பெட்ரோல் டீசல் விலை: சென்னையில் 196-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் 2025-ல் தோனி
ஐ.பி.எல்-லில் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிமுறைகள் வெளியீடு. இம்பேக்ட் பிளேயர் விதி தொடரும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. Uncapped பிளேயர் குறித்த விதிமுறையும் வெளியிடப்பட்டு இருக்கிறது அதன்படி, தோனி uncapped பிளேயர் பட்டியலில் வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Sep 29, 2024 22:12 ISTதுணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Sep 29, 2024 20:59 ISTதுணை முதல்வராக பதவியேற்ர உதயநிதிக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து
ணை முதல்வராக பதவியேற்ர உதயநிதிக்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அன்புச் சகோதரர் உதயநிதிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
-
Sep 29, 2024 20:56 ISTஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். “இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிக்கலான பிரச்னையைத் தீர்க்க உறுதியான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
Sep 29, 2024 19:52 ISTதுணை முதல்வர், புதிய அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும், புதியதாக அமைச்சர் பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் ஆர். ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, சா.மு. நாசர், கோவி செழியன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
Sep 29, 2024 19:48 ISTதமிழகத்தில் அபாயகரமான விபத்து 5% குறைவு - டி.ஜி.பி அலுவலகம் தகவல்
தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டைவிட தற்போது 5% குறைந்துள்ளது. விபத்துகள் 5% குறைந்ததன் மூலம் 570 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளது. 10,536 பேர் உயிரிழந்துள்ளனர். 2023-ம் ஆண்டில் ஜூலை வரை 10,589 மரண விபத்து வழக்குகள் பதிவாகி உள்ளது. 11,106 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்ததாக 35 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
Sep 29, 2024 19:17 ISTஎல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் வாய்ப்பு - புதியதாக அமைச்சர் பதவியேற்ற கோவி செழியன்
"எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று புதியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியேற்ற கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
-
Sep 29, 2024 18:15 ISTநாகை தோப்புத்துரை அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதல்
நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் செருதூரை சேர்ந்த ஃபைபர் படகு மீனவர்கள் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நங்கூரமிட்டு இருந்த ஃபைபர் படகின் கயிற்றை, விசைப்படகு மாட்டி இழுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Sep 29, 2024 17:54 ISTகருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் புதிய அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
-
Sep 29, 2024 17:52 ISTஇன்று முதல் பூமிக்கு 2 நிலவுகள்
வானியல் அதிசயமாக நிலவுடன் சேர்ந்து சிறுகோள் ஒன்று பூமியை சுற்றுகிறது. 2024 PT5 எனப்படும் சிறுகோள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பூமியுடன் பயணிக்கும், ஆனால் இதை நம் வெறும் கண்களால் பார்க்க முடியாது
-
Sep 29, 2024 17:51 ISTசென்னையில் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் மரணம்
சென்னை அசோக்பில்லர் சாலையோர வடிகால் பள்ளத்தில் மதுபோதையில் நிலைதடுமாறி விழுந்து இளைஞர் ஐயப்பன் உயிரிழந்தார்
-
Sep 29, 2024 17:15 ISTஉதயநிதி ஸ்டாலினுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து
துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Sep 29, 2024 17:10 ISTஉதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!
துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார்
-
Sep 29, 2024 16:52 IST16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Sep 29, 2024 16:16 ISTபுதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளை தக்க வைத்துக் கொண்டார். ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவி. செழியன் உயர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் ஆர்.ராஜேந்திரன் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். -
Sep 29, 2024 16:06 ISTமீண்டும் அமைச்சரானார் ஆவடி நாசர்
ஆவடி சா.மு. நாசர் தமிழ்நாட்டின் அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். ஆவடி நாசருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
-
Sep 29, 2024 16:01 ISTஅமைச்சரானார் கோவி.செழியன்
தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக கோவி.செழியன் பதவியேற்றார். கோவி.செழியனுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
-
Sep 29, 2024 15:55 ISTபுதிய அமைச்சராக ஆர்.ராஜேந்திரன் பதவியேற்பு
தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக ஆர்.ராஜேந்திரன் பதவியேற்றார் ராஜேந்திரனுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
-
Sep 29, 2024 15:54 ISTமீண்டும் அமைச்சரானார் செந்தில்பாலாஜி
தமிழக அமைச்சராக மீண்டும் செந்தில்பாலாஜி பதவியேற்றார். செந்தில்பாலாஜிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
-
Sep 29, 2024 15:39 ISTகோவி. செழியனுக்கு உயர்கல்வித் துறை
அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள கோவி.செழியனுக்கு உயர் கல்வித் துறை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Sep 29, 2024 15:12 ISTஉதயநிதிக்கு திருமாவளவன் வாழ்த்து
துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதிக்கும், புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
-
Sep 29, 2024 15:09 ISTதுணை முதல்வர் என மாற்றிய உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் துணை முதல்வர் என மாற்றினார்
-
Sep 29, 2024 14:47 ISTதிருப்பதியில் கலப்பட நெய்யில் லட்டு தயாரித்த விவகாரம்: சிறப்புக்குழு விசாரணை
திருப்பதியில் கலப்பட நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்த விவகாரம்பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிறப்பு விசாரணை குழு தலைவர் சர்வ சிரேஷ்ட திரிபாதி கூறியுள்ளார்.காவல் நிலையத்திலிருந்து வழக்கு தொடர்பான விவரங்களை பெற்றுஆலோசனை நடத்திய பின் விசாரணையை தொடங்க இருக்கிறோம் என்று கூறிய அவர், ஏஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதுபேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நேற்று திருப்பதியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவை சந்தித்தனர்.இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட சிறப்பு விசாரணை குழு
-
Sep 29, 2024 14:43 ISTகோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின்
கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், "சொல்லாகவும், செயலாகவும், உணர்வாகவும் இருந்து வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில், முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அயராது உழைப்போம்" என உறுதி எடுத்துள்ளார்.
-
Sep 29, 2024 14:41 ISTஉதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும்: கனிமொழி வாழ்த்து
துணை முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும்யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டிய முடிவு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பை பொறுப்பை வழங்கி இருக்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும்.அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் அக்கட்சி நாடாளுமன்றக்குழு தலைவருமான கனிமொழி கூறியுள்ளார்.
-
Sep 29, 2024 13:50 ISTபெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி
துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம்” என்று தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Sep 29, 2024 13:40 IST13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Sep 29, 2024 13:33 ISTமுதல்வரிடம் வாழ்த்து பெற்ற புதிய அமைச்சர்கள்
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைய உள்ளவர்கள் மற்றும் இலாகா மாற்றியமைக்கப்பட்ட அமைச்சர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்
-
Sep 29, 2024 12:35 ISTசின்னமுட்டம் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த புதிய விசைப்படகு
சின்னமுட்டம் பகுதியில் படகு கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ பற்றிய நிலையில, காற்றின் வேகம் காரணமாக, விசைபடகு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Sep 29, 2024 11:51 ISTபுதிய அமைச்சர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள், இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ள அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்,
-
Sep 29, 2024 11:48 ISTஎனது பணியின் மூலம் பதிலளிப்பேன் - உதயநிதி
துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன். எனக்கு வாழ்த்து கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி. விமர்சிப்பவர்களுக்கு நான் எனது பணியின் மூலம் பதிலளிப்பேன் - உதயநிதி ஸ்டாலின்
-
Sep 29, 2024 11:07 IST"வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் கேள்வி கேட்கலாம்" - மா.சுப்பிரமணியன்
வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதி நியமனம் குறித்து கேள்வி கேட்கலாம். விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியலில் இருக்கிறாகளா என பார்க்க வேண்டும்- உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி
-
Sep 29, 2024 11:05 ISTஆம்ஸ்ட்ராங் கொலை- வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் சஸ்பெண்ட்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Sep 29, 2024 09:44 ISTஅரசியலில் தவறான முன்னுதாரணம் - தமிழிசை
தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் என்றால் இங்கு எங்கே ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயக வழிமுறை என்று சொல்ல முடியாது. முடியாட்சியை நோக்கி திமுக சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் தவறான முன்னுதாரணம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் அறிவிப்பு பற்றி தமிழிசை கருத்து
-
Sep 29, 2024 08:59 ISTமீனவர்கள் 15 பேர் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. -
Sep 29, 2024 08:28 ISTதமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 4 பேர் அமைச்சர்களாக சேர்ப்பு. இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.