Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்படும்.
-
Jul 16, 2024 21:56 ISTமதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை; 4 பே கைது
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் பரத், நாக இருள்வேல், கோகுலக் கண்ணன், பென்னி ஆகிய 4 பேரை மதுரை காவல்துறையினர் கைது செய்தனர்.
-
Jul 16, 2024 21:54 ISTஇடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு: கூடுதலாக 1,000 இடங்கள் சேர்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில், கூடுதலாக 1,000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 1,768 காலி பணியிடங்களுக்கு 21-ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் மேலும் 1,00 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2024 21:08 ISTமின் கட்டணம் உயர்வைக் கண்டித்து ஜூலை 23-ல் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் - இ.பி.எஸ் அறிவிப்பு
மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து ஜூலை 23-ம் தேதி காலை 10.30 மணி அளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ரேஷனில் பருப்பு, பாமாயில் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதைக் கண்டித்தும் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
Jul 16, 2024 21:04 ISTமொஹரம் பண்டிகை: புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2024 20:45 ISTஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் 5 மணி நேர சி.பி.சி.ஐடி விசாரணை நிறைவு
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் 5 மணி நேரம் நடந்த விசாரணை முடிந்தது. மருத்துவ பரிசோதனைக்காக தற்போது அழைத்துச் செல்லப்படும் அவர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
-
Jul 16, 2024 20:42 ISTசென்னை ஜாம் பஜாரில் 14 வயது சிறுவன் காரை வேகமாக ஓட்டி மக்கள் மீது மோதி விபத்து; 2 பேர் காயம்
சென்னை ஜாம்பஜாரில் 14 வயது சிறுவன் காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், தனது உடன் படிக்கும் நண்பருடன், காரை இயக்கி வந்த நிலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.2 பேர் காயம் அடைந்துள்ளனர். காரை பறிமுதல் செய்து, விபத்து தொடர்பாக 2 சிறுவர்களிடமும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 16, 2024 20:34 ISTபுதுக்கோட்டை, கடலூர் ஆட்சியர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு
புதுக்கோட்டை, கடலூர் ஆட்சியர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jul 16, 2024 19:40 ISTசவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவல் 6-வது முறையாக நீட்டிப்பு - கோர்ட் உத்தரவு
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவலை ஜூலை 30-ம் தேதி வரை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவல் 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2024 19:36 ISTமேற்குவங்க ஆளுநர் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க மம்தா பானர்ஜிக்கு ஐகோர்ட் தடை
மேற்குவங்க ஆளுநர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
Jul 16, 2024 19:00 ISTஊடகங்களுக்கு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கோரிக்கை
மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி நடத்திய 7 மணி நேர விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், 4 கோடி விஷயத்தை 4 மாதங்களாக பேசுவதா? நல்ல தரமான செய்திகளை போடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
Jul 16, 2024 18:57 ISTமொஹரம் பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய அறிவிப்பு
மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்
-
Jul 16, 2024 17:59 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : எஸ்.சி., எஸ்.டி, ஆணையம் விசாரணை
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி, ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில்,சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, காவல் அதிகாரிகள் ஐஜி ரூபேஷ் குமார் மீனா உள்ளிட்டோர் நேரில் விளக்கம் அளித்துள்ளனர். அதேபோல் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர், புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயலாளர் லஷ்மி பிரியாவும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
-
Jul 16, 2024 17:22 ISTதமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
திருவண்ணாமலை மலையே சிவப்பெருமான் தான். மலையை ஆக்கிரமித்து கழிப்பிடம், செப்டிக் டேங்க் மற்றும் கட்டடங்கள் கட்ட எப்படி அனுமதிக்க முடியும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
-
Jul 16, 2024 17:20 ISTஜாபர் சாதிக்கு 18-ந் தேதி உறவினர்களை சந்திக்க அனுமதி
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் மீது சென்னை, மும்பையில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வரும் 18-ம் தேதி அன்று ஒரு நாள் உறவினர்களை சந்திக்க ஜாபர் சாதிக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஜூலை 19ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளார் என்று அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.
-
Jul 16, 2024 16:53 ISTமேட்டூர் அணைக்கான நீர் வரத்து மும்மடங்காக அதிகரிப்பு
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூரை வந்தடைந்தது. இன்று காலை, விநாடிக்கு 5,054 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது 16,577 கன அடியாக அதிகரித்தது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Jul 16, 2024 16:37 ISTவிழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி
திண்டிவனம் அருகே 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்கள் 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து, அவர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து போலீசார் வெளியேற்றினர். அவர்கள் தற்போது நீதிமன்ற வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவியது.
-
Jul 16, 2024 16:24 ISTகேம்லின் நிறுவனர் சுபாஷ் காலமானார்!
ஸ்டேஷனரி பிராண்டான கேம்லின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் இன்று திங்கள்கிழமை காலமானார். மத்திய மும்பையில் தண்டேகரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் வியாழக்கிழமை இரங்கல் நிகழ்வுகள் நடைபெறும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
86 வயதான பிரபலமான கலைப்படைப்பு பிராண்டை ஜப்பானின் கொக்குயோவுக்கு விற்ற பிறகு, தண்டேகர் கொக்குயோ கேம்லின் தலைவராக பணிபுரிந்தார்.
-
Jul 16, 2024 16:18 ISTஅமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு: ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டில், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
-
Jul 16, 2024 16:16 ISTஜாபர் சாதிக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூலை 19-ம் தேதி ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது
-
Jul 16, 2024 16:01 ISTமத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் கேட்கும் ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வரும் 19ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவிகளின் அனைத்து அணிகலன்களை கழற்றி சோதனை செய்யும் நீங்கள், போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என்றும் நீதிபதி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jul 16, 2024 15:57 ISTவரும் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் - நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ் அறிவுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக 6-வது நாளாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். காலையில் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகளுடனும், மாலையில், நெல்லை நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். தோல்விக்கு காரணமான மாவட்ட நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என ராமநாதபுரம் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசுகையில், அ.தி.மு.க கூட்டணி பலமாக அமையும் என்றும், வரும் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
-
Jul 16, 2024 14:53 IST10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: அதன் விவரம்: கடலூர் மாவட்ட ஆட்சியர் - சிபி ஆதித்யா செந்தில் குமார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் - அழகுமீனா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் - கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் - சிம்ரன்ஜீத் சிங் காலோன்
-
Jul 16, 2024 14:52 IST10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்
10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம். அதன் முழு விவரகம்: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் - சந்திரகலா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் - அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியர் - லக்ஷ்மி பவ்யா தனீரு தஞ்சை மாவட்ட ஆட்சியர் - பிரியங்கா நாகை மாவட்ட ஆட்சியர் - ஆகாஷ் அரியலூர் மாவட்ட ஆட்சியர் - ரத்தினசாமி.
-
Jul 16, 2024 14:29 IST15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம். செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jul 16, 2024 14:23 ISTதமிழ்நாட்டு மக்களின் : வி.சி.க தலைவர் திருமா
தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பறிக்கும் செயலில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது" "காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றம்" "காவிரி விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினோம்" "உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது" விசிக தலைவர் திருமாவளவன்
-
Jul 16, 2024 14:13 ISTராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம்
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம்
-
Jul 16, 2024 14:12 ISTஅமுதா ஐஏஎஸ் வருவாய் துறை செயலாளராக நியமனம்
உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் வருவாய் துறை செயலாளராக நியமனம்.புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம்
-
Jul 16, 2024 13:39 ISTதமிழ்நாட்டுக்கு கர்நாடகா நீர் தர மறுப்பதை ஏற்க முடியாது: ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு கர்நாடகா நீர் தர மறுப்பதை ஏற்க முடியாது. காவிரி உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- முதலமைச்சர் ஸ்டாலின்
-
Jul 16, 2024 13:18 ISTசென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்று திறனாளிகள் போராட்டம்
சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்று திறனாளிகள் போராட்டம். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை பல மாதங்களாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு.
-
Jul 16, 2024 12:57 ISTமோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்த நிலையில், பிரதமருடன் சந்திப்பு
-
Jul 16, 2024 12:56 ISTமாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்: சீமான்
கொலையாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு பாலசுப்ரமணியனின் படுகொலை ஒரு கொடும் சாட்சி
எவரையும் கூலிப்படையினரைக் கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாமென்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு?
என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்? அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?" -சீமான்
-
Jul 16, 2024 12:34 ISTஎம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர், உறவினர் பிரவீன் உள்பட 7 பேர் மீது வழக்கு
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை ₹100 கோடி மதிப்பில் போலி ஆவணம் தயாரித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு.
நில அபகரிப்பு வழக்கில், கேரளாவில் பதுங்கி இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது.
முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், கேரளாவில் வைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது
-
Jul 16, 2024 12:25 ISTபிராங்க் வீடியோ: நேரில் ஆஜராக திருமலை போலீசார் உத்தரவு
திருப்பதி கோயிலில் பிராங்க் வீடியோ செய்து சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராக திருமலை போலீசார் உத்தரவு.
-
Jul 16, 2024 12:24 ISTஅன்னியூர் சிவா எம்எல்ஏவாக பதவியேற்பு
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
-
Jul 16, 2024 12:18 ISTபுதிய கல்லூரி கட்டடங்கள் திறப்பு
பல்வேறு கல்லூரிகளில் ரூ.52.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு. காணொலி மூலம் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
-
Jul 16, 2024 11:31 ISTஅனைத்து கட்சிக் கூட்டம் தொடக்கம்
காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
-
Jul 16, 2024 11:08 ISTநயினார் நாகேந்திரன் ஆஜர்
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்
சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆஜர்
-
Jul 16, 2024 10:56 ISTஅன்னியூர் சிவா எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவிற்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு
-
Jul 16, 2024 10:17 ISTகர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
கபினி அணையில் இருந்து 23,333 கன அடி வெளியேற்றம்
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றம்
2 அணைகளில் இருந்து வினாடிக்கு 23,800 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறப்பு
-
Jul 16, 2024 10:12 ISTதமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தகவல்!
-
Jul 16, 2024 10:12 ISTதங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 54,640-க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,830 -க்கும் விற்பனையாகிறது.
-
Jul 16, 2024 09:45 ISTஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை
கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட 35 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல ஒரு கிலோ பச்சை மிளகாய் 90 ரூபாய்க்கும் ஒரு கிலோ கேரட் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 16, 2024 09:43 ISTமதுரையில் நாதக நிர்வாகி கொலை: காவல் ஆணையர் நேரடியாக விசாரணை
மதுரையில் நாதக நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை வழக்கை மதுரை மாநகர காவல் ஆணையர் நேரடியாக விசாரணை;
பாலசுப்ரமணியன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாகவும், குடும்ப பிரச்னை காரணமாக கொலை நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் -
Jul 16, 2024 09:22 ISTதமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
7- 11 செ.மீ. மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
- இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Jul 16, 2024 09:21 ISTநாதக நிர்வாகி வெட்டிப் படுகொலை
மதுரை: செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை
-
Jul 16, 2024 08:40 ISTபோக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கனமழை காரணமாக மண் சரிந்து விழுந்ததில் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு
சாலையை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 16, 2024 08:33 ISTகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Jul 16, 2024 08:32 ISTசோலையாறில் 14 செ.மீ மழைப்பதிவு
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோலையாறில் 14 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
சிறுவானி அடிவார பகுதியில் 9.5 செ.மீ மழையும், மாக்கினாம்பட்டியில் 8.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
-
Jul 16, 2024 08:09 ISTபாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு
-
Jul 16, 2024 08:00 ISTதமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.