 04, 2024 11:33 ISTதிமுக இளைஞர் அணிச் செயலாளராக இன்று 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்: உதயநிதி எக்ஸ் தளத்தில் பதிவு
“உறுப்பினர் சேர்க்கை, கிளை, வார்டுகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தது, கைவிடப்பட்ட நீர்நிலைகளைச் சீரமைத்தது, கொரோனா கால நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி, மாவட்ட அளவிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்தது; 2-வது மாநில மாநாடு, இல்லந்தோறும் இளைஞர் அணி முன்னெடுப்பு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது, முரசொலி பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், தொகுதிதோறும் கலைஞர் நூலகம், தேர்தல் பிரச்சாரங்கள் உள்ளிட்ட மனதுக்கு நெருக்கமான பல பணிகளை செய்துள்ளோம் என்ற வகையில் மகிழ்வாக உள்ளது” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் X தள பதிவு
-
Jul 04, 2024 10:43 ISTஇந்திய கிரிக்கெட் வீரர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாட்டம்
-
Jul 04, 2024 10:26 ISTதங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,760க்கும், சவரன் ரூ.54,080க்கும் விற்பனை
-
Jul 04, 2024 10:05 ISTபரங்கிமலை மெட்ரோ நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்திய சிறப்பு படை போலீசார்
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிப்பு
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை
-
Jul 04, 2024 09:14 IST7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
-
Jul 04, 2024 08:29 ISTஇந்திய அணிக்கு மோடி விருந்து
சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பிய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காலை உணவு அளித்து வரவேற்கிறார். முன்னதாக டெல்லி விமான நிலையம் வந்த இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
Jul 04, 2024 07:51 IST6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தக
-
Jul 04, 2024 07:46 ISTநாடு திரும்பிய இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
நாடு திரும்பிய டி20 சாம்பியன்ஸ் மும்பையில் இன்று மாலை இந்திய அணி வெற்றிப் பேரணி. டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்பியது. சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள். இந்திய வீரர்களை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் குவிந்துள்ள ரசிகர்கள்
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களின் வெற்றிப் பேரணி இன்று மாலை 5 மணியளவில் மும்பையில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.