/indian-express-tamil/media/media_files/8BjUN1PzqafysGlwByjR.jpg)
IE tamil LIVE Updates
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 68-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டர் டீசல் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2882 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 334 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
May 23, 2024 21:03 IST
சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து ஆய்வு: உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு
சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் நாளை முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
-
May 23, 2024 20:01 IST
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை உடனே நிறுத்த ஸ்டாலின் கடிதம்
கேரள அரசு, சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
May 23, 2024 19:53 IST
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 23, 2024 19:50 IST
ரஜினிகாந்த்-க்கு கோல்டன் விசா வழங்கிய யு.ஏ.இ
நடிகர் ரஜினிகாந்த்-க்கு யு.ஏ.இ கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
-
May 23, 2024 19:47 IST
மக்களவைத் தேர்தல்: 6-ம் கட்ட தேர்தல் பரப்புரை நிறைவு
மக்களவைத் தேர்தல் 2024, 58 தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நிறைவு பெற்றது. உ.பி. 14, ஹரியான 10, பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8, டெல்லி 7, ஒடிசா 6, ஜார்க்கண்ட் 4, ஜம்மு காஷ்மிர் ஒரு தொகுதியில் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
May 23, 2024 19:33 IST
சத்தீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரால் 7 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 23, 2024 18:59 IST
டிக்கெட் விவகாரம்; காவலர் மருத்துவமனையில் அனுமதி
டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் குறித்த விசாரணையின் போது காவலர் ஆறுமுகப்பாண்டி மயங்கி விழுந்தார். அவர் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
May 23, 2024 18:37 IST
தென்காசி குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
May 23, 2024 18:30 IST
மீண்டும் மோடி ஆட்சி; அமெரிக்க நிபுணர் கருத்து
மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும்” – பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து அமெரிக்க நிபுணர் கருத்து!
பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து, நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்பார் என அமெரிக்க அரசியல் ஆய்வாளர் இயான் பிரேமர் கூறியுள்ளார்.
மேலும், அவர் பிரதமர் மோடி நிச்சயமாக மூன்றாவது முறையாக வெற்றி பெறப் போகிறார். அடுத்த ஆண்டு உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாகவும், 2028-ம் ஆண்டு 3வது பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா மாறும்” என்றார். -
May 23, 2024 18:20 IST
நோ பார்க்கிங்; அரசு பேருந்துகளுக்கு அபராதம்
சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
May 23, 2024 18:19 IST
ராயன் படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு எப்போது?
தனுஷ் டைரக்ட் செய்து நடிக்கும் 'ராயன்' படத்தின் 2வது சிங்கிளான 'வாட்டர் பாக்கெட்' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கானாவாக உருவாகியுள்ள இப்பாடலை சந்தேஷ் நாராயணன், ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். -
May 23, 2024 18:05 IST
குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை முக்கிய அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட பிரிவு லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், " கன்னியாகுமரி மாவட்ட பொது மக்களுக்கு, அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார் /தகவலை நேரிலோ அல்லது கைபேசி வாயிலாகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தொடர்புக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 9445048977, (WhatsApp), ஆய்வாளர்கள்- 9498131914, 9442233856 ,9498193388 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதுசம்பந்தமாக புகார்/தகவல் கொடுப்பவர்களின் பெயர், விபரம் இரகசியமாக வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 23, 2024 17:56 IST
ஜெயக்குமார் மர்ம மரணம்; திசையன்விளையில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை
மர்மமான முறையில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கே.பி. கே.ஜெயக்குமார் மரணம் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஆய்வாளர் உலக ராணி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட குழுவினர் திசையன்விளை அருகில் உள்ள கேபிகே ஜெயக்குமார் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
-
May 23, 2024 17:41 IST
தமிழ்நாட்டில் கனமழை; 15 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த ஏழு நாள்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடை இறந்துள்ளன. 40 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன" என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
-
May 23, 2024 17:32 IST
சவுக்கு சங்கர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
எதிர்காலத்தில் எப்படி நடந்துக் கொள்வீர்கள் என்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 23, 2024 17:30 IST
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மழை நீர் புகுந்தது ஏன்? பொறியாளர் விளக்கம்
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் தரைத்தளத்தில் மழைநீர் தேக்கம் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் விளக்கம் அளித்தார்.
அப்போது, “நூலக தரைத்தளம் அருகில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேறும் குழாய் அடைப்பால் தரைத்தளத்தில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது” கூறினார். -
May 23, 2024 17:19 IST
மகாராஷ்டிராவில் தொழில்சாலை கொல்கலன் வெடித்து விபத்து: 35 பேர் காயம்
மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலியில் உள்ள எம்ஐடிசி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டத்தில், 35 பேர் காயமுற்றனர். -
May 23, 2024 16:41 IST
கடன் தொல்லையால் ஆசிரியர் தம்பதி குடும்பத்துடன் தற்கொலை
சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கடன் நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணமடைந்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதியான லிங்கம், பழனியம்மாள் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், இவர்களின் மகள், மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேத்தியான 2 மாத பச்சிளம் குழந்தை மூவரும் விஷம் அருந்திய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தம்பதிக்கு ₹3 கோடி வரை கடன் இருந்ததாகவும், இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
May 23, 2024 16:39 IST
கேரளா அணை கட்டும் விவகாரம் : தலைமைச் செயலாளர் ஆலோசனை
கேரளா அணை கட்டும் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுடன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கேரள அரசு அணை கட்டும் விவகாரம், தமிழக அரசு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடர்பாகவும் தலைமை செயலாளரிடம், நீர்வளத்துறை செயலாளர் ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட கேரளா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசு கடிதம் மூலம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்து.
-
May 23, 2024 16:06 IST
சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தொழிற்சாலை அமைய உள்ளதாக தகவல்
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர் . கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை தமிழகத்தில் முதல் முறையாக அமைகிறது. கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளார்கள். சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது"
-
May 23, 2024 16:01 IST
நின்றுகொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன் : விபத்தில் 2 பெண்கள் காயம்
கடலூர் அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை ஒரு சிறுவன் இயக்கிய நிலையில், 2 பெண்கள் மீது மோதி படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்துச் சென்ற நேரத்தில், அங்கிருந்த சிறுவன் வாகனத்தில் ஏறி இயக்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
May 23, 2024 15:26 IST
படகு கவிழ்ந்து விபத்து : பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 3 வீரர்கள்
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் மாநில பேரிடர் மீட்பு குழுவின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 3 வீரர்கள் மரணமடைந்த நிலையில், நீரில் மூழ்கிய 2 இளைஞர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
May 23, 2024 15:22 IST
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர், பிரதமராக வருவார் : ஆர்.பி.உதயகுமார்
மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர், பிரதமராக வருவார்” என கூறியுள்ளார்.
-
May 23, 2024 15:01 IST
குற்றாலம், மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி
தென்காசி: குற்றாலம் மெயின் அருவி தவிர, மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி வழங்கப்படும். மெயின் அருவியின் கரையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ஓரிரு நாளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும்
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்
-
May 23, 2024 14:42 IST
மோடி சாமானியர்களுக்கான பரமாத்மா அல்ல- ராகுல் காந்தி விமர்சனம்
சாமானியர்களுக்காக அல்லாமல், அம்பானி மற்றும் அதானிக்காக மட்டுமே பிரதமர் மோடி செயல்படுகிறார். மோடி எனும் பரமாத்மா சாமானியர்களுக்கான பரமாத்மா அல்ல
கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்ற பரமாத்மாவால் அனுப்பி வைக்கப்பட்ட பிரதமர் என்ன செய்தார்?
- ராகுல் காந்தி விமர்சனம்
-
May 23, 2024 14:31 IST
மு.க.ஸ்டாலின் இரங்கல்
நெல்லை மாவட்டம், ராதாபுரம், திருவம்பலபுரம் கிராமம், தோட்டப்பள்ளி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
இவ்விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கும்
- மு.க.ஸ்டாலின்
-
May 23, 2024 14:24 IST
செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிக்கும் செயல்களில் கேரள அரசு ஈடுபட்டால், உடனடியாக அதை தடுத்து நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுகின்ற நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்
- சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
-
May 23, 2024 14:10 IST
3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
கரூரில் கடந்த சில மாதங்களாக வாடகை பாக்கி வைத்ததால் சூப்பர் மார்க்கெட் பெண் உரிமையாளரை தாக்கிய கட்டிட உரிமையாளர், வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார்
கட்டிட உரிமையாளரின் மனைவி, மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
-
May 23, 2024 13:54 IST
நாளை 5 மாவட்டங்களுங்கு மஞ்சள் எச்சரிக்கை
நாளை தினம் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
May 23, 2024 13:30 IST
கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த பெண், பாலியல் தரகர்
ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த பெண் பாலியல் தரகர்
என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பெண் பாலியல் தரகர் செல்போனில் ஏராளமான பள்ளி குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிப்பு
என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் படி பாலியல் தரகர் மீது சென்னை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
May 23, 2024 13:27 IST
சிபிசிஐடி போலீசார் விசாரணை
நெல்லை: காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு - கரைச்சுத்து புதூரில் உள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
ஜெயக்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திலும் ஆய்வு
-
May 23, 2024 13:21 IST
கனமழைக்கு இதுவரை 15 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் மே 16 முதல் 22ம் தேதி வரை பெய்துள்ள கனமழைக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 40 குடிசைகள்/ வீடுகள் சேதமடைந்துள்ளன.
- தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை தகவல்
-
May 23, 2024 13:17 IST
பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 9346 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்து தற்போது 48.08 அடியாக உள்ளது.
-
May 23, 2024 13:16 IST
5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்
தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை இயல்பை விட 28% அதிகம் பெய்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 23, 2024 13:02 IST
நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல்
நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல். இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் மே 26 ஆம் தேதி மாலை தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு . ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு 'ரீமால்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது வருகிற 26ஆம் தேதி மேற்குவங்க பகுதியில் கரையை கடக்கும் என கணிப்பு.
-
May 23, 2024 12:35 IST
ஏன் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 42% இருக்கிறது ? ப.சிதம்பரம் கேள்வி
ஏன் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 42% இருக்கிறது ?; ஏன் டிஜிட்டல் பொருளாதாரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரவில்லை?; 2024-ம் ஆண்டு ஐஐடியில் இருந்து வெளியான பட்டதாரிகளின் 38% பேர் இன்னமும் ஏன் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள்?; டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஐஐடி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்களா ?” - முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ப.சிதம்பரம்
-
May 23, 2024 12:24 IST
மோடியின் கூற்றினை நிரூபிக்கும் வகையிலான தரவுகளை பொதுவெளியில் வெளியிடுவாரா? : ப.சிதம்பரம்
பிரதமர் மோடியின் கூற்றினை நிரூபிக்கும் வகையிலான தரவுகளை பொதுவெளியில் வெளியிடுவாரா?; ஏன் 2019-ம் ஆண்டுடன் நிறுத்தி விட்டீர்கள், 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை என்ன நடந்தது?; ஒரு துறையில் மட்டுமே 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என்றால் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் மொத்தம் எத்தனை வேலை வாய்ப்புகள் பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டது?” - முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ப.சிதம்பரம்
-
May 23, 2024 12:04 IST
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் பணி தீவிரம்
பாலியல் புகாரில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் பணி தீவிரம் மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தகவல் கர்நாடகா அரசு இரண்டாவது முறையாக கடிதம் எழுதிய இருந்த நிலையில், தகவல் வெளியாகி உள்ளது.
-
May 23, 2024 11:46 IST
கன்னையா குமாருக்கு ஆதரவாக ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கன்னையா குமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை.
-
May 23, 2024 11:37 IST
சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
-
May 23, 2024 11:13 IST
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு நண்பகல் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் . தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யும் ராமநாதபுரம், தேனி, தென்காசி, திருநெல்வேலியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
-
May 23, 2024 11:12 IST
சவுக்கு சங்கர் வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கரை சிறையிலடைத்தது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று (மே 23) பிற்பகல் 2.15 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு; சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த மனு.
-
May 23, 2024 10:54 IST
எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க முடிவு
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்
பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
கடந்த 21 ஆம் தேதி கோவை கணபதி பகுதியில் எஸ்.ஆர்.சேகர் வீட்டிற்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்
விசாரணையில் எஸ்.ஆர்.சேகர் பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததாக தகவல்
மீண்டும் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்
-
May 23, 2024 10:53 IST
ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்- டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
10 தனிப்படைகள் மேற்கொண்டு வரும் விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால், சிபிசிஐடிக்கு மாற்றம்
-
May 23, 2024 10:09 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,750க்கும், ஒரு சவரன் ரூ.54,000க்கும் விற்பனை
-
May 23, 2024 09:37 IST
கோவை புறநகர் பகுதிகளில் மிதமான மழை
கோவை புறநகர் பகுதிகளான நரசிம்மநாயக்கன் பாளையம், பெரிய நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், தொப்பம்பட்டி ,வடமதுரை, என்.ஜி.ஓ காலனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் புறநகர் பகுதிகளில் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.
கோவை புறநகர் பகுதிகளான நரசிம்மநாயக்கன் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மிதமான மழை!https://t.co/gkgoZMIuaK | #coimbatore | #TNRain | #rainalert | 📹 @rahman14331 pic.twitter.com/T9XHV2UpBq
— Indian Express Tamil (@IeTamil) May 23, 2024 -
May 23, 2024 09:27 IST
மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை போலீசார் விசாரணை
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன் என இந்தியில் பேசி மர்ம நபர் மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளார். என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை காவல்துறை விசாரணை
-
May 23, 2024 09:22 IST
ஆரஞ்ச் நிற எச்சரிக்கை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு, மிக கனமழை காரணமாக ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்
-
May 23, 2024 09:21 IST
நேப்பியார் பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
சென்னை நேப்பியார் பாலம் அருகே டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த கார், அதிர்ஷடவசமாக உள்ளே இருந்த இருவரும் காயமின்றி தப்பித்தனர்.
-
May 23, 2024 09:16 IST
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
நெல்லை: மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.