Advertisment

Tamil News Highlights: தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு

Tamil News Live Updates -15-04-2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 TN voter list Special camp to add and remove name dates in tamil

Tamil news live

Tamilnadu: பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 31-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2808 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 216 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 408 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Apr 15, 2024 21:08 IST
    மத்திய சென்னையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை

     

    அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்தார்.



  • Apr 15, 2024 20:37 IST
    நெல்லையில் நரேந்திர மோடி பேச்சு

     

    நெல்லை பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1.85 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்திருக்கிறோம்;

    ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 12 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். 40 லட்சம் பயனாளிகளுக்கு எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம்.
    கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.800 கோடி மதிப்பில் நிதி உதவி செய்துள்ளோம்” என்றார்.



  • Apr 15, 2024 20:36 IST
    திருவள்ளூரில் மு.க. ஸ்டாலின் பரப்புரை

    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.



  • Apr 15, 2024 19:51 IST
    அம்பேத்கர் சட்டமா? ஆர்.எஸ்.எஸ் சட்டமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

     

    திருவள்ளூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, “இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? அல்லது ஆர்.எஸ்.எஸ்-இன் சட்டம் இருக்க வேண்டுமா? எனக் கேள்வியெழுப்பினார்.



  • Apr 15, 2024 18:59 IST
    தி.மு.க-விற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும், சேய்க்குமான உறவு - ஸ்டாலின் பரப்புரை

    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது,  “ "திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு தாய்க்கும், சேய்க்குமான உறவு” என்று கூறினார்.



  • Apr 15, 2024 18:05 IST
    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் - கனிமொழி

    தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் தேர்தல் பரப்புரை செய்த தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி: “மோடி உங்கள் அக்கவுண்ட்டில் 15 லட்சம் போடுகிறேன் என்று சொன்னதை போடமாட்டார். ஆனால், பேங்க் அக்கவுண்ட்டில் 500 மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பிடித்த தொகை 25,000 கோடி. அதனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 25,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். 



  • Apr 15, 2024 17:54 IST
    விவாகரத்து வழக்கு: தனுஷ்-ஐஸ்வர்யா நேரில் ஆஜராக  கோர்ட் உத்தரவு

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரிய வழக்கில், அக்டோபர் 7-ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Apr 15, 2024 17:34 IST
    பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார்

    நிதி நிறுவனம் நடத்தி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியதால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். சென்னை தியாகராய நகரில் பிரபல நகைக்கடையில், 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கும்பகோணத்தை சேர்ந்த கணேஷ் சுவாமிநாதன் மீது கடையின் மேலாளர் புகார் அளித்துள்ளார். 2020 ஜுலை -2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை வாங்கி 9.47 கிலோவுக்கு மட்டுமே பணம் கொடுத்து மீதி பணம் தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் மோசடி வழக்குகளில் சிக்கியதால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.



  • Apr 15, 2024 17:31 IST
    ராமர் பெயரில் ஓட்டு கேட்பதால்... மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு

    ராமர் பெயரில் ஓட்டு கேட்பதால் பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உ.பி.யில் பிரசாரம் செய்தபோது இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாகவும் அவரின் பேச்சு மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பிரசாரத்திற்கு அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 15, 2024 17:20 IST
    ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் மல்லர் கம்பம் விளையாட்டு அரங்கேற்றம்

    நடிகர் ராகவா லாரன்ஸின் மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளையில் இருக்கும் மாணவர்கள் கற்றுக் கொண்ட மல்லர் கம்பம் விளையாட்டை அரங்கேற்றும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.



  • Apr 15, 2024 17:17 IST
    தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக (106% வரை) பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்ட கால சராசரிப்படி 87 செ.மீ மழைப்பொழிவு இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 15, 2024 16:40 IST
    பா.ஜ.க திடீர் தலைவர்களை உருவாக்கி சீண்டுகிறது - அ.தி.மு.க தொண்டர்களுக்கு இ.பி.எஸ் கடிதம்

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், “மக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சி செய்யும் கட்சி வடக்கிலிருந்து வந்த பா.ஜ.க; அ.தி.மு.க என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை பா.ஜ.க உணர வேண்டும்; மத்திய, மாநில, ஆளும் கட்சிகள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துத்திணிப்பு செய்து வருகின்றனர், கருத்து திணிப்புகள் எந்த வகையிலும் அ.தி.மு.க-வை சோர்வடையச் செய்யாது. ஆட்சியில் இருக்கும் மமதையில் அருவருக்கத்தக்க வகையில் பா.ஜ.க செயல்படுகிறது; அ.தி.மு.க வம்பு சண்டைக்கு போகாது, வந்த சண்டையை விடாது. அ.தி.மு.க-வைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்வதையே பா.ஜ.க முழு நேர வேலையாக கொண்டுள்ளது; பா.ஜ.க திடீர் தலைவர்களை உருவாக்கி அ.தி.மு.க-வை அருவருக்கத்தக்க வகையில் சீண்டுகிறது. அ.தி.மு.க-வை உடைக்க பா.ஜ.க மேற்கொண்ட முயற்சிகளை உடைத்து தற்போது ஒன்றுபட்டு நிற்கிறோம். மக்களவைத் தேர்தல் களம் அ.தி.மு.க-விற்கு சாதகமாக உள்ளது வெற்றி உறுதி” என்று தெரிவித்துள்ளார். 



  • Apr 15, 2024 16:06 IST
    ஆவடியில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; புகைப்படம் வெளியானது

    ஆவடியில் முத்தாபுதுப்பேட்டையில், கிருஷ்ணா ஜுவல்லரி நகைக்கடையில் புகுந்து பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  ஆவடியில் கிருஷ்ணா ஜுவல்லரியில் உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு, துப்பாக்கி முனையில் நகைகளைக் கொள்ளை அடித்த நபர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.



  • Apr 15, 2024 15:40 IST
    செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் 32-வது நீட்டிப்பு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 



  • Apr 15, 2024 14:47 IST
    துப்பாக்கி முனையில் நகை கொள்ளை

    சென்னை, ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். காரில் வந்த 4 பேர்  கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டி போட்டு தப்பியோட்டியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் முத்தாபுதுபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Apr 15, 2024 14:47 IST
    கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு - இ.டி-க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் இறுதி வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது. 



  • Apr 15, 2024 14:10 IST
    ‘ஜி.எஸ்.டி வரி அல்ல, வழிப்பறி’ - ஸ்டாலின் கடும் தாக்கு 

    “ரூ.1.45 லட்சம் கோடி  கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் மத்திய பாஜக அரசால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?; நடுத்தரக் குடும்பத்தினர் ஜி.எஸ்.டி வரியைப் பார்த்து கப்பர் சிங் வரி எனப் புலம்புகின்றனர். 

    ஜி.எஸ்.டி வரியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Apr 15, 2024 14:04 IST
    ஏப்.20-ல் தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20ல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



  • Apr 15, 2024 13:30 IST
    ஜே.பி.நட்டாவின் வாகனப் பேரணி ரத்து

    நீலகிரி: உதகையில் நாளை நடைபெற இருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனப் பேரணி ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 15, 2024 13:28 IST
    பூத் சிலீப்

    பூத் சிலீப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்

    - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு



  • Apr 15, 2024 12:59 IST
    பறிமுதல்

    நாடு முழுவதும் ரூ.4658.16 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள், ரூ.4.43 கோடி அளவில் மதுபானம் ரூ.78.75 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது



  • Apr 15, 2024 12:40 IST
    தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

    `இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என்ற விளம்பரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Apr 15, 2024 12:40 IST
    தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

    `இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என்ற விளம்பரம் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Apr 15, 2024 12:36 IST
    ராகுல் காந்தி பேச்சு

    பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் நிலையை கண்டு கொள்ளவில்லை; இதுதான் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு;

    அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறார்கள். தமிழர்களின் தமிழ் மொழி, கலாச்சாரம், அடையாளங்களை அழிப்பதற்கு பாஜகவினர் முயற்சி செய்கின்றனர்

    - நீலகிரி மாவட்டம் தாளூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் ராகுல் காந்தி பேச்சு



  • Apr 15, 2024 12:35 IST
    பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை

    பாஜகவின் தேர்தல் அறிக்கை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கானது. இந்த தேர்தல் புதிய தலைமுறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்

    - கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னங்குளம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை



  • Apr 15, 2024 11:55 IST
    ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது

    9 ஆண்டுகளில் பெருமுதலாளிகளின் ₹11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பா.ஜ.க. அரசு, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது

    -ப.சிதம்பரம் குற்றச்சாட்டு



  • Apr 15, 2024 11:55 IST
    காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

    பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. 33% மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பாஜக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும், அது இப்போதைக்கு அமலுக்கு வராது

    4 கோடி வீடுகளைக் கட்டி இருந்தால் 52,000 வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52000 வீடுகளைக் காட்ட முடியுமா?

    அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ₹1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?

    வேளாண் விளைப்பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல

    -காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு



  • Apr 15, 2024 11:51 IST
    தேர்தலை புறக்கணிக்க வேங்கைவயல் கிராம மக்கள் முடிவு

    குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் வருகிற மக்களைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கைவயல் கிராம மக்கள் பதாகை வைத்துள்ளனர்.



  • Apr 15, 2024 11:18 IST
    நீலகிரியில் ஏர் ஆம்புலன்ஸ் திட்டம்- எல். முருகன் வெளியிட்ட தேர்தல் அறிக்கை

    6 சட்டமன்ற தொகுதிகளிலும் முகாம் அலுவலகம் திறக்கப்படும், 6 தொகுதிகளிலும் மகளிருக்கு தனி கல்லூரி அமைக்கப்படும்.

    உதகையில் சர்வதேச தரத்தில் தொழில்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

    உதகையில் மூடப்பட்ட எச் பி எஃப் தொழிற்சாலையில் ஐடி பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

    சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உலகத்தரத்தில் சுற்றுலா மையம் அமைக்கப்படும்

    நீலகிரியில் ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

    நீலகிரி தொகுதிக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன்



  • Apr 15, 2024 11:16 IST
    கவிதாவிற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் சிபிஐ காவலை, ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Apr 15, 2024 10:43 IST
    ஆ.ராசாவை ஆதரித்து ராகுல் பரப்புரை

    கூடலூரில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை. திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நீலகிரி வந்துள்ள ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை



  • Apr 15, 2024 10:43 IST
    ராகுல் வந்த ஹெலிகாப்டரில் சோதனை

    நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை. வயநாடு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல்காந்தி, அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்



  • Apr 15, 2024 10:36 IST
    7 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை

    7 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை

    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு 

    நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு  -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Apr 15, 2024 09:51 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு. தங்கம் ஒரு கிராம் ரூ.6,790-க்கும், சவரன் ரூ.54,320-க்கும் விற்பனையாகிறது. 



  • Apr 15, 2024 09:49 IST
    நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது

    நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கு

    நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் வழங்கப்பட்டது 

    நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது

    தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து சம்மனை துரையிடம் வழங்கினார்



  • Apr 15, 2024 09:03 IST
    நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம்: எப்.ஐ.ஆரில் முக்கியத் தகவல்

    சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது

    பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்ததாக தகவல்

    நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் தகவல்

    "வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம்"

    தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல்

    நயினார் நாகேந்திரனை விசாரணைக்கு வருமாறு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்



  • Apr 15, 2024 08:54 IST
    ஸ்டாலின் இன்று இங்கு பிரசாரம்

    வடசென்னை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Apr 15, 2024 08:50 IST
    ராகுல் காந்தி நீலகிரி வருகை

    இன்று காலை மீண்டும் தமிழகம் வருகிறார், ராகுல் காந்தி

    கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் தாளுருக்கு ராகுல் வருகை

    தனியார் கல்லூரியில் மாணவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்

    தாளுரில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்



  • Apr 15, 2024 08:48 IST
    பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

    பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம். பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு



  • Apr 15, 2024 08:28 IST
    ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

    டெல்லி புறப்பட்டு சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்



  • Apr 15, 2024 07:53 IST
    மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகை

    இன்று நெல்லை வருகிறார் பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்று நெல்லை வருகிறார், பிரதமர் மோடி அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 



  • Apr 15, 2024 07:53 IST
    மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகை

    இன்று நெல்லை வருகிறார் பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக இன்று நெல்லை வருகிறார், பிரதமர் மோடி அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 



  • Apr 15, 2024 07:52 IST
    ஐ.பி.எல் இன்றைய போட்டி

    ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகள் மோதல். 



  • Apr 15, 2024 07:51 IST
    அண்ணாமலை மீது கோவையில் வழக்குப் பதிவு

    தேர்தல் விதிமீறல்: அண்ணாமலை மீது கோவையில் வழக்குப் பதிவு

    அண்ணாமலை மீது வழக்குபதிவு

    புகாரின் பேரில்  2 பிரிவின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு

    கோவை காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அண்ணாமலை, காவல்துறையினருடன் வாக்குவாதம்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment