பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
14 மாவட்டங்களில் மழை
சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டி20 – அரையிறுதியில் இன்று
டி20 உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது அரையிறுதியில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அடிலெய்டு மைதானத்தில் பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதப் போவது யார் என எதிர்பார்ப்பு.
45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. சென்னையில் புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி ஆகிய பகுதிகளில் சோதனை. கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை எனத் தகவல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
கனமழை காரணமாக டெல்டாவில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், அதில் இருந்தும் நாம் மீண்டுள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்தபோது இருந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது என திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்
சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நவம்பர் 14ம் தேதி இந்தோனேசியா செல்கிறார். இந்தோனேசிய அதிபரின் அழைப்பை ஏற்று, 17வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்கிறார்
கனமழை காரணமாக காஞ்சிபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வேலூர், அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுருண்டு விழுந்து 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். மாணவர்களை மைதானத்தை சுற்றி ஓட சொல்லி தலைமை ஆசிரியர் தண்டனை அளித்ததால் மாணவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தினமும் 30 நிமிடங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொது நலன் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் சட்டமன்றம் இருக்கும்போது, அதற்கு நிகராக கோயில் நிர்வாகம் செயல்படுவது ஏற்க முடியாது இது தேசவிரோதிகள், நக்சலைட் போன்றவர்களுக்கு நிகரான குற்றமாகும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கோவில் நிர்வாகத்தினர் திருவிழா குறித்து கட்டப்பஞ்சாயத்து கூட்டம் நடத்துகின்றனர், தனி நிர்வாகம் போல் செயல்படுகின்றனர் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகத்தினரின் செயல்பாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து தலைமைச்செயலாளர், உள்துறை செயலருக்கு தகவல் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மது போதையில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு போலீசாரை பணி நீக்கம் செய்தது சரி என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னையில் மகளிர் விடுதிக்கு மதுபோதையில் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாக விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகியோர் மீது புகார் எழுந்தது. துறை ரீதியான விசாரணைக்குப் பின் இருவரையும் பணிநீக்கம் செய்த மாநகர காவல் ஆணையர் உத்தரவை எதிர்த்து 2 போலீசாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என எந்த சூழ்நிலையிலும் கருத முடியாது விசாரணை விதிகளும், இயற்கை நீதியும் முறையாக பின்பற்றப்பட்டு பிறப்பிக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு சரி தான் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது
மதுரை, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக சென்னை, எழும்பூர் – கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தேதிகளில் மறுமார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்படும்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில், டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். கைது செய்யப்பட்ட 6 பேரும், உயிரிழந்த ஜமேஷா முபினுடன் சேர்ந்த ஆன்லைனில் வெடிமருந்துகள் வாங்கியுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு கொடி காத்த குமரனின் பெயரை வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு . நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்பு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு . நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தது பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு . ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை வழங்கப்பட்டும் தடை ஏன்? . ரம்மி, போக்கர் போன்றவை திறமைக்கான விளையாட்டுகள் என சட்ட ஆணையமே தெரிவித்துள்ளது – மனு
மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள், 2 வங்கதேசத்தினர் உயிரிழப்பு . பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு. 3 நாள் பயணமாக கொங்கு மண்டலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் . கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்லோடியா தொகுதியில் முதலமைச்சர் பூபேந்திர படேல் போட்டியிடுகிறார். ஜாம்நகர் (வடக்கு) தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திரசிங் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா போட்டியிடுகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் ஜெராக்ஸ் கடையில் தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் – காவல்நிலையத்தில் சரணடைந்தார் கொலையாளி குமார்
கடந்த 7ஆம் தேதி புதுப்பாக்கத்தில் ஜெராக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுகன்யா படுகாயம் அடைந்தார்
100% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
கடந்த 2 தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி சுகன்யா உயிரிழந்தார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெ. தீபாவுக்கு குழந்தை பிறந்துள்ளது
அக்.31ஆம் தேதி குழந்தை பிறந்தததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் தீபா
தனது பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தை கடவுளின் வரம்- தீபா உருக்கம்
5 ஆண்டுகள் சிகிச்சைக்கு பிறகு, தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக ஜெ.தீபா அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி
காஞ்சிபுரம் : மாங்காடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு
கிடப்பில் போடப்பட்ட வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த லட்சுமிபதி (42) என்பவர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து 12ஆம் தேதிக்குள் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நெருங்கும்.
12ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்
தமிழக காவல்துறை நடத்திய சோதனையின்போது அடையாளம் காணப்பட்டதாக தகவல்
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று ஒடிசா செல்கிறார்
பதவியேற்ற பின் முதன் முறையாக சொந்த மாநிலத்துக்கு பயணம்
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்குய்ப்ப வாு
கடலூர், நாகை, திருவாரூர், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு