Advertisment

Tamil Breaking News Highlights: திடீர் உடல்நலக் குறைவு: ரஜினி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Tamil News Live Updates-30-09-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth Vettaiyan 2

பெட்ரோல் டீசல் விலை: சென்னையில் 197-வது  நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

நேபாள வெள்ளம்: 170 பேர் பலி 

நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. காணாமல்  போன 42 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Sep 30, 2024 23:24 IST
    2024-ம் ஆண்டின் 2-வது மற்றும் கடைசி சூரிய கிரகணம்: இந்தியாவில் காண வாய்ப்பில்லை

    2024-ம் ஆண்டின் 2-வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2-ந் தேதி நிகழ உள்ளது. இது முழு சூரிய கிரகணமாக இருக்காது. ஆனாலும், வளைய சூரிய கிரகணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்திரன் சூரியனை முழுமையாக மறைப்பதால், மறைக்கப்பட்ட பகுதியை சுற்றி ஒளிவட்டம் தோன்றும். அது பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல் இருக்கும். இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால், நம்மால் பார்க்க முடியாது.



  • Sep 30, 2024 21:20 IST
    மழை எச்சரிக்கை: சென்னையில் 15 மண்டலங்களில் பேனர்கள் அகற்றம்!

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் வைக்கப்பட்டுள்ள ஃபிளக்ஸ் மற்றும் பேனர்கள் அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



  • Sep 30, 2024 21:10 IST
    திருச்சி மாநகராட்சி மக்கள் தொகை உயர்கிறது

    திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வாா்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மக்கள் தொகை 10 லட்சத்து 45 ஆயிரத்து 436 ஆக உள்ளது. மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்பு சட்டபேரவையில் வெளியிடப்பட்டது.
    இந்த விஸ்தரிப்பு மூலம் திருச்சி மாநகராட்சி வாா்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயா்த்தப்படுகிறது. மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க பல்வேறு பகுதி ஊராட்சி மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.


    இதையும் மீறி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதவ பெருமாள் கோயில், பிச்சாண்டவர் கோயில், தாளக்குடி, கீரமங்கலம், கூத்தூர், மதகுடி, பனையகுறிச்சி, குண்டூர், ஓலையூர், மணிகண்டம், மேக்குடி, கே கள்ளிக்குடி வடக்கு, கே கள்ளிக்குடி தெற்கு, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, மல்லியம்பத்து, மருதண்டகுறிசி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர் உள்ளிட்ட  20 ஊராட்சிகளும் திருச்சி மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையும், திருச்சி மாநகராட்சியின் மக்கள்தொகை 13 லட்சத்து 37 ஆயிரத்து 570 ஆக உயர்கிறது. 



  • Sep 30, 2024 20:26 IST
    வடகிழக்கு பருவமழை: 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் 

    சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைக்க, கண்காணிக்க மண்டல வாரியாக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 



  • Sep 30, 2024 20:18 IST
    லட்டு சர்ச்சை - முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை

    "லட்டு சர்ச்சை குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும். உச்சநீதிமன்றம் தீவிரமாக விசாரித்தால், சந்திரபாபு நாயுடு ஏற்படுத்திய பொய் சர்ச்சை வெளியே வரும். உண்மை வெளி வந்தால், பொய் சொன்னவர்கள் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று  முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். 



  • Sep 30, 2024 20:15 IST
    த.வெ.க மாநாடு - 15 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு?

    தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்து தலா 1,000 பேர் கணக்கெடுத்து பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 

    தன்னார்வலர்களாக பங்கேற்க, மாவட்டம்தோறும் 250 பேருக்கு கருப்பு நிற டி-ஷர்ட், ஐடி கார்டு வழங்க தவெக திட்டமிட்டுள்ளது. 



  • Sep 30, 2024 19:50 IST
    அமைச்சரவை பட்டியல் வெளியீடு - முதலிடத்தில் ஸ்டாலின்; 3-ம் இடத்தில் உதயநிதி 

    முதலிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், 2ம் இடத்தில் அமைச்சர் துரைமுருகன், 3-ம் இடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். 

    அமைச்சர் செந்தில் பாலாஜி, பட்டியலில் 21வது இடத்திலும், புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜேந்திரன் 19வது இடத்திலும், கோவி. செழியனுக்கு 27வது இடத்திலும், மீண்டும் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் நாசர், பட்டியலில் 29வது இடத்திலும் உள்ளார்கள். 



  • Sep 30, 2024 19:47 IST
    ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி விளக்கம்

    ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தனது அறிக்கையில், "யாருடைய நட்பையையும் புண்படுத்தும் விவாதங்களில் நான் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன். நான் திருமணத்தின் முக்கியத்துவத்தையும், புனிதத்தையும் மதிக்கிறேன் 

    எங்களுக்குள்ளான தனிப்பட்ட உரையாடலை நான் இன்னும் எதிர்பார்க்கிறேன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது" என்று கூறி விளக்கம் அளித்துள்ளார். 



  • Sep 30, 2024 19:47 IST
    ஈஷா யோகா மையம் வழக்கு காவல்துறைக்கு  ஐகோர்ட் உத்தரவு 

    கோவை ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    யோகா மையத்தில் இருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தர கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். மகள்கள் மற்றும் பெற்றோரிடம் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வு தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறது. 



  • Sep 30, 2024 19:46 IST
    நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பு -  தமிழ்நாடு முதலிடம்!

    நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதிகபேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தொழில்துறை ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Sep 30, 2024 19:46 IST
    எஞ்சின் ஆயில் குடித்து வாழும் விசித்திர மனிதர் 

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    கட்டட தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் எஞ்சின் ஆயில் குடித்து பசியை போக்கிக் கொண்டதாகவும், பின் அதுவே பழக்கமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாளொன்றுக்கு 5 லிட்டர் எஞ்சின் ஆயிலை குடித்து வருகிறார். அவ்வபோது காகிதங்களையும் உண்கிறார்.



  • Sep 30, 2024 19:46 IST
    விமானப்படை அணிவகுப்பு - டிரோன் பறக்க தடை

    விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி ரெட் சோன்-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை விதித்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.



  • Sep 30, 2024 19:45 IST
    இயக்குநர் மோகன் ஜி-க்கு நிபந்தனை முன்ஜாமின்

    பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி-க்கு பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கிய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

    "மனுதாரர் வாய் சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்த வேண்டும், உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக்கூடாது.  தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும். உண்மையிலேயே பழனி கோவில் மீது அக்கறை இருந்தால் பழனி கோவிலுக்கு சென்று அங்கு தூய்மை பணியை மேற்கொள்ளலாம்" என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். 



  • Sep 30, 2024 19:45 IST
    திருமாவளவன் பாராட்டு 

    "தமிழ்நாடு அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாகவும், ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சரை இதற்காக பாராட்டுகிறேன்" என்று  கள்ளக்குறிச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 



  • Sep 30, 2024 19:45 IST
    நாமக்கல் விவகாரம் - ஆவணங்களின் முரண்பாடு 

    நாமக்கல் ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட பெயர், விலாசம் குறித்த ஆவணங்களில் முரண்பாடு இருப்பதாகவும், கைதாகும் போதெல்லாம் குற்றவாளிகள் பெயரை மாற்றி கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 



  • Sep 30, 2024 19:45 IST
    சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

    கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நில ஒதுக்கீடு விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது



  • Sep 30, 2024 19:44 IST
    4 லட்சம் பேர் - விஜய் வியூகம்

    தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதை காவல்துறையிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை வழங்க தனியாக கோரிக்கை விடுக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது. 

    மாநாடு மேடையில் விஜய்யுடன், அனைத்து  மாவட்ட செயலாளர்களையும் அமர வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து வர அறிவுறுத்தல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 



  • Sep 30, 2024 15:35 IST
    திருப்பதி லட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன? 

    திருப்பதி லட்டுவில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரரான சுப்பிரமணியன் சாமி தரப்பு வாதம்:  “திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என பொதுவெளியில் கூறுவது மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும். நிராகரிக்கப்பட்ட நெய், பிரசாதம் செய்ய பயன்படுத்தப்பட்டதா? என தெளிவுகள் இல்லை” என்று என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ஆந்திரப் பிரதேச அரசுத் தரப்பில்,  “இவ்விவகாரத்தில் சுப்பிரமணியன் சாமி எப்படி தேவஸ்தானம் சார்பாக மனுத்தாக்கல் செய்ய முடியும்? யார் அனுமதி அளித்தார்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

    நீதிபதிகள்,  “இவ்விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது என்றால், ஏன் பொறுமை காக்காமல் செய்தியாளர் சந்திப்பு நடத்தி பேச வேண்டும். கடவுளை அரசியலில் இருந்து தள்ளியே வைக்க வேண்டும் என விரும்புகிறோம்.” என்று கருத்து தெரிவித்தனர்.

    “கலப்பட நெய்தான் பிரசாதம் செய்ய பயன்படுத்தப்பட்டதா என்பதற்கு தெளிவுகள் இல்லை. இந்த விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை சார்ந்த விஷயம். இதில் அரசியல் கூடாது. எந்த முறையான ஆதாரமும் இல்லாமல், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் அவசரமாக பத்திரிகையாளர்கள் முன்பு, பொதுவெளியில் வந்து குற்றச்சாட்டு வைத்தது தேவையில்லாத ஒரு செயல். புகார் எழுந்தால் அனைத்து நிறுவன நெய்களும் சோதிக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட நிறுவனத்தின் நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    ஆந்திர அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக்குழு போதுமானதா அல்லது வேறு விசாரணை தேவையா என்பது குறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.



  • Sep 30, 2024 15:21 IST
    தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது  வழக்குகள் நிலுவையில் உள்ளன? சுப்ரீம் கோர்ட் கேள்வி

    தமிழ்நாட்டில் எத்தனை அமைச்சர்கள் மீது  வழக்குகள் நிலுவையில் உள்ளன? அமைச்சர்கள் மீதான வழக்குகள் விவரங்களை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் தாக்கலான 4 குற்றப்பத்திரிகைகளையும் தனித்தனியாக விசாரிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் முன்வைத்த கோரிக்கை மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ அனுப்ப உத்தரவிட்டுள்ளது.



  • Sep 30, 2024 14:13 IST
    திருப்பதி லட்டு வழக்கு: கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவைத்திருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்

    திருப்பதி லட்டு விவகாரத்தில், கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவைத்திருக்க வேண்டும்; திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.



  • Sep 30, 2024 14:00 IST
    திருப்பதி லட்டு விவகாரம்; சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

    திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்போது, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது ஏன்? என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது



  • Sep 30, 2024 13:39 IST
    நெல்லியாளம் தி.மு.க நகராட்சி தலைவருக்கு அக்கட்சி கவுன்சிலர்களே எதிர்ப்பு

    நெல்லியாளம் தி.மு.க நகராட்சி தலைவருக்கு அக்கட்சி கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தி.மு.க நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த தி.மு.க கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் சிவகாமி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். மேலும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதேநேரம் தான் பழங்குடியினத்தவர் என்பதால் தன்னை சிறுமைப்படுத்துவதாக நகராட்சி தலைவர் கூறியுள்ளார்



  • Sep 30, 2024 13:24 IST
    தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Sep 30, 2024 12:54 IST
    மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

    பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிதுன் சக்கரவர்த்தி கலாச்சார சின்னம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்



  • Sep 30, 2024 12:27 IST
    கர்நாடகாவில் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி அரசுப் பேருந்து விபத்து

    கர்நாடகாவில் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி அரசுப் பேருந்து சாலையில் கவிழ்ந்தது. அரசுப் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது



  • Sep 30, 2024 12:02 IST
    திருமலையில் சிறப்பு விசாரணை குழு ஆய்வு

    கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்



  • Sep 30, 2024 11:39 IST
    வானிலை முன்னறிவிப்புக்கு TN ALERT செயலி உருவாக்கம்; ஸ்டாலின்

    வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து கொள்ள TN ALERT என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Sep 30, 2024 11:30 IST
    பருவமழை - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

    ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம்உள்ளிட்டோர் பங்கேற்றனர். 



  • Sep 30, 2024 11:29 IST
    இ.டி அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

    இ.டி அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார். வழக்கில் ஜாமின் பெற்ற அவர் திங்கள், வெள்ளிகிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, 2வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். 

     



  • Sep 30, 2024 10:53 IST
    தவெக கொடி - தேர்தல் ஆணையம் பதில்  

    த.வெ.க கொடியில் யானைச் சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில்  தேர்தல் ஆணையம் தலையிடாது. அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு நாங்கள் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்குவது இல்லை எனக் கூறியுள்ளது.

    த.வெ.க கொடியில் யானைச் சின்னம் பயன்படுத்தபட்டதற்கு தடைகோரி பகுஜன் சமாஜ் அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 



  • Sep 30, 2024 10:22 IST
    பருவமழை -ஸ்டாலின் இன்று ஆலோசனை

    வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் ஆலோசனை நடத்துகிறார். 

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் 



  • Sep 30, 2024 10:17 IST
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



  • Sep 30, 2024 08:59 IST
    கான்பூர் டெஸ்ட்- 3-வது நாள் ஆட்டமும் ரத்து

    கான்பூரில் நடைபெறும் இந்தியா, வங்கதேசம் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    ஆடுகளத்தை ஆய்வுசெய்த நடுவர்கள், ஈரப்பதம் காரணமாக, 3-வது நாள் ஆட்டமும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது



  • Sep 30, 2024 08:24 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் -  மத்திய அரசு திட்டம்

    நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்த 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் ஒன்றாக நடத்த அரசமைப்பு திருத்த சட்டம். மேலும் உள்ளாட்சி தேர்தல்களை மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுடன் இணைந்து நடத்த சட்டதிருத்தம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment